எல்லா அவங்களே கேட்டு வாங்கிக்கறாங்க
டேய் (அப்பிடி தான் என்னை கூப்பிடுவாங்க ), இன்னைக்கு செவ்வாக்கிழமே , வேலுக்கு பூஜை செய்யுடா
- சரிங்க அய்யா
அய்யா , செவ்வா ஹோரை ஆரம்பிச்சு போயிகிட்டு இருக்கு,
ஒரு வேளை 7 மணி தாண்டிடுச்சுனா .
டேய் - செவ்வா ஹோரை ல ஆரம்பி போதும்
- சரிங்க
போயீ செவப்பு கலர் பூ எடுத்துட்டு வந்து போடு
அய்யா , கூடவே வில்வ இலையும் சேத்து போடறேன்
டேய் - அது கடைசீல பாத்துக்கலாம் டா , சொல்றேன் , இப்போ சும்மா வாயாடாம செகப்பு பூ எடுத்து வந்து போடு
- சரிங்க அய்யா
பூவையெல்லாம் அப்படியே மொக்காக போடாதே , கையால் மலர வைத்து மலர்ந்த பூக்களை போடு
வீசி வீசி போடாதே , அர்ச்சனை செய்வது போல் கைகளை குவித்து போடு
நடு நடுவுல போடாதே , அர்ச்சனை மந்திரம் முடிந்த பின் போடு
வலது கையிலே பூ வெச்சு , இடது கையை வலது கை மேல தொட்டு ரெண்டு கையாலையும் போடற மாதிரி அர்ச்சிக்கணும்
பூவை வேல் மேலயும் முருகர் படத்து மேலயும் விழுகுற மாதிரி போடணும் , எங்கேயோ போட கூடாது
- சரிங்க அய்யா
பூவை கொஞ்ச கொஞ்சமா எடுத்து கூடையில் கொட்டிக்கொள்
அதன்படியே அர்ச்சனை செய்து கொண்டு இருந்தேன்
- இடையே ; டேய் - வாசனை வேணும் , சாம்பிராணி போடாமே என்னடா பண்ற
- சரிங்க அய்யா, இதோ போடறேன்
வேல் பீடத்தை தரையிலே வைக்க கூடாது , அதோ உன்னோட பூஜை மேடையிலே ஒரு உயரமான சின்ன மேடை கட்டி இருக்கியே , அது மேல வேல் வெச்சு பூஜை பண்ணு .
வேல் கூடவே முருகர் விக்ரகம் இருக்குது பாரு , அதையும் வேல் பீடத்து மேலேயே வெச்சு அதோடவே சேர்த்து பூஜை பண்ணு . வேல் வேற முருகர் வேற இல்ல - அவரும் அவருடைய வேலும் ஒன்னு தான்
- சரிங்க அய்யா , வெச்சுஇருக்கேன்
மேடை மேல பழைய பூ, பழைய நெய்வேத்தியம் , சாம்பிராணி சாம்பல் , எல்லாத்தயும் எடுத்து போட்டுடு , நல்லா சுத்தமா இருக்கனும்.
- சரிங்க அய்யா , செஞ்சாச்சு செஞ்சாச்சு
மணியை பார்த்தால் 6:50am , இன்னும் ஹோரை பத்து நிமிஷம் இருக்குது , அதுக்குள்ள மொதல்ல ஆரம்பிச்சுடலாம் , ஆறு முகம் பூஜை செஞ்சு முடிக்க முக்கா மணி நேரம் ஆகும் . அப்போ 7.45 மணிக்குள்ள முடிக்கலாம் , என்று நினைத்து பூஜையை ஆரம்பித்தேன்
முதல் முகத்துக்கு நெறய பூ காய் நெறய எடுத்து எடுத்து பூஜை பண்ணேன்
கொஞ்ச நேரத்துக்கு பிறகு , ஞாபகம் வந்தது ரெண்டு ரெண்டு பூ, ஒவ்வொரு அர்ச்சனைக்கு எடுத்து தான் போன தடவை பூஜை பண்ணினேன் , மொத்த பூவையும் அள்ளி அள்ளி போட்டுட்டா கடைசி அர்ச்சனை வரைக்கும் பூ இருக்காது
இப்போது இரண்டாவது முகம் அர்ச்சனை நடந்து கொண்டு இருக்கும்போது
டேய் - மூன்றாவது முகம் வரும் போது ஒவ்வொரு அர்ச்சனைக்கு மூன்று பூ போடு , நாலாவது க்கு நாலு பூ , அஞ்சாவது முகத்துக்கு ஒவ்வொரு அர்ச்சனைக்கும் அஞ்சு அஞ்சா பூவை எண்ணி கையில் எடுத்து போடு , ஆறாவது முகத்திற்கு ஆறு பூ எண்ணி எடுத்து போடு .
