Saturday, September 3, 2022

அனுபவம் 04.09.2022

 

நேற்று 04.09.2022, நானும் மனைவியுடன் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்று வழிபாடு செய்தோம்.
1.5 வருடத்தில் பல முறை சென்று உள்ளோம், இது வரை யானையை பார்த்ததில்லை, அந்த யானைக்கு இனிப்பு பூசணிக்காய் கொடுக்க வேண்டும் என்பது நேர்த்தி கடன். ஆனால் கொடுக்கும் வழி தெரியவில்லை. இந்த நிலையில் பூசணிக்காய் வாங்கி கொண்டு ஆலய அலுவலகத்தில் ஒப்படைத்து விடலாம் என்று எண்ணி சென்றோம்.பூசணிக்காய் எனக்கு விற்ற பூமார்க்கெட் கடைக்காரர், அங்கே பக்கத்தில் யானை கட்டி வைக்கும் இடம் இருக்கும், அங்கே சென்று, மெல்லிய குரலில் கல்யாணி கல்யாணி என்று யானை பேர் சொல்லி கூப்பிடுங்கள், அது நம்மை பார்க்கும், விடாமல் கூப்பிட்டு அதனை பார்க்க வைத்து விடுங்கள், பின்னர் அது துதிக்கையை தூக்கி ஆசீர்வதிக்கும், அதனை பெற்று வாருங்கள் என்று கூறினார்.  நுழையும் முன், யானை எங்கே என்று தெரியவில்லையே என்று தேடினோம். எங்களுக்கு அந்த இடம் புலப்படவில்லை. பிறகு அலுவகைகத்தில் அதிகாரியிடம் பூசணி காயை ஒப்படைத்து யானை பாகனுக்கு 100 ரூபாய் தட்சிணை கொடுத்து ஆலயத்தின் உள்ளே சென்றோம்.

ஆலயத்தை சுற்றி விட்டு பின்னர் தரிசனம் செய்யலாம் என்று நான் கூற, என் மனைவியோ , தரிசனம் செய்து விட்டு சுற்றலாம் என்று கூற குழப்பம். அதுவும் வேண்டாம் இதுவும் வேண்டாம், நுழைவு இடத்திலேயே நடராஜர் சிவகாமி அம்பாளை தொழுது செல்லுங்கள் என்று கூறும் விதமாக அப்போது மணி ஓசையுடன் பூஜை மங்கள வாத்தியத்துடன் ஆரம்பித்தது. சரி கடவுள் உத்தரவு என்றெண்ணி சிறப்பு பூஜை தரிசனம் செய்து, சிறப்பு ஆரத்தி பார்த்து ஆலயம் உள்ளே சென்றோம்.
அங்கேயும் ஈசனுக்கு சிறப்பு ஆரத்தி நடந்ததால் அதையும் தரிசனம் செய்தோம். அப்போது மனதில் விளைந்த எண்ணங்கள் நிச்சயமாக என்னுடையதில்லை.... கீழே முடிந்த வரை எழுதி வைத்துள்ளேன்.

மகனே என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?

அய்யா, பரிகாரம் செய்து கொண்டிருக்கிறேன். ஆலய வழிபாடு, வாழ்வில் சில சிக்கல்கள் தீர்ந்து முன்னேற்றம் அடைய வேண்டி தங்கள் ஆணைப்படி வந்துள்ளேன்.

