உள்ளுணர்வே நம்மை வழிகாட்டும் - (1) தெரிந்த கதை , தெரியாத மலை ; (2) குழந்தை பிறந்த கதை
உள்ளுணர்வு உணர்த்திய ஒரு உணர்வு - பல முறை அலுவலக வேலையாகவும் மற்றும் சொந்த வேலையாகவும் ரயிலில் பயணம் செய்வதுண்டு , இப்போது கொரோனா காலத்தில் சுமார் 6 மாதம் பயணம் செய்யாமல் இருந்தேன் . ரயிலில் செல்லும் பொது திருப்பூர் தாண்டி ஏதோ ஒரு இடத்தில் , ஒரு மலை வரும் , சில சமயம் பேசி கொண்டு வருவதுண்டு , சில சமயம் மொபைல் பார்த்து கொண்டு இருப்பேன் . சில சமயம் சும்மா அமர்ந்து இருப்பேன் , ஆனால் ஒரு இடத்தில் செல்லும் போது ஒரு மலை ஜன்னல் வழியாக தெரியும் , அதனை ரசித்து ரசித்து பார்த்து , படம் எடுத்து வைத்து கொள்வேன் . பல முறை பார்த்து படம் எடுத்திருக்கிறேன் , பல முறை, இது என்ன மலை என்று தெரியவில்லை , என்னை ஈர்க்கிறது என்று கூறி உள்ளேன் . ஆனால் அந்த மலையை பற்றி ஒன்றுமே எனக்கு தெரியாது . பயணத்தின் போது பல்வேறு மலைகள் இடையில் வரும் , ஆனால் எல்லா மலைகளும் இதனை போல என்னை ஈர்த்ததில்லை . அது ஏன் என்று தெரியவில்லை , நானும் தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை .
மேல கூறி ஒரு புறம் இருக்க , அனுமத்தாஸன் அய்யா தனது ஜீவா நாடி அனுபவங்கள் புத்தகத்தில் பல அனுபவங்களை பதிவு செய்து வைத்துள்ளார் , அதனை எல்லாம் நான் படித்து உள்ளேன். அதில் வரும் ஒரு அனுபவம், பெயர் வெளியிடாத ஊர் ஒன்றை பற்றியது . அந்த ஊருக்கு சென்று இங்கே இருக்கும் மலை மேல் உள்ள சிவன் ஆலயத்துக்கு சென்று இரவு தங்கி, அமானுஷ்ய அனுபவங்களையெல்லாம் பெற்று ஒரு சிறிய தொடராகவே தனது அனுபவத்தை எழுதி பதிவு செய்து இருந்தார் . அந்த இடத்தை இப்போது கண்டு பிடித்து மக்கள் மத்தியில் அந்த அனுபவ பதிவில் குறிப்பிடப்பட்ட இடம் இது தான் என்று ஒரு பதிவு வந்தது , அதில் அந்த இடத்தை பற்றிய வீடியோ இருந்தது , அதனை பார்த்த போது , அதில் உள்ள மலை நான் ரயிலில் பார்த்த அதே மலை . சரி , அந்த மலை எங்கே உள்ளது , அதன் அருகே ரயில் தடம் உள்ளதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கூகிள் மேப்பில் பார்த்த போது , அதன் அருகே தான் ரயில் தடம் உள்ளது , ரயிலில் செல்லும் போது அந்த மலையை தான் நான் பார்த்து காரணமே இல்லாமல் வியந்து உள்ளேன் என்பது புரிந்தது . மிக சிறப்பு வாய்ந்த இடம் ஒன்றை எனக்கு நாடி அனுபவங்கள் படித்ததன் மூலம் தெரிந்து கொண்டு, அதனை நேரில் பார்க்கும் போது , அது தான் இது என்று தெரியாத நிலையில் ஏற்பட்ட ஒரு உணர்வு . அது தான் உண்மை அனுபவம் . முன் பின் தெரியாத ஒரு நபரையோ, இடத்தையோ , பொருளையோ பார்த்தவுடன் நமக்கு ஒரு ஈர்ப்பு ஏற்ப்படுகிறதென்றால் , நம்முடன் ஏதோஒரு வகையில் அது அல்லது அவர் தொடர்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . இது தான் உள்ளுணர்வு . இதனை நாளுக்கு பின்னர் , இன்று தான் அந்த வீடியோ பார்த்த பின்பு , அந்த இடத்தின் மேல் எனக்கு காரணமில்லாத ஈர்ப்பு ஏற்பட்டதன் காரணம் புரிந்தது .
அதே போல தான் வாழ்வில் பல நிகழ்வுகள் நம்மை கடந்து செல்லும் . என் மனைவி என்னை முதல் முதல் பார்த்தவுடனே , அவள் மனதில் தோன்றியது, "இவன் தான் என் கணவன் ". பின்னர் உள்ளுணர்வால் , அதன் தூண்டுதலால் , அவள் தன உள்ளுணர்வை நம்பி மட்டுமே என்னை திருமணம் செய்து கொண்டாள். பின்னர் 10 வருடம் கழித்து ஒரு தீர்க்கதரிசி அய்யா அவர்கள் நாடி வாசித்து கூறும் போது , " இவளே உனக்கு கடந்த மூன்று பிறவிகளாக மனைவியாக வந்து இருக்கிறாள் , உனக்கு இந்த பிறவியில் மனைவியாக அமைந்தது நான்காவது முறை " என்று உரைக்கப்பட்டது .
இதே போல மேலும் கூற வேண்டுமானால் , மனைவி கர்ப்பமாக இருக்கும் போது தொலைக்காட்சியில் வேட்டையாடு விளையாடு படம் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டு இருந்தது . அப்போது கமலஹாசன் கதாநாயகியை "ஆராதனா" என்று அழைக்கிறார் . அந்த வார்த்தையை கேட்டவுடன் எனக்கு , ஏதோ மின்சாரம் பாய்ந்த மாதிரி இருந்தது , அப்போது , சிறிது நேரம் கழித்து மனைவி வயிறை தொட்டு , வயிற்றின் உள்ளே இருக்கும் குழந்தையிடம் அதன் பெயரை "ஆராதனா " என்று கூறி அழைத்தேன் , அதுவும் உடனே அசைந்து நெளிந்து வயிற்றில் நகர்வு தெரிந்தது , மீண்டும் 2 முறை அழைத்தேன் , அந்த பெயரை கூறி அழைத்தால் உடனே நகர்ந்தது . சரி அப்போ, குழந்தை பிறந்தா ஆராதனா என்று பெயர் வைப்போம் என்று கூறினேன் . அதெப்படி , ஆன் மகவு பிறந்தால் என்ன ஆகும் என்றாள் . நானோ , உள்ளுணர்வு படி எல்லாம் நடக்கிறது , எனவே உள்ளே இருப்பது பெண் மகவு , பெயர் ஆராதனா , நான் அழைத்தவுடன் " என்ன " என்று என்னை பதிலுக்கு நகர்ந்து காட்டுகின்றது என்றேன் . அதுவே கடைசியில் உண்மை . இன்று 2021, என் மகள் ஆராதனாவுக்கு 12 வயது .
No comments:
Post a Comment