- சரிங்க அய்யா , அப்படியே செய்கிறேன் ( மனதுக்குள் - இன்னும் என்ன என்ன சொல்ல போகிறாரோ தெரியவில்லை )
மூன்றாவது அர்ச்சனை செய்யும் போது
அய்யா - நான் காலையிலே எழுந்து வாசி யோகம் செய்யறேன் , அது மூச்சு காற்று , வாசி , உயிர் நிலை , இந்த மந்திரம் கூறி அர்ச்சனை பண்ணுவது எதுக்கு , ரெண்டுமே எதுக்கு பண்ணனும் .
டேய் - மந்திரம் ங்கிறது ஒலி , ஒலி க்கு மூலம் காற்று ... காத்து இல்லாமே எப்பிடி ஒலி எழுப்ப முடியும் , மந்திரத்தை வாய் விட்டு சொல்லும் போது நீ சொல்ற அதே காத்து , எழுந்து வந்து ஒரு நிலையிலே ஒரு ஓசையாக மாறி ஒலிக்கிறது , அப்படி வாசி செய்யறதுக்கு காத்தை ஆட்டுவிக்குது , இதுவும் மந்திரமும் அதே காத்தை தான் ஆட்டுவிக்குது
காத்து இல்லாமே எதுவுமே இல்ல டா , எல்லாமே வாசி தான் , அந்த காத்து தாண்டா எல்லாத்தயும் இயக்குது . மந்திர பூஜையும் வாசி தான் , நீ சொல்ற யோகமும் வாசி தான் ,
டேய் - உனக்கு திடீர்னு எப்பிடி வாசி யோகம் யோகம் மூச்சு பயிற்சி செய்யணும் தோணிச்சு , நெனைச்சு பாரு ,
ஏன் , இதுக்கு முன்னால நீ இவ்வளவு வருஷமா இது மாதிரி நெனைச்சு இருக்கியா , நல்லா யோசிச்சு பாரு , நீ போன வாரம் செவ்வாய்க்கிழமை வேல் பூஜை செஞ்ச , அப்பறம் வியாழக்கிழமை முருகர் உன்னை , உன்னை இயக்க ஆரம்பிச்சாரு , குரு நாள் வியாழக்கிழமை நீயே போயீ வாசி யோகா பாடத்திட்டத்தில் இணைஞ்சுகிட்டே
எல்லாமே தானாவே நடந்தது , இப்போ தெரியுதா , ஒரு வாரம் பூஜ செஞ்சதுக்கே என்ன பலன் ன்னு , தொடர்ந்து செய்யி . கொழப்பிக்காதே
- ரொம்ப சரிங்க அய்யா, நீங்க சொல்றது எல்லாம் உண்மை , அதுவே எனக்கு நன்மை , என் குலதெய்வம் முருகர் , அகத்தியர் வழிபடுவது முருகர் , சித்தர்கள் குரு முருகர் , எல்லாம் அவரருளின்றி வேறில்லை
ஆமா , அதுவே மந்திரத்தை மனசுக்குள்ள சொன்னா வாசி உள்ள ஓடும் , அதுக்கு தான் மந்திரத்தை வாய் விட்டு சொல்லாதே , மனசுக்குள்ளே சொல்லு ன்னு சொல்றது . வாசி உள்ளாற ஓடும் .
