Tuesday, March 30, 2021

எனது பிதற்றல்கள் - 30/03/2021


இந்த உலகத்துல அகத்தியர் வழிபாடு ஜாஸ்தி ஆயிடிச்சு . ஒரு பெரிய குளம் , அது ரொம்ப பெருசு . நெறைய பெரு அதுல குளிக்கறாங்க . அவுங்க பாதி ஒடம்பு வெளியே தெரியுது , இடுப்புக்கு கீழே தண்ணீர்க்குள்ளே மறைஞ்சு இருக்கு . டேய் , நீ அங்க நிக்கறயா , நான் நிக்கறேன் , இங்க எவ்வளவு ஆழம் தெரியுமா , , டேய் இங்க வாடா ... இல்ல நா , நான் இங்கேயே குளிச்சுக்கறேன் , ஒடனே கூட இருப்பவர் , டேய் நான் எத்தனை வருஷமா இந்த கொளத்துல இருக்கேன் , நான் தான ஒன்ன கூட்டிகிட்டு வந்தேன் , இங்கேயே நின்னு குளி , எதுக்கு தேவ இல்லாம அங்க இங்க போகாதே , அப்பறம் ஏதாவது பிரச்னை நா நான் தான் உனக்கு உதவி செய்யணும் . இப்பிடி எல்லாம் பேசிகிட்டு கொளத்துக்குள்ள இருக்காங்க . நாஞ்சொல்றேன் , ஏய்யா , எல்லாரும் இப்போ கொஞ்ச நேரத்துல முங்க போறீங்க . தல வெளியே தெரியற வரைக்கும் தான் நீ, நான் , இவன் , அவன் அப்பிடீங்கற அடையாளமெல்லாம் , தண்ணிக்குள்ள எல்லாருமா முங்கியாச்சுனா , வெளியே ஒன்னும் தெரியாது , அப்பறம் எங்க நீ நான் அவன் இவன் எல்லாம் . வெளியில இருந்து ஒருத்தன் பாத்தான்னா வெறும் தண்ணிய மட்டும் தான் பாப்பான் . ஆனா அதுக்குள்ள முங்கி ஒக்காந்து இருக்கற ஒரு கோடி பேரு அவன் கண்ணுக்கு தெரியமாட்டாங்க . சும்மா ஏண்டா , இங்க வா இங்கே போ ன்னு அடிச்சிக்காதீங்கடா , எங்கேயாவது இருங்க . எல்லாரும் ஒரே கொளத்துக்குள்ள தான் இருக்கறோம் னு சொல்லுங்க , சின்ன பிள்ள மாதிரி , நான் இருக்கற இடத்துல தண்ணி சுத்தமா இருக்கு , நீ இருக்கற எடத்துல தண்ணி அழுக்கா இருக்கு, மீன் நெறய இருக்கு , மீன் கம்மியா இருக்கு ன்னு வேறுபாடு பாக்காதீங்க . இதுல வேற சில பேரு கொளத்து மேல பெரிய பிளாட்பாரம் ஒன்னு கட்டி எல்லாரும் இது மேல வந்து நின்னுக்கோங்க , உங்க மூஞ்சி, உங்க உடல் எல்லாமே வெளியே தெரியும் , இங்க வந்து நில்லுங்க ன்னு கூப்படறாங்க . ஏண்டா டேய் , அங்க நின்னுட்டா எப்பிடிடா முன்னாலே போவாங்க .கொளத்துல இறங்கணும் , இறங்கி தண்ணிக்குள்ள ஆழமா நடக்கணும் . ஒரு அடி முன்னால போனா அரை ஆடி ஒடம்பு ஆழத்துல போகும் . முன்னேற்றம் அப்பிடீங்கறது , இங்க , தண்ணிக்குள்ள இறங்கி அப்படியே ஆழத்துக்கு போயீ நம்ம அடையாளமே இல்லாம முழுமையா தண்ணிக்குள்ள போகிறது தான் அந்த முன்னேறுதல். அப்பறம் நமக்கு ஒரு வேலை வரும்போது தண்ணிக்குள்ள இருந்து வெளியே வந்து வேலைய செஞ்சிட்டு உள்ள போயீ மறுபடியும் உக்காந்துக்க போறோம் , வெளியே வரும்போது நமக்கு பேரு ஊரு அடையாளம் , உள்ள போனா ஒரு அடையாளமும் இல்ல . அப்பறம் இந்த கொளத்துக்கும் கடலுக்கும் அடி பூமி வழியா ஒரு கனெக்ஷன் இருக்கு . அதனால தான் இந்த கொளத்துல தண்ணி எப்பவுமே கொறயவே கொறையாது .  அப்போ தான் நமக்கு ஓரைக்குது , அடேய் , அந்த கடலும் இந்த குளமும் ஒன்னு தாண்டா , அதே தண்ணி தாண்டா இதுவும் , கடலுக்கு வேணும்னாலும் இது வழியா எளிமையா நாம போக முடியும். இப்படியாக வேறுபாடுகள் ஒரு பக்கம் இருக்குது . . அதுல இன்னும் வேறுபாடுகளா பாக்கும் போது , இன்னொருத்தன் , டேய் உங்க கொளத்துல இல்லாத வசதிக , இல்லாத மீனுங்க , இங்க இருக்குடா . எங்க குளம் வேற குளம் , சூப்பர் குளம் , இங்க வந்துடுங்கடா ன்னு கூவறான் ,... ஏண்டா எல்லா தண்ணியும் எங்கே இருந்துடா வருது . கடல்ல இருந்து ஆவியாகி , மழையா பெய்ஞ்சு அதே தண்ணி தாண்டா உங்க கொளத்துக்கும் எங்க கொளத்துக்கும் அதே மழை தாண்டா . அடியிலே இருக்கும் பூமிக்கு தகுந்த மாதிரி , அந்த தண்ணீரோட தண்மை மாறுதே ஒழிய , தண்ணீர் ஒன்று தாண்டா , வேறுபாடு பாக்காதீங்க , இங்க இருக்கற எல்லா கொளத்துக்கும் ரகசிய இணைப்பு இருக்குது . ஒவ்வொரு கொளத்துக்கும் கடலுக்கும் இணைப்பு இருக்குது . கடல் வத்தி போச்சுன்னா , எல்லா குளமும் தான் வறண்டு போயிடும் . சும்மா எதுக்குடா வேறுபாடு . நான் ஒத்துக்கறேன் வேற வேற குளம் தான் , ஆனா வேறுபாடு பாக்க வேண்டியதில்லை . கடைசியிலே ஆரம்பமும் முடிவும் ஒன்னு தான் எல்லார்த்துக்கும்.


 


குறிப்பு :

குளம் - அகத்தியர் .

அதில் உள்ள மனிதர்கள் - அவர் வழி நடப்பவர்கள்

கடல் - ஈசன்

அருகில் உள்ள குளங்கள் - சைவம் வைணவம் சிவாசாரியார் நாயன்மார் ஆழ்வார் போன்ற பிரிவுகள்


No comments:

Post a Comment

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...