மனதில் தோன்றிய சில உணர்வுகளின் பதிவு - ஆட்க்கொள்ளுதல்
ஆட்க்கொள்ளுதல் என்றால் என்ன . என்னை அகத்தியர் ஆட்கொண்டு விட்டார் . அது எனக்கு தெரியும் , நாடியிலும் "உமை யாம் ஆட்கொள்வோம் " என்று உரைத்தும் உள்ளார் . ஆட்கொள்ளுதல் என்றால் ஆள் + கொள்தல் , அதாவது ஆளை எடுத்து கொள்ளுதல் . அதாவது உடலில் உள்ள அந்த ஆளை விடுத்து தாம் அந்த உடலை ஆத்மாவை கொள்தல் . அதன் பின் அந்த ஆத்மா அகத்தியன் ஆத்மாவுடன் இனைந்து அகத்தியன் ஆட்டுவிக்கும் படியெல்லாம் ஆடும் , ஏனென்றால் , ஒருவரின் கையில் கயிறை அவர் பிடித்து கொண்டு இருக்கிறார் , மாரு முன் நம்முடன் பிணைக்கப்பட்டு இருக்கிறது , கயிறை அவர் எங்கெல்லாம் இழுத்து செல்கிறாரோ , அங்கெல்லாம் நாமும் நாமாகவே எழுந்து நடந்தோ , ஓடியோ சென்று விட்டால் , பிரச்சனை எதுவும் இல்லை . எங்கே செல்கிறோம் என்று தெரியாது , எதற்கு செல்கிறோம் என்று தெரியாது கயிறால் பிணைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறோம் . நாம் கடலில் தத்தளித்து கொண்டு இருப்பது போல , ஒருவர் காப்பாற்றும் கடவுள் போல வந்து நம்மை அவருடன் கயிறால் பிணைத்து கொண்டு கரையை நோக்கி விரைவாக நீந்தி செல்கிறார் , நாம் அதனை அனுமதிக்க வேண்டும் , அப்போது தான் நாம் கரை எற முடியும் , அவரோ ஒரு தலை சிறந்த நீச்சல் நிபுணர் , கண் மூடி திறப்பதற்குள் கரை சேர்த்து விடுவார் , இப்படி அவருடன் செல்லும் பயணத்தில் , நாமோ , அய்யா , இந்த மீன் நன்றாக இருக்குது , இந்த சங்கு நன்றாக இருக்குது என்று கூறி , நம் பயணத்தை மறந்த நிலையில் இருக்கிறோம் . அவரும் பொறுமையாக அப்படியா குழந்தை , அந்த மீன் வேண்டாம் - நான் வேற நல்ல மீன் தர்றேன் , பொறுமையா இரு என்று , நமக்கு வேண்டியதை கொடுத்து , வேண்டாததை கெடுத்து , அந்த பயணத்தை கூட சிறப்பு செய்து கூடி செல்கிறார் , அந்த கயிறு பலம் இழந்து அறுந்து போனால் , அவர் ஒன்றும் பண்ண முடியாது , - நான் என்ன செய்ய முடியும் குழந்தை , கயிறு அறுந்து போச்சு , யாரு காரணம் , நீ தான் , நான் சொல்ற மாதிரி தானம் தருமம் நியாயம் , யோகம் எல்லாம் பாக்காம அதர்மமா அநியாயம் செஞ்சே , அதனாலே நீ வேற பக்கம் இழுத்துகிட்டு போன , நானோ இந்த பக்கம் இழுத்து பாத்தேன் , ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்ததாலே கயிறு அறுந்து போச்சி
