Sunday, March 14, 2021

இறைநிலை என்பது ஒரு உள்ளுணர்வு என்பதை நிரூபிக்கும் நிகழ்வு - 13/03/2021

இறைநிலை என்பது ஒரு உள்ளுணர்வு என்பதை நிரூபிக்கும் நிகழ்வு  - 13/03/2021

நானும் என் மனைவியும் மருதமலை சென்று நாங்கள் வீட்டில் தயார் செய்த உணவை லெப்ரசி பாதித்து யாசித்து உண்ணும் நபர்களிடம் சென்று அவர்கள் உண்பதற்காக கொடுத்து விட்டு வந்தோம் . அப்போது திடீரென்று மருதமலை ஏறி ஸ்வாமி தரிசனம் செய்யலாம் என்று முடிவு செய்தோம் , பாரதியார் பல்கலைக்கழகம் தாண்டியவுடன் சிறிது தூரத்தில்  தான் நம்மிடம் பர்சில் பணம் கொண்டு வரவில்லை என்று நினைவு வந்தது . வண்டியை ,  பர்ஸை திறந்து பார்த்த போது , அங்கொன்றும் இங்கொன்றுமாக சுமார் 70 ருபாய் இருந்தது . சரி இந்த பணம் போதும் , என்ன செலவு செய்ய போகிறோம் , பொது தரிசனத்தில் ஸ்வாமியை கண்டு வருவோம் என்று கூறினேன் , என் மனைவியோ , பணம் இல்லாமல் எப்படி செல்வது , கையில் கண்டிப்பாக பணம் வைத்திருக்க வேண்டும் , நாம் வண்டியை திருப்பி பாரதியார் பல்கலைக்கழகம் அருகில் சென்று தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் பணம் பெற்று , பிறகு செல்லலாம் என்று கூறினாள் .

நான் அதை ஏற்கவில்லை ,பணம் தேவையில்லை முன்னே செல்வோம் என்று கூறி , நேராக ஸ்வாமியை டீஜேஹரிசனம் செய்தோம் , 10 ருபாய் வாகன கட்டணம் , 40 ரூபாய் சிறப்பு தரிசனம் , 20 ரூபாய் மாங்காய் உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு திருப்தியாக 70 ரூபாயில் தரிசனம் செய்து வந்தோம் .

நான் ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் , வேறு ஒரு விஷயம் இது தொடர்பாக உள்ளது . ரூபாய் நோட்டுகளில் 786 என்னும் நம்பர் கொண்ட நோட்டு நம்மிடம் கிடைத்தால் பத்திரப்படுத்தி கொள்ளும் வழக்கம் உண்டு . அந்த என் கொண்ட நோட்டை வைத்திருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் என்று சொல்வார்கள் . குருஜி யும் அதை உண்மை என கூறியுள்ளார் . அதில் சில மந்திரங்கள் பதிவேற்றி நம் கல்லா பெட்டியில் வைத்தால் நல்ல பண வரவு இருக்கும் .
 
பல நாட்களாக இந்த மாதிரி நோட்டு என்னிடம் சிக்கவில்லை , சில மாதங்களாக, இதை தேடி ஒவ்வொரு மாதமும் வீடு செலவுக்கு மொத்தமாக பணம் எடுத்து கொடுக்கும் போது , எல்லா நோட்டுகளையும்  நானும் என் மனைவியும் ஒரு முறை நம்பர் பார்ப்போம் , அந்த எண் வருகிறதா என்று . ஆனால் பல மாதங்களாகியும் ஒரு முறை கூட ஒரு நோட்டு கூட வரவில்லை . மாதம் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக மேலும் பல முறை பணம் வங்கியில் இருந்து எடுப்பதுண்டு , ஆனால் வேறு எப்போதும் நோட்டுக்களை அதிர்ஷ்ட எண் இருக்கிறதா என்று பார்க்கும் வழக்கம் வைத்து கொள்ளவில்லை .

