ஒரு சொத்தை விக்கறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தோம் , 6 வருஷமா முடியல . அப்பறம் இப்போ பண தேவை இருக்கு , அய்யா கிட்டே கேட்டேன் . கொஞ்சம் வித்து கொடுத்த கடன் எல்லாம் அடையும் , கொஞ்சம் நிம்மதியா சேவை செய்யலாம் , செஞ்சு குடுங்க ன்னு கேட்டேன் . ஆங்கிலத்துல micro management ன்னு சொல்வாங்க . அதாவது சிறிய மிக சிறிய அளவில் உள்ள முடிவுகளை கூட உயர் அதிகாரி தான் எடுப்பார் . நாம வெறும் பொம்மை . நான் விக்க நெனைச்சது ஒரு சொத்து , அந்த சொத்து வைக்கறதுக்கு அய்யா ஒத்துகொள்ளல , அவரே என்னோட ஒரு உபயோகமில்லாத விக்க முடியாத சொத்து ஒன்ன தேர்ந்தெடுத்து , விக்க முடிவு பண்ணி இருப்பாரு போல . ஆபீசுல வேலை செய்யறவரு , என்னை அவரே கூப்பிட்டு , சந்தானம் அந்த இடத்துல இருக்கற பூமி சும்மா தான கெடக்குது , நல்ல வேலைக்கு வித்தரலாம் , நான் உதவி பண்றேன் , உனக்கு உதவி பனிமுன்னு தோணுது அப்படீங்கிறாரு . நான் யாரையும் உதவு கேக்கல , சொத்து வைக்கணும்னு மத்தவங்களுக்கு எப்பிடி தெரியும் ? மேலும் அவுரு சொல்றாரு, வில்லங்கம் அப்படியே இருக்கட்டும் , வில்லங்கத்தோடவே ஒரு ரேட் பேசி விலை கொறச்சு விக்கலாம் ன்னு சொல்றாரு . எல்லாம் அதுவா நடக்குது ஆனா நான் பிடி கொடுக்காம அவரை இப்போ கூட்டிட்டு போய் இடத்தை காட்டுறேன் அப்போ கூட்டிட்டு போய் இடத்த காட்டுறேன் ன்னு காலம் கடத்தி 2 மாசமா இடத்தை கூட காட்டவே இல்ல . அப்பறம் அகத்தியர் என் வீட்டுக்கே ஆள் அனுப்புறாரு , 35 வருஷம் முன்னால நம்ம வீட்டு மர வேல செஞ்ச ஆசாரி சுமார் 20 வருஷம் கழிச்சு இப்போ என் வீடு அட்ரஸ் விசாரிச்சு வராரு . அந்த பூமி விக்கறீங்களா , பார்ட்டி ரெடியா இருக்குது , 10 நாள்ல கிரயம் முடிச்சிக்கலாம் அப்பிடீங்கிறாரு . எல்லாம் அய்யா செயல் , வீடு தேடி வந்தது . அவரு பார்ட்டி கூப்டுட்டு வர்றதுக்குள்ளே வேற ஒருத்தரு வேற பார்ட்டி கூப்டுட்டுக்கு வராரு - எல்லாம் தானா நடக்குது. அந்த பார்ட்டி க்கு கொடுக்க அய்யா உத்தரவு இல்ல போல இருக்கு . அவுங்க இப்போ பெங்குலுரு ல இருக்கோம் , 2 நாள் கழிச்சு கோயமுத்தூர் வந்துருவோம் , ஒடனே வந்து இடத்தை ரேட்டு பேசி முடிச்சுக்குறோம் ன்னு சொல்றாங்க . பெங்களூர் ல இருந்து 400 கிலோ மேட்டர் கார்ல வந்து வராங்க வந்து இங்க அவனுங்க வீட்டுல இருந்து என் ஆஃபீஸ் வந்து 12 மணிக்கு பேசலாம் னு சொல்றாங்க . கிளம்பும் பொது கெளம்பிட்டோம் இன்னும் 30 நிமிஷத்துல வந்துருவோம் ன்னு சொல்றாங்க. அதுக்குள்ள வர்ற வழியிலே வேற ஒரு பைக் காரன் மேல இவங்க கார் இடிச்சு அங்கே ஒரு ரோட்டுல சண்டையாம் , வந்தவங்க திரும்பி போயிட்டாங்க , பெங்குளூருல இருந்து 400 கிலோ மீட்டர் கார்ல சுகமா வந்தவங்களுக்கு இந்த 10 கிலோ மீட்டர் வந்து எங்கிட்ட பேச முடியல , பேச விடாம தடுத்தது எது ...... நான் சொல்ல வேண்டாம் ,.... உங்களுக்கே தெரியணும் .... எங்க அய்யன் micro management பன்றாரு ..... மறு நாள் அந்த ஆசாரி வேற ஒரு பார்ட்டி கூடி கொமேண்டு வந்து விலை பேசி முடிச்சாரு , அவரு ஒரு பிஜேபி ஆள் , தலைவர் , அற்புதமான கடவஜுல் நம்பிக்கை உடையவர் , நல்லவர் . அகத்தியர் சொல்ல வர்றது - டேய் மடையா , எந்த சொத்தை எப்போ கொடுக்கணும் , யாருக்கு கொடுக்கணும் எல்லாம் எனக்கு தெரியும் , நீ என்கிட்டே சொல்லிட்ட இல்ல , வேடிக்கை மட்டும் பாருடா " ன்னு சொல்ற மாறி இருக்குது , நடக்கற காரியங்களை பாக்கும் போது ,இதுக்கு பெரு தான் மைக்ரோ மேனேஜ்மேண்ட் ....ஹா ஹா ஹா ... சிரிப்பு ...... இவை எல்லாம் பிப்ரவரி 2021 இல் நடந்த கோர்வையாக சம்பவங்கள் . ஓம் அகத்தீசாய நம குருவே துணை குருவே போற்றி .
Subscribe to:
Post Comments (Atom)
அனுபவம் 17, 18 டிசம்பர் 2023
பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது. எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...
.jpg)
-
ஒரு சொத்தை விக்கறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தோம் , 6 வருஷமா முடியல . அப்பறம் இப்போ பண தேவை இருக்கு , அய்யா கிட்டே கேட்டேன் . கொஞ்சம் ...
-
நமது பொகளூர் அகத்தியர் பீடத்தில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் - பாகம் 2 முதுகு வலி சுமார் 7 வருடம் முன்னாள் ஒரு நாள் நல்ல...
-
நீ என்ன நினைத்து கொண்டிருக்கிறாய் வழிபாட்டை பற்றி . உருவ வழிபாட்டின் தாத்பர்யம் என்னெவென்று முதலில் தெரிந்து கொள் . பக்தியில் மனமது குவிக்...
எல்லாம் அய்யன் செயல் நாம் வெறும் பொம்மை தான் ஐயா
ReplyDeleteஅவனின்றி ஓர் அணுவும் அசையாது 🙏
ReplyDelete