நமது பொகளூர் அகத்தியர் பீடத்தில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் - பாகம் 2
முதுகு வலி
சுமார் 7 வருடம் முன்னாள் ஒரு நாள் நல்ல முதுகு வலி . அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்ய முடியாத அளவுக்கு வலி . வாகனம் ஓட்டுவதற்கு கூட சிரமம் . அப்போது நான் 2013-2014 ஆம் ஆண்டு சென்னையில் வசித்து வந்தேன் . நல்ல வேலை , சொந்த வீடு என்று சுகமாக இருந்த எனக்கு , இந்த முதுகு வலி பெரும் துன்பத்தை கொடுத்தது . அந்த வருடம் வருடாந்திர அலுவலக உயர் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பு புது தில்லி யில் ஏற்பாடு செய்யப்பட்டு எனக்கு கம்பெனி விமான பயண சீட்டு எடுத்து அனுப்பி இருந்தது . இரவு 9 மணிக்கு விமானம் , மாலை 6 மணிக்கு பெட்டியில் துணிகளை அடுக்கி கொண்டு இருந்தேன் . திடீரென்று ஒரு முதுகில் நாற்புறமும் கொக்கி போட்டு இறுக்கி பிடித்தால் போல சுருக்கென்ற வலி . கொக்கி மாதிரி முழு முதுகும் இறுக்கி பிடித்து கொண்டதால் , அப்படியே சுருண்டு கீழே விழுந்தேன் . என்னால் எழுந்து அமர முடியவில்லை . ஏன் , எழுந்திருக்கவே முடியவில்லை . என் மனைவி எங்கோ வீட்டின் முன் பகுதியில் இருக்கிறாள் . அப்படி வலிக்கும் போது மூச்சு மிக லேசாக தான் விட முடிந்தது . மூச்சு சற்று அடைத்து கொண்டது . அந்த அளவு வலி . சத்தம் போட்டு கூப்பிட முடியவில்லை . அப்படியே கிடந்தேன் . சில நிமிடம் பிறகு , என் மனைவி அருகில் வந்த போது , அழைத்து உதவ கூப்பிட்டேன் . அவளுக்கோ எதுவும் புரியவில்லை . எழுந்து படுக்கையில் அமர்ந்து 10 நிமிடம் ஆசுவாசப்படுத்தி கொண்டு . மெதுவாக எழுந்து நடந்து , சுமார் 100 மீட்டர் தூரத்தில் என் இல்லம் அருகே உள்ள மருத்துவரை தேடி சென்றேன் . அவர் அப்போதைக்கு , ஒரு மருந்தை ஆசன வாயில் வைத்து உள்ளே செலுத்தினார் , சுமார் அரை மணி நேரத்தில் எல்லாம் சரியானது . எப்படியோ டெல்லி கிளம்பி சென்று , மனக்குழப்பத்துடனே மீட்டிங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பினேன் . பின்னர் மாரு நாள் காலை 8 மணிக்கு அலுவலகம் கிளம்பும் போது , மீண்டும் அதே வலி . சரி , இதை உடனே சரி பார்த்து கொள்ள வேண்டும் என்று சென்னை வடபழனியில் சூர்யா ஆஸ்பத்திரியில் உள்ள சிறந்த எலும்பு சிகிச்சை நிபுணரிடம் சென்றேன் . அலுவலகம் அன்று செல்லவில்லை . எக்ஸ் ரே எடுத்து , எக்கோ டெஸ்ட் எடுத்து பார்த்து , அதிகமாக எலும்பு தேய்மானம் உள்ளது , என்று கூறி , முதுகு தண்டு வடத்தில் பல டிஸ்க் வீங்கி உள்ளது , நகர்ந்து உள்ளது , ரத்த போக்கு உள்ளது , காயம் ஆகி உள்ளது , இதற்கு எலும்பு தேய்மானம் தன காரணம் . இதற்கு நாம் எதுவும் மருத்துவம் செய்ய முடியாது , வலி நிவாரண மருந்துகள் வேண்டுமானால் தரலாம் . வலி தெரியாமல் இருக்கும் . பின்னர் வலை தலத்தில் சென்று பிசியோ தெராப்பி முறைகளை பார்த்து செய்து கொள்ளுங்கள் . வயதான காலத்தில் இது போன்று ஏற்பட்டால் , கை கால் இழுத்து கொண்டு போகும் நிலை வந்தால் , மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படும் . முதுகு தண்டை பிளந்து அதில் மாற்றங்கள் செய்ய வேண்டி வரும் . அதற்கு பிறகு உயிர் பிழைக்கலாம் ஆனால் சரிவர நடமாட முடியாது . இப்போது சின்ன வயது , நீ பொறுத்து கொள் . வயதானால் பார்த்து கொள்ளலாம் என்று கூறினார் . சரி , நம் வாழ்க்கை இப்படி தான் உள்ளது , என்ன சம்பாதித்து என்ன செய்ய , வாழ்க்கை ஒரு தோல்வியே என்றெல்லாம் வருத்தப்பட்டு விதியை நொந்து கொண்டு வலி நிவாரணி மருந்து பெற்று , பிசியோதெரபி செய்து கொண்டு எப்படியோ சமாளித்து வேலைக்கு செல்லலாம் . குழந்தைகள் 5 வயது , 6 வயது . இப்போதே நாம் சம்பாதிப்பதற்கு உடல் தகுதி இல்லையென்றால் எப்படி இவர்களை கரை ஏற்றுவது என்று கவலைப்பட்டு , என்ன ஆனாலும் நாம் வேலைக்கு சென்று உழைக்க வேண்டும் , மருத்துவர் கூறும் ஆலோசனைகளை கேட்போம் , பிறகு என்ன நடக்குமோ நடக்கட்டும் . நாம் என்ன செய்ய முடியும் என்று எண்ணி வாழ்ந்து வந்தேன்.
