Friday, June 23, 2023

ஜூன் 2023 அனுபவங்கள்

 பல வகையான சம்பவங்கள் வாரம் - 17ஜூன் 2023 2முதல் 3ஜூன் 2023 வரை 


1. CA படிப்பு படித்த ஒருவர் இருந்தால் சொல்லுங்கள் என்று பக்கத்து இருக்கையில் உள்ளவரிடம் கேட்டேன். அதனை பிரபஞ்சம் கேட்டு கொண்டு , 2 வருடம் முன்பு என் தொடர்பில் இருந்த CA நண்பர் , இப்போது கடந்த 2 வருடங்களாக தொடர்பில் இல்லை , அவர் என்னை தொடர்பு கொண்டு வேலை இல்லாமல் இருப்பதாகவும் , தனக்கு உதவும்படியும் கேட்டுக்கொண்டார்.

சரி, இவர் இந்த வேலைக்கு தேவையான அனுபவம் இல்லை , நமக்கு இதே வேலையில் முன் அனுபவம் உள்ளவர் வேண்டும் என்று நினைத்தேன் , பிறகு 3 மாதம் முன் நாம் அணுகிய ஒரு பெண்ணை நினைத்தேன் , அவளுக்கு முன் அனுபவம் இருந்தாலும் , அவள் நான் கூறும் நிறுவனத்தில் வேறு சில காரணங்களால் சிபாரிசு செய்ய முடியாது என்று நினைத்தேன்.


CA படித்த மேற்கூறிய ஒரு பெண்ணை நான் மூன்று மாதம் முன்பு வேலைக்கு சேர தனது பயோ டேட்டா வை அனுப்ப சொல்லி கேட்டும் , அவர் அனுப்பவில்லை , 3 மாதங்களாக எந்த தொடர்பிலும் இல்லை , இப்போது அவர் நான் ப்ரபஞ்சத்திடம் கேட்ட அடுத்த நாளிலேயே தானாகவே எனது கைபேசி எண் ஐ தேடி எடுத்து , நேரிடையாக எனக்கு அவளுடைய பயோ டேட்டா வை அனுப்புகிறார். பிரபஞ்சத்திற்கு நன்றி 


9 வருடங்களாக இதே அலுவலக வளாகத்தில் வாகனத்தை செலுத்தி வருகிறேன் , நுழைவு வாயில் அருகே ஒரு சிறு மேடு உள்ளது , ஒவ்வொரு முறையும் அணைத்து வாகனங்களும் அதில் இடித்து குலுங்கி தான் இவ்வளவு வருடங்களாக செல்கின்றன . எதேச்சையாக ஒரு நாள் , இந்த  நிர்வாகம் இதனை சரி செய்து கொடுத்தால் என்ன பிரச்சனை அவர்களுக்கு என்று நினைத்தேன் . மாரு நாள் காலை ,  கான்க்ரீட் போட்டு மேடு பள்ளம் இல்லாமல் சரி செய்யப்பட்டு இருந்தது , மேலும் அதன் தொடர்ச்சியான பாதையில் உள்ள மேலும் சிறு சிறு மேடு பள்ளங்களும் கூட சரி செய்யப்பட்டன 

கேரளாவில் ஒரு புதிய நபரை வேலைக்கு அமர்த்தினோம் , அவர் வருவதற்குள் அவருக்கு புதிய லேப்டாப் கருவி ஆர்டர் செய்து வாங்கி வைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி , அதில் சிறு  விட்டது , அப்போது அவர் 2 நாட்களில் வேலைக்கு சேர்வதற்கு உள்ள நிலையில் , லேப்டாப் வரவில்லை , அடடே அவர் வந்து மேலும் சில நாட்கள் சும்மா இருக்க வேண்டும் , லேப்டாப் வரும் வரை வேலை செய்யாமல் காத்திருக்க வேண்டுமே என்று நினைத்தேன் , பிரபஞ்சம் அவருக்கு வேறு ஒரு அவசர வேலையே கொடுத்து , அவர் வேலைக்கு சேரும் நாளை சரியாக மேலும் 2 நாள் தள்ளி போட்டது , மிக சரியாக , அதே 2 நாளில் , லேப்டாப் வந்து சேர்ந்தது , 10 நாளில் வர வேண்டிய லேப்டாப் 7 நாளிலேயே வந்து சேர்ந்தது , பிரபஞ்சத்திற்கு நன்றி 

நேற்று யதேச்சையாக , இரவு தொலைக்காட்சியில் நாடகம் பார்த்து கொடு இருந்த போது , ஒரு நாடக காட்சியில் ஒருவர் வாய்வு பிடிப்பால்  வந்து சிரமப்படுகிறார் , உடனே எனக்கு உள்ள வாய்வு பிடிப்பு ஞாபகம் வந்தது . மாரு நாள் காலை கடந்த 1 வருடமாக எனக்கு 1 தடவை கூட வராத வாய்வு பிடிப்பு ஏற்பட்டு தற்போது கடும் முதுகு வலி ஏற்பட்டது , பிரபஞ்சத்திற்கு இந்த முறை நன்றி தெரிவிக்கவில்லை , நினைப்பது எல்லாமே சுபமாக நினைக்க வேண்டும் என்று என்னிடம் நானே கூறி கொண்டேன் , இனிமேல் கவனமாக இருப்பேன் 


