இது கிட்டத்தட்ட எனது தினசரி டைரி என்று சொல்லலாம் . " அருள் டைரி" என்பது தான் இதற்கு பொருத்தமாக இருக்கும் . முடிந்தவரை சுவாரசியம் குறையாமல் எழுத முயற்சி செய்கிறேன். நான் ஒரு கட்டுரையாளன் அல்ல . நான் ஒரு வங்கி அதிகாரி , ஓரளவுக்கு எழுத்து வேலை தெரியும் . நல்லதை கொண்டு சேர்ப்பதற்காக ஒரு சிறு முயற்சி இது அவ்வளவே . எனது எழுத்தில் பிழைகள் இருப்பின் பொறுமை காக்கவும் . நன்றி .
27/02/2021 - இன்று மதுரை கள்ளழகர் ஆலய பூஜை பொறுப்பை ஏற்கும் அய்யங்கார் பரம்பரையை சேர்ந்து அழகருடன் நித்தமும் வாழ்ந்து , சித்தர் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டு , அகத்தியரால் ஆட்கொள்ளப்பட்டு 2009
இல் அகதியருடன் ஒன்றர கலந்த பரமசாமி பட்டர் என்னும் அகஸ்திய பரம சித்தர் அவருடைய தினம் . அதாவது மாசி மகம் அன்று அவர் சமாதி அடைந்து அகத்தியுருடன் கலந்தார்.
அவருக்கு அந்த இடத்தில , அழகர் மண்டபம் அருகே பரம சித்தர் ஞான பீடம், அவரது மகன்களால் அமைக்கப்பட்டது. அவரது 5 அடி உயர அத்தி மரத்தால் செய்யப்பட திருவுருவ சிலை பிரதிட்டை செய்யப்பட்டு தினமும் பூஜையில் உள்ளது. அவர் சமாதி அடைந்த மாசி மக நட்சரத்தில் குரு பூஜை செய்யப்படுகிறது. அது தான் இந்த நாள். நான் போன வருடம் சென்று இருந்தேன் . இந்த வருடம் 2 ஆவது முறையாக செல்கிறேன் .
இந்த முறை ஜீவ அருள் நாடியில் , அகதியிரிடம் - அய்யா நான் பரம சித்தர் குரு பூஜைக்கு மாசி மகம் அன்று அழகர் மலை அருகே அவரது பீடம் சென்று வருகிறேன் , உத்தரவு கொடுத்து ஆசீர்வதியுங்கள் என்று கேட்டேன் , என் என்றால் , அந்த நாள் அன்று நான் சென்று விட்டால் , நான் அகத்தியர் பீடத்தில் யாகம் அபிஷேகம் அலங்காரம் அன்னதானம் போன்ற பணிகள் செய்ய இயலாது . எனவே உத்தரவு கேட்டேன் . ஐயனும் மனம் குளிர்ந்து , அவன் என்னுடன் ஒன்றர கலந்தவன் , நீ சென்று வா , நான் உனக்கு எவ்வாறு பொதிகையில் ஓசை எழுப்பி வானில் பறந்து வந்து புலன் உணர்த்தினேனோ அதே விதம் அங்கேயும் வந்து பஞ்ச வர்ண கிளி வடிவில் வந்து ஓசை எழுப்பி புலன் உணர்த்துவேன் என்று உரைத்தார் . மிக்க நன்றி நல்லது குருவே என்று வணங்கி காலை 4 மணி அளவில் ஒரு ஜீப்பில் சிலருடன் பயணத்தை துவக்கினோம்
அருள் 1 - 3 குடும்ப நபர்கள் இனைந்து ஒரு காரில் பயணம் செய்வதாக இருந்தது , நான்காவது குடும்பம் ஒன்று காரில் இடம் கிடைக்காததால் விடுபட்டார் . அய்யனுக்கு அவரை விட உத்தரவு இல்லை . குடும்ப உறுப்பினர்களுக்கு சிக்கல் உண்டாக்கி ஒருவர் மாத விலக்கு , ஒருவர் வேறு தனி கார் , ஒருவருக்கு தேர்வு, வராத ஒருவர் வர வேண்டும் என்று அவர் இஷ்டம் போல மாற்றி அமைத்து, ஒரு பெரிய ஜீப் அமைத்து , 4 குடும்பங்களும் ஒரே ஜீப்பில் பயணம் செய்யுமாறு வழி வகை செய்து கொடுத்தார். எல்லாம் தானாகவே நடந்தது.