பிறகு வருடம் 2 முறை இந்த மாதிரி வரும் . வலி நிவாரணி எடுத்து கொண்டு ஓய்வெடுப்பேன் . கடின வேலைகளை தவிர்த்தேன் . பிறகு அடிக்கடி இவ்வாறு வர ஆரம்பித்தது . வாழ்க்கை ஒரு தொல்லை , லட்ச ரூபாய் சம்பாதித்தாலும் நிம்மதி இல்லை , வாழ்க்கை ஒரு சூனியம் , வலி வலி வலி யுடன் வாழ பழகி கொண்டேன் . பின்னர் 2015 இல் கோவை வந்தேன் அகத்தியர் பீடத்தின் தொடர்பு கிடைத்தது , பின்னர் உடல் எடை குறைக்க வெளி நாட்டு பொடிகளை உணவுக்கு பதில் செயற்கை பாலில் கலந்து குடித்து உடல் எடை குறைக்கும் வெளி நாட்டு நிறுவன தயாரிப்பை உட்கொண்டு சுமார் 25 கிலோ எடை குறைத்தேன் , சுமார் 10 கிலோ எடை குறைத்த உடனே முது வலி அகன்றது . அப்போது அகத்தியர் , அது ஒரு மெல்ல கொல்லும் விஷம் , உடனே அதை நிறுத்து என்று உத்தரவிட்டார் . கையில் 50000 மதிப்பில் அந்த உணவு பொடி இருந்தது . அந்த போடி எல்லாம் விலை அதிகம் , ஒரு டம்ளர் பானகம் சுமார் 200-250 வரை வரும் . ஒரு நாள் 2 முறை குடிக்க வேண்டும் , உணவு எடுக்க கூடாது , நிறைய செலவு , ஆனால் முதுகு வலி தீர்ந்தால் போதும் என்று எதுவுமே யோசிக்காமல் அதை செய்து கொண்டு இருந்தோம் .
இது இப்படி இருக்கையில் , என் முதுவலிக்கு வயது சுமார் 7 வருடம் ஆகி இருந்தது . தீராத ஒரு நோய் . அப்போது குருஜி முது வலிக்கு ஒரு டானிக் , ஒரு லேகியம் கொடுத்து , இதை சாப்பிடு சரியாகி விடும் என்று கூறினார் . நானும் 15 நாள் சாப்பிட்டேன் , சரி ஆனது . மாதம் ஒரு தடவை வரும் முதுகு வலி 4 மாதத்துக்கு வரவே இல்லை . பின்னர் ஏதோ ஒரு வேலை செய்யும் பொது , மீண்டும் வந்தது .
இந்த முறை குருஜி கரு மருந்து என்ற வேறு வகை சக்தி வாய்ந்த மருந்தையும் , அந்த டானிக் மற்றும் கஷாயத்தோடு சேர்த்து கொடுத்தார்
இந்த முறை அடுத்த 6 மாதத்துக்கு எந்த வழியும் வரவில்லை . மீண்டும் 6 மாதம் கழித்து அதே போல வலி வந்தது . மீண்டும் குருஜியிடம் சென்றேன் , இந்த முறை உனக்கு நிரந்தர தீர்வு கொடுக்கிறேன் கவலைப்படாதே , என்று கூறி அதே டானிக்கை பல பொருட்கள் கலந்து சிகப்பு நிறத்தில் சக்தி வாய்ந்த ஒரு மருந்தாக கொடுத்தார் , நானும் வாங்கி குடித்து 1 வருடம் மீள் ஆகிறது , பல கடினமான வேலைகளை மேற்கொண்டேன் , எந்த நிலையிலும் முது வலி இல்லை .