Thursday, January 5, 2023

திரு கரை கண்ட ஈஸ்வரர் குகை கோவில், செஞ்சி


திரு கரை கண்ட ஈஸ்வரர் குகை கோவில், செஞ்சி

Thiru karaikanda eshwaran temple https://maps.app.goo.gl/jSZvpGxrEgYxnemi7
 


மேல்மலையனூர் சிறப்பு தேர்

 ஆண்டுதோறும் புதிய தேர்


தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை விளங்கு கிறாள். 


தல வரலாறு 


ஆதியில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் பிரம்மா யாரையும் மதிக்காமல் ஆணவத்துடன் நடந்து கொண்டார். அவருக்கு பாடம் கற்பிக்கும் வகையில், பரமேஸ்வரன் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒருதலையை வெட்டினார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோ‌ஷம் பிடித்துக்கொண்டது.


சித்தம் கலங்கி, பித்துபிடித்த நிலையில் கையில் மண்டையோடும், மற்றொரு கையில் சூலாயுதத்துடனும் உடலெங்கும் சாம்பலைபூசி கொண்டு ஊர், ஊராக அலைந்து திரிந்தார். நாடு முழுவதும் அலைந்து திரிந்த சிவன் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்காள  பரமேஸ்வரி அம்மன், சிவன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு, சாதத்தை கீழே சிதறிபோகும் படி செய்தார். அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை அடக்கினார். அப்போது சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோ‌ஷம் விலகியது.


கபாலத்தை அடக்கிய பிறகும், அங்காளம்மனின் கோபம் தணியவில்லை. அவளது கோபத்தை தணிப்பதற்காக மகாவிஷ்ணுவின் யோசனைப்படி தேர்த்திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. தேவர்களும், முனிவர்களும் அந்த ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், மாடங்களாகவும், மரப்பலகைகளாகவும், சிம்மாசன மேடையாகவும் மாறி நின்றனர். அங்காள பரமேஸ்வரி கோபம் தணிந்து அந்த தேரில் ஏறி அமர்ந்து வீதி வலம் வந்தாள். 


தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்து விடுகின்றனர். இந்த ஐதீகத்தின்படி ஒவ்வொரு வருடமும் தேரோட்ட நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்த தேரை பிரித்துவிடுவார்கள். அடுத்த வருட தேரோட்டத்துக்கு புதிய தேர் செய்யப் படும்.


ஆண்டு தோறும் மகாசிவராத்திரியையொட்டி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறும். அப்போது நடைபெறும் தேரோட்டத்தின் போது புதிதாக தேர் செய்யப்படும். அந்த தேரில் அம்மன் அமர்ந்து வீதிஉலா வருவார். இந்த முறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.குறி கேட்கும் பக்தர்கள்


அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை  மற்றும் விசே‌ஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது. கோவிலின் பலபகுதிகளில் குறி சொல்பவர்களை காணலாம். நினைத்த காரியம் நடக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? காணாமல் போன பொருள் திரும்பவும் கிடைக்குமா? வேலை எப்போது கிடைக்கும்? கோர்ட்டு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? என்பது பற்றி பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு குறி சொல்பவர்கள் விடை கூறுகிறார்கள். குறி கேட்க செல்பவர்கள் கற்பூரம் வாங்கி செல்லவேண்டும். இங்கு குறி கேட்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


அமைவிடம்


மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.–செந்தூர் திருமாலன்.


நம்பிக்கை...


இந்த கோவிலில் பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச்சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிக்கிறார். அப்போது அந்த பெண் ஆவேச சத்தம் போடுகிறாள். பூசாரி அந்த பெண்ணிடம் கற்பூரத்தை கொளுத்தி கொடுக்க அதை வாங்கி அவள் வாயில் போட்டுக் கொள்கிறாள். சிறிது நேரத்தில் அந்த பெண் அமைதி ஆகிறாள். அதன் பிறகு அந்த பெண் உடல் முழுவதும் மயான  சாம்பல்  பூசப்படுகிறது. இந்த நிலையில் அவளைப்பிடித்து இருந்த பேய்விலகி சென்று விடுவதாக நம்புகிறார்கள். அங்காளம்மன் கோவிலின் காவல் தெய்வம் பாவாடை ராயர் ஆவார்.

