ஆன்மீக கட்டுரை கதை
சுற்றிலும் நீர் , நீருக்குள் நான் , நிலம் என்றால் என்ன என்று தெரியாது , எங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஆழத்தில் மூழ்கி சென்றால் அங்கே நீருக்குள் தரைப்பகுதி இருக்கும் , எங்களை பொறுத்தவரை அது தான் நிலம். எங்களில் பல ஆயிரக்கணக்கான வகைகள் உண்டு. சிலர் சண்டை போட்டு மற்றவர்களை அழித்து அடித்து சாப்பிடுவர் , சிலர் உருவத்தில் மிக பெரியவர்கள் , சிலர் மிகச்சிறியவர்கள் . வெகு சிலர் நீரிலும் வாழ்வார்கள் , சில நேரம் நீரில் இருந்து வெளியேறி நிலத்தில் சென்று வாழ்ந்து மீண்டும் நீரில் வருவார்கள் . அவர்கள் எங்களிடம் மேலே நிலம் உள்ளது , அங்கே காற்று உலவுகிறது , அங்கே நிறைய நிலம் வாழ் உயிரனங்கள் உள்ளன , என்றெல்லாம் கூறுவார்கள் , எங்களில் சிலர் அவர் கூறுவதை ஏற்று , அங்கே எப்படி செல்வது , காற்றை எப்படி சுவாசிப்பது , நீரில் இருந்து வெளியே வந்தால் நாங்கள் உயிரை விடுவோமே , எப்படி நீங்கள் மட்டும் நிலத்தில் சென்று உயிருடன் திரும்பி வருகிறீர்கள் என்று கேட்போம் , சிலர் நிலம் என்று ஒன்று இல்லவே இல்லை , நமது கண்ணிற்கு தெரிந்ததெல்லாம் நீர் தான் , நிலம் என்று ஒன்று இல்லவே இல்லை , அவன் நிலத்திற்கு சென்று வந்தான் என்று எப்படி கண்டு கொள்வது , அவன் பொய் கூறுகிறான் , நிலத்தில் சென்றால் யாராக இருந்தாலும் உயிரை தான் விடுவோம் , அவன் கூறும் பொய்களை நம்பாதே என்று கூறினார்கள் . ஆனால் , அவன் நிலத்தை பற்றி அங்கே உள்ள வாழ்க்கை முறை பற்றி விவரிக்கும் போது , பொய் கூறுபவன் இவ்வளவு கற்பனை சக்தியுடன் பொய் கூற முடியாது என்று நாங்கள் நினைத்தோம் . இருந்தாலும் ஒரு வகை அச்சத்துடன் ஐயத்துடன் , அந்த நீரிலும் நிலத்திலும் வாழ்பவனை தொடர்ந்து செல்லும் போது , சில ஆதாரங்களை அவன் காட்டுகிறான் , பார், இது இந்த கடல் நீருக்குள் எங்கே தேடினாலும் இது போன்ற பொருள் இல்லை . இவன் வைத்திருக்கும் பொருள் நீருக்கு வெளியே நிலத்தில் சென்ற பொது அங்கேயிருந்து அவன் எடுத்து கொண்டு வந்த பொருள் . ஆனால் மற்றவர்களிடம் இதை கூறினால் , அது ஒன்றும் அப்படி கிடையாது , அந்த பொருளில் எந்த மகிமையும் கிடையாது , உன்னை நம்பு , தெரியாததை நம்பாதே , எல்லாம் கற்பனை என்று கூறுவார்கள் . ஆனால் நிலத்தில் வாழும் அவன் , அனுபவித்தவன் , அவன் அனுபவப்படாமால் எங்கள் கேள்விக்கு விடை கூற முடியாது , எனவே மற்றவர்கள் கூறுவதை நாங்கள் ஏற்கவில்லை , அவனுடன் சேர்ந்து சிறிது தூரம் நீரின் மேல் பரப்பிற்கு நீந்தி செநிலப்பரப்பிற்கு செல்ல மூச்சு காற்றை சுவாசிக்க தெரிந்து இருக்க வேண்டும் , எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நீருக்குள் இருக்கும் காற்றை பிரித்து சுவாசித்து உயிர் வாழ்வதே , நிலத்தில் சென்று அங்கே பறக்கும் காற்றை சுவாசிப்பதற்கு கொஞ்சம் கொஞ்சமாக பழகினால் , நாமும் நிலப்பரப்பிற்கு செல்லலாம் , ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் , இறந்த பின் மிதந்து நிலப்பரப்பில் ஒதுக்கப்பட்டு விடுவோம் , ஆனால் அப்போது உயிரை விடுவதால் , நிலப்பரப்பில் என்ன இருக்கும் என்று பார்த்து அனுபவித்து தெரிந்து கொள்ள முடியாது , நிலப்பரப்பிற்கு சென்றால் உயிருடன் செல்ல வேண்டும் , அப்போது தான் அந்த உயிர் மூலம் அனுபவம் கிடைக்கும் . ன்ற போது , அங்கே மேல் பரப்பில் நிலத்தில் உள்ளவர்கள் நீரில் வாழும் எங்களுக்கு அன்னம் இட்டு கொண்டு இருந்தார்கள் . நாங்களும் பசியாற உண்டோம் , அந்த அன்னம் நிலத்தில் விளைந்தது , சந்தேகமே இல்லை , நிலம் என்று ஒன்று உண்டு , அங்கே பலர் வாழ்கிறார்கள் , சிலர் எங்களுக்கு உதவுகிறார்கள் , சிலர் எங்களை அழித்து கொல்ல நினைக்கிறார்கள் , எனவே மேற்பரப்பிற்கு செல்லும் போது , அந்த விஷயம் தெரிந்த அவனை தொடர்ந்து செல்வோம் , நாம் தனியாக சென்றால் ஆபத்து அதிகம் . அவன் நிலப்பரப்பில் நீர்பரப்பிலும் வாழ்பவன் , அவனிடம் ஆயுதங்கள் உண்டு , ஏதேனும் ஆபத்தேற்பட்டால் தடுக்கும் வல்லமை உண்டு , தனியே சென்றால் எளிதாக ஆபத்தில் சிக்கி உயிரை விடும் வாய்ப்பு அதிகம் . இங்கே மீன் என்பது நாம் , நீர் நிலை என்பது நமது உலகம் , நிலப்பரப்பு என்பது பூமிக்கு வெளியே உள்ள பிரபஞ்சம் , சொர்க்க லோகம் தேவர்கள் அமரர்கள் , இறவா நிலை இறைவா நிலை உள்ளவர்கள் உலவும் பகுதி , நீர் நிலை என்பது மாயை , மாய உலகம் , இங்கே இருந்து அங்கே சென்று பார்த்து வாழ்ந்து வருபவன் , அவன் தான் குரு , விஷயம் தெரிந்தவன் , வித்தை தெரிந்தவன். சுவாசம் பழகும் வித்தை தான் வாசி யோகம் . உலகத்திற்கு வெளியே பிரபஞ்சத்தில் உலாவ வேண்டுமென்றால் , அதற்குரிய சுவாச நிலை வேண்டும் , அதற்கு தான் வாசி யோக பயிற்சி . நிலம் பொய் , நிலம் இல்லை என்று மறுப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் , பகுத்தறிவு வாதிகள்
தி. இரா . சந்தானம்
கோவை 05/01/2023