பல வகையான சம்பவங்கள் வாரம் - 17ஜூன் 2023 2முதல் 3ஜூன் 2023 வரை
1. CA படிப்பு படித்த ஒருவர் இருந்தால் சொல்லுங்கள் என்று பக்கத்து இருக்கையில் உள்ளவரிடம் கேட்டேன். அதனை பிரபஞ்சம் கேட்டு கொண்டு , 2 வருடம் முன்பு என் தொடர்பில் இருந்த CA நண்பர் , இப்போது கடந்த 2 வருடங்களாக தொடர்பில் இல்லை , அவர் என்னை தொடர்பு கொண்டு வேலை இல்லாமல் இருப்பதாகவும் , தனக்கு உதவும்படியும் கேட்டுக்கொண்டார்.
சரி, இவர் இந்த வேலைக்கு தேவையான அனுபவம் இல்லை , நமக்கு இதே வேலையில் முன் அனுபவம் உள்ளவர் வேண்டும் என்று நினைத்தேன் , பிறகு 3 மாதம் முன் நாம் அணுகிய ஒரு பெண்ணை நினைத்தேன் , அவளுக்கு முன் அனுபவம் இருந்தாலும் , அவள் நான் கூறும் நிறுவனத்தில் வேறு சில காரணங்களால் சிபாரிசு செய்ய முடியாது என்று நினைத்தேன்.
CA படித்த மேற்கூறிய ஒரு பெண்ணை நான் மூன்று மாதம் முன்பு வேலைக்கு சேர தனது பயோ டேட்டா வை அனுப்ப சொல்லி கேட்டும் , அவர் அனுப்பவில்லை , 3 மாதங்களாக எந்த தொடர்பிலும் இல்லை , இப்போது அவர் நான் ப்ரபஞ்சத்திடம் கேட்ட அடுத்த நாளிலேயே தானாகவே எனது கைபேசி எண் ஐ தேடி எடுத்து , நேரிடையாக எனக்கு அவளுடைய பயோ டேட்டா வை அனுப்புகிறார். பிரபஞ்சத்திற்கு நன்றி
9 வருடங்களாக இதே அலுவலக வளாகத்தில் வாகனத்தை செலுத்தி வருகிறேன் , நுழைவு வாயில் அருகே ஒரு சிறு மேடு உள்ளது , ஒவ்வொரு முறையும் அணைத்து வாகனங்களும் அதில் இடித்து குலுங்கி தான் இவ்வளவு வருடங்களாக செல்கின்றன . எதேச்சையாக ஒரு நாள் , இந்த நிர்வாகம் இதனை சரி செய்து கொடுத்தால் என்ன பிரச்சனை அவர்களுக்கு என்று நினைத்தேன் . மாரு நாள் காலை , கான்க்ரீட் போட்டு மேடு பள்ளம் இல்லாமல் சரி செய்யப்பட்டு இருந்தது , மேலும் அதன் தொடர்ச்சியான பாதையில் உள்ள மேலும் சிறு சிறு மேடு பள்ளங்களும் கூட சரி செய்யப்பட்டன
கேரளாவில் ஒரு புதிய நபரை வேலைக்கு அமர்த்தினோம் , அவர் வருவதற்குள் அவருக்கு புதிய லேப்டாப் கருவி ஆர்டர் செய்து வாங்கி வைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி , அதில் சிறு விட்டது , அப்போது அவர் 2 நாட்களில் வேலைக்கு சேர்வதற்கு உள்ள நிலையில் , லேப்டாப் வரவில்லை , அடடே அவர் வந்து மேலும் சில நாட்கள் சும்மா இருக்க வேண்டும் , லேப்டாப் வரும் வரை வேலை செய்யாமல் காத்திருக்க வேண்டுமே என்று நினைத்தேன் , பிரபஞ்சம் அவருக்கு வேறு ஒரு அவசர வேலையே கொடுத்து , அவர் வேலைக்கு சேரும் நாளை சரியாக மேலும் 2 நாள் தள்ளி போட்டது , மிக சரியாக , அதே 2 நாளில் , லேப்டாப் வந்து சேர்ந்தது , 10 நாளில் வர வேண்டிய லேப்டாப் 7 நாளிலேயே வந்து சேர்ந்தது , பிரபஞ்சத்திற்கு நன்றி
நேற்று யதேச்சையாக , இரவு தொலைக்காட்சியில் நாடகம் பார்த்து கொடு இருந்த போது , ஒரு நாடக காட்சியில் ஒருவர் வாய்வு பிடிப்பால் வந்து சிரமப்படுகிறார் , உடனே எனக்கு உள்ள வாய்வு பிடிப்பு ஞாபகம் வந்தது . மாரு நாள் காலை கடந்த 1 வருடமாக எனக்கு 1 தடவை கூட வராத வாய்வு பிடிப்பு ஏற்பட்டு தற்போது கடும் முதுகு வலி ஏற்பட்டது , பிரபஞ்சத்திற்கு இந்த முறை நன்றி தெரிவிக்கவில்லை , நினைப்பது எல்லாமே சுபமாக நினைக்க வேண்டும் என்று என்னிடம் நானே கூறி கொண்டேன் , இனிமேல் கவனமாக இருப்பேன்
No comments:
Post a Comment