மகனே ஒன்றை நன்றாக புரிந்து கொள். நம்பிக்கை தான் கடவுள் ஏன்றெல்லாம் கூறுவார்கள். நம்பிக்கையின் மூலம்எது தெரியுமா, நீ தான்.  நீங்கள் எல்லோரும் அது வெறும் கல், சிலை, என்றெல்லாம் மனதில் கொண்டு வழிபட கூடாது. அங்கே கற்சிலையை மனதில் கொள்ளாமல், எப்படி நீ உன் தாய் தந்தையரை காண அவர்கள் இருக்கும் இல்லம் சென்று உரையாடுவாயோ அவ்வாறே உண்மையான ஒரு ஆள் அங்கே இருந்தால் எப்படி உரையாடுவோமோ அப்படியே உரையாட வேண்டும். துளி அளவும் சந்தேகம் இல்லாமல், நேரில் இயல்பாக ஒருவரிடம் பேச வேண்டும். அந்த உணர்வு எல்லா மனிதர்களிடமும் இருப்பதில்லை. சிலர் கடவுளிடம் உரையாடுகிறார்கள்,ஆனால் அந்த உணர்வு முழுமையாக இல்லை, அழுது புலம்பி விட்டு செல்கிறார்கள். அவ்வாறு இல்லாமல், மனதில் எந்த சந்தேகமும் இல்லாமல் பேசினால் கடவுள் கேட்பார். இல்லையென்றால், உனக்கே , நான் இருக்கிறேன் என்று முழு நம்பிக்கை இல்லை, நான் எவ்வாறு உன் வாழ்வில் வந்து செயலாற்ற முடியும், உன் வாழ்வில் நானும் உள்ளே வர வேண்டும், எப்படி உன் நண்பன் உறவினருடன் உரையாடுகிறாயோ, அவ்வாறே என்னோடும் உரையாடு, இப்போது, இது என்னுடைய இருப்பிடம், இங்கே எனக்கு பெரிய தர்பார் உள்ளது. நான் இங்கே அரசன் சபையில் வீற்று இருக்கிறேன் என்பதை உணர். என்னுடன் மகாராணி, மந்திரி, துறைகள், அதனை செயல்படுத்தும் காவலர்கள், என பலர் உள்ளனர். என் அலுவலகத்தில் எங்கள் பிரதான வேலை, உலகத்தை உய்ய செய்வது. உலகம் என்பது ஒவ்வொரு மனிதனின் பார்வையிலும் இருக்கிறது. நீங்கள் ஆலயம் எழுப்பி,அனைத்து பரிவார தெய்வங்களையும் பிரதிட்டை செய்து, விக்கிரகங்கள் உயிர் பெற்று எழுகின்றன. இது நீங்கள் செய்த ஏற்பாடு. ஆலயங்கள் கட்டி அழைத்தால் தான் நாங்கள் எழுந்தருள்வோம் என்று எப்போதும் சொன்னதில்லை. ஆனால், நீங்கள் இவ்வாறு ஆலயம் எழுப்பி எங்களை அழைப்பதால் அதனையும் ஏற்றுக்கொண்டு அங்கேயும் அருள் பாலிக்கிறோம். கடவுள் இல்லை என்று கூறுபவனுக்கு நாங்கள் எங்கனம் அருள முடியும். ஆலயத்திலும், வழிப்படுபவர்களின் நம்பிக்கை அளவு மாறுபடுகிறது. இது ஒரு கட்டிடம், அங்கே ஓர் விக்ரகம், அதற்கு ஒரு பெயர், குணம் என்று எண்ணி வழிபாடு செய்து செல்கின்றனர். ஆனால் அது அப்படி இல்லை, இப்போது உணக்கு ஒரு வேலை ஆக வேண்டும், பல்கலை கழகத்திற்கு செல்கிறாய், வேந்தரை பார்த்து சொல்கிறாய், தனை வேந்தரை பார்த்து சொல்கிறாய், அவர்களே எல்ல. வேலையும் செய்து கொடுக்க மாட்டார்கள், அந்த இலகாவிற்கும் சென்று உணது வேலை சம்மந்தப்பட்ட விண்ணப்பங்களை பார்க்கும் அதிகாரி, அதனை அடுத்த மேஜைக்கு கொண்டு செல்லும் அதிகாரி, ஒப்புதல் அளிக்க ஒரு அதிகாரி, இறுதியில் தான் அது கையெழுத்திற்காக வேந்தருக்கு செல்லும். அதே போல தான் ஈசனாகிய நான் வேந்தராகவும், மீனாட்சி தயார் துணை வேந்தராகவும், மற்றும் பல துறைகள் பல பரிவாரங்களுடன் ஆலயம் உள்ளது. அங்கே வந்து, எதுவும் கேட்காமல் போனாலோ, அல்லது,  வெறுமனே விண்ணப்பம் மட்டும் வைத்து சென்றாலோ வேலை நடக்காது. ஆலயத்தில் எல்லோரிடமும் உண்மையான ஆளிடம் பேசுவது போல பேச வேண்டும். போலியாக அழுது நடிக்க கூடாது. உரிமையுடன் கேட்கலாம். கேளுங்கள் கொடுக்கப்படும்.
மதம் என்பது, நம்பிக்கையை உருவாக்குவது.கண்ணுக்கு தெரியாத கடவுளை அப்படியே ஏற்று கொள்ள உங்களுக்கு சிரமமாக இருப்பதால், ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பெயரில், ஒவ்வொரு முறையில் இறை சக்தி உள்ளது என்று பல வகையான ஆலயங்களை மனிதர்கள் உருவாக்கி உள்ளார்கள். அணைத்துமே இறைவன் அருளும் இடம் தான். நீங்கள் இறைவனுக்கு பூசும் சாயம் தான் மதம், சாயம் கரைந்தால், அனைத்து மதங்களின் உண்மையான இறைவன் ஒருவனே. ஆனால் இறைவன் இருக்கிறான் என்று நம்பி பேசுவதற்கு உங்களுக்கு அந்த சாயம் தேவைப்படுகிறது. எனவே மதங்களில் சிக்கி போகாமல், இறைவனிடம் நேரிடையாக பேசுங்கள், உங்கள் குல தெய்வம், சிவன் கிருஷ்ணர் பிரம்மன், அம்பாள் லட்சுமி விநாயகன் முருகன் என்று எந்த நாமம் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள், ஆனால் பிரார்த்தனை உண்மையானதாக இருக்க வேண்டும்.இங்கே ஈசன் வீற்று இருக்கிறான் என்று உறுதிபடுத்தியதால் தான் அவருக்கு பல அபிஷேகங்கள் நெய்வேத்யங்கள், அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. மந்திரங்கள் என்பது மனதை ஒருநிலைப்படுத்துபவை, சிந்தனையை எங்கேயோ வைத்து கொண்டு இங்கே நின்று கைகூப்பி கும்பிட்டால் என்ன உபயம் கிடைக்கும். மந்திரங்கள் ஓதுவது மூலம், பாடல்கள் பாடுவது மூலம், மனம் ஒரு நிலை படுகிறது, அப்படி ஒரு நிலைப்பட்ட மனதை இறைவன் பால் செலுத்தி தான் இடைவனிடம் பேச வேண்டும். அந்த மந்திர ஓதுதல், முறையே, திரும்ப திரும்ப அதே அட்சரங்களை கூறுவதென்பது தான் ஜெபம், ஜெபம் ஆழமாக செல்ல செல்ல அதுவே தபம், தொடர்ந்து ஆலய வழிபாடு ஜெபம் தபம் செய்து வருபவர்கள் இறைவனை பல வகைகளில் உணர்வார்கள். இப்போது, நீ நான் இங்கே இருக்கிறேன் என்று உண்மையாக பேசி உள்ளாய். நாங்கள் உன் கண்ணுக்கு தெரிவதில்லை, நாங்கள் கூறுவதும் உன் சேவைகளுக்கு கேட்பதில்லை, ஆனால் ஜெபம் தபம் செய்தால் உன் மூன்றாவது கண் இயக்கமாகி அதனுடன் தொடர்புடைய பொறிகள் கண், காது ஆகியவை மேம்படும், இறைக்காட்சிகள், இறை கூறும் சொற்கள் ஆகியவை உணர்வாக வெளிப்படும். உண்மையாக இங்கே இறைவன் வீற்று இருக்கிறான் என்று இருப்பவர்களுக்கு மட்டும் தான் இறைவன் அருள் கிடைக்கும். நீயும் ஜெபம் தபம் செய்து பலம் பெற்று பின்னர் இதே ஆலயத்தில், அல்லது எந்த ஆலயம் சென்றாலும் உன்னால் இறைவனை காண முடியும் கேட்க முடியும். இப்போது தற்காலிகமாக இது ஒரு வழி தொடர்பாக  உள்ளது. ஜெபம் தபம் செய்து சித்தி ஆனால், இதுவே இரு வழி தொடர்பாக மாறும். இப்போது ஆலயத்திற்கு வருபவர்களுக்கு ஒரு  வழி தொடர்பு கூட இல்லை என்பது தான் உண்மை.

