இன்று
01/10/2022, சனிக்கிழமை
, எனது முதல் நிலை வாசி யோக பயிற்சியின் 9 ஆவது நாள் அனுபவம்
இன்று
சனிக்கிழமை வழக்கமாக ஆரம்பிக்கும் 5 மணியை விட முன்னதாக எழுந்து 4/30 மணிக்கே தயார் செய்ய துவங்கினேன்
இன்று
மூச்சு வலது புறம் ஓட வேண்டும் , ஆனால்
இடதுபுறம் ஓடியது , அப்படி மாற்றி ஓடினால் வியாதிகள் வரும் , சரி என்ன செய்வது , என்ன ஆகுமோ , பரவாயில்லை , நமது
பயிற்சியை
தொடர்ந்து செய்வோம் , 2 மாதத்துக்குள் இவை எல்லாம் சரி ஆகிறதா என்று பார்ப்போம் , இல்லை அகத்தியரை கேட்போம் என்று எண்ணி கொண்டேன் .
இன்று
வலது நாசி நன்றாக அடைத்து இருந்தது , இடது நாசியில் காற்று வெகு சுலபமாக சென்று வந்தது , வலது நாசியில் காற்று சிரமத்துடன் உள் வாங்கி பின்னர் அதனை வெளியே செலுத்த இடது நாசியை விட நீண்ட நேரம் எடுத்து கொண்டது.
ஒவ்வொரு
சுற்று இடையிலும் அகத்தியரையும் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கு கொடுக்கப்பட்ட மந்திரத்தையும் உச்சரித்து வேண்டி அடுத்த சுற்றுக்கு சென்றேன்
4 சுற்று
முடிந்தது , கண்ணை மூடினால் ஏதாவது காட்சிகள் தெரிந்து அதில் சிக்கி போய் விடுவோம் , அப்படி ஏதாவது காட்சிகள் வருவதென்றால் கண் முன்னாலே வரட்டும் என்று , கண்ணை திறந்து பயிற்சி செய்தேன் .
அப்போது
திடீரென்று , என்னவோ அனுபவம் பதிவு செய்ய சொல்லி கேட்கிறார்கள் , நமக்கு இன்று என்ன அனுபவம் , ஏதாவது இருந்தால் தானே பதிவு செய்ய முடியும் , அது நல்ல அனுபவ பதிவாக இருக்க வேண்டும் , சும்மா பாயாசம் குடித்தேன் , உடல் சூடு ஆனது , குறைந்தது என்பது போல் இல்லாமல் இருக்க வேண்டும் , சரி அவர்கள் பதிவு கேட்கிறார்கள் , நான் எனக்கு தெரிந்தது போடுகிறேன் , சரி இப்போது , மழை அறிகுறி இல்லை , ஒரு மாதமாக கோவையில் மழை இல்லை , இப்போது மழைக்காலம் இல்லை , ஆனால் இப்போது மழை பெய்ய வேண்டும் , சம்மந்தமே இல்லாமல் மழை பெய்தால் நான் பெய்தால் நான் ஒப்பு கொள்கிறேன் , எனக்கு வேண்டாம் , ஆனால் அன்பவ பதிவிர்க்காக தேவை படுகிறது .
அதற்கு
முன் கூற மறந்து விட்டேன் . நான் வேறு இடங்களில் வாசி யோக பயிர்சிகள் மேற்கொண்ட போது சில அனுபவங்கள் உள்ளன , கூட்டாக 30 பேர் சேர்ந்து வாசி யோக பயிற்சியில் ஈடுபடும் போது காற்று வேகமாக அந்த கட்டிடம் உள்ள இடம் , பயிற்சி நடக்கும் இடம் ஆகியவையில் சத்தததுடன் சுற்றும் .அது போல , இன்று பயிற்சியில் காற்றை இழுத்து எழுத்து விடும் போது , நான் அமர்ந்து இருந்த இடத்தில் காற்று சத்துடன் போவதும் வருவதுமாக இருந்தது , அதாவது மிக சிறிய புயல் போல அமரும் இடத்தில் மட்டும் வீசியது , அதற்க்கும் நாம் சுவாசத்துக்கும் தொடர்பு இருக்கும் . பயிற்சி முடித்தால் அதுவும் நின்று விடும் . இன்று அது போல காற்று நான் அமர்ந்த இடத்தில் சுற்றியதால் , வாசி ஓடுகிறது என்பதை உணர்ந்து கொண்டேன். மழை பெய்ய சொல்லி கேட்டதற்கு அதுவும் ஒரு காரணம் . அது ஒரு பழக்க தோஷம் . ஏற்கனவே பக்தி மார்கத்தில் கடவுள் பக்தி மூலம் மழை வேண்டி பெய்துள்ளது , ஆனால் அதில் பக்தியில் உருக வேண்டும் , அப்போது பெய்யும் . அது போல இன்று மழை வேண்டும் என்று கேட்டதற்கு உடனேயே , சில்லென்ற காற்று என் கழுத்து பகுதியை சுற்றி என்னிடம் இருந்து விலகி சென்றது , ஆஹா சில்லென்று இருக்கிறதே , ஒரு வேளை மழை பெய்யுமோ என்று எண்ணு ம் போது , சிறியதாக
