Thiru karaikanda eshwaran temple https://maps.app.goo.gl/jSZvpGxrEgYxnemi7
Thursday, January 5, 2023
திரு கரை கண்ட ஈஸ்வரர் குகை கோவில், செஞ்சி
மேல்மலையனூர் சிறப்பு தேர்
ஆண்டுதோறும் புதிய தேர்
தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை விளங்கு கிறாள்.
தல வரலாறு
ஆதியில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் பிரம்மா யாரையும் மதிக்காமல் ஆணவத்துடன் நடந்து கொண்டார். அவருக்கு பாடம் கற்பிக்கும் வகையில், பரமேஸ்வரன் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒருதலையை வெட்டினார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.
சித்தம் கலங்கி, பித்துபிடித்த நிலையில் கையில் மண்டையோடும், மற்றொரு கையில் சூலாயுதத்துடனும் உடலெங்கும் சாம்பலைபூசி கொண்டு ஊர், ஊராக அலைந்து திரிந்தார். நாடு முழுவதும் அலைந்து திரிந்த சிவன் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்காள பரமேஸ்வரி அம்மன், சிவன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு, சாதத்தை கீழே சிதறிபோகும் படி செய்தார். அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை அடக்கினார். அப்போது சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.
கபாலத்தை அடக்கிய பிறகும், அங்காளம்மனின் கோபம் தணியவில்லை. அவளது கோபத்தை தணிப்பதற்காக மகாவிஷ்ணுவின் யோசனைப்படி தேர்த்திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. தேவர்களும், முனிவர்களும் அந்த ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், மாடங்களாகவும், மரப்பலகைகளாகவும், சிம்மாசன மேடையாகவும் மாறி நின்றனர். அங்காள பரமேஸ்வரி கோபம் தணிந்து அந்த தேரில் ஏறி அமர்ந்து வீதி வலம் வந்தாள்.
தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்து விடுகின்றனர். இந்த ஐதீகத்தின்படி ஒவ்வொரு வருடமும் தேரோட்ட நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்த தேரை பிரித்துவிடுவார்கள். அடுத்த வருட தேரோட்டத்துக்கு புதிய தேர் செய்யப் படும்.
ஆண்டு தோறும் மகாசிவராத்திரியையொட்டி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறும். அப்போது நடைபெறும் தேரோட்டத்தின் போது புதிதாக தேர் செய்யப்படும். அந்த தேரில் அம்மன் அமர்ந்து வீதிஉலா வருவார். இந்த முறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.குறி கேட்கும் பக்தர்கள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது. கோவிலின் பலபகுதிகளில் குறி சொல்பவர்களை காணலாம். நினைத்த காரியம் நடக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? காணாமல் போன பொருள் திரும்பவும் கிடைக்குமா? வேலை எப்போது கிடைக்கும்? கோர்ட்டு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்பது பற்றி பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு குறி சொல்பவர்கள் விடை கூறுகிறார்கள். குறி கேட்க செல்பவர்கள் கற்பூரம் வாங்கி செல்லவேண்டும். இங்கு குறி கேட்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அமைவிடம்
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.–செந்தூர் திருமாலன்.
நம்பிக்கை...
இந்த கோவிலில் பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச்சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிக்கிறார். அப்போது அந்த பெண் ஆவேச சத்தம் போடுகிறாள். பூசாரி அந்த பெண்ணிடம் கற்பூரத்தை கொளுத்தி கொடுக்க அதை வாங்கி அவள் வாயில் போட்டுக் கொள்கிறாள். சிறிது நேரத்தில் அந்த பெண் அமைதி ஆகிறாள். அதன் பிறகு அந்த பெண் உடல் முழுவதும் மயான சாம்பல் பூசப்படுகிறது. இந்த நிலையில் அவளைப்பிடித்து இருந்த பேய்விலகி சென்று விடுவதாக நம்புகிறார்கள். அங்காளம்மன் கோவிலின் காவல் தெய்வம் பாவாடை ராயர் ஆவார்.
