Monday, December 18, 2023

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.


 எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி தகவல் முகநூல் ஆகியவற்றில் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தார்.


 நேற்று முன்தினம் பீடத்துக்கு சென்றிருந்தபோது குருபூஜை பத்திரிகை தபாலில் அனுப்புவதற்காக பழைய டைரியில் பதிவு செய்து வைத்திருந்த முகவரிகளை எடுத்துக் கொடுத்தார்கள்.


 உங்களால் முடிந்தவரை அந்த தபால் உரையில் இந்த முகவரிகளை எழுதி கொடுத்து செல்லுங்கள் என்று கூறினார்கள் 


நாங்கள் ஒரு நான்கு ஐந்து பேர் சேர்ந்து அந்த முகவரிகளை எழுதிக் கொண்டிருந்தோம் 


நான் சுமார் 30 40 முகவரிகளை எழுதிக் கொடுத்தேன் 


அதில் ஒரு முகவரி சேலம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்து முகவரி அவருடைய பெயர் பிரகாசம் 


அப்போது குருஜி அவர்களிடம் நான் நினைவு கூர்ந்தேன் இந்த நபர் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா இவர் நமது பீடத்திற்காக நிறையமுறை வந்துள்ளார்


கருங்காலி கட்டைகளை தானமாக கொடுத்துள்ளார் என்று கூறினேன் 


அவர்தான் இந்த முகவரியில் இருக்கும் நபர் என்று கூறினேன்


 அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை மறுதினம் திங்கட்கிழமை திரு பிரகாசம் அவர்கள் என்னுடைய நினைவு அவருக்கு சென்று என்னுடைய நினைவலைகள் அவரை சென்றடைந்து ஏதோ ஒன்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்று வாட்ஸ் அப் மூலம் ஒரு செய்தியை அனுப்பி உள்ளார் 



சுமார் 3.5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடர்பில் வந்துள்ளார் 


எல்லாம் இறைவன் செயல் ஆழ்மனதின் சக்தி நினைவலைகளின் சக்தி 


குருவே துணை குருவே போற்றி





அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...