நீர் விழும் சத்தம் . நான் அமர்ந்து உள்ள இடம் கூரை இல்லாத இடம் , அதன் அருகிலேயே இரும்பு சீட் கூரை உள்ளது , அதன் மேல் நீர் விழுந்தால் சத்தம் கேட்கும் . அடடா மழை பெய்கிறது போல இருக்கிறதே என்று பார்த்தேன் , அப்போது தான் கடைசி சுற்று பயிற்சி முடித்தேன். மழை நின்றது . அதாவது , 10 நொடி மட்டும் தான் மழை விழும் சத்தம் மட்டும் கேட்டது . பிறகு அதனுடன் பேச ஆரம்பித்தேன் . மழை வந்திருந்தால் , என் மேல் நீர் விழுந்திருக்கும் , மேலும் ஒரு வேலை , மாடி வீட்டில் இருந்து தண்ணீர் கொட்டி இருந்தாலும் சத்தம் கேட்கும் , பூனை கூரை மேல் நடந்து சென்றாலும் சத்தம் கேட்கும் , 10 நொடி சத்தம் கேட்டால் என்னவென்று கொள்வது , என்று கேட்ட உடன் , மீண்டும் மழை வந்து , இம்முறை ஒரு துளி என் கை மேல் விழுந்தது
. பிறகு மழை சுத்தம் 5 நொடியில் நின்றது . நான் மீண்டும் , என்ன ஒரே ஒரு துளி என் மேல் விழுந்துள்ளது , இது என் மனா வியாதி , நான் குளித்து முடித்து வந்துள்ளேன் , தலை முடியில் ஈரமாக இருந்து, அதில் ஒரு
சொட்டு நீர் துளி வர செய்து விட்டு
மழை என்று கற்பனை செய்து கொள்ளாதே , மழை பெய்தால் , தரையில் நீர் திவலைகள் , நீர் துளிகள் பதிந்த அச்சு இருக்கும் , அது போல வேண்டும் . சரி , விளக்கு வெளிச்சம் போட்டு பாப்போம் என்றால் , , ஒரு அடையாளத்தையும் காணோம் . போங்கப்பா சும்மா விளையாட்டு காட்டாதீங்க , பெய்தால் , நன்றாக தெரியும்படி பெய்யுங்கள் , இல்லயென்றால் விடுங்கள் , என்று கூறினேன் , மீண்டும் வீட்டு வாயிலில் சென்று அங்கே மழை துளி விழுந்த அடையாளம் உள்ளதா என்று பார்த்தேன் , வாசலுக்கு நடந்து செல்லும் போதே , மழை சத்தம் மீண்டும் கேட்டது , வாசலில் சென்று பார்த்த போது , நீர் விழுந்து அடையாளம் இருந்தது , அது கூட நம்பாமல் நான் நினைத்தேன் , இது வாசல் தரை பூராவும் பெயிண்ட் அடிக்கும் பொது சிறு சிறு புள்ளிகள் சிந்தின , அது அழியவில்லை , அது மழை துளி போல் தெரியும் , ஒப்பு கொள்ள மாட்டேன் என்று கூறினேன் , அப்போது தான் எனக்கு தெரியும்படி நன்றாக நீர்த்துளிகள் விழுந்தன . இரு இரு , 1 நிமிடம் காணொளி பதிவு செய்கிறேன் என்று கூறி கைபேசியில் அதனை பதிவு செய்து கொண்டேன், உங்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக. ஆனால் ஒன்றை கூற விரும்புகிறேன் , நான் இடி மின்னல் மழை என்று தெளிவாக கேட்டேன் , ஆனால் மழை துளி மட்டும் தான் விழுந்தது , அடுத்த முறை இடி மின்னல் சேர்த்து வர வேண்டும் என்று
கேட்டேன் , அதற்கு நீ மேலும் சிறிது
நேரம் தொடர்ந்து வாசி பயிற்சி செய்ய வேண்டும் , நீ செய்த பயிற்சிக்கு
இவ்வளவு தான் வரும் என்று மனது கூறியது . ஒப்பு கொண்டேன் . சோதனைக்காக எல்லாம் ஆற்றலை விரயம் செய்ய கூடாது . ஆனால் நாம் செய்யும் பயிற்சியில் நமக்கு நம்பிக்கை வருவதற்காக இவ்வாறு சோதனை செய்து கொள்ளலாம் தவறில்லை . நாம் செய்யும் பயிற்சி சக்தி வாய்ந்தது என்று நம்புகிறேன் , இயற்கையே சாட்சி
ஓம்
அகத்தீசாய நமஹ
No comments:
Post a Comment