மனதில் நினைக்கும் எண்ணங்கள் பிரபஞ்சத்தில் கலந்து யாரிடம் என்ன எண்ணங்களை செலுத்துகிறோமோ அவர்களை அடைந்த.. அவர்களுடைய மனதில் நமது எண்ணம் தோன்றி அவர்களை ஒரு செயல் செய்ய தூண்டும் அதற்கு நினைப்பதெல்லாம் நிறைவேறும் வரம் பெற்றிருக்க வேண்டும். தவம் செய்து ஆற்றல் பெற்று இருக்க வேண்டும்.
இந்த மாதம் 5ஆம் தேதி எனது சொந்தக்காரர்கள் நேரில் எனது இல்லம் வந்து, பத்திரிகை வைத்து சென்றார்கள் . இன்று 14 ஆம் தேதி... இன்று காலை 11 மணி அளவில் திடீரென்று எனக்கு ஒரு ஐயப்பாடு ஒரு வேளை இன்று அந்த . கல்யாணமாக இருக்குமோ . எப்படி தெரிந்து கொள்வது, வாட்ஸ் அப் இல் பத்திரிக்கை அனுப்பிருந்தால் பார்க்கலாம் இல்லையென்றால் இப்போது உடனே பார்க்க முடியாது. வீட்டிற்கு சென்று தான் பார்க்க வேண்டும். இவர்கள் ஏன் வாட்ஸ் அப் இல் அனுப்ப வில்லை என்று நினைத்தேன்
தற்போது 3 மணி அளவில் வாட்ஸ் அப் இல் பத்திரிகை அனுப்பி வைத்துள்ளார்கள் . நவம்பர் 14 கல்யாணம் இன்னும் 1 மாதம் உள்ளது . நேரில் வந்து பத்திரிகை கொடுத்தவர்கள் பொதுவாக் வாட்ஸ் அப் இல் அனுப்ப மாட்டார்கள். அதுவும் கடந்த 8 நாட்களாக பத்திரிக்கை கொடுத்து சென்றதில் இருந்து எந்த செய்தியும் இல்லை. இன்று சரியாக, நான் மனதில் நினைத்தவுடன் நான் கேட்ட தகவல் கேட்ட நபரிடம் இருந்து கேட்ட மென்பொருளில் வந்தது . இதனை நான் தற்செயலாக நினைக்கவில்லை நிகழத்தப்பட்ட ஒரு செயலாக நினைக்கிறேன். பலமுறை இவ்வாறு நடந்துள்ளது.
No comments:
Post a Comment