நன்றி ஐயனே,

பிறகு தரிசனம் முடித்து உள் பிரகாரத்தை 6முறை சுற்ற வேண்டும் என்பது நாங்கள் தீர்மானித்த வழிபாடு. அதில் ஒரு முறை சுற்றி வந்து உடனே யானை மணியோசை, யானை ஆலயத்தை வலம் வருகிறது, யானை தரிசனம், வா,வா, வந்து என்னை பார், கேட்டாயல்லவா, நான் வந்துள்ளேன், வா என்று கூறுவது போல இருத்தது, இரு,நாங்கள் சுற்றி விட்டு வந்து பார்க்கிறோம் என்று பதில் கூறினேன். அதுவும் பதிலுக்கு பிளிரியது. அது வரை யானை கண்ணில் பார்க்கவில்லை, பல நாள் வந்துள்ளோம், யானையை கண்டதில்லை, இன்று யானை பார்க்க முடியுமா என்று எண்ணினோம், பூசணி வாங்கி வந்தோம், யானை கண்டோம். ஆம், 6 சுற்று முடிந்து வரும் வரை யானை இருந்தது, நாங்கள் கண்ட வினாடியில் அது மீண்டும் அதுனுடைய ஓய்விடத்திற்கு அழைத்து செல்லப்பட்டது.
இறைவன் அருள்.
என் மனைவியிடம் கூறினேன், பார்த்தாயா இறைவன் அருளை, கேட்டோம் கிடைத்தது. இறைவுனுடன் நேரில் பேசுகிறேன், அது வேலை செய்கிறது, நீயும் , அவருடன் பேசு, சிலை என்று. வணங்கி நிற்காதே, பேசு, என்று கூறினேன். அவளும் ஆமோதித்தாள்.

