Saturday, February 27, 2021

Micro Management - நடக்கற காரியங்களை பாக்கும் போது ,இதுக்கு பெரு தான் மைக்ரோ மேனேஜ்மேண்ட் ....ஹா ஹா ஹா ... சிரிப்பு ...... இவை எல்லாம் பிப்ரவரி 2021 இல் நடந்த கோர்வையாக சம்பவங்கள் . ஓம் அகத்தீசாய நம குருவே துணை குருவே போற்றி

ஒரு சொத்தை விக்கறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தோம் , 6 வருஷமா முடியல . அப்பறம் இப்போ பண தேவை இருக்கு , அய்யா கிட்டே கேட்டேன் . கொஞ்சம் வித்து கொடுத்த கடன் எல்லாம் அடையும் , கொஞ்சம் நிம்மதியா சேவை செய்யலாம் , செஞ்சு குடுங்க ன்னு கேட்டேன் . ஆங்கிலத்துல micro management ன்னு சொல்வாங்க . அதாவது சிறிய மிக சிறிய அளவில் உள்ள முடிவுகளை கூட உயர் அதிகாரி தான் எடுப்பார் . நாம வெறும் பொம்மை . நான் விக்க நெனைச்சது ஒரு சொத்து , அந்த சொத்து வைக்கறதுக்கு அய்யா ஒத்துகொள்ளல , அவரே என்னோட ஒரு உபயோகமில்லாத விக்க முடியாத சொத்து ஒன்ன தேர்ந்தெடுத்து , விக்க முடிவு பண்ணி இருப்பாரு போல . ஆபீசுல வேலை செய்யறவரு , என்னை அவரே கூப்பிட்டு , சந்தானம் அந்த இடத்துல இருக்கற பூமி சும்மா தான கெடக்குது , நல்ல வேலைக்கு வித்தரலாம் , நான் உதவி பண்றேன் , உனக்கு உதவி பனிமுன்னு தோணுது அப்படீங்கிறாரு . நான் யாரையும் உதவு கேக்கல , சொத்து வைக்கணும்னு மத்தவங்களுக்கு எப்பிடி தெரியும் ? மேலும் அவுரு சொல்றாரு, வில்லங்கம் அப்படியே இருக்கட்டும் , வில்லங்கத்தோடவே ஒரு ரேட் பேசி விலை கொறச்சு விக்கலாம் ன்னு சொல்றாரு . எல்லாம் அதுவா நடக்குது  ஆனா நான் பிடி கொடுக்காம அவரை இப்போ கூட்டிட்டு போய் இடத்தை காட்டுறேன் அப்போ கூட்டிட்டு போய் இடத்த காட்டுறேன் ன்னு காலம் கடத்தி 2 மாசமா இடத்தை கூட காட்டவே இல்ல . அப்பறம் அகத்தியர் என் வீட்டுக்கே ஆள் அனுப்புறாரு , 35 வருஷம் முன்னால நம்ம வீட்டு மர வேல செஞ்ச ஆசாரி சுமார் 20 வருஷம் கழிச்சு இப்போ என் வீடு அட்ரஸ் விசாரிச்சு வராரு . அந்த பூமி விக்கறீங்களா , பார்ட்டி ரெடியா இருக்குது , 10 நாள்ல கிரயம் முடிச்சிக்கலாம் அப்பிடீங்கிறாரு . எல்லாம் அய்யா செயல் , வீடு தேடி வந்தது . அவரு பார்ட்டி கூப்டுட்டு வர்றதுக்குள்ளே வேற ஒருத்தரு வேற பார்ட்டி கூப்டுட்டுக்கு வராரு - எல்லாம் தானா நடக்குது. அந்த பார்ட்டி க்கு கொடுக்க அய்யா உத்தரவு இல்ல போல இருக்கு . அவுங்க இப்போ பெங்குலுரு ல இருக்கோம் , 2 நாள் கழிச்சு கோயமுத்தூர் வந்துருவோம் , ஒடனே வந்து இடத்தை ரேட்டு பேசி முடிச்சுக்குறோம் ன்னு சொல்றாங்க . பெங்களூர் ல இருந்து 400 கிலோ மேட்டர் கார்ல வந்து வராங்க வந்து இங்க அவனுங்க வீட்டுல இருந்து என் ஆஃபீஸ் வந்து 12 மணிக்கு பேசலாம் னு சொல்றாங்க . கிளம்பும் பொது கெளம்பிட்டோம்  இன்னும் 30 நிமிஷத்துல வந்துருவோம் ன்னு சொல்றாங்க. அதுக்குள்ள வர்ற வழியிலே வேற ஒரு பைக் காரன் மேல இவங்க கார் இடிச்சு  அங்கே ஒரு ரோட்டுல சண்டையாம் , வந்தவங்க திரும்பி போயிட்டாங்க , பெங்குளூருல இருந்து 400 கிலோ மீட்டர் கார்ல சுகமா வந்தவங்களுக்கு இந்த 10 கிலோ மீட்டர் வந்து எங்கிட்ட பேச முடியல , பேச விடாம தடுத்தது எது ...... நான் சொல்ல வேண்டாம் ,.... உங்களுக்கே தெரியணும் .... எங்க அய்யன் micro management பன்றாரு ..... மறு  நாள் அந்த ஆசாரி வேற ஒரு பார்ட்டி கூடி கொமேண்டு வந்து விலை பேசி முடிச்சாரு , அவரு ஒரு பிஜேபி ஆள் , தலைவர் , அற்புதமான கடவஜுல் நம்பிக்கை உடையவர் , நல்லவர் . அகத்தியர் சொல்ல வர்றது - டேய் மடையா , எந்த சொத்தை எப்போ கொடுக்கணும் , யாருக்கு கொடுக்கணும் எல்லாம் எனக்கு தெரியும் , நீ என்கிட்டே சொல்லிட்ட இல்ல , வேடிக்கை மட்டும் பாருடா " ன்னு சொல்ற மாறி இருக்குது , நடக்கற காரியங்களை பாக்கும்  போது ,இதுக்கு பெரு தான் மைக்ரோ மேனேஜ்மேண்ட் ....ஹா ஹா ஹா ... சிரிப்பு ...... இவை எல்லாம் பிப்ரவரி 2021 இல் நடந்த கோர்வையாக சம்பவங்கள் . ஓம் அகத்தீசாய நம குருவே துணை குருவே போற்றி .