மருந்து மட்டுமே தீர்வு ஆகாது , அகத்தியர் ஆசி வேண்டும் , பாவங்களுக்கு பரிகார செயல்களாக அகத்தியர் உரைக்கும் நற்காரியங்கள் , ஆலயம் சென்று வழிபாடு செய்தல் போன்றவையும் செய்தால் தான் மருந்து சித்தி பெரும் . இன்று நான் வாழ்வில் நிம்மதியுடன் இருக்கிறேன் , இரண்டு முறை கடினமான பொதிகை மலை ஏற்றம் , ஒரு முறை கடினமான வெள்ளியங்கிரி மலை ஏற்றம் , போன்றவை செய்து , தீராத வியாதியால் 6 வருடம் கஷ்டப்பட்ட நிலையில் , நிரந்தர தீர்வாக , செலவே இல்லாமல் , எளிமையாக மருத்துவம் செய்து கொண்டு , எந்த பக்க விளைவும் இல்லாமல் , நிம்மதியாக வாழ முடிகிறது என்றால் அதற்கு குருநாதரும் குருஜியும் காட்டிய வழியில் நடந்தது தான் காரணம் . காசு சம்பாதிக்கலாம் . நிம்மதியை விலை கொடுத்து வாங்க முடியாது . வலி நிவாரணி மருந்துகள் கடினமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் . இயற்கை மருத்துவம் , அதுவும் அகத்தியரிடம் மருத்துவ ஜீவ நாடியில் மருந்து செய்யும் முறைகளை மருத்துவத்தின் தந்தையான அகத்தியரே உரைக்கும் போது , அதனை கேட்டு மருத்துவம் செய்து கொள்ளும் நிலை இந்த பூவுலகில் வேறெங்கும் இல்லை . குருஜி முறையாக சீதா மருத்துவம் பயின்ற மருத்துவர் , அவரே தன கைப்பட மருந்துகளை தயார் செய்கிறார். லாப் நோக்கம் இல்லை . கொடுக்கும் தட்சிணையை வாங்கி கொள்கிறார் . சிலருக்கு தன கை காசை போட்டு தான் மருந்தே கொடுக்கிறார் . சிலர் 2000 ரூபாய் செலவு செய்து எடுத்த மருந்திற்கு 100-200 தட்சிணை வைத்து செல்வார்கள் . இதில் கொடுமை என்னவென்றால் , நன்றாக சம்பாதிப்பவர்கள் கூட , அதில் உள்ள உழைப்பை தெரிந்து கொள்ளாமல் . 5-6 மணி நேரம் தொடர்ந்து அமர்ந்து செய்த மருந்தின் மகிமை புரியாமல் , ஏதோ எண்ணெய் , ஏதோ கசாயம் , இதற்கு எதுக்கு பணம் தேவை என்று நினைக்கிறார்கள் . ஒரு கட்டிடம் கட்டும் ஒருவன் ஒரு நாள் கூலி 1000 ரூபாய்க்கு குறைவாக வாங்குவதில்லை . ஆங்கில மருத்துவம் ஆஸ்பத்திரி சென்றால் பணம் கட்ட யாரும் கேள்வி கேட்பதில்லை . ஆனால் எளிமையான மருத்துவத்தின் தந்தை எடுத்து கொடுக்கும் உண்மை மருந்துக்கு உண்மையிலேயே யாரும் விலையை நிர்ணயம் செய்ய முடியாது . என்னை போல வலியால் கஷ்ட்டப்பட்டவர்களுக்கு தான் தெரியும் , நன்றி உணர்ச்சி வரும் . என் அனுபவம் , எனது உணர்வுகள் . தவறுகள் இருப்பின் மன்னித்து பொறுத்தருள வேண்டுகிறேன் . குருவே போற்றி . குருவே துணை .
அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி
ReplyDeleteகுருவே துணை
Deleteசத்திய வார்த்தை
ReplyDeleteகுருவே துணை
ReplyDeleteகுருவின் ஆசி ஒன்றே அனைத்திற்கும் மா மருந்து வாழ்த்துக்கள்
ReplyDelete