Wednesday, January 4, 2023

கடவுள் என்பது யாதெனின் அனைத்திற்கும் உட்பொருளாய் உள்ள நிலை

 ஆன்மீக கட்டுரை கதை


சுற்றிலும் நீர் , நீருக்குள் நான் , நிலம் என்றால் என்ன என்று தெரியாது , எங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஆழத்தில் மூழ்கி சென்றால் அங்கே நீருக்குள் தரைப்பகுதி இருக்கும் , எங்களை பொறுத்தவரை அது தான் நிலம். எங்களில் பல ஆயிரக்கணக்கான வகைகள் உண்டு. சிலர் சண்டை போட்டு மற்றவர்களை அழித்து அடித்து சாப்பிடுவர் , சிலர் உருவத்தில் மிக பெரியவர்கள் , சிலர் மிகச்சிறியவர்கள் . வெகு சிலர் நீரிலும் வாழ்வார்கள் , சில நேரம் நீரில் இருந்து வெளியேறி நிலத்தில் சென்று வாழ்ந்து மீண்டும் நீரில் வருவார்கள் . அவர்கள் எங்களிடம் மேலே நிலம் உள்ளது , அங்கே காற்று உலவுகிறது , அங்கே நிறைய நிலம் வாழ் உயிரனங்கள் உள்ளன , என்றெல்லாம் கூறுவார்கள் , எங்களில் சிலர் அவர் கூறுவதை ஏற்று , அங்கே எப்படி செல்வது , காற்றை எப்படி சுவாசிப்பது , நீரில் இருந்து வெளியே வந்தால் நாங்கள் உயிரை விடுவோமே , எப்படி நீங்கள் மட்டும் நிலத்தில் சென்று உயிருடன் திரும்பி வருகிறீர்கள் என்று கேட்போம் , சிலர் நிலம் என்று ஒன்று இல்லவே இல்லை , நமது கண்ணிற்கு தெரிந்ததெல்லாம் நீர் தான் , நிலம் என்று ஒன்று இல்லவே இல்லை , அவன் நிலத்திற்கு சென்று வந்தான் என்று எப்படி கண்டு கொள்வது , அவன் பொய் கூறுகிறான் , நிலத்தில் சென்றால் யாராக இருந்தாலும் உயிரை தான் விடுவோம் , அவன் கூறும் பொய்களை நம்பாதே என்று கூறினார்கள் . ஆனால் , அவன் நிலத்தை பற்றி அங்கே உள்ள வாழ்க்கை முறை பற்றி விவரிக்கும் போது , பொய் கூறுபவன் இவ்வளவு கற்பனை சக்தியுடன் பொய் கூற முடியாது என்று நாங்கள் நினைத்தோம் . இருந்தாலும் ஒரு வகை அச்சத்துடன் ஐயத்துடன் , அந்த நீரிலும் நிலத்திலும் வாழ்பவனை தொடர்ந்து செல்லும் போது , சில ஆதாரங்களை அவன் காட்டுகிறான் , பார், இது இந்த கடல் நீருக்குள் எங்கே தேடினாலும் இது போன்ற பொருள் இல்லை . இவன் வைத்திருக்கும் பொருள் நீருக்கு வெளியே நிலத்தில் சென்ற பொது அங்கேயிருந்து அவன் எடுத்து கொண்டு வந்த பொருள் . ஆனால் மற்றவர்களிடம் இதை கூறினால் , அது ஒன்றும் அப்படி கிடையாது , அந்த பொருளில் எந்த மகிமையும் கிடையாது , உன்னை நம்பு , தெரியாததை நம்பாதே , எல்லாம் கற்பனை என்று கூறுவார்கள் . ஆனால் நிலத்தில் வாழும் அவன் , அனுபவித்தவன் , அவன் அனுபவப்படாமால் எங்கள் கேள்விக்கு விடை கூற முடியாது , எனவே மற்றவர்கள் கூறுவதை நாங்கள் ஏற்கவில்லை , அவனுடன் சேர்ந்து சிறிது தூரம் நீரின் மேல் பரப்பிற்கு நீந்தி செநிலப்பரப்பிற்கு செல்ல மூச்சு காற்றை சுவாசிக்க தெரிந்து இருக்க வேண்டும் , எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நீருக்குள் இருக்கும் காற்றை பிரித்து சுவாசித்து உயிர் வாழ்வதே , நிலத்தில் சென்று அங்கே பறக்கும் காற்றை சுவாசிப்பதற்கு கொஞ்சம் கொஞ்சமாக பழகினால் , நாமும் நிலப்பரப்பிற்கு செல்லலாம் , ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் , இறந்த பின் மிதந்து நிலப்பரப்பில் ஒதுக்கப்பட்டு விடுவோம் , ஆனால் அப்போது உயிரை விடுவதால் , நிலப்பரப்பில் என்ன இருக்கும் என்று பார்த்து அனுபவித்து தெரிந்து கொள்ள முடியாது , நிலப்பரப்பிற்கு சென்றால் உயிருடன் செல்ல வேண்டும் , அப்போது தான் அந்த உயிர் மூலம் அனுபவம் கிடைக்கும் . ன்ற போது , அங்கே மேல் பரப்பில் நிலத்தில் உள்ளவர்கள் நீரில் வாழும் எங்களுக்கு அன்னம் இட்டு கொண்டு இருந்தார்கள் . நாங்களும் பசியாற உண்டோம் , அந்த அன்னம் நிலத்தில் விளைந்தது , சந்தேகமே இல்லை , நிலம் என்று ஒன்று உண்டு , அங்கே பலர் வாழ்கிறார்கள் , சிலர் எங்களுக்கு உதவுகிறார்கள் , சிலர் எங்களை அழித்து கொல்ல நினைக்கிறார்கள் , எனவே மேற்பரப்பிற்கு செல்லும் போது , அந்த விஷயம் தெரிந்த அவனை தொடர்ந்து செல்வோம் , நாம் தனியாக சென்றால் ஆபத்து அதிகம் . அவன் நிலப்பரப்பில் நீர்பரப்பிலும் வாழ்பவன் , அவனிடம் ஆயுதங்கள் உண்டு , ஏதேனும் ஆபத்தேற்பட்டால் தடுக்கும் வல்லமை உண்டு , தனியே சென்றால் எளிதாக ஆபத்தில் சிக்கி உயிரை விடும் வாய்ப்பு அதிகம் . இங்கே மீன் என்பது நாம் , நீர் நிலை என்பது நமது உலகம் , நிலப்பரப்பு என்பது பூமிக்கு வெளியே உள்ள பிரபஞ்சம் , சொர்க்க லோகம் தேவர்கள் அமரர்கள் , இறவா நிலை இறைவா நிலை உள்ளவர்கள் உலவும் பகுதி , நீர் நிலை என்பது மாயை , மாய உலகம் , இங்கே இருந்து அங்கே சென்று பார்த்து வாழ்ந்து வருபவன் , அவன் தான் குரு , விஷயம் தெரிந்தவன் , வித்தை தெரிந்தவன். சுவாசம் பழகும் வித்தை தான் வாசி யோகம் . உலகத்திற்கு வெளியே பிரபஞ்சத்தில் உலாவ வேண்டுமென்றால் , அதற்குரிய சுவாச நிலை வேண்டும் , அதற்கு தான் வாசி யோக பயிற்சி . நிலம் பொய் , நிலம் இல்லை என்று மறுப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் , பகுத்தறிவு வாதிகள்