28/02/2021 - அதிசயங்களை தேடுபவர்களுக்கு இந்த பதிவு , என்ன செய்வது சிறிய சிறிய நிகழ்வுகளை கூட கவனித்து பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.

28/02/2021 - அதிசயங்களை தேடுபவர்களுக்கு இந்த பதிவு , என்ன செய்வது சிறிய சிறிய நிகழ்வுகளை கூட கவனித்து பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. தினமும் ஏதாவது அதிசயத்தை , இறை செயலை பதிவு செய்ய வேண்டும் என்பது என் உல் மனதில் எழுந்துள்ள கட்டளை. அதற்கு ஏற்றார் போல இறைவன் எனக்கு அனுபவங்களை கொடுக்குமாறு வேண்டுகிறேன் . எனக்கு நல்ல கண்களை கொடுங்கள் - இறை சக்தியை கண்டு உணர  வேண்டும் , நல்ல காதுகளை கொடுங்கள் - இறை சக்தியை கேட்டு உணர வேண்டும் . நல்ல அறிவையும் புத்தியையும் கொடுங்கள் , இறைவனை உணர்ந்து எழுத்தால் வடிக்க வேண்டும் , மற்றவருக்கும் உணர்த்த வேண்டும் என்ற ப்ரார்தனையோடு இந்த சிறு பதிவு  இன்று