முருகர் கெவிலி உத்தரவு
ஆலய பின்புறத்தில் முருகர் சந்நிதி உண்டு. அங்கே சென்ற போது அர்ச்சகர் அர்ச்சனை செய்ய வேண்டுமா என்று கேட்டார். என் மனைவி சரி என்று அர்ச்சனை பெயர் நட்சத்திரம் கூறினாள். முடிவில் , அர்ச்சகர் உங்கள் குல தெய்வம் பெயரையும் கூறுங்கள் என்றார். பொதுவாக எந்த அர்ச்சகரும் அவ்வாறு கேட்பதில்லை. என் மனைவியோ, அய்யா முருகர் தான் குல தெய்வம், அதுவும், இதே பெயர் கொண்ட பால தண்டாயுதபாணி ஸ்வாமி தான் குல தெய்வம், அதே ஸ்வாமி தான் குல தெய்வம் என்று கூறினாள். பிறகு அர்ச்சகர் அர்ச்சனை செய்து ஆரத்தி காட்டி, பிரசாதம் கொடுத்தார். அப்போது நான் முருகனிடம், முருகா, 2 வருடமாக பழனி வர முடியவில்லை, நீ இங்கே இருகிறாய் அல்லவா, இங்கே நாங்கள் எங்கள் வணக்கத்தை கொடுத்து விட்டோன், இதனையே பழனியாக எங்கள் குலதெய்வமாக எண்ணி கொடுத்து விட்டோம், நீ ஏற்றுக்கொள். மேலும் 2 ஆவதாக, உன்னால் ஆகாத காரியம் எதுவும் இல்லை, தடைகளை உடைத்து என்னை நீயே பழனிக்கு அழை,  நீயே என்னை பழனிக்கு விரைவில் அழைத்து செல்,  என்று கூறிய அடுத்த வினாடியே கெவுளி எனப்படும் பல்லி ஒலித்து, ஆமாம் ஆமாம் என்றது. 2 ஆவது வேண்டுதல் பதில் கூறுவது போல, இரண்டாவது மற்றும் ஒரு முறை கெவுளி ஒளித்து ஆம், ஆம் என்றது. 2 கோரிக்கைக்கு உடனடி பதில். அதற்கு பிறகு கெவுளி ஒலிக்கவில்லை, அதற்கும் முன்னும் கெவுளி ஒலிக்கவில்லை.
நான் மனைவியிடம், பார்த்தாயா, முருகர் பேசினால் பதில் கொடுக்கிறார் பார் என்று கூறினேன்
பிறகு அடுத்த நிகழ்வு.
உள்ளே இருந்து உத்தரவு, அடுத்த பரிகாரம் தேய்பிறை அஷ்டமி பூஜை இதே ஆலயத்தில் செய்யவும். சரி அய்யா. நாங்கள் வழக்கமாக தேய்பிறை அஷ்டமி பூஜை செய்வது வேறு ஆலயத்தில். ஆனால் இப்போது அய்யா , என் உள்ளே இருந்து உரைக்கிறார், இங்கே செய், பலன் கிடைக்கும், மற்ற இடங்களில் பலன் குறைவு, உனக்கு அருள் போதவில்லை, இங்கே அருளுக்கு குறைவில்லை, இங்கேயே செய். அப்படியே ஆகட்டும் அய்யா.

