இன்று 11/10/2022. செவ்வாய்க்கிழமை , வெற்றி வேல் முருகர் உபாசனை
செவ்வரளி மலர்களால் த்ரிசதி அர்ச்சனை , தூபம் , தீபம் , கற்பூரம் , நெய்வேத்தியம் , நீர்
வணக்கம் அய்யா
நல்லது , வந்தாயா , சரி முருகர் படத்தை வைக்கும் போது , இரு புறமும் சமமாக வை . புறம் உயர்ந்தும் இன்னொரு புறம் தாழ்ந்தும் வைக்க வேண்டாமே .
- அப்படியே ஆகட்டும் அய்யா, சரி செய்தேன்
மலர் அர்ச்சனை செய்யும் போது , நடுவில் வெளியே செல்லாதே , முழுவதுமாக பூஜையை முடித்து செல் .
- சரி அய்யா, அப்படியே செய்கிறேன்
முதல் அர்ச்சனை முடிந்தது
இரண்டாவது அர்ச்சனை செய்யும் போது , முடிவில் சிறிய வியர்வை துளிர்த்தது , உடல் உஷ்ணம் கூடியது
- அய்யா, இது என்ன அய்யா, பூஜை செய்தால் உடல் உஷ்ணம் கூடுகிறது , அது ஏன் அய்யா
அந்த காலத்தில் , பூமி மேம்பட்ட நிலையில் , பஞ்சபூத கலவை கொண்டு இருந்தது . பூமி சிறிது சிறிதாக நகர்ந்து , நீ எப்படி வயோதிகம் கொல்கிறாயோ , அப்படியே அதுவும் குறைபாடு கொள்கிறது . உனது கர்மத்தின் அளவே இந்த பூமி , இந்த பூமி என்று உய்வடைகிறதோ , அன்றே , ஈயும் உய்வடைவாய் , நீ உய்வடையும் போது , பூமி உனக்கு வேறு மாதிரியாக தோன்றும் , நீ இறைவனுடன் கலந்து விட்ட பிறகு , இந்த உடலின் நிலையில் இந்த பூமியை உணரும் போது உண்மையான பூமியின் தன்மை தெரியும் . உன் உடல் எனப்படுவது , பஞ்ச பூத கலவை பூமியில் இருந்து வந்து , எப்போது பூமியுடன் ஒட்டி நகர்ந்து , எப்போதும் பூமியுடன் சேர்ந்தே உள்ளது , எனவே , பூமியின் தண்மை நமது உடலிலும் வெளிப்படும் . பழங்காலங்களில் பூமி உறுதியாகி இருந்த போது , எந்த ஆன்மீக சாதனை செய்தாலும் , உடல் தாங்கி நிற்கும் , இப்போது , இந்த பூமி , அழிவை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது , கலி காலம் , களிக்கும் காலம் , எனவே பூமியில் உள்ள வெப்ப நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் மைய பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது , நீங்கள் தான் நிலத்தின் ஆழத்தில் இருந்து எரிபொருளை வெளியே எடுத்து வந்து எரிக்கிறீர்களே , அதனால் வெப்பம் வெளியேறுகிறது , அதன் விளைவாய் பூமியில் வெப்பம் குறைந்தால் குளிரும் . அது போல தான் , உடலில் தாங்கும் அளவிற்கு மேலே உள்ள வெப்பம் வெளியேறுகிறது
உன் உடலில் உள்ள பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று தான் முக்கியமான இயக்கம் , அந்த இயக்கத்தை நீ மாற்றி அமைக்கும் போது , வாசி யோகம் செய்யும் போது , அல்லது மந்திர ஒலிகளை எழுப்பும் போதும் , காற்றின் ஓட்டம் வேறு நிலையில் இயங்குகிறது . அதனால் பஞ்ச பூத கூடாகிய உன் உடல் சிறிது மாற்றம் பெறுகிறது , அப்போது வெப்ப நிலைகள் மாறலாம் . வசிக்கும் கூட்டை மாற்றுவது , அல்லது சரி செய்வது , என்பதை புரிந்து கொள் . மந்திரம் என்றால் , ஏதோ எழுதி வைத்து மன்னன் செய்து உச்சரிப்பது என்பது அல்ல , அதையும் தாண்டி , விஷேஷ மந்திரங்களை உச்சாடனம் செய்யும் போது , நீ வசிக்கும் கூடாகிய உடலில் உள்ள பஞ்ச பூதத்தில் காற்றோட்டம் உருமாறி , சில மாற்றங்களை உண்டு செய்கிறது . இறைவனுக்கு