மேலும் கிளம்பி போகும் வழியில் மேலும் இரண்டு குடும்பங்கள் தனி தனியே இரண்டு கார்களில் வருகின்றனர். எனக்கு மனதினுள் உந்துதல் சாப்பிடுவதற்கு நிறுத்த 10 ஹோட்டல்கள், 20 ஹோட்டல்கள் பல இடங்களில் கூகிள் மேப் இல் தேடி கொண்டு இருந்தேன். சரியாக temple City என்ற ஹோட்டலில் சாப்பிடும் படி வந்தது , அந்த ஹோட்டல் மார்க் செய்து பயணத்தை தொடர்ந்தேன். மற்ற காரில் வருபவர்கள் அதே ஹோட்டலில் சாப்பிடுகிறர்கள் போலும் , அவர்களும் அந்த ஹோட்டலை நோக்கி குறி வைத்து வருகின்றார்கள். நான் ஹோட்டலை மாற்றி A2B ஹோட்டலில் சாப்பிடுறோம் . மற்ற இரண்டு கார் காரர்களும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வந்தவுடனே உந்துதல் ஏற்பட்டு எனக்கு அழைத்து , நான் ஒரு இடத்தில் ஜீப்பை ஐ நிறுத்தி அவர்களுக்காக காத்து கொண்டு இருந்தேன் . சரியாக 10 நிமிடத்தில் மூன்று வாகனங்களும் அலங்காநல்லூர் செல்லும் வழியில் ஒன்றாகி நின்று அங்கே இருந்து ஒரு குழுவாக கோயமுத்தூர் சார்பாக ஒன்றாக பரம சித்தர் பீடம் சென்று உள்ளே நுழைந்து ஒன்றாக தரிசனம் செய்தோம் . குழுவையும் , குழு உறுப்பினர்களையும் அவரே தேர்ந்தெடுத்து , வாகனத்தை தேர்ந்தெடுத்து , அனைவரையும் ஒருங்கிணைத்து ஒன்றாக வந்து சேரும்படி செய்தது இறை செயல் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் .
இதில் எனது செயலாவது யாதொன்றும் இல்லை . எனது செயலாக இருந்தால் எனது சிறிய மூளைக்கு சிறையா காரை தேர்ந்தெடுத்து , நாங்கள் மட்டும் சென்று செல்வது தான் என் திட்டம் . அது நிறைவேற்றவே விடவில்லை . 4 ஆவது குடும்பத்தை விட்டு செல்ல எண்ணும் பொது மனதில் சோகம் . அது என்னுடைய சோகம் அல்ல . என்னுள் இருப்பவர் கொண்ட உணர்வு . மற்ற காரில் வருபவர்கள் , முதலில் வர மாட்டேன் என்று கூறினார்கள் , அதற்கும் எனக்கு சோகம் , அதனை தீர்க்கும் பொருட்டு அவர்களுக்கும் கடைசி நேரத்தில் உள்ளுணர்வு உந்தப்பட்டு அதிகாலையில் கிளம்பி , உறுப்பினர்களை சேர்த்து அவர்கள் வந்து என்னை சந்திக்கும்படி செய்தது யார் ? எல்லாம் இறை செயலே அல்லால் வேறு ஒன்றும் இல்லை .