பரவாயில்லை , நீ செஞ்சது தப்பு னு உனக்கும் தெரியும் , எனக்கும் தெரியும் , வேற கயிறு போடறேன் , இந்த தடவ நீ அப்பிடி எல்லாம் செய்யாம , நான் எந்தப்பக்கம் நகரறேனோ அதே பக்கம் நீயும் நடந்து வா , தேவ இல்லாம நானும் உன்ன இழுக்க வேண்டி இருக்காது , அப்பிடியே நான் இழுத்தாலும் , நான் எங்க இழுக்கறேனோ அந்த பக்கமே நீயும் வா , அப்போ எந்த பிரச்னையும் இல்லாம சுலபமா கடலை தாண்டிடலாம் , என்ன கண்ணா சரியா - என்கிறார் அய்யா . சரிங்க அய்யா , - அவ்வளவு தான் , அவர் நம்மள ஆட்கொண்டுவிட்டார் , ஆட்சி புரிவதற்கு நாம் அனுமதி கொடுத்து விட்டோம் .அப்பிடி இருக்கும் போது வாழ்க்கையிலே நல்லா உள்ளுணர்வு தெரியும் , எல்லா விஷயத்திலேயும் உள்ளுணர்வு தெரியும் , நாம கடவுளோட ஆசாமி என்பது நமக்கும் தெரியும் நம்மள பாக்கறவங்க எல்லார்த்துக்கும் தெரியும் .அப்பறம் அந்த கோயில் கட்டறது , சாமி கும்பிடறது எல்லாம் , கடல்ல அங்க அங்க இருக்கற சின்ன சின்ன குப்பையை எல்லாம் எடுத்து அங்க ஒரு பேருந்து நிலையம் அமைக்கற ஒரு முயற்சி , அந்த பேருந்து நிலையத்துல , வந்து அய்யாவோட பயணம் செய்ய டிக்கெட் வாங்கி , அய்யாவும் ஏத்துக்கிட்டாருன்னா , என் கூடவே அதே கயிறுல , இன்னொரு பயணி . என்னடா மாப்பிளே , நீயும் வந்துட்டியா , டேய் சந்தானம் , நீயும் இங்க தான் இருக்கியாடா , தெரியவே இல்ல டா , மொதல்ல எல்லாம் பாப்பேன் , நீ என்னவோ கயிறு , அய்யா ம், கரை ன்னு சொல்லுவே , அப்போ எல்லாம் புரியாது , என்னவோ சொல்றான்னு நெனைச்சிக்குவேன் , இப்போ வாழ்க்கையிலே எங்கே எங்கேயோ அடிபட்டு , கடைசியிலே விடிவு காலம் பொறந்து , எனக்கும் இந்த பேருந்து நிலயத்தில கரைக்கு போக டிக்கட் கிடைச்சுது , வந்து பாத்தா நீயும் அதுல தான் நின்னுக்கிட்டு இருக்கே , சரி வா , சேந்தே போவோம் , ஆண்ந்தமா போவோம் , ஒரு வேளை நீ தப்பு செஞ்ச நான் உன்னை திருத்தரேன் , இல்லை இல்லை , நீ எல்லாம் தப்பு செய்யவே மாட்ட , ஒரு வேள நான் தப்பு செஞ்சா நீ அதை எடுத்தி காட்டி என்ன திரும்ப இந்த கயிறுல புடிச்சு சேத்து விட்டுடு , இப்போ எவ்வளவோ கோடி வருஷம் காத்து இருந்து டிக்கட் கிடைச்சிருக்கு , ஞாபகம் இருக்க 1000 வருஷம் முன்னால நாம சோழ நாட்டுல ஒரு ஊருல சேந்து அந்த சிவபெருமானை கும்பிட்டோமே , அப்போ கிடைச்ச டிக்கட்ட ரெண்டு பேருமே விட்டுட்டோம் , திரும்ப பாக்கறதுக்குள்ள இந்த சம்சார சாகரத்துல 1000 வருஷம் போயிருச்சு , காலம் மாறி போச்சு மக்கள் மாறிட்டாங்க , மனச கலைக்கர பல விஷயம் அந்த