உடல் ஒன்று இருந்தால் , அந்த உடலுக்கு எப்படி காற்றோட்டம் இருக்கும் , அந்த நிலையை நோக்கி உனது நிலை சிறிது திரும்பினால் கூட முக்தி அடைந்து விடுவாய் , அதாவது இறை நிலை பெற்று விடுவாய் . இது தான் த்யானம் , பூஜை , என்று கூறுவார்கள் , பக்தியுடன் சக்தி வாய்ந்த மந்திரங்களை கூறி வழிபாடு செய்யும் போது , அந்த இறைவன் உனது உள் இருந்து வெளிப்படுவான் . அணைத்து ஆன்மீக சாதனைகளும் , உன் உள் இருக்கும் சக்தியினை வெளிப்படுத்த தான் அமைக்கப்பட்டு உள்ளது. எந்த வழிபாடு செய்தால் உன் உள்ளே இருக்கும் சக்தி வெளிப்படும் என்று உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல் செய்யலாம் , சிலருக்கு சிவன் , விஷ்ணு , பைரவன் , கருமாரி , முருகன் , சித்தர்கள் என பல வகை வழிபாடுகள் உள்ளன . உனது வாழ்க்கையே ஒரு தொடர்கதை போல் உள்ளது , அடுத்த அத்யாயம் எழுதும் போது , சென்ற அத்தியாயத்தில் எதில் முடித்தாயோ, அதில் இருந்து ஆரம்பிப்பது புத்திசாலித்தனம் , ஒவ்வொரு அத்தியாயத்தையும் , புதிய கதை கொண்டு ஆரம்பிப்பது தொடர்கதை ஆகாது . கதை தொடர்ந்து வந்தால் தான் முடிவிற்கு வரும் . எனவே உனக்கு எந்த குரு, எந்த தெய்வம் என்று தெரியாத நிலை வரக்கூடாது என்று குலதெய்வம் என்று ஒரு தொடர்ந்த வழிபாட்டினை வைத்தார்கள் . சில தெய்வங்களை வணங்கும் போது , உன் உள்ளே இருக்கும் சக்தி நன்றாக வெளிப்பட்டால் , அது தான் உன் உள்ளே இருக்கும் சக்தி என்று உணர்ந்து கொண்டு , அதனையே பிடித்து கொண்டு முழுமை பெறலாம் , புதிதாக ஆரம்பித்தாள், அது வேலை செய்யவே சில பிறவிகள் ஆகி விடும் . ஏற்கனவே பல பிறவிகள் வேலை செய்து , அதனை பலப்படுத்தாமல் வீணடித்தால் , கால விரயம் உண்டாகும் , அர்த்தம் வராது , தெய்வ நிந்தனைக்கும் ஆளாக நேரிடும் . அந்த தெய்வம் உனக்காக பல பிறவிகள் காத்து கொண்டிருக்கும் , அதுவே விதி யாக வந்து உன்னை ஈர்க்கும் , நீயே முயன்றாலும் அந்த தெய்வத்திடம் இருந்து விலகி செல்ல வாய்ப்பளிக்காமல் உன்னையே ஆட்கொண்டு , ஆட்டுவித்து , காத்து , வழி நடத்தி , இப்போது உன்னிடம் பேசி கொண்டு உள்ள என்னை போன்று இருக்கும் . இப்போது புரிகிறதா , நான் யார் , நீ யார் என்று , எந்த அளவிற்கு வேற்றுமையை களைகிறாயோ அந்த அளவிற்கு நீ தெய்வீகம் பெறுவாய் , உன்னை மறப்பதற்கு தான் த்யானம் , மனம் எண்ணங்களை உருவாக்கி , பதிவுகளை உருவாக்கி , அந்த எண்ணங்களின் , பதிவுகளின் கூட்டே , அதையே தான் "நீ" என்று கூறி கொள்வது . த்யானத்தில் எண்ணங்கள் அற்ற நிலை விழி நிலை , விழிப்பு நிலை என்று கூறப்படுகிறது. அப்போது தான் மனம் செயல்படாமல் , உன் அககாரமாகிய "நான்" என்பது இல்லாமல் இருக்கும் நிலையில் , வேற்றுமை களைந்து , இறை நிலை மட்டுமே இருக்கும் . இறைவன் என்பது , அந்த "நான்" அல்லாத அந்த நிலையை குறிக்கும். இறைவன் என்பது ஒரு நிலையே , அந்த நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் . மனதை அடக்க முடியாது , தகுந்த புரிதலுடன் பக்குவப்படுத்த வேண்டும் . அதற்கு சொன்னால் புரியாது , சில சமயம் அடி பட்டால் தான் புரியும் , அதனை புரிய வைப்பது தான் இறைவன் செயல் .