நேற்று பரம சித்தர் பீடம் சென்று வந்ததை தட்டச்சு செய்து கொண்டு இருக்கும் போது , நான் ஒன்றை டைப் அடிக்கிறேன் , வேறு ஒன்று விழுகிறது . ஆங்கில எழுத்தில் தட்டச்சு செய்து , அதனை கூகிள் மூலம் தமிழ் எழுத்தாக மாற்றும் கருவியை உபோயோகப்படுத்தி வருகிறேன் . உதாரணமாக ஆங்கிலத்தில் Agathiyar என்று டைப் செய்தால் அதுவே தமிழ் எழுத்துக்களாக மாறி "அகத்தியர்" என்று தட்டச்சு செய்து கொடுக்கும். இப்படி தட்டச்சு செய்யும் போது பரம சித்தர் யார் என்று எழுதுகிறேன் . " அவர் அகதியருடன் ஒன்றற கலந்தவன் " என்று தட்டச்சு செய்யும் போது , அது " காலத்தவன் " என்று விழுகிறது . பரம சித்தரும் அகத்தியரும் வாழ்ந்த காலங்கள் ஒன்றே . ஒன்றாய் இருந்தவர்கள் , சில காரணங்களால் பிரிந்து மீண்டும் பரம சித்தர் அகதியருடன் இணைந்தார் . இதனை அகத்தியர் எனக்கு உணர்த்தவே software மென்பொருளில் மாற்றம் செய்து உணர்த்தி "காலத்தவன் " என்று வார்த்தை விழுமாறு செய்தார் . இதில் என்ன பெரிய அதிசயம் என்று நீங்கள் கேட்கலாம். ஒன்றை டாய் செய்தால் வேறு வார்த்தை வந்து விழுவது எவ்வாறு ? வேறு வார்த்தை விழுந்தால் அர்த்தம்  உள்ள வார்த்தையாக விழா வேண்டும் என்ற அவசியம் இல்லை ; அர்த்தம் உள்ள வார்த்தையாக விழுந்தாலும் , அர்த்தம் பொருத்தமாக உள்ள வார்த்தை யாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை . இதில் நமது செயல் யாது , டைப் செய்யும் பொது கூடவே எம் அய்யன் இருக்கிறார் என்பதை உணர்த்தி கொண்டு இருக்கிறார் , இதுவும் இறை செயல் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் . ஒருவேளை எனக்கு பயித்தியம் பிடித்து இருக்கலாம் , அகத்தியர் மேல் பயித்தியமாக இருக்கலாம் - எனது பிதற்றல்களை பொருட்படுத்த வேண்டாம் . நான் அப்படித்தான் ஏதாவது உளறி கொட்டி கொண்டே இருப்பேன்  என் உளறல்களில் சில உளவுகள் இருக்கலாம் , உங்களுக்கு ஏதாவது கிடைத்தால் எடுத்து கொள்ளுங்கள் , இல்லேயேல் இது வேறு குப்பை . தவறாக கொள்ள வேண்டாம் . நான் ஒரு பயித்தியம் என்று நினைத்து புறக்கணித்து விடுங்கள் . நன்றி





27.02.2021 - இது கிட்டத்தட்ட எனது தினசரி டைரி என்று சொல்லலாம் . " அருள் டைரி" என்பது தான் இதற்கு பொருத்தமாக இருக்கும்

இது கிட்டத்தட்ட எனது தினசரி டைரி என்று சொல்லலாம் . " அருள் டைரி" என்பது தான் இதற்கு பொருத்தமாக இருக்கும் . முடிந்தவரை சுவாரசியம் குறையாமல் எழுத முயற்சி செய்கிறேன். நான் ஒரு கட்டுரையாளன் அல்ல . நான் ஒரு  வங்கி அதிகாரி , ஓரளவுக்கு எழுத்து வேலை தெரியும் . நல்லதை கொண்டு சேர்ப்பதற்காக ஒரு சிறு முயற்சி இது அவ்வளவே . எனது எழுத்தில் பிழைகள் இருப்பின் பொறுமை காக்கவும் . நன்றி .

