இன்று 26/02/2021, இரண்டு பதிவுகள் இட்டாயிற்று
இது , ஒரே நாளில் மூன்றாவது பதிவு , நடப்பைவைகளுக்கு நான் பொறுப்பாக முடியாது , எல்லாமே தற்செயல் , இறை செயல் , இறை விளையாட்டு ....
தற்செயலாக சிறிது நேரம் முன்பு அலைபேசியை பார்த்து கொண்டு இருக்கும் போது , எனது நண்பர் ஒருவர் நேரிடையாக பிரதமர் நரேந்திர மோடி ஜி யை சந்தித்து உள்ளார். அவர் மோடி ஜி யுடன் எடுத்த புகைப்படம் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டு இருந்தது. அந்த குழுவில் அந்த நண்பி இல்லை , ஆனால் நன் அந்த நண்பி யின் பெயரை குறிப்பிட்டு "Super இந்து" என்று விமரிசனம் செய்து 3:11pm மணிக்கு போட்ட படத்துக்கு 3;35pm மணிக்கு விமரிசனம் செய்து குறிப்பிட்டேன். அது எனது நண்பிக்கு தெரியாது ஆனால் அவர் பெயரை இங்கே நான் சங்கல்பம் செய்த உடனே அவருக்கு மனதில் என்னை பற்றிய எண்ணமும் அந்த படமும் தோன்றி,
சுமார் 7 நிமிடத்தில் 3:42 pm மணிக்கு அவர் அந்த படத்தை எனக்கு தனி செய்தியாக அனுப்புகிறார். காலையில் இருந்து அனுப்பி இருக்கலாம் , மதியம் அனுப்பி இருக்கலாம் , ஆனால் மிக சரியாக நான் அவரது பெயரை குறிப்பிட்டு சங்கல்பம் செய்த உடனே அது அவர் மனதில் ஒரு எண்ணமாக எழுந்து எனக்கு தொடர்பு கொண்டு உள்ளார் . நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அவர் கடைசியாக என்னிடம் தொடர்பு கொண்டது 31/12/2020, 2 மாதம் எந்த செய்தி போக்குவரத்தும் இல்லை. மோடி ஜி வந்தது சென்றது நேற்று. இன்று நாம் செய்த சங்கல்பத்தின் விளைவு உடனடியாக 7 நிமிடங்களில் நம்மை தொடரபு கொண்டு , வேறு எந்த செய்தியையும் அனுப்பாமல் மிக சரியாக நான் ஏற்கனவே பார்த்த அதே படத்தை அனுப்பி வாழ்த்துக்களை பெற்று கொண்டார். நான் வாட்ஸ் அப் குழுவில் பதிவு போடும் போதே எண்ணினேன் , " இந்த குழுவில் அவர் இல்லை , எனது பதிவை எப்படி பார்ப்பார் , செய்தி அவரை சென்றடைய வேண்டும் என்று எண்ணினேன் " மிகச்சரியாக அதன் பலன் செயல்பட்டு செயலுக்கு வந்தது. இதற்கு பெயர் தான் எண்ணங்கள் சித்தியாகும் நிலை , ஓம் அகத்தீசாய நமஹ .குருவே போற்றி . குருவே துணை .
Super sir..... Positive vibes
ReplyDelete