உன்னுள் இருக்கும் சக்தியை வெளி படுத்த யுக்தி தான் இந்த வழிபாடு , இறைவன் என்பது நீ உருவாக்குவது , உதாரணத்திற்கு , இப்போது நீ பல மந்திரங்களை சொல்கிறாய் , அனைத்தும் இறைவனின் பெருமையை சொல்கின்றன , வீர தீர செயல்களை சொல்கின்றன , எனவே முருகன் என்பவன் இருந்தான் , அசுரர்களை அழித்தான் , தேவர்களை காத்தான் , மிகுநத பலம் பெற்றான் என்றெல்லாம் உணர்த்தும் விதமாக மந்திரத்தின் அர்த்தங்கள் உள்ளன . அதனை உச்சரித்து கூறியும் போது , அந்த இறைவனின் அருமை பெருமைகளை உணர்கிறோம் . ஒருவன் பாடல் பாடும் பொது உணர்ச்சியில்லாத ஜடம் போல பாடல் பாடினால் , அதில் , அந்த பாடலில் ஜீவன் இல்லை என்பார்கள் , எனவே பாடல் படுபவன் அதே உணர்ச்சியுடன் அனுபவித்து பாட வேண்டும் . அதே போல தான் , இந்த இறை வழிபாடும் , உன் கண் முன்னே இறைவன் உள்ளான் , அவனிடம் நீ மந்திர மொழியில் உரையாடி கொண்டு இருக்கிறாய் ,, ஒவ்வொரு முறை அந்த இறைவனின் சொரூபம் , உன் மந்திர அர்ச்சனை சொல்லிற்கு ஏற்றவாறு தெரிகிறது என்பதை காண வேண்டும் . உதாரணம் - ஓம் சதகோடி ரவிபிரபாய நமஹ என்றால், 100 கோடி சூரியன்கள் சேர்ந்த ஒளி ப்ரவாகை போல காட்சி அளிப்பவர் என்று பொருள் , உன் முன்னாள் இருக்கும் இறைவனின் பிம்பத்தை , அந்த மந்திர சொல்லின் சொரூபமாக பார்த்து பாவித்து , வணங்கி , மலர் தூவி அர்ச்சனை செய்து வாழ்த்தும் போது , அதே சக்தி இரு மடங்காக நமக்கே திரும்ப கிடைக்கிறது , இவ்வாறு சக்தியை கொடுப்பது 1 மடங்கு, பெறுவது இரு மடங்கு என்றாகி , தொடர்ந்து 1 மணி நேரம் அர்ச்சனை செய்து வந்தால் , சக்தி பல மடங்கு பெருகும் . அப்போது உன் உள்ளமும் உடலும் தூய்மை பெரும் , நீ நினைப்பது எல்லாம் கை கூடும் . எனவே ஒவ்வொரு முறையும் வெறுமனே மந்திரத்தை முணுமுனுக்காமல் அந்த மந்திர ஒலியை உணர்ந்து அண்ட் மந்திரத்திற்குரிய நாயகனை அங்கே கண்டு கண்டு தொடர்ந்து வழிபட்டு வந்தால் , ஒரு நாள் நீ உண்மையான சொரூபமாயகிய தூல வடிவத்திலேயே உன் உலகத்தின் உள்ளே அந்த இறைவன் உன் முன்னே தோன்றுவார் . அதன் பின் , நடத்தும் வழி பற்றி அவர் பொறுப்பில் நீ அனைத்தையும் விட்டு விடலாம் , அவரே நீ ஆகி விடுவார் , நீ என்பதேதுவும் இருக்காது . தான் , அது வாக ஆகி விட்ட பிறகு , ஜீவன் முக்தனாக அந்த