தி. இரா . சந்தானம் 

கோவை 05/01/2023




Wednesday, October 26, 2022

வாசி யோக அனுபவம் 26.10.2022

 நேற்று ஒரு நண்பரிடம் ஒரு வங்கி விஷயமாக பேசிக் கொண்டிருந்தபோது,  நாளை அந்த படிவத்தை எடுத்து வருகிறேன் நீங்கள் உங்கள் அடையாள அட்டை மற்றும் புகைப்படத்தை எடுத்து வையுங்கள் நான் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார் .


இப்போது அப்படியா என்னுடைய புகைப்படத்தை எங்கே வைத்தேன் என்று ஞாபகம் இல்லை இருக்கிறதா ?இல்லை தொலைந்து விட்டதா என்பதும்  ஞாபகம் இல்லை 


ஒரு வேளை என்னுடைய இல்லத்தில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்திருக்கலாம் தேடிப் பார்ப்போம் கிடைக்கவில்லை என்றால் நாளை கொடுக்க முடியாது.


 திரும்பவும் புகைப்பட நிலையம் சென்று புகைப்படம் எடுத்து தான் தர வேண்டும் 


அதற்கு நேரமில்லையே இப்போது என்ன செய்வது?

 கிடைக்குமா கிடைக்காதா ?

என்ற கேள்வியுடன் என்னுடைய சிந்தனை முடிந்தது 


பிறகு மாலையில் பார்க்கும்போது தெருவில் வாகனத்தை சரி செய்து கொண்டிருக்கும் போது என்னுடைய பையின் மேல் பகுதியில் வெளியே ஒரு இடத்தில் அது தானாக என் கண் முன்னே பளிச்சென்று வந்து இருந்தது 


தினமும் அலுவலகம் சொல்கிறேன் தினமும் அதே பையைத்தான் எடுத்து சொல்கிறேன். ஆனால் இதுவரை என் கண்ணில் பட்டதில்லை இதுவரை அது அந்த பையிலே இருக்கும் என்று எனக்கு தெரியவும் இல்லை 


நான் தேடவும் இல்லை


 உள்ளே இருந்து எடுக்கவும் இல்லை


 ஆனால் அமானுஷ்யமாக இன்று நான் கேட்ட உடன் அது வெளியே வந்து என் கண் முன்னே நிற்கிறது அது எப்படி சாத்தியம்