பேசுறது பாத்து பேசணும் , காத்துல தான் பேசறோம் , காத்து தான் உயிர் , அதனால தான் நீ பேசறது எல்லாமே உயிரிலே பதிவாகுது . நல்லதை பேசி பதிவு செஞ்சா நல்லது நடக்கும் , அபசாரத்தை பேசியோ , நெனைச்சோ , பார்த்தோ பதிவு செய்தியானா , அது போல தான் நடக்கும் . அந்த பதிவு க்கு ஏற்ற மாதிரி நடந்து தன்னோட கர்மாவை தீர்த்துக்கும். இப்போ புரியுதா கர்மா வோட மூலம் என்ன ன்னு . சதாசிவ பிரம்மேந்திரர் மாதிரி பேசாத ஞானிகள் உண்டு , காரணம் இது தான் .
- சரிங்க அய்யா , நல்லா புரிஞ்சுது
பாத்தியா , நீ பூஜை செய்ய செய்ய , இது மாதிரி ஞானயோதயம் எல்லாம் வரும் , நல்ல விளக்கங்கள் கிடைக்கும் . இப்போ நீ செஞ்சிகிட்டு இருக்கே , அதனாலே நான் உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன் , நீ ஆபீஸ் வேலைக்கு போயிட்டினா , நா இந்த மாறி உன்கிட்ட பேசிகிட்டு இருக்க மாட்டேன்
அது சரி , நீ வேல் பூஜை பண்ணியே வருஷம் ஆகுது , இப்போ எப்பிடி வேல் பூஜை பண்ணினே தெரியுமா , நீ அன்னைக்கு பேரூர் போனியே , அப்போ முருகர் கிட்டே பேசினியா , முருகர் உன்கிட்ட பேசினாரா - ஆமாங்க அய்யா
அப்போ , மறு நாளே , அகத்தியர் ஜீவ நாடி கேட்டியா , இவ்வளவு வருஷம் அகத்தியர் மருதமலைக்கு போக சொல்லவே இல்ல , ஆனா நீ பேரூர்ல முருகர் ஆசீர்வாதம் வாங்குன பிறகு , மருதமலைக்கு போய் முருகரை பார்த்து வாசனை மலர் சூடி , த்யானம் பண்ணு ன்னு பரிகாரம் சொன்னாரு , சரியா , புரிஞ்சிக்கோ
அப்பறம் அங்கே போய் உக்காந்து என்ன த்யானம் பண்ணினே , வாசி யோகம் பண்ணினே , எங்க உக்காந்தே, அது பாம்பாட்டி சித்தர் வாசி யோகம் பண்ணின குகை. எப்பவுமே வாசி யோகம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே , இந்த மாதிரி பழங்காலத்து சித்தர்கள் யோகம் பண்ணின குகைக்கு போயீ ஆரம்பிச்சா தான் சித்தி யாகும் . மோதல் தடவை அங்கே ஆரம்பிச்சுட்டு , அப்பறம் எங்கே வேணும்னாலும் உக்காந்து பண்ணலாம் , உனக்கு சொல்லி தரும் குருவும் என் மாணவன் தான் , நல்லா சொல்லி கொடுப்பான் , நான் தான் அனுப்பி வெச்சேன்
- ஆமாங்க அய்யா , சரிங்க அய்யா
அது தாண்டா , முருகர் உன்னை தனக்கு பூஜை பண்ண வைக்கிறார் , நீ வேல் பூஜை செய்யறதே இல்லை , இப்போ முருகர் அருள் இருக்கு , அதனாலே பூஜை செய்யுற , அவர் அருள் இல்லாம அவருக்கு பூஜை கூட செய்ய முடியாது.