அருள் 2 - அங்கே மைக்கில் முக்கியமான ஜெபம் செய்யும் பொறுப்பை என்னிடம் அளித்தார்கள் , அகஸ்திய பாரமசித்தார் நாமத்தை ஜெபம் செய்து கொண்டு இருக்கும் போது , அய்யன் வந்தார் . அது எவ்வாறு என்று விளக்குகிறேன். ஓம் என்று ஒருவர் மைக்கில் சொல்ல , அனைவரும் அகஸ்திய பரம சித்தாய நமஹ என்று கோஷம் போட கூடை கூடையாக அகஸ்திய பரம சித்தருக்கு மலர் தொடர்ந்து ஒரு மணி நேரம் சுமார் 50 கிலோ பூக்கள் தூவப்பட்டு கொண்டே இருந்தன . அனைவரும் பந்தலின் உள்ளே அமர்ந்து இருந்தோம் . கோஷ ஒலியில் கிளி சத்தம் எங்கே கேட்க போகிறது ??. பந்தல் அடியில் அமர்ந்து எவ்வாறு வானில் பறக்கும் கிளியை பார்க்க இயலும் ??? ஆனால் மிக சரியாக ஓம் என்ற கோஷத்துக்கும் அகஸ்திய பரம சித்தாய நமஹ என்ற மைக்கில் நான் ஜெபிக்கும் கோஷத்துக்கும் நடுவில் கிளி பந்தல் மேலே நான் அமர்ந்து இருந்த இடத்தின் மேலே பறந்து க்ரீச் க்ரீச் என்று ஓசை எழுப்பி புலன் உணர்த்தியது . சரியாக மூன்று முறை ஓசை எழுப்பி பின் சென்று விட்டது , நான் நன்றாக கவனித்தேன் . கடவுளை நம்பாதவர்கள் இதுவும் ஒரு தற்செயல் தான் என்று கூறலாம். எப்படி அது முன்னரே அந்த தற்செயலை , நான் கிளி வடிவத்தில் வருவேன் , ஓசை எழுப்புவேன் , உனக்கு புலன் உணர்த்துவேன் என்று கூறி மிக சரியாக அந்த இடத்தில் வந்து நான் அமரும் இடத்தின் மேலே பறந்து ஓசை எழுப்பி இரண்டு கோஷங்களை நடுவே கவனிக்கும்படி செய்து , சரியாக மூன்று முறை ஓசை எழுப்பி சென்றது என்ன தற்செயலா அல்லது இறைவன் செயலா , நாத்திகவாதிகளே இறை செயல் இவ்வாறு தான் இருக்கும் . எல்லாவற்றுக்கும் கருப்பு சாயம் பூசினால் , அந்த கருப்பு சாயம் நம் முகம் மேல் நாமே பூசி கொள்ளும் சாயம் தானே ஒழிய இறைவனுக்கு ஒன்றுமே இல்லை, கருப்பு வண்ணமும் இறைவன் தான் , கருப்பு சாயமும் இறைவன் தான் , அனைத்துமாகி நிற்பவன் அவனே என்று உணர வேண்டும்
அருள் 3 - அகஸ்திய பரம சித்தர் அங்கே அந்த விக்கிரகத்தின் மேல் அமர்ந்து அணைத்து பூசை மரியாதைகளையும் ஏற்று கொண்டு மகிழ்ந்து அனைவரையும் நோக்கி புன்னகைத்து ஆசீர்வதித்து , பக்தர்கள் வைக்கும் அணைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறார் என்பது நம்பிக்கை, இது வெறும் நம்பிக்கை தான் , இதில் உண்மை இருக்கலாம் , நம்பாதவர்களுக்கு இது ஒரு அர்த்தமில்லாத சடங்கு. இவ்வாறு மக்கள் இருக்க , எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. பூஜை முடிவில் விடை பெற்று செல்லும் போது நானும் என்னுடன் வந்த ஒரு பெண்மணியும் சென்று பரம சித்தரை கடைசியாக வணங்கி விடை பெறுவோம் என்று எண்ணி சென்று தொழுதோம் . 