இது என்னுடைய அனுபவ பதிவாக நான் பதிவு செய்ய விரும்புகிறேன்


அனுபவம் 26.10.2022

பதிவு 27.10.2022


சந்தானம்

கோவை

Friday, October 14, 2022

டெலிபதி 14.10.2022

 மனதில் நினைக்கும் எண்ணங்கள் பிரபஞ்சத்தில் கலந்து யாரிடம் என்ன எண்ணங்களை செலுத்துகிறோமோ அவர்களை அடைந்த.. அவர்களுடைய மனதில் நமது எண்ணம் தோன்றி அவர்களை ஒரு செயல் செய்ய தூண்டும் அதற்கு நினைப்பதெல்லாம் நிறைவேறும் வரம் பெற்றிருக்க வேண்டும். தவம் செய்து ஆற்றல் பெற்று இருக்க வேண்டும்.


இந்த மாதம் 5ஆம் தேதி எனது சொந்தக்காரர்கள் நேரில் எனது இல்லம் வந்து, பத்திரிகை வைத்து சென்றார்கள் . இன்று 14 ஆம் தேதி... இன்று காலை 11 மணி அளவில் திடீரென்று எனக்கு ஒரு ஐயப்பாடு ஒரு வேளை இன்று அந்த . கல்யாணமாக இருக்குமோ . எப்படி தெரிந்து கொள்வது, வாட்ஸ் அப் இல் பத்திரிக்கை அனுப்பிருந்தால் பார்க்கலாம் இல்லையென்றால் இப்போது உடனே பார்க்க முடியாது. வீட்டிற்கு சென்று தான் பார்க்க வேண்டும். இவர்கள் ஏன் வாட்ஸ் அப் இல் அனுப்ப வில்லை என்று நினைத்தேன்


தற்போது 3 மணி அளவில் வாட்ஸ் அப் இல் பத்திரிகை அனுப்பி  வைத்துள்ளார்கள் . நவம்பர் 14 கல்யாணம் இன்னும் 1 மாதம் உள்ளது . நேரில் வந்து பத்திரிகை கொடுத்தவர்கள் பொதுவாக் வாட்ஸ் அப் இல் அனுப்ப மாட்டார்கள். அதுவும் கடந்த 8 நாட்களாக பத்திரிக்கை கொடுத்து சென்றதில் இருந்து எந்த செய்தியும் இல்லை. இன்று சரியாக, நான் மனதில் நினைத்தவுடன் நான் கேட்ட தகவல் கேட்ட நபரிடம் இருந்து கேட்ட மென்பொருளில்  வந்தது . இதனை நான் தற்செயலாக நினைக்கவில்லை நிகழத்தப்பட்ட ஒரு செயலாக நினைக்கிறேன். பலமுறை இவ்வாறு நடந்துள்ளது.




Tuesday, October 11, 2022

11.10.2022

 இன்று 11/10/2022. செவ்வாய்க்கிழமை ,  வெற்றி வேல் முருகர் உபாசனை 


செவ்வரளி மலர்களால் த்ரிசதி அர்ச்சனை , தூபம் , தீபம் , கற்பூரம் , நெய்வேத்தியம் , நீர் 


வணக்கம் அய்யா 


நல்லது , வந்தாயா , சரி முருகர் படத்தை வைக்கும் போது , இரு புறமும் சமமாக வை .  புறம் உயர்ந்தும் இன்னொரு புறம் தாழ்ந்தும் வைக்க வேண்டாமே .


- அப்படியே ஆகட்டும் அய்யா, சரி செய்தேன் 


மலர் அர்ச்சனை செய்யும் போது , நடுவில் வெளியே செல்லாதே , முழுவதுமாக பூஜையை முடித்து செல் .


- சரி அய்யா, அப்படியே செய்கிறேன் 


முதல் அர்ச்சனை முடிந்தது 


இரண்டாவது அர்ச்சனை செய்யும் போது , முடிவில் சிறிய வியர்வை துளிர்த்தது , உடல் உஷ்ணம் கூடியது 


