சென்ற வியாழக்கிழமை 11.03.2021, அலுவலக வேலையாக ஒரு கம்பெனிக்கு சென்று இருந்தேன் , அவர்களுக்கு ஏற்கனவே கடன் நம்மிடம் உள்ளது , மேலும் 2 கோடி அதிகமாக கடன் கொடுக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக அவர்கள் தொழிற்சாலைக்கு சென்று பார்த்தேன் . அவர்களோ , எப்போது கடன் தொகை கிடைக்கும் , எப்போது நிதி வழங்கும் உத்தரவு கிடைக்கும் என்றே கேட்டு
கொண்டு இருந்தார்கள் . அதுவோ டெல்லி வரை சென்று வர வேண்டி உள்ளது , அங்கே பல லோன்ங்களுக்கு பல கேள்விகள் கேட்கிறார்கள் , சில சமயம் அங்கே நிற்கிறது . மேலும் என்னிடம் இருந்து பரிந்துரை செல்லவே ஒரு நாள் ஆகும் , சனிக்கிழமை வேலை செய்ய மாட்டார்கள் , வாங்கி விடுமுறை , திங்கள் கிழமை வேண்டுமானால் கிடைக்கலாம் , என்று கூறி வைத்தேன் , ஒரே நாளில் ஒப்புதல் அளிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல , எப்படியும் ஒரு வாரம் ஆகி விடும் . ஆனால் என்ன ஆச்சர்யமோ தெரியவில்லை , சனிக்கிழமை டெல்லியில் வேலை செய்து , கேள்விகள் எதுவுமே கேட்காமல் , உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளனர் , அதற்க்கு முன்னர் அனுப்பி வைத்த பல லோன்கள் பல கேள்விகளுடன் அங்கே நிலுவையில் உள்ளது . ஆனால் இங்கே வாக்கு உரைத்த பின் , இன்று 15/03/2021, டெல்லியில் இருந்து ஒப்புதல் கடிதம் வந்து , லோன் அப்ரூவல் , நான் கூறிய தேதியிலேயே கிடைத்தது .
இப்போது மனதில் ஒரு குரல் - என்னடா வாக்கு சித்தி என்பது பற்றி தெரிந்து கொண்டாயா , நீ கூறாமல் இருந்திருந்தால் , இது இன்றே நடந்திருக்காது , நீ கூறியவுடன் அது நடக்கும் வகையில் சூழ்நிலைகள் மாற்றப்பட்டு அமைந்தன . இப்போதாவது வாக்கு சித்தி என்றால் என்னவென்று புரிந்து கொள் ....என்று வந்தது
சரிங்க அய்யா , அப்படியே ஆகட்டும் என்று கூட வேலை செய்த சக ஊழியரிடம் பகிர்ந்து கொண்ட கையோடு , இந்த வலை தலத்தில் பதிவும் செய்து வைக்கிறேன்
பதிவு செய்த நாள் - 15/03/2021, 3:55pm
No comments:
Post a Comment