27/02/2021 - இன்று மதுரை கள்ளழகர் ஆலய பூஜை பொறுப்பை ஏற்கும் அய்யங்கார் பரம்பரையை சேர்ந்து அழகருடன் நித்தமும் வாழ்ந்து , சித்தர் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டு , அகத்தியரால் ஆட்கொள்ளப்பட்டு 2009
இல் அகதியருடன் ஒன்றர கலந்த பரமசாமி பட்டர் என்னும் அகஸ்திய பரம சித்தர் அவருடைய  தினம் . அதாவது மாசி மகம் அன்று அவர் சமாதி அடைந்து அகத்தியுருடன் கலந்தார்.

அவருக்கு அந்த இடத்தில , அழகர் மண்டபம் அருகே பரம சித்தர் ஞான பீடம், அவரது மகன்களால் அமைக்கப்பட்டது. அவரது 5 அடி உயர அத்தி மரத்தால் செய்யப்பட திருவுருவ சிலை பிரதிட்டை செய்யப்பட்டு தினமும் பூஜையில் உள்ளது. அவர் சமாதி அடைந்த மாசி மக நட்சரத்தில் குரு பூஜை செய்யப்படுகிறது. அது தான் இந்த நாள். நான் போன வருடம் சென்று இருந்தேன் . இந்த வருடம் 2 ஆவது முறையாக செல்கிறேன் .

இந்த முறை ஜீவ அருள் நாடியில் , அகதியிரிடம் - அய்யா நான் பரம சித்தர் குரு பூஜைக்கு மாசி மகம் அன்று அழகர் மலை அருகே அவரது பீடம் சென்று வருகிறேன் , உத்தரவு கொடுத்து ஆசீர்வதியுங்கள் என்று கேட்டேன் , என் என்றால் , அந்த நாள் அன்று நான் சென்று விட்டால் , நான் அகத்தியர் பீடத்தில் யாகம் அபிஷேகம் அலங்காரம் அன்னதானம் போன்ற பணிகள் செய்ய இயலாது . எனவே உத்தரவு கேட்டேன் . ஐயனும் மனம் குளிர்ந்து , அவன் என்னுடன் ஒன்றர கலந்தவன் , நீ சென்று வா , நான் உனக்கு எவ்வாறு பொதிகையில் ஓசை எழுப்பி வானில் பறந்து வந்து புலன் உணர்த்தினேனோ அதே விதம் அங்கேயும் வந்து பஞ்ச வர்ண கிளி வடிவில் வந்து ஓசை எழுப்பி புலன் உணர்த்துவேன் என்று உரைத்தார் . மிக்க நன்றி நல்லது குருவே என்று வணங்கி காலை 4 மணி அளவில் ஒரு ஜீப்பில் சிலருடன் பயணத்தை துவக்கினோம்

அருள் 1 - 3 குடும்ப நபர்கள் இனைந்து ஒரு காரில் பயணம் செய்வதாக இருந்தது , நான்காவது குடும்பம் ஒன்று காரில்  இடம் கிடைக்காததால் விடுபட்டார் . அய்யனுக்கு  அவரை விட உத்தரவு இல்லை . குடும்ப உறுப்பினர்களுக்கு சிக்கல் உண்டாக்கி ஒருவர் மாத விலக்கு , ஒருவர் வேறு தனி கார் , ஒருவருக்கு தேர்வு, வராத ஒருவர் வர வேண்டும் என்று அவர் இஷ்டம் போல மாற்றி அமைத்து, ஒரு பெரிய ஜீப் அமைத்து , 4 குடும்பங்களும் ஒரே ஜீப்பில் பயணம் செய்யுமாறு வழி வகை செய்து கொடுத்தார். எல்லாம் தானாகவே நடந்தது.