- அய்யா, இது என்ன அய்யா, பூஜை செய்தால் உடல் உஷ்ணம் கூடுகிறது , அது ஏன் அய்யா 


அந்த காலத்தில் , பூமி மேம்பட்ட நிலையில் , பஞ்சபூத கலவை கொண்டு இருந்தது . பூமி சிறிது சிறிதாக நகர்ந்து , நீ எப்படி வயோதிகம் கொல்கிறாயோ , அப்படியே அதுவும்  குறைபாடு கொள்கிறது . உனது கர்மத்தின் அளவே இந்த பூமி , இந்த பூமி என்று உய்வடைகிறதோ , அன்றே , ஈயும் உய்வடைவாய் , நீ உய்வடையும் போது , பூமி உனக்கு வேறு மாதிரியாக தோன்றும் , நீ இறைவனுடன் கலந்து விட்ட பிறகு , இந்த உடலின் நிலையில் இந்த பூமியை உணரும் போது உண்மையான பூமியின் தன்மை தெரியும் . உன் உடல் எனப்படுவது , பஞ்ச பூத கலவை பூமியில் இருந்து வந்து , எப்போது பூமியுடன் ஒட்டி நகர்ந்து , எப்போதும் பூமியுடன் சேர்ந்தே உள்ளது , எனவே , பூமியின் தண்மை நமது உடலிலும் வெளிப்படும் . பழங்காலங்களில் பூமி உறுதியாகி இருந்த போது , எந்த ஆன்மீக சாதனை செய்தாலும் , உடல் தாங்கி நிற்கும் , இப்போது , இந்த பூமி , அழிவை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது , கலி காலம் , களிக்கும் காலம் , எனவே பூமியில் உள்ள வெப்ப நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் மைய பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது , நீங்கள் தான் நிலத்தின் ஆழத்தில் இருந்து எரிபொருளை வெளியே எடுத்து வந்து எரிக்கிறீர்களே , அதனால் வெப்பம் வெளியேறுகிறது , அதன் விளைவாய் பூமியில் வெப்பம் குறைந்தால் குளிரும் . அது போல தான் , உடலில் தாங்கும் அளவிற்கு மேலே உள்ள வெப்பம் வெளியேறுகிறது 


உன் உடலில் உள்ள பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று தான் முக்கியமான இயக்கம் , அந்த இயக்கத்தை நீ மாற்றி அமைக்கும் போது , வாசி யோகம் செய்யும் போது , அல்லது மந்திர ஒலிகளை எழுப்பும் போதும் , காற்றின் ஓட்டம் வேறு நிலையில் இயங்குகிறது . அதனால் பஞ்ச பூத கூடாகிய உன் உடல் சிறிது மாற்றம் பெறுகிறது , அப்போது வெப்ப நிலைகள் மாறலாம் . வசிக்கும் கூட்டை மாற்றுவது , அல்லது சரி செய்வது , என்பதை புரிந்து கொள் . மந்திரம் என்றால் , ஏதோ எழுதி வைத்து மன்னன் செய்து உச்சரிப்பது என்பது அல்ல , அதையும் தாண்டி , விஷேஷ மந்திரங்களை உச்சாடனம் செய்யும் போது , நீ வசிக்கும் கூடாகிய உடலில் உள்ள பஞ்ச பூதத்தில் காற்றோட்டம் உருமாறி , சில மாற்றங்களை உண்டு செய்கிறது . இறைவனுக்கு உடல் ஒன்று இருந்தால் , அந்த உடலுக்கு எப்படி காற்றோட்டம் இருக்கும் , அந்த நிலையை நோக்கி உனது நிலை சிறிது திரும்பினால் கூட முக்தி அடைந்து விடுவாய் , அதாவது இறை நிலை பெற்று விடுவாய் . இது தான் த்யானம் , பூஜை ,  என்று கூறுவார்கள் ,  பக்தியுடன் சக்தி வாய்ந்த மந்திரங்களை கூறி வழிபாடு செய்யும் போது , அந்த இறைவன் உனது உள் இருந்து வெளிப்படுவான் . அணைத்து ஆன்மீக சாதனைகளும் , உன் உள் இருக்கும் சக்தியினை  வெளிப்படுத்த தான் அமைக்கப்பட்டு உள்ளது. எந்த வழிபாடு செய்தால் உன் உள்ளே இருக்கும் சக்தி வெளிப்படும் என்று உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல் செய்யலாம் , சிலருக்கு சிவன் , விஷ்ணு , பைரவன் , கருமாரி , முருகன் , சித்தர்கள் என பல வகை வழிபாடுகள் உள்ளன . உனது வாழ்க்கையே ஒரு தொடர்கதை போல் உள்ளது , அடுத்த அத்யாயம் எழுதும் போது , சென்ற அத்தியாயத்தில் எதில் முடித்தாயோ, அதில் இருந்து ஆரம்பிப்பது புத்திசாலித்தனம் , ஒவ்வொரு அத்தியாயத்தையும் , புதிய கதை கொண்டு ஆரம்பிப்பது தொடர்கதை ஆகாது . கதை தொடர்ந்து வந்தால் தான் முடிவிற்கு வரும் . எனவே உனக்கு எந்த குரு, எந்த தெய்வம் என்று தெரியாத நிலை வரக்கூடாது என்று குலதெய்வம் என்று ஒரு தொடர்ந்த வழிபாட்டினை வைத்தார்கள் . சில தெய்வங்களை வணங்கும் போது , உன் உள்ளே இருக்கும் சக்தி நன்றாக வெளிப்பட்டால் , அது தான் உன் உள்ளே இருக்கும் சக்தி என்று உணர்ந்து கொண்டு , அதனையே பிடித்து கொண்டு முழுமை பெறலாம் , புதிதாக ஆரம்பித்தாள், அது வேலை செய்யவே சில பிறவிகள் ஆகி விடும் . ஏற்கனவே பல பிறவிகள் வேலை செய்து , அதனை பலப்படுத்தாமல் வீணடித்தால் , கால விரயம் உண்டாகும் , அர்த்தம் வராது , தெய்வ நிந்தனைக்கும் ஆளாக நேரிடும் . அந்த தெய்வம் உனக்காக பல பிறவிகள் காத்து கொண்டிருக்கும் , அதுவே விதி யாக வந்து உன்னை ஈர்க்கும் , நீயே முயன்றாலும் அந்த தெய்வத்திடம் இருந்து விலகி செல்ல வாய்ப்பளிக்காமல் உன்னையே ஆட்கொண்டு , ஆட்டுவித்து , காத்து , வழி நடத்தி , இப்போது உன்னிடம் பேசி கொண்டு உள்ள என்னை போன்று இருக்கும் . இப்போது புரிகிறதா , நான் யார் , நீ யார் என்று , எந்த அளவிற்கு வேற்றுமையை களைகிறாயோ அந்த அளவிற்கு நீ தெய்வீகம் பெறுவாய் , உன்னை மறப்பதற்கு தான் த்யானம் , மனம் எண்ணங்களை உருவாக்கி , பதிவுகளை உருவாக்கி , அந்த எண்ணங்களின் , பதிவுகளின் கூட்டே , அதையே  தான் "நீ" என்று கூறி கொள்வது . த்யானத்தில் எண்ணங்கள் அற்ற நிலை விழி நிலை , விழிப்பு நிலை என்று கூறப்படுகிறது. அப்போது தான் மனம் செயல்படாமல் , உன் அககாரமாகிய "நான்" என்பது இல்லாமல் இருக்கும் நிலையில் , வேற்றுமை களைந்து , இறை நிலை மட்டுமே இருக்கும் . இறைவன் என்பது , அந்த "நான்" அல்லாத அந்த நிலையை குறிக்கும். இறைவன் என்பது ஒரு நிலையே , அந்த நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் . மனதை அடக்க முடியாது , தகுந்த புரிதலுடன் பக்குவப்படுத்த வேண்டும் . அதற்கு சொன்னால் புரியாது , சில சமயம் அடி பட்டால் தான் புரியும் , அதனை புரிய வைப்பது தான் இறைவன் செயல் . 