இன்று முருகனை பார்க்கும் முன்பு பணம் எடுக்க வேண்டியது , அதை நான் மறுத்து தள்ளி போட்டது , பின்னர் மீண்டும் வந்து பணம் எடுத்தது ஒரு நிகழ்வு . நான் 2000 பணம் எடுத்தேன் , மொத்தம் நான்கு 500 ரூபாய் நோட்டுகள் வந்தன. என்ன தோன்றியதோ தெரியவில்லை , அந்த நோட்டுகளை ஒரு முறை பார் , நீ தேடிய அதிர்ஷ்ட என் இருக்கிறதா என்று பார் என்று மனதுக்குள் ஒரு உள்ளுணர்வு . நான் ஏற்கனவே கூறி உள்ளது போல , மாத ஆரம்பத்தில் , சம்பள பணம் எடுத்து வீடு செலவுக்கு கொடுக்கும் போது மட்டும் தான் அதிர்ஷ்ட எண் பார்த்து உள்ளேன் , மற்ற நேரத்தில் சுமார் நூறு முறை பணம் எடுத்தும் கூட கடந்த 1 வருடத்தில் இந்த மாதிரி அதிர்ஷ்ட என் சரி பார்த்ததில்லை . இன்று அதை பற்றி துளி கூட யோசிக்கவே இல்லை . பொதுவாக பணம் இல்லாமல் எங்கும் செல்வதில்லை , எப்போதும் குறைந்தது 1000-2000 கையில் வைத்து கொண்டு தான் எங்கும் செல்வது வழக்கம் . இன்று வழக்கத்தை மீறி பணம் இல்லாமல் சென்றது , வேறு ATM எதுவுமே அருகில் இல்லாத நிலையில் , ஒரே ஒரு ATM மட்டுமே பணம் கொடுக்கும் நிலையில் மருதமலையில் இருந்தது , அதிலும் நான் எப்போது பணம் எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்தது போல இருந்தது . மேலும் அதிர்ஷ்ட எண் பற்றி எந்த சிந்தனையும் இல்லாத நிலையில் , அதுவாகவே எப்படி நோட்டுகளில் அதிர்ஷ்ட என் இருக்கிறதா என்று பார் , என்று ,மனதில் உள்ளுணர்வு எப்படி தானாகவே தோன்றும் .

சரியாக நான்கு 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு நோட்டு , 6 எண் கொண்டதில் மிக சரியாக முதல் மூன்று எண்கள் 786 என்று துவங்கும் அமைப்பில் இருந்தன. 786 கடைசியில் இருந்தாலோ , நடுவில் இருந்தாலோ இருப்பதை விட முதல் மூன்று எண்ணாக இருப்பது பெரும் சிறப்பு. அதனை கண்டு எடுக்கும் பாக்கியத்தை எங்களுக்கு நான் வணங்கும் இறைவனே அளித்ததாக தோன்றுகிறது . நடந்தவைகளை பார்க்கும் போது , எல்லாமே உள்ளுணர்வால் நடந்த செயல்கள் . இறுதியில் நண்மையே விளைந்தது , ஆசை நிறைவேறியது . இந்த உள்ளுணர்வை ஏன் கடவுள் என்று கூற கூடாது . சிந்தியுங்கள் நண்பர்களே . கடவுளுக்கு ஊரும் பேரும் கிடையாது . நாம் தான் பல பெயர்கள் கூறி பல ஊர்களில் அழைக்கிறோம் . ஊர் பெயர் இல்லாமல் நமக்குள்ளேயே வாழும் கடவுளை அறியாமல் பல சாதிகள் மதங்களில் சிக்குண்டு , உள்ளே இருக்கும் உள்ளுணர்வை அவசர வாழ்க்கையில் கவனிக்க தவறுவதால் என்ன பயன் . ஆகவே உள்ளுணர்வை கவனியுங்கள் , அவரவர் கடவுளை கும்பிடுங்கள் , சிலர் கடவுளை கூட கும்பிட மறுக்கலாம் . ஆனால் நமக்குள் அமைதியாக இருந்தால் , நமக்குள்ளே கேட்கும் ஒரு சிறிய குரலை நாம் கேட்க முடியும் . அதனை  செயல்களையும் செய்தால் , நாமே கடவுளின் பணியாள் , அதற்கு அடுத்த நிலை , நான் என்ற நிலை நீங்கி விட்டால் , நாமே கடவுள் ஆகும் நாள்  தொலைவில் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் .

இந்த பயித்தியக்காரனின் பிதற்றல்களை பொறுமையுடன் படித்தமைக்கு நன்றிகள் கோடி .





No comments:

Post a Comment

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...