நேற்று ஒரு நண்பரிடம் ஒரு வங்கி விஷயமாக பேசிக் கொண்டிருந்தபோது, நாளை அந்த படிவத்தை எடுத்து வருகிறேன் நீங்கள் உங்கள் அடையாள அட்டை மற்றும் புகைப்படத்தை எடுத்து வையுங்கள் நான் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார் .
இப்போது அப்படியா என்னுடைய புகைப்படத்தை எங்கே வைத்தேன் என்று ஞாபகம் இல்லை இருக்கிறதா ?இல்லை தொலைந்து விட்டதா என்பதும் ஞாபகம் இல்லை
ஒரு வேளை என்னுடைய இல்லத்தில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்திருக்கலாம் தேடிப் பார்ப்போம் கிடைக்கவில்லை என்றால் நாளை கொடுக்க முடியாது.
திரும்பவும் புகைப்பட நிலையம் சென்று புகைப்படம் எடுத்து தான் தர வேண்டும்
அதற்கு நேரமில்லையே இப்போது என்ன செய்வது?
கிடைக்குமா கிடைக்காதா ?
என்ற கேள்வியுடன் என்னுடைய சிந்தனை முடிந்தது
பிறகு மாலையில் பார்க்கும்போது தெருவில் வாகனத்தை சரி செய்து கொண்டிருக்கும் போது என்னுடைய பையின் மேல் பகுதியில் வெளியே ஒரு இடத்தில் அது தானாக என் கண் முன்னே பளிச்சென்று வந்து இருந்தது
தினமும் அலுவலகம் சொல்கிறேன் தினமும் அதே பையைத்தான் எடுத்து சொல்கிறேன். ஆனால் இதுவரை என் கண்ணில் பட்டதில்லை இதுவரை அது அந்த பையிலே இருக்கும் என்று எனக்கு தெரியவும் இல்லை
நான் தேடவும் இல்லை
உள்ளே இருந்து எடுக்கவும் இல்லை
ஆனால் அமானுஷ்யமாக இன்று நான் கேட்ட உடன் அது வெளியே வந்து என் கண் முன்னே நிற்கிறது அது எப்படி சாத்தியம்
இது என்னுடைய அனுபவ பதிவாக நான் பதிவு செய்ய விரும்புகிறேன்
அனுபவம் 26.10.2022
பதிவு 27.10.2022
சந்தானம்
கோவை
No comments:
Post a Comment