Friday, April 9, 2021

அகத்தியத்துள் சில உணர்வுகள் , சில காயங்கள் , சில தெளிவுகள் - 09ஏப்ரல் 2021

உள்ளே வராரு , பெரிய மனுஷன் மாறி இருக்காரு ..... என்ன சந்தானம் ..... ஹி ஹி

 

அய்யா வாங்க ,

 

எங்க வீடு  சின்னது , உங்க வீடு ரொம்ப பெருசு , அது தவிர பெருசு பெருசா பல வீடுகள் ஊருக்கு ஊரு வெச்சிருக்கீங்க

 

உங்க வீட்டுல பல வகையான வசதி இருக்கு .

 

நாங்க பரம ஏழை , பெருசா ஒன்னும் ஆடம்பர வசதி எல்லாம் இருக்காது . ஆனா எந்த கொறயும் இல்லாம வாழறதுக்கு எங்க வீட்டுல வழி இருக்கு .

 

வேலையாட்கள் கெடயாது , வீடு சுத்தமா வெச்சிருக்கோம் , நாங்களும் சுத்தமா இருக்கோம் , வீட்டையும் அழுக்கு பண்ணாம சுத்தமா வெச்சிருக்கோம்

 

நீங்க எவ்வளவு பெரிய ஆளு , செருப்பு போட்டுக்கிட்டு எங்க வீட்டுக்குள்ள வந்து வெத்தல போட்ட எச்சியை வாயில இருந்து என் மேல தெறிக்கற மாறி பேசுறீங்க ..... நல்ல வேளை என் மூஞ்சி மேல எச்சி விழுந்தது .... வீடு மேலே விழுகல, இதை விடுங்க கழுவிக்கலாம் , வாயில எச்சி இருக்கும் விழும் ன்னு தெரிஞ்சே தான் பேசுறீங்க ..... எச்சி தெறிச்சவொடனே , அய்யய்யோ தெரிச்சிடுத்தா .... மன்னிக்கணும் .....னு வேற டயலாக்

 

உங்க வீட்டுல எவ்வளவோ வசதி இருக்கு , வேலையாட்கள் இருக்காங்க , நீங்க எதுக்கு இந்த மாறி சின்ன வீட்டுக்குள்ளே செருப்பு போட்டு வந்து , எச்சி துப்பி பேசறீங்க , உங்குளுக்கு இந்த வீட்டுல என்ன வேலை ...... எங்குளுக்கு ஆத்திரம் தான் வருது ....... நாங்க எல்லாம் கில்லி மாதிரி ...... 1 ஆள் , 10 ஆள் வேலைய செய்வோம் ........... இருந்தாலும் நீங்க வசதி படைச்சவங்க ....... பெரிய போலீஸ் வரைக்கும் தெரியும் ....... கடைசீல புல்டோசர் வெச்சு எங்க வீட்டை இடிக்கறதுக்கு கூட வலுவு இருக்கு ........... எல்லாத்துக்கும் ஒரு ஞாயம் வேண்டாமா .......... ஆணவம் ஒரு நாள் அடங்கும் ....... எல்லாம் அப்பிடியே இருக்காது ....... நிலைகள் மாறும் ...........

 

எந்த வீட்டுல இருக்கோம் அப்பிடீங்கறது முக்கியமில்ல , யாரு இருக்காங்க ன்றது தான் முக்கியம் ...... கொஞ்சம் எங்க வீட்டுக்கு உள்ளே வந்து பாருங்க ...... பெரிய மந்திரி இங்க எங்க வீட்டுல தான் ஒக்காந்து இருக்காரு .... அவரு ரொம்ப எளிமையான ஆள் ........ நல்லவங்க கூப்பிட்டாங்க நல்ல விஷயம் னு தெரிஞ்சா வந்துடுவார் ...... அவுரு கிட்ட திமிர் அகங்காரம் இல்ல ....... அவுரு நெனைச்சா இந்த நாட்டுல என்ன வேனா செய்ய முடியும் ,....... யாரை வேணும்னாலும் நாடு ரோட்டுல தூக்கி போட்டு மிதிக்கலாம் .........அவரை யாரும் ஏன் ன்னு கேக்க முடியாது ......... ஆனா அவுரு ரொம்ப நல்லவரு ........ நீங்களும் பெரிய தொழில் பண்றீங்க ...... அவரோட தயவு அரசாங்க அனுமதி எல்லாம் அவுரு தான் வாங்கி கையெழுத்து போடணும்

 

அதனால பகச்சிக்க முடியாது ........

