ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள் - நினைத்தால் அது சித்தி பெரும் என்பது , அகத்தியர் எமக்குரைத்த வாக்கு
இன்று 26/02/2021, வெள்ளிக்கிழமை , மதியம் 12.45 மணி அளவில் திடீரென்று அலுவலகத்தில் புரியும் ஒருவருக்கு சில எனது வீட்டில் உள்ள தஸ்தாவேஜுகளை படம் பிடித்து அனுப்பித்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன் ஆனால் இன்று 24 மணி நீரால் ஆகியும் அதற்க்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. மறந்தே போனேன் . எனக்குள்ளே எண்ணம் எழுகிறது - சரியாக 12.45 மணிக்கு , " அய்யா எப்போ வந்து அந்த தஸ்தாவேஜுகளை வந்து கொடுப்பீர்கள், இன்று வருவீர்கள் என்று பார்த்தேன் ஆனால் இன்று நீங்கள் அலுவலகம் வரவில்லையே , அந்த தஸ்தாவேஜுகள் எனக்கு தேவைப்படுகின்றன ". இது தான் எனக்குள்ளே தோன்றிய வார்த்தைகள் . உடனடியாக படுக்கயறை சென்றேன், மனைவி உறங்கி கொண்டு இருந்தாள் , அவளை எழுப்பி பீரோ சாவி எங்கே வைத்துள்ளாய் என்று கேட்டு லைட் போட்டு பீரோ சாவி எடுத்து திறந்து தஸ்தாவேஜுகளை எடுத்து பார்க்கிறேன். பின்னர் எனக்குள்ளே கேட்கிறேன் " தஸ்தாவேஜுகளை கருப்பு வெள்ளை ஜெராக்ஸ் எடுத்து கொள்ளலாமா அல்லது அலைபேசியில் படம் எடுத்து அனுப்பலாமா" - மனதில் வந்த பதில் - அலைபேசியில் அனுப்பினால் போதும் நான் அலுவலகத்தில் பிரிண்ட் போட்டு எடுத்து கொள்கிறேன்". பின்னர் கருப்பு வெள்ளை நகலை அலைபேசியில் படம் பிடித்தேன். அதில் சில பக்கங்கள் இல்லை. மனதில் மீதும் கேள்வி "கலரில் உள்ள அசல் பாத்திரத்தை அப்படியே எடுக்கட்டுமா . சரி எடு , நமக்கு தெரிந்தவரிடம் தானே கொடுக்க போகிறாய் ". கலரில் 8 பக்கங்களையும் படம் இடித்து அலுவலகத்தில் வேலை செய்யும் நபரின் பெயரை தேடுகிறேன், அவர் தொலைபேசி என் வெரி ஏதோ பெயரில் சேமித்து உள்ளதால் , எந்த பெயர் என்று தெரியவில்லை, மாறி உள்ளது. அப்போது தான் அதிசயம் நடந்தது, அந்த நபர் அழைத்தார் , அழைத்தவுடன் அந்த பெயர் எப்படி சேமிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்தது. தொலைபேசியை எடுத்தேன், அபவர் என்னை கேட்கும் முன்பே , வணக்கம் அண்ணா , உங்களுக்கு தான் அந்த தஸ்தாவேஜுகளையோ படம் பிடித்து அனுப்பி கொண்டு இருக்கிறேன் , இப்போது உடனே அனுப்பிகிறேன் என்று கூறினேன் - அவரும் அதற்கு தான் அழைத்துள்ளார், சரி அண்ணா என்றார் . கருப்பு வெள்ளை வேண்டாம் , சரியாக ஸ்கேன் ஆகவில்லை என்கிறார்கள் என்றார் , நான் உடனே , ஆமாம் அண்ணா கலரில் தான் எடுத்து அனுப்புகிறேன் என்று கூறுகிறேன் . போன் இணைப்பை துண்டித்து விட்டு உடனே பைல்களை அனுப்பி விட்டேன்.
அவர் அங்கே அந்த பத்திரங்கள் வேண்டு என்று நினைத்த உடனே இங்கே எனக்கு தெரிந்தது. வேறு வேலை செய்து கொண்டு இருந்த நான் , எழுந்து போய் , அவருக்கு என்ன வேண்டுமோ , எப்படி வேண்டுமோ அதன்படி தயார் செய்தவுடன் , அவர் பெயரை தொலைபேசியில் தேடியவுடன் அது அவருக்கு தெரிந்தது என்னை அழைத்து பேசினார். அங்கே 12.45 மணிக்கு நினைத்தது இங்கே தெரிந்தது , மீண்டும் இங்கே 1 மணிக்கு நினைத்தது அங்கே அவருக்கு தெரிந்தது , அவருக்கு கருப்பு வெள்ளை வேண்டாம் கலர் தான் வேண்டும் என்பது உள்பட அனைத்துமே தெளிவாக பேசிக்கொள்ளும் முன்பே தெரிந்தது.
Test
ReplyDeletethanks
DeleteCongrulations
ReplyDelete