- ஆமாம் அய்யா
உன் வீட்டுலே இருக்கறவங்க , இல்ல யாரு இந்த பூஜையில் கலந்துக்கிட்டாலும் , அவங்க வேண்டுதலை நிறைவேத்தி கொடுப்பேன்
- அய்யா என்ன வேண்டினாலும் ஒடனே நிறைவேத்துவீங்களா
இல்லடா , அவங்க எந்த அளவு பக்தியா வேண்டுறாங்களோ அதே அளவுக்கு அருள் கொடுப்பேன் . கொடுப்பேன் ன்னு சொல்றத விட , அதுக்கு மேல் கொடுக்க முடியாதுடா , பாத்திரம் எவ்வளவு அளவோ அவ்ளோ தான் தண்ணி ஊற்ற முடியும் , நெறய ஊத்தினாலும் அளவுக்கு மேல இருக்கற தண்ணி வெளியே தள்ளி விட்டிடும்
- ஆமாங்க அய்யா , சரி
சரி, இப்போ உன் மகளுக்கு ஏதோ பயம் இருக்கு னு சொல்லிட்டு இருந்தாள் இல்ல , அவளுக்கு அந்த தெய்வ அருள் பெற்ற மாலையை கொடுத்து அணிஞ்சிக்க சொல்லு , எதிரிகள் அடிபணிவாங்க , நான் பாத்துக்கறேன்
- உடனே , பூஜை இடையில் , அந்த மாலையை எடுத்து மகளுக்கு அறிவு கூறி அணிந்து கொள்ள சொன்னேன்
சரி , அந்த கடைக்காரரை வியபாரம் பெறுக கேட்டிருந்தார் அல்லவா , தற்போதய நடைமுறையில் ஆன்லைன் வர்த்தகதில் அவரது பொருட்களை பதிவு செய்து விற்பனைக்கு வைக்க சொல்
- சரிங்க அய்யா
இந்த பூஜையை , இன்னும் விரிவு படுத்தனும் னா , கலசம் வைக்கலாம் , 6 பேர் சேர்ந்து பூஜை செய்யலாம் , முதல் முகத்துக்கு 1 ஆள், ஒரு பூ போட்டு அர்ச்சனை செய்து , இரண்டாவது முகத்துக்கு 2 ஆள் ஆளுக்கு இரண்டு பூ போட்டு அர்ச்சனை செய்து , அது போல 6 முகத்துக்கும் செய்து முடிக்க வேண்டும் , ஆனால் இப்போது நீ மட்டும் செய் , நீயே ஆறு முகத்துக்கும் செய் , நான் ஏற்று கொள்கிறேன்
இந்த பூஜையை நான் ஆத்மார்த்தமா உனக்கு சாதகமான வழிமுறைகளை சொன்னேன் . இதை , வெளியே உள்ள குருமார்கள் ஏற்று கொள்ள வேண்டும் ன்னு அவசியம் இல்ல . உன் ஆத்மா என்ன சொல்லுது , அதை தான் நீ இப்போ கேட்டு கொண்டு இருக்கே , என் மூலமா , அது தான் உனக்கு உண்மை அனுபவம் , வேற எந்த மாதிரி பண்ணினாலும் உனக்கு சித்தி ஆகாது , சரியா , எங்கேயும் போய் பூஜை எப்பிடி பண்றது னு தேடாதே
- சரிங்க அய்யா, முற்றிலும் உண்மை , தெளிவு பெற்றேன்
- இந்த மாதிரி மனதில் பேசிகொண்டே ஐந்து முக அர்ச்சனை பண்ணி கொண்டு இருந்தேன் .ஆறாவது முகத்துக்கு ஆறு பூ போடும் போது , ஆறு பூவையும் கையில் வைத்து வட்ட ஓம் எழுத்து போல் வேல் முன்னால் காற்றில் சுற்றி பூ வைத்த கையை அம்பை இழுப்பது போல் பின்னால் இழுத்து , அர்ச்சனை செய்யும் போது வில்லை எய்வது போல அர்ச்சனை செய்ய வேண்டும் , ஆறாவது முகத்தில் ஒவ்வொரு மந்திரத்தாலும் அஸ்திர பிரயோகம் உண்டு , அதனால் அது போல செய் என்று உத்தரவு
- அய்யா , சாமி மேல அஸ்திரம் போடுவது போல எதுக்குயா செய்யணும்
டேய் , உனக்கு ஏதுடா அஸ்திரம் விடும் தகுதி , நீ முருகர் மூலமா , வேல் மூலமா தான் அஸ்திரம் விட முடியும் , உன்னோட அஸ்திரத்தை வேல் கிட்டே இந்த மந்திரத்து மூலமா கொடுத்துடறே , அந்த வேல் , அந்த அஸ்திரத்தை , உன் எதிரி யார் னு பாத்து அவங்களுக்கு அனுப்பி விடும் , அது தானடா வேலோட வேலை . வேலனோட வேல் அஸ்திரம் , அந்த அஸ்திரத்துக்கு முன்னாலே எதுவுமே நிக்க முடியாதுடா
சரி, அடுத்த முறை . கொஞ்சம் சிகப்பு தெச்சி பூவையும் சேத்துக்கோ , உனக்கு தான் தெரியுமே , அந்த பூவுக்குள்ளே அஸ்திர வடிவம் பதிவாகி இருக்கு , இந்த மந்திரத்துக்கு அந்த பூவையும் சேர்த்து அர்ச்சனை பண்ணிடு
- ஆமாங்க அய்யா , அப்படியே செய்கிறேன்
சரி , இப்போ, ஆறாவது முகத்துக்கு , கண்டிப்பா நீ மக மேரு வேலுக்கு முன்னாலே வெச்சு அதுக்கும் சேர்த்து பூஜை பண்ணு , அப்போ தான் சரியாக வரும் .