50 கிலோ பூக்கள் அவர் மேலே இருக்க , ஒரு பூ கூட அசையாமல் அப்படியே இருந்தது பல நிமிடங்கள் அவ்வாறு இருந்தது. பின்னர் என்னுடன் வந்த பெண்மணி கூறினார் , "அவர் கண்களை பாருங்கள் , உண்மையான கண்ணை போலவே காட்சி அளிக்கிறது , அவர் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறார் " என்று கூறினார் , எனக்கு இது போல பல் பல முறை அகத்தியர் விக்ரகத்தில் , எனது இல்லத்தில் , அகத்தியர் பீடத்தில் பார்த்த அனுபவம் பல முறை உண்டு . எனவே , "ஆம் பெண்ணே அவர் கண்கள் திறந்துள்ளன என்பது உண்மை ". நீ சென்று முன்னே அமர்ந்திருக்கும் அவரது மகனிடம் நீ பார்த்ததை கூறு , அவர் ஏதாவது பரம சித்தரை பற்றி கூறுவார் , நாம் கேட்டுக்கொள்ளலாம் " என்று கூறி னேன் . அந்த பெண் தயங்கினாள் . சரி நாமே கூறுவோம் என்று - " அண்ணா , அய்யா கண்கள் உண்மையான கண்கள் போலவே காட்சி அளிக்கின்றன " என்று கூறினேன் . அவரும் " ஆமாம் அய்யா, அவர் அங்கே தான் அமர்ந்து கொண்டு உள்ளார் , சந்தேகம் இல்லை " என்று கூறினார் . சொல்ல சொல்ல இது வரை விழாத 50 கிலோ பூ , சரியாக அவரது இடது கண் அருகே இருந்து இரு உதிரி சில பூக்கள் பறந்து கீழே விழுந்தன . அங்கே நின்று இருந்த அனைவரும் அதனை பார்த்து ஆச்சர்யப்பட்டோம். பரம சித்தர் " டேய் நீ பேசுவது எனக்கு கேட்டுக்குதா ன்னு சோதித்து பாக்கிறியா டா " என்பது போல ஒரு மனிதர் பதில் அளிப்பது போல இருந்தது. காக்கை உக்கார பனம் பழம் விழுந்த கதை என்று நாத்திகர்கள் கூறலாம். ஆனால் இதில் கவினித்து பார்க்க வேண்டிய விஷயம் , அவ்வளவு நேரம் சுமார் 5 நிமிடம் நாங்கள் பிரார்த்தனை செய்த பொது பூ விழவில்லை, கேள்வி கேட்டவுடன் தான் விழுந்தது, அதுவும் சரியாக கண் பகுதியில் இருந்து விழுந்தது . அது அவர் கண் அசைத்தால் விழுந்த பூ ஆகும் . இல்லை என்றால் ஏன் கண் பகுதியில் இருந்து விழா வேண்டும்
. நம்புவர்களுக்கு இறைவன் , நம்பாதவர்களுக்கு காலன் . அவரவர் விதி . என் அனுபவத்தையெல்லாம் மெனக்கெட்டு பதிவு செய்து வைத்தால் , எப்போதோ யாரோ படித்து அதனை உணர்ந்து இறை உணர்வு மேலிட்டால் அதுவே எனக்கு பாக்கியம் . எனது பதிவின் நோக்கம் இதுவே . நமக்கெல்லாம் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் உலகியல் வாழ்வில். இறைவனை சிந்திக்க நேரம் இல்லை . நம்மை சுற்றி இறை நிகழ்த்தும் செயல்களை கவனிக்க கூட நேரம் இல்லை . நம்மை இறை சக்தி சூழ்ந்து உள்ளது. அதனை , சதா இறை உணர்வுடன் இருந்து அனைவரும் உணரலாம் . நான் உணர்ந்த சிறு நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி . தவறு எதுவும் இருந்தால் மன்னிக்கவும் . குருவே துணை .நன்றி. ஓம் அகஸ்திய பரம சித்தாய நமஹ
No comments:
Post a Comment