 

ஆனா தரம் இல்லாம செருப்பு போட்டுக்கிட்டு வீட்டுக்குள்ளே வந்து ...... சின்னவீட்டுக்கு அவ்வளவு தான் மரியாத , இது எங்க வீட்டு மாட்டு தொழுவம் மாதிரி இருக்கு..... அப்பிடீங்கறீங்க ......ஏங்க மாட்டு தொழுவம் நா சாதாரணமா ...... அதல எவ்வளவு அருள் இருக்கும் தெரியுமா ........ இனிமே ஒங்கள மாறி ஆளுங்க வந்தா நாங்க கௌரவமா ஒங்கள வெளியவே நிக்க வெச்சு பேசி அனுப்பிருவோம் ...... உள்ள கூப்பிட்டா த்தானே ......... ஒனக்கு தான் ஆயிரம் வீடு இருக்க .... எங்கேயாவது போ ...... இங்க வராதே ஒனக்கு தான் ஆயிரம் பெற வேலை வாங்கணும் , ஒரே நேரத்துல ஆயிரம் வேலைகளை செய்யணும் ........ நாங்க நிம்மதியா ஒரே வேலையா மெதுவா செஞ்சி ...... திருப்தியா நிறைவோட இருக்கறத வெச்சுகிட்டு இருப்போம்

 

ஆயிரம் வேலைய செஞ்சு முடிச்சாலும் திருப்தி கிடைக்கும் , ஒரு வேலைய ஒழுங்கா செஞ்சு முடிச்சாலும் அதே திருப்தி கிடைக்கும் ..... ரெண்டுமே ஒன்னு தான் ........ உன்கிட்ட ஆயிரம் பேருக்கு திருப்தி கிடைக்கும் ....... என் கிட்ட கொஞ்ச பேருக்கு திருப்தி கிடைக்கும் ........... ஆயிரம் பேருக்கும் கெடச்ச திருப்தி ஒரே தன்மையானது தான் , எதுக்கு போயீ ஆயிரம் பேர வெச்சிக்கிட்டு ஆயிரம் வேலைய செஞ்சிகிட்டு ..............உண்மையா சொல்லனும்னா திருப்தியா இருக்கறதுக்கு காரணமே தேவ இல்ல ...... மனசு அமைதியில்லாதவன் தான் திருப்திக்கு காரணம் தேடறான் ..........அந்த மாறி ஆளுங்களுக்கு திருப்தியே கெடைக்காது .......... மனசு சுத்தமா இருக்கவனுக்கு எந்த ஆணியும் புடுங்க வே தேவையில்ல ...........நீ செருப்பு போட்டுக்கிட்டு வந்து பேசுற சாக்குல கரு துப்பினேயே , அப்பவே ஒன மனசு அழுக்கு தெரிஞ்சு போச்சு ...... இனிமே நீ கோட்ட கட்டி வாழ்ந்தா தான் என்ன பிரயோஜனம் ....... அழுக்கை எறிஞ்சா தான் திருப்தி கிடைக்கும் ........

 

ஒனக்கு எங்க எல்லாம் புரிய போகுது ..........கேட்டா என்ன சொல்லுவ - ஆமாம் , ஆமாம் , அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும் ...... நீ என்ன எனக்கு சொல்றது அப்பிடீன்னுவே ........ ஒனக்கு ஈர வெங்காயம் தெரிஞ்சா ஏன் இப்பிடி நடந்துக்க போற ....... அப்போ ஈர வெங்காயம் தெரிஞ்சு கூட , ஒழுங்கா நடந்துக்கல ,

 

நீ என்ன நெனைக்குற , ஒன மகிமையை பாத்து , ஒன் கூடவே ஒன் வீட்டுக்கு வந்து வசதியா இருந்துக்கலாம் நான் நெனைச்சு

 

ஒன் பின்னாடியே வந்துக்கிறேன் ன்னு கேப்பேன் ன்னு பாத்தியா

 

எனக்கு எல்லாமே ஒன்னு தான் ...... குடிசையும் , மாட மாளிகையும் ஒன்னு தான் ..... ஏன்னா நான் எங்கே போனாலும் செய்யுற வேலை ஒன்னு தான் ....... சுத்தம் செய்யறது .......... நீ பெரிய பணக்காரன் ங்கிறது நால ஒன் வூட்டு கக்கூசு என்ன சந்தன மணமா மணக்க போகுது ..... அதே நாத்தம் தான் .............நீ பெரிய பணக்காரன் ங்கறது நால உனக்கு கு .... வழியா வராம வேற தனி வழியிலயா வரப்போவுது ....... அதனால உண்மை என்ன ன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ...... யாரு எங்க இருந்து வேல செஞ்சா என்ன ....... எல்லாமே ஒண்ணுதான் ................

No comments:

Post a Comment

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...