மேலும் கிளம்பி போகும் வழியில் மேலும் இரண்டு குடும்பங்கள் தனி தனியே இரண்டு கார்களில் வருகின்றனர். எனக்கு மனதினுள் உந்துதல் சாப்பிடுவதற்கு நிறுத்த 10 ஹோட்டல்கள், 20 ஹோட்டல்கள் பல இடங்களில் கூகிள் மேப்  இல் தேடி கொண்டு இருந்தேன். சரியாக temple  City என்ற ஹோட்டலில் சாப்பிடும் படி வந்தது , அந்த ஹோட்டல் மார்க் செய்து பயணத்தை தொடர்ந்தேன். மற்ற காரில் வருபவர்கள் அதே ஹோட்டலில் சாப்பிடுகிறர்கள் போலும் , அவர்களும் அந்த ஹோட்டலை நோக்கி குறி வைத்து வருகின்றார்கள். நான் ஹோட்டலை மாற்றி A2B  ஹோட்டலில் சாப்பிடுறோம் . மற்ற இரண்டு கார் காரர்களும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வந்தவுடனே உந்துதல் ஏற்பட்டு எனக்கு அழைத்து , நான் ஒரு இடத்தில் ஜீப்பை ஐ நிறுத்தி அவர்களுக்காக காத்து கொண்டு இருந்தேன் . சரியாக 10 நிமிடத்தில் மூன்று வாகனங்களும் அலங்காநல்லூர் செல்லும் வழியில் ஒன்றாகி நின்று அங்கே இருந்து ஒரு குழுவாக கோயமுத்தூர் சார்பாக ஒன்றாக பரம சித்தர் பீடம் சென்று உள்ளே நுழைந்து ஒன்றாக தரிசனம் செய்தோம் . குழுவையும் , குழு உறுப்பினர்களையும் அவரே தேர்ந்தெடுத்து , வாகனத்தை தேர்ந்தெடுத்து , அனைவரையும் ஒருங்கிணைத்து ஒன்றாக வந்து சேரும்படி செய்தது இறை செயல் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் .

இதில் எனது செயலாவது யாதொன்றும் இல்லை . எனது செயலாக இருந்தால் எனது சிறிய மூளைக்கு சிறையா காரை தேர்ந்தெடுத்து , நாங்கள் மட்டும் சென்று செல்வது தான் என் திட்டம் . அது நிறைவேற்றவே விடவில்லை . 4 ஆவது குடும்பத்தை விட்டு செல்ல எண்ணும் பொது மனதில் சோகம் . அது என்னுடைய சோகம் அல்ல . என்னுள் இருப்பவர் கொண்ட உணர்வு . மற்ற காரில் வருபவர்கள் , முதலில் வர மாட்டேன் என்று கூறினார்கள் , அதற்கும் எனக்கு சோகம் , அதனை தீர்க்கும் பொருட்டு  அவர்களுக்கும் கடைசி நேரத்தில் உள்ளுணர்வு உந்தப்பட்டு அதிகாலையில் கிளம்பி , உறுப்பினர்களை சேர்த்து அவர்கள் வந்து என்னை சந்திக்கும்படி செய்தது யார் ? எல்லாம் இறை செயலே அல்லால் வேறு ஒன்றும் இல்லை .