காலத்துல இல்லாதது இப்போ இருக்கு , அப்பறம் பல பல சிக்கல்கள் , பல கொடுமைகள் , நீதி நேர்ம நாயம் எல்லாமே ரொம்ப கொறஞ்சு போச்சு , மக்கள் எல்லாம் பாவம் மேல மேல செய்யறமாறி இருக்குது , இப்போ திருப்பியும் கெடச்ச கயிறை விட்டமோ , அவ்வளவுதான் , இன்னும் 1000 வருஷம் தள்ளி போச்சுன்னா , என்னவெல்லாம் மாறுமோ , இப்பிடியெல்லாம் இருக்குமோ , அதனால தான் சொல்றேன் , ஒரு வேள என் கயிறு அறுந்து போச்சுன்னா , நீ திரும்ப கொண்டு போய் செக்க வேண்டியது ஒன்னோட பொறுப்பு , ஏன் அருகனும் , நீ அறுகாம பாத்துக்கோ , நான் உன்கூடையே தான வர்றேன் , - அப்பிடீன்னு என் நண்பன் எனக்கு சொன்னான்
இந்த கோவில்ல வரவணங்க எத்தன பேருக்கு டிக்கட் கிடைக்குது , ரொம்ப கொஞ்ச பேருக்கு தான் டிக்கட் கெடச்சு கடலில் இருந்து வெளியேற ஒரு இறை சக்தி கெடச்சு , அதனுடன் ஒரு பிணைப்பு கயிறு கெடச்சு , நிம்மதியா கரைய நோக்கி பயணம் செய்யறாங்க , பல பேருக்கு அது கண்ணுல கூட தெரியறது இல்லை , என்னவோ உளர்றான் , இங்க கரை ன்னு ஒன்னு எதுவுமே இல்ல , எல்லாமே கடல் தான் , என்னத்தையோ புடிச்சுகிட்டு இல்லாதது இருக்கு ன்னு நெனைச்சிகிட்டு திரியறான் , அப்பிடீன்னு சில பேர் , சில பேர் அறுந்து போன கயிறு கடல்ல மிதக்குது , அதை பிடிச்சிக்கிட்டு , நானும் கயிறை பிடிச்சிகிட்டேன் , நானும் போய் சேந்துருவேன் அப்பிடீன்னு , எளிமையான வழியை இருக்கு ன்னு எதையோ பிடிச்சிக்குவாங்க , கடைசியிலே எங்கியும் போக முடியாது , கடல்ல தான் திரும்பவும் மூழ்கி போவாங்க . உங்களுக்கு கயிறு வேண்டாமா , அவரு - அய்யா , அவரோட கையவே பிடிச்சிக்கிட்டு போலாம் . ஆனா அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும் , த்யானம் செய்யணும் யோகம் செய்யணும் , தானம் செய்யணும் , எல்லா ஆசைங்களையும் விட்டுடனும் , மனசு அடங்கி போகணும் , குடும்பம் கொழந்த குட்டி வேலை எல்லா வெச்சுக்கிட்டா , அவரு நம்மகிட்ட வந்து , டேய் , போய் அவங்கள மொதல்ல பாத்துட்டு வேணுங்கறத செஞ்சிட்டு வாடா , என் கைய தொட்டுட்டேனா அப்பறம் அவ்வளவுதான் , கரை ஒடனே வந்து சேந்துரும் , அவங்களால வர முடியாது , அவங்க எப்போ வரணுமா அப்போ வருவாங்க , அவுங்குளுக்கு இப்போ டிக்கட் இல்ல , அப்பிடீன்னு சொல்றாரு . அய்யா நீங்க இழுத்துகிட்டு போறீங்க , நானும் உங்க போக்கிலேயே வாரேன் , வழியிலே பெரிய பெரிய திமிங்கலம் எல்லாம் வருது , பக்கத்துலேயே வருது , பயமா இருக்குங்க அய்யா , - டேய் - பயமா இருந்தா என்ன நெனைச்சுக்கோடா , நல்லா இருக்கும் போது என்ன மறக்க மாட்டே , ஆனா பயம் வந்தாக்கா என்கிட்ட இருந்து ஒடனே விலகி போயிருவே , என்ன மறந்துருவே , அதனால தான் என் நாமத்தை ஜெபி ஜெபி டா ன்னு சொல்றேன்