உன்னுள் இருக்கும் சக்தியை வெளி  படுத்த யுக்தி தான் இந்த வழிபாடு , இறைவன் என்பது நீ உருவாக்குவது , உதாரணத்திற்கு , இப்போது நீ பல மந்திரங்களை சொல்கிறாய் , அனைத்தும் இறைவனின் பெருமையை சொல்கின்றன , வீர தீர செயல்களை சொல்கின்றன , எனவே முருகன் என்பவன் இருந்தான் , அசுரர்களை அழித்தான் , தேவர்களை காத்தான் , மிகுநத பலம் பெற்றான் என்றெல்லாம் உணர்த்தும் விதமாக மந்திரத்தின் அர்த்தங்கள் உள்ளன . அதனை உச்சரித்து கூறியும் போது , அந்த இறைவனின் அருமை பெருமைகளை உணர்கிறோம் . ஒருவன் பாடல் பாடும் பொது உணர்ச்சியில்லாத ஜடம் போல பாடல் பாடினால் , அதில் , அந்த பாடலில் ஜீவன் இல்லை என்பார்கள் , எனவே பாடல் படுபவன் அதே உணர்ச்சியுடன் அனுபவித்து பாட வேண்டும் . அதே போல தான் , இந்த இறை வழிபாடும் , உன் கண் முன்னே இறைவன் உள்ளான் , அவனிடம் நீ மந்திர மொழியில்  உரையாடி கொண்டு இருக்கிறாய் ,, ஒவ்வொரு முறை அந்த இறைவனின் சொரூபம் , உன் மந்திர அர்ச்சனை சொல்லிற்கு ஏற்றவாறு தெரிகிறது என்பதை காண வேண்டும் . உதாரணம் - ஓம் சதகோடி ரவிபிரபாய நமஹ என்றால், 100 கோடி சூரியன்கள் சேர்ந்த ஒளி ப்ரவாகை போல காட்சி அளிப்பவர் என்று பொருள் , உன் முன்னாள் இருக்கும் இறைவனின் பிம்பத்தை , அந்த மந்திர சொல்லின் சொரூபமாக பார்த்து பாவித்து , வணங்கி , மலர் தூவி அர்ச்சனை செய்து வாழ்த்தும் போது , அதே சக்தி இரு மடங்காக நமக்கே திரும்ப கிடைக்கிறது , இவ்வாறு சக்தியை கொடுப்பது 1 மடங்கு, பெறுவது இரு மடங்கு என்றாகி , தொடர்ந்து 1 மணி நேரம் அர்ச்சனை செய்து வந்தால் , சக்தி பல மடங்கு பெருகும் . அப்போது உன் உள்ளமும் உடலும் தூய்மை பெரும் , நீ நினைப்பது எல்லாம் கை  கூடும் . எனவே ஒவ்வொரு முறையும் வெறுமனே மந்திரத்தை முணுமுனுக்காமல் அந்த மந்திர ஒலியை உணர்ந்து  அண்ட் மந்திரத்திற்குரிய நாயகனை அங்கே கண்டு கண்டு தொடர்ந்து வழிபட்டு வந்தால் , ஒரு நாள் நீ உண்மையான சொரூபமாயகிய தூல வடிவத்திலேயே உன் உலகத்தின் உள்ளே அந்த இறைவன் உன் முன்னே தோன்றுவார் . அதன் பின் ,  நடத்தும் வழி பற்றி அவர் பொறுப்பில் நீ அனைத்தையும் விட்டு விடலாம் , அவரே நீ ஆகி விடுவார் , நீ என்பதேதுவும் இருக்காது . தான் , அது  வாக ஆகி விட்ட பிறகு , ஜீவன் முக்தனாக அந்த 

