Friday, April 9, 2021

இன்று 09ஏப்ரல் 2021, மேலும் ஒரு அனுபவம்

இன்று 09ஏப்ரல் 2021, மேலும் ஒரு அனுபவம்

நம்மால் காற்று வழியே என்ன அலைகளால் சிலரை தொடர்பு கொள்ள முடிகிறது

நேற்று மாலை நான்கு மணி அளவில் , எனது நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் தனி செய்தி அனுப்பி இருந்தேன் ... பின்னர் நேற்று இரவு வீட்டுக்கு வந்து பார்க்கும் போது , நண்பர் அதனை படித்து இருந்தார் , எதுவும் கருத்து கூறவில்லை , பதில் அளிக்கவில்லை .

இன்று காலை மிக சரியாக 7:38 மணிக்கு , நான் அவரை நினைக்கிறேன் , நமது நண்பர் நேற்று அனுப்பிய செய்தியை படித்து கூட எந்த பதிலும் தரவில்லை , மேலும் மற்றுமொரு செய்தி அனுப்ப வேண்டி உள்ளதே , அனுப்பலாமா என்று சிந்தனை செய்த அந்த க்ஷணமே 7:38 மணிக்கே அதே நிமிடத்தில் அவரிடம் இருந்து நேற்று அனுப்பிய செய்து மிகவும் அருமை என்று பதில் அளித்தார் .

எண்ணங்களின் வலிமை , அடிக்கடி இவ்வாறு நிகழ்வதால் , நான் இவ்விதமாக எனது அனுபவங்களை டயரி போல குறித்து வைத்துக்கொள்ளும் இடமாக , இந்த வளைதளத்தை உபயோகப்படுத்தி கொள்கிறேன்

எண்ணங்களின் வலிமை என்பது இறைவன் அருளால் , இறை சிந்தனையால் , இறை வழிபாட்டால் , மந்திர ஜெபத்தால் கிடைக்கும் என்பது தான் உண்மை . இது புரியாமல் நாத்திகவாதிகள் , இறைவனை மறுப்பது , எங்களின் வலிமையை குறைத்து குறைத்து , எதையுமே செயல்படுத்த முடியாத நிலையில் அவர்களை கொண்டு போய் விடும் என்பது தான் உண்மை .

No comments:

Post a Comment

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...