சரி , இப்போ நான் ஒரு காரு வெச்சிருக்கேன் , அந்த கார ஓட்டிட்டு போனா , பெட்ரோல் போடா காசு கொடுக்கணும் , சாலை வரி கட்டோணும் , ரிப்பேர் செய்யோணும் , செக் போஸ்ட் ல செக் பண்ணுவாங்க, ஒன் வே ல செக் பண்ணுவாங்க , RC புக் ரெனுவல் பண்ணனும் , பல சிக்கல் , ஆனா , காரை நான் தான் ஓட்டுவேன் , ஆனா நான் ஒரு ட்ரைவர் தான் , என்னோட ஓனர் தான் அந்த மாநிலத்தோட முதல்வர் , முதல்வர் எங்க போக சொல்றாரோ , அங்கே நான் போயிகிட்டு இருக்கேன் . அப்போ ஒரு போலீஸ் சார்ஜெண்ட் வந்து வண்டிய நிறுத்தறான் . எங்கடா வண்டி காலாவதியாகி முடுஞ்சே போச்சு , இன்னும் ஒட்டிக்கிட்டு இருக்கறே , எறங்குடா வண்டியிலே இருந்து ன்னு மெரட்டுறார் . நானும் வண்டியிலே இருந்து இறங்கி , அய்யா நான் அகத்தியரோட ஆளுமையில் இருக்கேன் ன்னு பவ்யமா சொல்றேன் , அதெல்லாம் கெடயாது ன்னு சாவிய புடுங்கறார் . அப்போ அவருக்கு ஒரு போன் கால் , அய்யா பேசறார் , -டேய் அவன் என் ட்ரைவர் , அது என் வண்டி , காலாவதி ஆனா பரவாயில்ல , நீ அவனை வுட்டுரு , அவன் நான் சொன்ன வேலைய செஞ்சிட்டு வேண்டிய விட்டுருவான் , அதுவரைக்கும் அவனை சும்மா தொந்தரவு பண்ணாத - ஒடனே அந்த சார்ஜெண்ட் - சரிங்க அய்யா , அப்படியே ஆகட்டும் , ஏண்டா , அய்யாவோட வண்டி ன்னு மொதல்லே சொல்றதுக்கே என்ன --- ஏங்க நான் தான் முதல்லயே சொன்னேனே , நீங்க தான் கேக்கல --- சரி சரி , இந்த சாவிய புடி , வேண்டிய எடுத்துக்கிட்டு , அய்யா என்னவோ வேலை சொன்னாராமே , அதை போய் செய்யி போ போ , நிக்கதே , சீக்கிரம் கெளம்பு , நான் போயிட்டு வரேன் . இப்போ புரிஞ்சிதுங்களா எமதர்மன் என் தர்மனிடம் தலையிட முடியாது , ஏனென்றால் நான் அகத்தியரின் ஆளுகைக்கு உட்பட்டவன் . உடல் என்னும் கார் என்னவோ என்னோடது தான் , ஆனா அந்த ஆத்மாவை அய்யாகிட்ட ஒப்படைச்ச பின்னாலே , நான் ட்ரைவர் ஆயிட்டேன் , காரும் அவரோடது ஆயிடிச்சு , அப்போ எமன் வந்து கேட்டால் , அய்யா கொடுத்த வேலைய செஞ்சு முடிச்சிட்டு தான் அந்த கட்டை போகும் .
இது எனக்கு உண்மையா நடந்த சம்பவம் , என் அனுபவம்
இது போல பல அனுபவங்கள் தொடரும்
No comments:
Post a Comment