Thursday, July 13, 2023

இன்று 13.07.2023 காலை குளிக்கும் போது அகத்திய மகரிஷி என்னுள் உணர்த்தியது

 நீ என்ன நினைத்து கொண்டிருக்கிறாய்  வழிபாட்டை பற்றி . உருவ வழிபாட்டின் தாத்பர்யம் என்னெவென்று முதலில் தெரிந்து கொள் . பக்தியில் மனமது குவிக்கப்படுகிறது ,  இறைவன் உருவத்தை வைத்து , ஆராதனை செய்யப்படுகிறது . இது ஒரு யோக பயிற்சி , இது அஷ்டாங்க யோகத்தின் முறை இயமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் பிரத்தியாகாரம்  தாரணை த்யானம் சமாதி , ஆகிய நிலைகள் மனிதனின் வாழ்விற்குள்ளே மதம் என்னும் வாழ்க்கை முறை மூலம் புகுத்தப்படுகிறது , மாதங்களில் உள்ள உணவு முறைகள் , தர்ம முறைகள் , போன்றவை இயமம் நியமம் ஆகிய வைகளால் அடங்கும் . மந்திர உச்சாடனம் பிராணாயாமம் , யாத்திரை ஒருவகையான ஆசனம் , வழிபாடு முறைகளில் கைகளை குவித்தல் , மண்டி இடுதல் , விழுந்து எழுதல் , தோப்புக்கரணம் இடுதல் , எல்லாமே ஒரு வகையான ஆசனம் , மேலும் முக்கியமாக , இறைவன் இங்கே இருக்கிறான் என்று நம்பி , அதை நம் நம்பிக்கையை கொண்டே உண்மையாகவே ஆக்கி விட்ட பிறகு , அங்கே இறைவன் எழுந்தருளி வரங்கள் நல்குகிறார் - இதுவே தாரணை , முடிவில் இறைவனை பூஜித்து இறைவனை கண்டு , இறைவனே சிந்தனை சொல் செயலாகி , செல்லுமிடமெல்லாம் இறைவனை கண்டு முடிவில் , தான் என்பது இல்லாமல் இறைவனாகவே ஆகி விடுவது தான் த்யானம் மற்றும் சமாதி . எனவே இதனை புரிந்து கொண்டு இதனை ஒரு யோக பயிற்சியாக , சடங்கு போல இல்லாமல் , இறைவன் அங்கே  என்று முழுமையாக நம்பினால் , அந்த யோகம் நிறைவு பெற்று நமது தாரணையில் வெற்றி பெற்ற நிலையில் இறைவனை காண்போம். ஆலயம் செல்வதென்பது யோக பயிற்சி , அங்கே சென்று அதனை விடுத்து , சடங்கு , சம்பிரதாயம் ஆகியற்றில் தொலைந்து போகாமல் , இறைவனிடம் பிரார்த்தனை செய்து பேச வேண்டும் . நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கும் பொது பிரார்த்தனைகள் நிறைவேறும் , அசரீரி கேட்கும் , இறைவன் உள்ளே இருந்து வழி காட்டுவார் , வெளியே இருந்து பல வகைகளில் காட்சி அளிப்பார் . இது சந்தேகமில்லாத உண்மை . ஆலயங்களின் நோக்கமும் அதுவே .. இறைவன் இருப்பதை முழுமையை நம்பி , அவரை நீராடி , புத்தாடை அணிவித்து , உணவு அளித்து , வாசனை மலர்கள் சூடி , பல வகையான வழிபாடுகள் எல்லாமே ஒரு உயிருடன் உள்ள ஒருவர் இருந்தால் எப்படி எல்லாம் நடந்து கொள்வோமோ அதே போல் நடந்து கொள்ள வேண்டும். முழுமையான நம்பிக்கை இருக்கும் போது தான் அது சாத்தியம் . ஆலயங்கள் ஒரு யோக பயிற்சி கூடங்கள் என்று உணர்ந்து , அங்கே இறைவனை நேரில் காண வேண்டும் , அதை விடுத்து சுயநலமாக அழியும் பொருட்களான செல்வம், சுகங்களை கேட்டு கொண்டிருப்பதால் என்ன பயன் , முதலில் இறைவனை காண்பதில் வெற்றி பெற்றால் பிறகு அவரிடம் பேசலாம் , வரங்கள் கேட்கலாம் , இறைவனை காண்பதற்கு முழுமையான நம்பிக்கை இல்லாமல் , அதனை கல் விக்ரகமாகவோ , உலோக விக்ரகமாகவோ பார்த்து , அதில் உள்ள உண்மையை உணர முடியாமல் போகிறோம் . எனவே இறைவனை காணாமல் சிலையிடம் விக்ரகத்திடம் வேண்டி எந்த பலனும் இல்லை. வாழும் வாழ்க்கையின் காரணமே இறைவனின் நிலை அடைவது தான் , மற்ற எந்த காரணமும் நமது அறியாமையை குறிக்கும் . அறிவு என்பதனை இறைவனை அடைவதற்காக பயன்படுத்த வேண்டும் , அதை விடுத்து , பொருளீட்டும் நிலைக்கு அறிவை பயன்படுத்துவது பெரும் அறியாமை. எவ்வளவு முறை மலைகளை கோவில்களை வலம் வந்தாலும் , அதில் உள்ளே உள்ள இறைவனை காண முடியவில்லையென்றால் முடிவில் மரணத்தை வெல்ல முடியாது. காண்பதெல்லாம் இறையே , காண்பதுவும் இறையே , உணர்வதுவும் இறையே என்று கரைந்து போ நீயே 











No comments:

Post a Comment

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...