அதனை பைரவர் சந்நிதியில் பூஜை செய்யும் அர்ச்சகரிடம் அனுமதி கேட்ட போது அவர் அம்பாள் சந்நிதியில் பூஜை செய்யும் அர்ச்சகரிடம் போய் சொல்லவும் என்று கூறினார். பைரவர் பூஜைக்கு பைரவர் சந்நிதியில் பூஜை செய்பவர் சம்மந்தம் இல்லாமல் அம்பாள் சந்நிதில் சொல்ல சொல்கிறார். சரி என்று அவர் கூறிய அர்ச்சகரின் பெயரை சொல்லி கேட்டால், அங்கே அவர் அப்போது இல்லை. சரி உள்ளே சென்று வழிபடுவோம் என்று சென்றால், அங்கே இருந்த அர்ச்சகர் ஏற்கனவே எங்களுக்கு அறிமுகமானவர். மிகவும் நல்லதாக அவரை நலம் விசாரித்தோம். தெறிந்தவர் என்பதால் கருவறைக்கு உய வந்து தரிசனம் செய்யுமாறு அழைத்தார். அதன் முன் நடந்த சில விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஈசன் ஆலயம் சென்ற போது , சிலரை மட்டும் கருவறைக்கு உள்ளே அனுமதித்தனர், நாங்கள் உள்ளே செல்ல முடியவில்லை, மனதில் ஆதங்கம், இறைவனிடத்தில் வைக்கப்பட்டது. அதே போல், தெரிந்தவரிடம் அறிமுகம் செய்து கொள்ளும் முன்னர், தூரத்தில் இருந்து அம்பாள் முகம் சரியாக தெரியவில்லை என்று ஆதங்கம். பின்னர் , அந்த 2 ஆதங்கமும் தீரும் விதமாக அர்ச்சகர் கருவறைக்கு உள்ளே அழைத்தார். எங்கள் கோரிக்கையை ஏற்று கொண்ட இறைவேன் உடனடியாக எல்லாவற்றையும் நிறைவேற்றினார். மேலும் எங்களுக்கு தெரிந்த அந்த அர்ச்சகரே, பைரவர் பூஜை செய்பவர் பெயர் தொலை பேசி எண் கொடுத்து, அவரை தொடர்பு கொண்டு பேசுங்கள், அவர் செய்து கொடுப்பாரென்று கூறி எங்களது அந்த வேண்டுகோளையும் பூர்த்தி செய்தார்.

இன்னும் முடியவில்லை, பிரார்த்தனை முடிவில் ஆலயத்தில் இருக்கும் பக்தர்ககளுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்பது எங்கள் வழிபாட்டு முறை. அப்போது நான் என் மனைவியிடம், பக்தர்கள்  இனிப்பிற்கான காரணம் கேட்டால், நமக்கு கல்யாண நாள் என்று கூறி விடு என்று கூறினேன். ஆனால் எங்களுக்கு இப்போது கல்யாண நாள் கிடையாது.சும்மா ஒரு பதிலுக்காக அப்படி கூறி விடு என்று கூறினேன். சுமார் 10, 15 பேர் கேள்வி கேட்டார்கள், கல்யாண நாள் என்று கூறி விட்டோம்.

கூறுவதெல்லாம் உண்மை என்று ஆகி நாங்கள் ஆலயத்தில் இருந்து எந்த ஹோட்டல் சென்று உணவு உட்கொள்ளலாம் என்று பேசி கொண்டு இருக்கும் போது, அது இருக்கட்டும், தாலி கொடி வாங்க வேண்டி உள்ளதால் புதிதாக வாங்குவோம் என்று பேசி, கடைசியில்,  நேராக நகை கடைக்கு சென்று, என் கையால் மஞ்சள் கயிறு வாங்கி அணிந்து, பின்னர் தங்க தாலி கொடியை கழற்றி, புதிதாக வேறு தாலி கொடி. வாங்கி கோர்த்து, அரை மணிநேரம் குரு ஹோரைக்காக காத்து இருந்து குரு ஓரையில் புதிய தாலி கொடி அணிந்து கொண்டாள்.
சும்மா திருமண நாள் என்று கூறினோம், அதுவே மஞ்சள் தாலி கட்டி, புதிய தங்க தாலி கொடி அணியும்படி செய்து விட்டது.

இன்னும் நிறைய இறை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசை. இறைவனிடம் பேச சொல்கிறார் அய்யா. ஆகவே பேசுங்கள்.கேளுங்கள் கொடுக்க ப்படும் தட்டுங்கள் திறக்கப்படும். நினையுங்கள் நிறைவேற்றப்படும். தயவு செய்து மறந்தும் கூட நல்லவை அல்லாதவற்றை நினைக்க வேண்டாம். நல்லதே நடக்கட்டும். அனைவரும் சுகம் பெறட்டும்.

தி.இரா. சந்தானம்
உள்ளும் புறமும் அகத்தியர் அருள் நிறைவு.

No comments:

Post a Comment

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...