Sunday, June 25, 2023

திருவண்ணாமலை வாழ்க்கை கொண்ட அதிசய அற்புத பாக்கியவான்கள்


 சுமார் 20 ஆயிரம் முறை இவர் கிரி வலம் வந்திருப்பார் போல... சிவாய நமஹ ஓம் அருணாச்சல ஈஸ்வ ராய நமஹ, 

Friday, June 23, 2023

ஜூன் 2023 அனுபவங்கள்

 பல வகையான சம்பவங்கள் வாரம் - 17ஜூன் 2023 2முதல் 3ஜூன் 2023 வரை 


1. CA படிப்பு படித்த ஒருவர் இருந்தால் சொல்லுங்கள் என்று பக்கத்து இருக்கையில் உள்ளவரிடம் கேட்டேன். அதனை பிரபஞ்சம் கேட்டு கொண்டு , 2 வருடம் முன்பு என் தொடர்பில் இருந்த CA நண்பர் , இப்போது கடந்த 2 வருடங்களாக தொடர்பில் இல்லை , அவர் என்னை தொடர்பு கொண்டு வேலை இல்லாமல் இருப்பதாகவும் , தனக்கு உதவும்படியும் கேட்டுக்கொண்டார்.

சரி, இவர் இந்த வேலைக்கு தேவையான அனுபவம் இல்லை , நமக்கு இதே வேலையில் முன் அனுபவம் உள்ளவர் வேண்டும் என்று நினைத்தேன் , பிறகு 3 மாதம் முன் நாம் அணுகிய ஒரு பெண்ணை நினைத்தேன் , அவளுக்கு முன் அனுபவம் இருந்தாலும் , அவள் நான் கூறும் நிறுவனத்தில் வேறு சில காரணங்களால் சிபாரிசு செய்ய முடியாது என்று நினைத்தேன்.


CA படித்த மேற்கூறிய ஒரு பெண்ணை நான் மூன்று மாதம் முன்பு வேலைக்கு சேர தனது பயோ டேட்டா வை அனுப்ப சொல்லி கேட்டும் , அவர் அனுப்பவில்லை , 3 மாதங்களாக எந்த தொடர்பிலும் இல்லை , இப்போது அவர் நான் ப்ரபஞ்சத்திடம் கேட்ட அடுத்த நாளிலேயே தானாகவே எனது கைபேசி எண் ஐ தேடி எடுத்து , நேரிடையாக எனக்கு அவளுடைய பயோ டேட்டா வை அனுப்புகிறார். பிரபஞ்சத்திற்கு நன்றி 


9 வருடங்களாக இதே அலுவலக வளாகத்தில் வாகனத்தை செலுத்தி வருகிறேன் , நுழைவு வாயில் அருகே ஒரு சிறு மேடு உள்ளது , ஒவ்வொரு முறையும் அணைத்து வாகனங்களும் அதில் இடித்து குலுங்கி தான் இவ்வளவு வருடங்களாக செல்கின்றன . எதேச்சையாக ஒரு நாள் , இந்த  நிர்வாகம் இதனை சரி செய்து கொடுத்தால் என்ன பிரச்சனை அவர்களுக்கு என்று நினைத்தேன் . மாரு நாள் காலை ,  கான்க்ரீட் போட்டு மேடு பள்ளம் இல்லாமல் சரி செய்யப்பட்டு இருந்தது , மேலும் அதன் தொடர்ச்சியான பாதையில் உள்ள மேலும் சிறு சிறு மேடு பள்ளங்களும் கூட சரி செய்யப்பட்டன 

கேரளாவில் ஒரு புதிய நபரை வேலைக்கு அமர்த்தினோம் , அவர் வருவதற்குள் அவருக்கு புதிய லேப்டாப் கருவி ஆர்டர் செய்து வாங்கி வைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி , அதில் சிறு  விட்டது , அப்போது அவர் 2 நாட்களில் வேலைக்கு சேர்வதற்கு உள்ள நிலையில் , லேப்டாப் வரவில்லை , அடடே அவர் வந்து மேலும் சில நாட்கள் சும்மா இருக்க வேண்டும் , லேப்டாப் வரும் வரை வேலை செய்யாமல் காத்திருக்க வேண்டுமே என்று நினைத்தேன் , பிரபஞ்சம் அவருக்கு வேறு ஒரு அவசர வேலையே கொடுத்து , அவர் வேலைக்கு சேரும் நாளை சரியாக மேலும் 2 நாள் தள்ளி போட்டது , மிக சரியாக , அதே 2 நாளில் , லேப்டாப் வந்து சேர்ந்தது , 10 நாளில் வர வேண்டிய லேப்டாப் 7 நாளிலேயே வந்து சேர்ந்தது , பிரபஞ்சத்திற்கு நன்றி 

நேற்று யதேச்சையாக , இரவு தொலைக்காட்சியில் நாடகம் பார்த்து கொடு இருந்த போது , ஒரு நாடக காட்சியில் ஒருவர் வாய்வு பிடிப்பால்  வந்து சிரமப்படுகிறார் , உடனே எனக்கு உள்ள வாய்வு பிடிப்பு ஞாபகம் வந்தது . மாரு நாள் காலை கடந்த 1 வருடமாக எனக்கு 1 தடவை கூட வராத வாய்வு பிடிப்பு ஏற்பட்டு தற்போது கடும் முதுகு வலி ஏற்பட்டது , பிரபஞ்சத்திற்கு இந்த முறை நன்றி தெரிவிக்கவில்லை , நினைப்பது எல்லாமே சுபமாக நினைக்க வேண்டும் என்று என்னிடம் நானே கூறி கொண்டேன் , இனிமேல் கவனமாக இருப்பேன் 


அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...