Wednesday, March 31, 2021

இன்று 31.03.2021 - ஒரு அனுபவம் தற்செயல்கள் தற்செயல்கள் தற்செயல்கள் , இறை செயல்கள் எல்லாமே ஒரு co - incidence

31மார்ச்சு 2021 - இன்று நான் ஆபீஸ் வேலையில் ஒரு கடன் வழங்கலை ஒப்புதல் அளித்தேன் . மற்றொவர் சேர்ந்து அவரும் ஒப்புதல் அளித்தால் தான் கடன் ஒப்புதல் நிறைவு பெரும் , ஒருவர் மட்டுமே அளித்தால் நிறைவு பெறாமல் நிற்கும் . நமது அலுவலகத்தின் கடன் வழங்கும் மென்பொருளில் , நான் ஒப்புதல் அளித்து உடனே மற்றவருக்கு ஒரு செய்தி செல்லும் - அதாவது , ஒருவர் ஒப்புதல் அளித்து விட்டார் , உங்கள் ஒப்புதல் நிலுவையில் உள்ளது . உங்கள்  முதுவை பதிவு செய்யவும் என்று ஒரு தானியங்கி செய்தி செல்லும் . மதியம் 1.30 க்கு அளித்த ஒப்புதலுக்கு தானியங்கி தகவல் மற்றவருக்கு செல்லவில்லை . நான் அதை கவனித்தேன் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன் . தானியங்கி வேலை செய்யாததால் நான் அந்த செய்தியை நானாக வடிவமைத்து மற்றொருவருக்கு அனுப்பி அவரது ஒப்புதலை கேட்டு, பின்னரே அந்த கடன் ஒப்புதலை நிறைவு செய்ய வேண்டும் . ஆனால் நான் அவ்வாறு செய்யாமல் விட்டு விட்டேன் . பின்னர் மொபைலில் பல செய்திகளை படித்து கொண்டு பல படங்கள் பார்த்து கொண்டு , சுமார் அரை மணி நேரம் கடத்தினேன் . சுமார் நாற்பது நிமிடம் கழித்து , உடனே எந்திரத்தனமாக , மொபைலை மூடி வைத்து விட்டு , உடனடியாக சென்று, அந்த தானியங்கி தகவல் சென்றதா இல்லையா என்று பார்த்து , சரி நாம் செய்தியை வடிவமைத்து அனுப்பலாம் என்று பார்த்த அடுத்த நொடி , தானியங்கி வேலை செய்து செய்து அந்த அடித்த நபருக்கு சென்றது.

இதுவும் ஒரு தற்செயல் , ஆங்கிலத்தில் இதனை co - incidence என்பார்கள் .  வாழ்க்கையில் பல தற்செயல்கள் உண்டு.

இங்கே பார்க்க வேண்டியது
1. தானியங்கி வேலை செய்யாததால் , செய்தியை நானே வடிவமைக்கும் பொறுப்பு - ஏன் தள்ளி போடப்பட்டது
2. தள்ளி போட்டது - நான் மூளையில் யோசித்தவுடன் எப்படி தானாக அதே நேரத்தில் அந்த செய்தி தானியங்கி சரி ஆனது
3. ஏன் நான் மிகச்சரியாக 40 நிமிடம் கழித்து தானியங்கி செய்தி செல்லும் அதே  நேரத்தில் நானும் தானியங்கி வேலை செய்ததா ,இல்லையென்றால் நாம் செய்தியை அனுப்புவோம் , என்று எண்ணியது  , அதே நேரம்  - co - incidence
4. கடந்த 40 நிமிடங்களில் - எப்போதோ அந்த வேலையே செய்திருக்கலாம் , அப்போதெல்லாம் செய்ய நினைக்காமல் , சரியாக மதியம் 2:18 மணிக்கு அந்த வேலையை செய்ய நினைத்தது எவ்வாறு.

தற்செயல்களில் பல உண்மைகள் உள்ளது . பல வருடம் முன்னாள் அதே போல , எனது யமஹா பைக் திருடு பொய் ஒரு மாதம் கழித்து , புதிய பைக் வாங்கலாம் என்று முடிவு செய்த அடுத்த நாளே , பழைய பைக் கிடைத்தது . அதாவது , நீ புதிதாக வாங்க வேண்டாம் , இரு அவசரப்படாதே , பழைய பைக் கிடைக்கும் என்று யாரோ செய்து கொடுத்தது போல , இன்று நடந்த தற்செயலும் , நீ அவசரப்பட்டு செய்தியை நீயே வடிவமைத்து அனுப்ப வேண்டாம் , அதுவே செல்லும் , நீ உன் மற்ற வேலைகளை கவனி .. என்று கூறுவது போல அமைந்தது இந்த தற்செயல்
அதே போல , அன்று ஒரு நாள் , பைக் ரிப்பர் ஆன போது , எந்த மெக்கானிக்கும் வருகிறேன் என்று சொல்லி கூட வரவில்லை . எவ்வளவு முயற்சி செய்தும் , பலரிடம் பேசியும் யாரும் வரவில்லை . மாலை ஆனது. அப்போது மனதின் குரல் கேட்டு , இப்போது சென்று பைக் ஐ ஸ்டார்ட் செய்து பார் என்ற குரலை நம்பி பைக்  ஐ ஸ்டார்ட் செய்து பார்த்த போது 2 உதையில் ஸ்டார்ட் ஆனது . நேற்று 300 முறை உதைத்து ஸ்டார்ட் ஆகாத பைக் . மெக்கானிக்கை வர விடாமல் தடுத்தது யார் , பைக் ஐ தானாக இயங்க செய்தது யார் .

அதே பாணியில்  தான் இன்றும் தானியங்கி செய்தி வேலை செய்யவில்லை . நானாக செய்தியை வடிவமைக்க விடாமல் தடுத்தது யார் . பின்னர் தானியங்கி யை தானாக வேலை செய்ய வைத்து யார் , மிக சரியாக , நான் செய்தியை வடிவமைப்பேன் என்று முடிவு செய்த அடுத்த வினாடியே தானியங்கி வேலை செய்தது . இது சின்ன விஷயம் தான் , ஆனால் இதில் இழையோடுவது இறை அனுபவம் என்று அனுபவித்தவனுக்கு தான் புரியும். எப்போதுமே இறை செயல் மனிதனை வியப்பில் ஆழ்த்தும் .

தற்செயல்கள் தற்செயல்கள் தற்செயல்கள் , இறை செயல்கள் எல்லாமே ஒரு co - incidence












 .


No comments:

Post a Comment

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...