Wednesday, January 4, 2023
கடவுள் என்பது யாதெனின் அனைத்திற்கும் உட்பொருளாய் உள்ள நிலை
ஆன்மீக கட்டுரை கதை
சுற்றிலும் நீர் , நீருக்குள் நான் , நிலம் என்றால் என்ன என்று தெரியாது , எங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஆழத்தில் மூழ்கி சென்றால் அங்கே நீருக்குள் தரைப்பகுதி இருக்கும் , எங்களை பொறுத்தவரை அது தான் நிலம். எங்களில் பல ஆயிரக்கணக்கான வகைகள் உண்டு. சிலர் சண்டை போட்டு மற்றவர்களை அழித்து அடித்து சாப்பிடுவர் , சிலர் உருவத்தில் மிக பெரியவர்கள் , சிலர் மிகச்சிறியவர்கள் . வெகு சிலர் நீரிலும் வாழ்வார்கள் , சில நேரம் நீரில் இருந்து வெளியேறி நிலத்தில் சென்று வாழ்ந்து மீண்டும் நீரில் வருவார்கள் . அவர்கள் எங்களிடம் மேலே நிலம் உள்ளது , அங்கே காற்று உலவுகிறது , அங்கே நிறைய நிலம் வாழ் உயிரனங்கள் உள்ளன , என்றெல்லாம் கூறுவார்கள் , எங்களில் சிலர் அவர் கூறுவதை ஏற்று , அங்கே எப்படி செல்வது , காற்றை எப்படி சுவாசிப்பது , நீரில் இருந்து வெளியே வந்தால் நாங்கள் உயிரை விடுவோமே , எப்படி நீங்கள் மட்டும் நிலத்தில் சென்று உயிருடன் திரும்பி வருகிறீர்கள் என்று கேட்போம் , சிலர் நிலம் என்று ஒன்று இல்லவே இல்லை , நமது கண்ணிற்கு தெரிந்ததெல்லாம் நீர் தான் , நிலம் என்று ஒன்று இல்லவே இல்லை , அவன் நிலத்திற்கு சென்று வந்தான் என்று எப்படி கண்டு கொள்வது , அவன் பொய் கூறுகிறான் , நிலத்தில் சென்றால் யாராக இருந்தாலும் உயிரை தான் விடுவோம் , அவன் கூறும் பொய்களை நம்பாதே என்று கூறினார்கள் . ஆனால் , அவன் நிலத்தை பற்றி அங்கே உள்ள வாழ்க்கை முறை பற்றி விவரிக்கும் போது , பொய் கூறுபவன் இவ்வளவு கற்பனை சக்தியுடன் பொய் கூற முடியாது என்று நாங்கள் நினைத்தோம் . இருந்தாலும் ஒரு வகை அச்சத்துடன் ஐயத்துடன் , அந்த நீரிலும் நிலத்திலும் வாழ்பவனை தொடர்ந்து செல்லும் போது , சில ஆதாரங்களை அவன் காட்டுகிறான் , பார், இது இந்த கடல் நீருக்குள் எங்கே தேடினாலும் இது போன்ற பொருள் இல்லை . இவன் வைத்திருக்கும் பொருள் நீருக்கு வெளியே நிலத்தில் சென்ற பொது அங்கேயிருந்து அவன் எடுத்து கொண்டு வந்த பொருள் . ஆனால் மற்றவர்களிடம் இதை கூறினால் , அது ஒன்றும் அப்படி கிடையாது , அந்த பொருளில் எந்த மகிமையும் கிடையாது , உன்னை நம்பு , தெரியாததை நம்பாதே , எல்லாம் கற்பனை என்று கூறுவார்கள் . ஆனால் நிலத்தில் வாழும் அவன் , அனுபவித்தவன் , அவன் அனுபவப்படாமால் எங்கள் கேள்விக்கு விடை கூற முடியாது , எனவே மற்றவர்கள் கூறுவதை நாங்கள் ஏற்கவில்லை , அவனுடன் சேர்ந்து சிறிது தூரம் நீரின் மேல் பரப்பிற்கு நீந்தி செநிலப்பரப்பிற்கு செல்ல மூச்சு காற்றை சுவாசிக்க தெரிந்து இருக்க வேண்டும் , எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நீருக்குள் இருக்கும் காற்றை பிரித்து சுவாசித்து உயிர் வாழ்வதே , நிலத்தில் சென்று அங்கே பறக்கும் காற்றை சுவாசிப்பதற்கு கொஞ்சம் கொஞ்சமாக பழகினால் , நாமும் நிலப்பரப்பிற்கு செல்லலாம் , ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் , இறந்த பின் மிதந்து நிலப்பரப்பில் ஒதுக்கப்பட்டு விடுவோம் , ஆனால் அப்போது உயிரை விடுவதால் , நிலப்பரப்பில் என்ன இருக்கும் என்று பார்த்து அனுபவித்து தெரிந்து கொள்ள முடியாது , நிலப்பரப்பிற்கு சென்றால் உயிருடன் செல்ல வேண்டும் , அப்போது தான் அந்த உயிர் மூலம் அனுபவம் கிடைக்கும் . ன்ற போது , அங்கே மேல் பரப்பில் நிலத்தில் உள்ளவர்கள் நீரில் வாழும் எங்களுக்கு அன்னம் இட்டு கொண்டு இருந்தார்கள் . நாங்களும் பசியாற உண்டோம் , அந்த அன்னம் நிலத்தில் விளைந்தது , சந்தேகமே இல்லை , நிலம் என்று ஒன்று உண்டு , அங்கே பலர் வாழ்கிறார்கள் , சிலர் எங்களுக்கு உதவுகிறார்கள் , சிலர் எங்களை அழித்து கொல்ல நினைக்கிறார்கள் , எனவே மேற்பரப்பிற்கு செல்லும் போது , அந்த விஷயம் தெரிந்த அவனை தொடர்ந்து செல்வோம் , நாம் தனியாக சென்றால் ஆபத்து அதிகம் . அவன் நிலப்பரப்பில் நீர்பரப்பிலும் வாழ்பவன் , அவனிடம் ஆயுதங்கள் உண்டு , ஏதேனும் ஆபத்தேற்பட்டால் தடுக்கும் வல்லமை உண்டு , தனியே சென்றால் எளிதாக ஆபத்தில் சிக்கி உயிரை விடும் வாய்ப்பு அதிகம் . இங்கே மீன் என்பது நாம் , நீர் நிலை என்பது நமது உலகம் , நிலப்பரப்பு என்பது பூமிக்கு வெளியே உள்ள பிரபஞ்சம் , சொர்க்க லோகம் தேவர்கள் அமரர்கள் , இறவா நிலை இறைவா நிலை உள்ளவர்கள் உலவும் பகுதி , நீர் நிலை என்பது மாயை , மாய உலகம் , இங்கே இருந்து அங்கே சென்று பார்த்து வாழ்ந்து வருபவன் , அவன் தான் குரு , விஷயம் தெரிந்தவன் , வித்தை தெரிந்தவன். சுவாசம் பழகும் வித்தை தான் வாசி யோகம் . உலகத்திற்கு வெளியே பிரபஞ்சத்தில் உலாவ வேண்டுமென்றால் , அதற்குரிய சுவாச நிலை வேண்டும் , அதற்கு தான் வாசி யோக பயிற்சி . நிலம் பொய் , நிலம் இல்லை என்று மறுப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் , பகுத்தறிவு வாதிகள்
தி. இரா . சந்தானம்
கோவை 05/01/2023
அனுபவம் 17, 18 டிசம்பர் 2023
பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது. எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...
.jpg)
-
ஒரு சொத்தை விக்கறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தோம் , 6 வருஷமா முடியல . அப்பறம் இப்போ பண தேவை இருக்கு , அய்யா கிட்டே கேட்டேன் . கொஞ்சம் ...
-
நமது பொகளூர் அகத்தியர் பீடத்தில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் - பாகம் 2 முதுகு வலி சுமார் 7 வருடம் முன்னாள் ஒரு நாள் நல்ல...
-
நீ என்ன நினைத்து கொண்டிருக்கிறாய் வழிபாட்டை பற்றி . உருவ வழிபாட்டின் தாத்பர்யம் என்னெவென்று முதலில் தெரிந்து கொள் . பக்தியில் மனமது குவிக்...