Saturday, March 13, 2021

இன்று 14மார்ச்சு 2021, மேலும் ஒரு தானாகவே நடந்த தான தர்மம்

இன்று 14மார்ச்சு 2021, மேலும் ஒரு தானாகவே நடந்த தான தர்மம்

நான் தர்மரை சந்தித்தது பிப்ரவரி 2020, ஆனால் 2019 ஜூன் மாதம் முதலே நான் ஒரு ஏழை பெரியவருக்கு என்னால் முடிந்த சிறி தொகை , மாதா மாதம் தானமாக அளித்து வந்தேன் . அவருடன் ஒரு கருத்து வேறுபாடு காரணமாக என் தானத்தை நிறுத்தி கொண்டேன் . கடந்த ஜூன் 2019க்கு  மேல் அவருடன் எந்த தொடர்பும் இல்லை . நேற்று சரியாக பங்குனி மாத பிறப்பு தானம் அளிக்கும் நிலையில் , அந்த நபர் மனதில் என் எண்ணம் தோன்றி , இவருக்கு மீண்டும் அழைத்து தர்மம் கேள் என்று வந்துள்ளது , சுமார் 20 மாதம் கழித்து எந்த தொடர்பும் இல்லாத நிலையில் சரியாக பங்குனி மாத பிறப்பு தானம் செய்யும் நிலையில் அவருக்கு தோன்றி மீண்டும் நேற்று என்னை 20 மாதம் கழித்து அழைத்தார் . நேற்று வரை நானும் கணக்கு பார்க்கவில்லை , இன்று கணக்கு பார்த்ததில் 5600 மீதம் இருந்தது , அதனை யாத்ரா தானமாக அறிவித்து விட்டேன். மேலும் கணக்கு பார்த்த போது 1700 இருந்தது , அதனை என்ன செய்வதென்று புரியவில்லை , நேற்று அந்த நபர் அழைத்த போது பேச முடியவில்லை , இன்று மீண்டும் எதற்க்கோ தொலை பேசியை பார்த்து கொண்டு இருக்கும் போது , உள்ளே குரல் , அந்த நபரை அழைத்து , அவருக்கு என்ன வேண்டுமோ கேள் , தானத்தில் ஏதடா கருத்து வேறுபாடு , அவன் எந்த மதம் ஆனாலும் , எந்த இனம் ஆனாலும் , எந்த கருத்து வேறுபாடு கொண்டு இருந்தாலும் , தானம் செய்வது மாறாக்கூடாது "  என்று மனதில் குரல் . சரி என்று , அந்த நபரை அழைத்து , அவரது தேவைகளை கேட்டு அறிந்து , மளிகை பொருட்கள் வாங்கி அளிக்க முடிவு செய்து , அந்த மீதம் உள்ள 1700 பணத்தில் தர்மத்தை செய்ய முடிவு செய்தேன் . மீண்டும் , இது தர்மர் , அகத்தியர் ஆகியோர் என்னுள் புகுந்து விளையாடும் தர்ம செயல்கள் , நான் ஒரு கருவி என்று தெள்ள தெளிவாக புரிகிறது . இல்லாவிட்டால் அவர் ஏன் மாத பிறப்பில் சரியாக என்னை அழைக்க வேண்டும் , அதுவும் கருத்து வேறுபாடு காரணமாக 20 மாதம் தொடர்பே இல்லாத நிலையில் ??. நான் கேட்டேன், தர்மம் பெற்று செல்ல ஆள் வேண்டும் , சுட்டி காட்டுங்கள் , என்று கேட்டேன் , அவர்கள் , முதலில் ஏற்கனவே நீ செய்து கொண்டு இருந்த தர்மம், இப்போது நின்று விட்டதே , அது உன் கண்களுக்கு தெரியவில்லையா , இரு நான் உணர்த்துகிறேன் என்று , சரியாக காட்டி கொடுத்தார்கள் . அவர் மனதில் சென்று என்னை அழைக்குமாறு பணித்தார்கள் , கணக்கு பார்த்து , அவர்களே ஒரு தொகையை அந்த நபருக்கு ஒதுக்கினார்கள் என்பது தான் உண்மை . இதுவும் நான் முடிவு செய்த தொகை அல்ல , ஆனால் மிக சரியாக அவர்கள் தேவையை , இந்த தொகை பூர்த்தி செய்யும் . இதுவே இறை செயல் .





No comments:

Post a Comment

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...