உடல் , பெயர் அடையாளம் இருக்கும் . அப்படி பல நிகழ்வுகள் நடந்துள்ளன , அருணகிரிநாதர் , சித்தர்கள் , போன்றோர் எல்லாமே அதே நிலையை அடைந்தவர்கள் , ஆழ்வார்கள் , நாயன்மார்கள்  என்று கூறி கொண்டே போகலாம் . அனைத்திலும் கடினமானது உயர்ந்தது , உருவமில்லாத பெயர் இல்லாத பொருள் இல்லாத சக்தியை , அதே வண்ணமே , வெளிச்சமாக , ஒளியாகி , தீப ஒளி சுடராக வழிபட எல்லாருக்கும் பக்குவம் இருக்காது . அதில் பக்குவப்பட்டவர்கள் அதில் செல்லலாம் , இதில் பக்குவப்பட்டவர்கள் இதில் இருக்கலாம் . இரண்டையுமே வைத்து கொள்வேன் என்றவரும் உண்டு , ஆனால் , இரண்டிலுமே முழுமை பெற வேண்டும் , இரண்டு அல்லது மூன்றை வைத்து கொண்டு  எதிலேயும் முழுமை பெறாவிட்டால் , நாங்கள் என்ன சொல்வது , எந்த செயல் செய்தாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் , அப்போது இறைவனை காணலாம் . இவ்வாறு இறைவனை உருவகம் செய்து தாரனையில் ஈடுபடுவது பக்தி மார்க்கம் , தாரணை த்யானம் ஆகி சமாதி நிலை பெற்றால் , பக்தியிலும் முக்தி பெறலாம் . அப்படி பக்தி யோகத்தில் ஈடுபடுவதற்கு இறைவனை தினமும் தாரணை செய்ய ஒரு இடம் தேர்ந்தெடுத்து , ஒரு ஆளை நியமித்து , அவர் தாரணை செய்வது மூலம் , தானும் தாரணையில் ஈடுபட்டு , பலருக்கும் ஒரு பொதுவான தாரணையாக இருக்கும் இடம்  ஆலயம். இது தான் ஆலயங்கள் உருவாக காரணம் . எனவே நீ அர்ச்சனை செய்யும் போது ஒவ்வொரு மந்திரத்தாலும் இறைவனை தியானித்து தாரணை செய்து , அந்த மந்திரத்திற்குரிய உருவை பொருளை மனதில் எண்ணி பூசை செய்தாயானால் ஒரு நாள் இறை காட்சி நிச்சயம் கிடைக்கும் . முருகனை காண்பதென்றால் சுலபம் கிடையாது . அதற்கு வைராக்கியம் சேர்ந்த முயற்சி வேண்டும். உயிர் உள்ள வரை வீணடிக்காமல் , வாசி பயிற்சி த்யான பயிற்சி , பக்தி யோகம் போன்றவற்றையெல்லாம் விடாமல் செய்து கொண்டே இரு , சில சமயம் , இறைவன் வந்து உனது பயிற்சி முடியும் வரை காத்து கொண்டு இருப்பார் , நீ பயிற்சியில் மூழ்கி இறைவனை கூட கவனிக்காமல் , தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருப்பாய் . அப்பேற்பட்ட தொடர் நிலை வேண்டும் . உன் ஆன்மாவை கொண்டு போய் இறைவனிடம் ஒப்படைத்து விடு , பின் உன்னுள் இறைவன் , நீ வேறு , அது வேறு என்று வித்தியாசம் இல்லாமல் இருப்பார்.


- இறைமொழி உரை ; தட்டச்சு - சந்தானம்





அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...