உடல் , பெயர் அடையாளம் இருக்கும் . அப்படி பல நிகழ்வுகள் நடந்துள்ளன , அருணகிரிநாதர் , சித்தர்கள் , போன்றோர் எல்லாமே அதே நிலையை அடைந்தவர்கள் , ஆழ்வார்கள் , நாயன்மார்கள் என்று கூறி கொண்டே போகலாம் . அனைத்திலும் கடினமானது உயர்ந்தது , உருவமில்லாத பெயர் இல்லாத பொருள் இல்லாத சக்தியை , அதே வண்ணமே , வெளிச்சமாக , ஒளியாகி , தீப ஒளி சுடராக வழிபட எல்லாருக்கும் பக்குவம் இருக்காது . அதில் பக்குவப்பட்டவர்கள் அதில் செல்லலாம் , இதில் பக்குவப்பட்டவர்கள் இதில் இருக்கலாம் . இரண்டையுமே வைத்து கொள்வேன் என்றவரும் உண்டு , ஆனால் , இரண்டிலுமே முழுமை பெற வேண்டும் , இரண்டு அல்லது மூன்றை வைத்து கொண்டு எதிலேயும் முழுமை பெறாவிட்டால் , நாங்கள் என்ன சொல்வது , எந்த செயல் செய்தாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் , அப்போது இறைவனை காணலாம் . இவ்வாறு இறைவனை உருவகம் செய்து தாரனையில் ஈடுபடுவது பக்தி மார்க்கம் , தாரணை த்யானம் ஆகி சமாதி நிலை பெற்றால் , பக்தியிலும் முக்தி பெறலாம் . அப்படி பக்தி யோகத்தில் ஈடுபடுவதற்கு இறைவனை தினமும் தாரணை செய்ய ஒரு இடம் தேர்ந்தெடுத்து , ஒரு ஆளை நியமித்து , அவர் தாரணை செய்வது மூலம் , தானும் தாரணையில் ஈடுபட்டு , பலருக்கும் ஒரு பொதுவான தாரணையாக இருக்கும் இடம் ஆலயம். இது தான் ஆலயங்கள் உருவாக காரணம் . எனவே நீ அர்ச்சனை செய்யும் போது ஒவ்வொரு மந்திரத்தாலும் இறைவனை தியானித்து தாரணை செய்து , அந்த மந்திரத்திற்குரிய உருவை பொருளை மனதில் எண்ணி பூசை செய்தாயானால் ஒரு நாள் இறை காட்சி நிச்சயம் கிடைக்கும் . முருகனை காண்பதென்றால் சுலபம் கிடையாது . அதற்கு வைராக்கியம் சேர்ந்த முயற்சி வேண்டும். உயிர் உள்ள வரை வீணடிக்காமல் , வாசி பயிற்சி த்யான பயிற்சி , பக்தி யோகம் போன்றவற்றையெல்லாம் விடாமல் செய்து கொண்டே இரு , சில சமயம் , இறைவன் வந்து உனது பயிற்சி முடியும் வரை காத்து கொண்டு இருப்பார் , நீ பயிற்சியில் மூழ்கி இறைவனை கூட கவனிக்காமல் , தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருப்பாய் . அப்பேற்பட்ட தொடர் நிலை வேண்டும் . உன் ஆன்மாவை கொண்டு போய் இறைவனிடம் ஒப்படைத்து விடு , பின் உன்னுள் இறைவன் , நீ வேறு , அது வேறு என்று வித்தியாசம் இல்லாமல் இருப்பார்.
- இறைமொழி உரை ; தட்டச்சு - சந்தானம்
No comments:
Post a Comment