- ஆமாம் அய்யா, உடனே வைக்கிறேன்
சரி , முனிக்கு மூணு வகை நெய்வேத்தியம் வெய் , சாம்பிராணி பூஜை முடியும் வரை போட்டு கொண்டே இரு , பூஜை முடிந்தவுடன் தீபாரதனைக்கு பிறகு , திருப்பியும் சாம்பிராணி போட்டு விட்டு போ , அம்போ ன்னு விட்டுட்டு போயிடாதே , அவரு உக்கிரமா இருப்பாரு , பய பக்தியா இருந்தா சக்தியா இருக்கும் திருப்தியா இருக்கும் , தீபாராதனை காட்டு விழுந்து கும்பிடு , குடுவையில் நீர் வை. தீபாராதனை காட்டும் போது மங்கள இசை ஒலிக்க செய்
பூஜை அறையில் இருக்கும் எல்லா தெய்வங்களுக்கும் பூ போடு . இன்றைக்கு பிரதான தெய்வம் முருகன் , ஆனால் எல்லா தெய்வங்களையும் சேர்த்து ஆராதனை செய்ய வேண்டும் .
- சரிங்க அய்யா
அடுத்த வாரம் பார்க்கலாம் அய்யா
டேய் - அடுத்த வாரம் இல்லடா , வாரம் ரெண்டு முறை செவ்வாய் வெள்ளி ,
சரிங்க அய்யா , அப்படியே செய்கிறேன்
சரி , அந்த வில்வம் எல்லாம் சிவன் அகத்தியர் லட்சுமி , அவுங்குளுக்கு எல்லாம் சுத்தி போட்டு கும்பிடு
வராகிக்கு , அந்த சிகப்பு பூவையே போட்டு கும்பிடு
- சரிங்க அய்யா .
நீ , முருகருக்கு தமிழா சமஸ்க்ருதமா எதுல பூஜை செய்றது னு கேட்ட , இப்போ பாத்தியா , நீ சொல்ற மந்திரத்துல ரெண்டுமா கலந்து இருக்கு . தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் , நமசிவய அட்சர பீஜம் , சரவணபவ அட்சர பீஜம் , சமஸ்க்ருத மந்திர அர்ச்சனை , ஒரு வரி தமிழ் பீஜம் , அடுத்த வரி சம்ஸ்க்ருத மந்திரம் , அப்பறம் ஒரு வரி விட்டு ஒரு வரி அதே போல சமஸ்க்ருதமும் தமிழும் கலந்து இருக்குது . கடைசி முகத்துல சமஸ்க்ருத பீஜம் , தமிழ் பீஜம் , மேலும் தமிழ் பீஜம் கலந்து சமஸ்க்ருத மந்திரம். எல்லாத்துலயும் சூட்சுமத்துல இருக்கு .
- சரி
பூஜை முடித்து கொள் , பிறகு பார்க்கலாம் .
- அய்யா, கொலு வெச்சிருக்கு , அதுக்கு பூஜை செய்யணும் ,
அதுக்கு லலிதா சகஸ்ரநாமம் ஒலிக்க செய்து பூஜை செய் , அது தான் சரி , சக்தி நன்றாக விளங்கும் .
ஆசிகள் .
No comments:
Post a Comment