14/03/2021 - இன்று பங்குனி மாத பிறப்பு, தான தர்மங்கள் செய்யும் நாள் . இன்று இரண்டு நிகழ்வுகள்.
1. வயதான முதியவர் நல்லுசாமி என்பவருக்கு ரூபாய் 1000 ஒதுக்கி வைக்க முடிவு செய்திருந்தோம் . அதற்கான பணம் எடுத்து தயாராக வைக்கவில்லை . ஒரு வாரம் முன்பு அந்த முதியவரை , 14 ஆம் தேதி அன்று நேரில் வந்து பணம் பெற்று செல்லுங்கள் என்று கூறி இருந்தேன் . மேலும் அவர் வருவார் என்று மறந்தே பொய் விட்டேன் . என்னை பொறுத்த வரை , வெளியே செல்லும் போது பணம் எடுத்து வந்து முதியவர் பெயரை ஒரு கவரில் எழுதி வைத்து விட்டால் , அவர் வரும் போது கொடுத்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன் . காலையில் காப்பி குடித்து விட்டு தான தர்மம் பணம் அனுப்பும் வேலையில் இருந்தேன் . சுமார் 7 மணி அளவில் காலை , நல்லுசாமி வந்து விட்டார் . எனது பர்சில் பணம் இல்லை , சரி இங்கே உட்கார்ந்து கொள்ளுங்கள் ,நான் மெயின் ரோடு சென்று ATM இல் பணம் எடுத்து வருகிறேன் என்று கூறினேன் . ஆனால் உண்மை என்ன என்றால் என் பர்சில் என் பணம் சரியாகி 1000 இருந்தது . நான் பர்சில் பணம் இருந்ததை மறந்து அவரை காக்க வைத்து விட்டேன் . உடனே என் வாகனத்தை எடுத்து கொண்டு அரை கிலோ மீட்டர் தூரம் சென்றேன் , அப்போது தான் பர்ஸ் எடுத்து செல்லவில்லை என்று நினைவுக்கு வந்தது , பின்னர் திரும்ப வந்தேன் , பர்ஸை எடுக்கும் போது , பணம் இருக்கா பார் , என்று மனதில் குரல் , பார்த்தால் பணம் இருந்தது , அப்படியே அதை எடுத்து அவரிடம் அளித்தேன் . பின்னர் கணக்கு எழுத எனது லேப் டாப் ஐ திறந்து பார்த்தால் , என் கணக்கில் நேற்றே அவருக்கு paid , பணம் அளித்து விட்டதாக நேற்று இரவு கணக்கு வைத்து உள்ளேன் . அதில் மூவருக்கு தலா 1000 அளிக்க வேண்டும் , நல்லுசாமி 1000, சேட்டு 1000, விஷ்ணு தாசர் 1000, இதில் சேட்டு வுக்கு தினமும் உதவி 30 ரூபாய் என்ற அளவில் கொடுக்கப்படும் , விஷ்ணுதாசர் 80 வயது பெரியவர் , அவர் வாரம் ஒரு முறை தான் வருவார் , நல்லுசாமி வியாழக்கிழமை தோறும் வருவார் . இதில் மிக சரியாக , மற்ற இருவருக்கும் உடனே பணம் கொடுக்க முடியாது , நல்லுசாமிக்கு மட்டும் தான் நாளை கொடுக்க முடியும் என்று தர்மம் அதுவே முடிவு செய்து, என் கைகள் மூலம் கணக்கு எழுதி , பர்சில் பணம் இருப்பதை நினைவுபடுத்தி , அவரை காக்க வைக்காமல் , சரியாக பணம் கொடுக்குமாறு செய்தது , இறை செயலாகவே எண்ணுகிறேன் ,
No comments:
Post a Comment