அருள் 2 - அங்கே மைக்கில் முக்கியமான ஜெபம் செய்யும் பொறுப்பை என்னிடம் அளித்தார்கள் , அகஸ்திய பாரமசித்தார் நாமத்தை ஜெபம் செய்து கொண்டு இருக்கும் போது , அய்யன் வந்தார் . அது எவ்வாறு என்று விளக்குகிறேன். ஓம் என்று ஒருவர் மைக்கில் சொல்ல , அனைவரும் அகஸ்திய பரம சித்தாய நமஹ என்று கோஷம் போட கூடை கூடையாக அகஸ்திய பரம சித்தருக்கு மலர் தொடர்ந்து ஒரு மணி நேரம் சுமார் 50 கிலோ பூக்கள் தூவப்பட்டு கொண்டே இருந்தன . அனைவரும் பந்தலின் உள்ளே அமர்ந்து இருந்தோம் . கோஷ ஒலியில் கிளி சத்தம் எங்கே கேட்க போகிறது ??. பந்தல் அடியில் அமர்ந்து எவ்வாறு வானில் பறக்கும் கிளியை பார்க்க இயலும் ???  ஆனால் மிக சரியாக ஓம் என்ற கோஷத்துக்கும் அகஸ்திய பரம சித்தாய நமஹ என்ற மைக்கில் நான் ஜெபிக்கும் கோஷத்துக்கும் நடுவில் கிளி பந்தல் மேலே நான் அமர்ந்து இருந்த இடத்தின் மேலே பறந்து க்ரீச் க்ரீச் என்று ஓசை எழுப்பி புலன் உணர்த்தியது . சரியாக மூன்று முறை ஓசை எழுப்பி பின் சென்று விட்டது , நான் நன்றாக கவனித்தேன் . கடவுளை நம்பாதவர்கள் இதுவும் ஒரு தற்செயல் தான் என்று கூறலாம். எப்படி அது முன்னரே அந்த தற்செயலை , நான் கிளி வடிவத்தில் வருவேன் , ஓசை எழுப்புவேன் , உனக்கு புலன் உணர்த்துவேன் என்று கூறி மிக சரியாக அந்த இடத்தில் வந்து நான் அமரும் இடத்தின் மேலே பறந்து ஓசை எழுப்பி இரண்டு கோஷங்களை நடுவே கவனிக்கும்படி செய்து , சரியாக மூன்று முறை ஓசை எழுப்பி சென்றது என்ன தற்செயலா அல்லது இறைவன் செயலா , நாத்திகவாதிகளே இறை செயல் இவ்வாறு தான் இருக்கும் . எல்லாவற்றுக்கும் கருப்பு சாயம் பூசினால் , அந்த கருப்பு சாயம் நம் முகம் மேல் நாமே பூசி கொள்ளும் சாயம் தானே ஒழிய இறைவனுக்கு ஒன்றுமே இல்லை, கருப்பு வண்ணமும் இறைவன் தான் , கருப்பு சாயமும் இறைவன் தான் , அனைத்துமாகி நிற்பவன் அவனே என்று உணர வேண்டும்


அருள் 3 - அகஸ்திய பரம சித்தர் அங்கே அந்த விக்கிரகத்தின் மேல் அமர்ந்து அணைத்து பூசை மரியாதைகளையும் ஏற்று கொண்டு மகிழ்ந்து அனைவரையும் நோக்கி புன்னகைத்து ஆசீர்வதித்து , பக்தர்கள் வைக்கும் அணைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறார் என்பது நம்பிக்கை, இது வெறும் நம்பிக்கை தான் , இதில் உண்மை இருக்கலாம் , நம்பாதவர்களுக்கு இது ஒரு அர்த்தமில்லாத சடங்கு. இவ்வாறு மக்கள் இருக்க , எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. பூஜை முடிவில் விடை பெற்று செல்லும் போது நானும் என்னுடன் வந்த ஒரு பெண்மணியும் சென்று பரம சித்தரை கடைசியாக வணங்கி விடை பெறுவோம் என்று எண்ணி சென்று தொழுதோம் . 50 கிலோ பூக்கள் அவர் மேலே இருக்க , ஒரு பூ கூட அசையாமல் அப்படியே இருந்தது பல நிமிடங்கள் அவ்வாறு இருந்தது. பின்னர் என்னுடன் வந்த பெண்மணி கூறினார் , "அவர் கண்களை பாருங்கள் , உண்மையான கண்ணை போலவே காட்சி அளிக்கிறது , அவர் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறார் " என்று கூறினார் , எனக்கு இது போல பல் பல முறை அகத்தியர் விக்ரகத்தில் , எனது இல்லத்தில் , அகத்தியர் பீடத்தில் பார்த்த அனுபவம் பல முறை உண்டு . எனவே , "ஆம் பெண்ணே அவர் கண்கள் திறந்துள்ளன என்பது உண்மை ". நீ சென்று முன்னே அமர்ந்திருக்கும் அவரது மகனிடம் நீ பார்த்ததை கூறு , அவர் ஏதாவது பரம சித்தரை பற்றி கூறுவார் , நாம் கேட்டுக்கொள்ளலாம் " என்று கூறி னேன் . அந்த பெண் தயங்கினாள் . சரி நாமே கூறுவோம் என்று - " அண்ணா , அய்யா கண்கள் உண்மையான கண்கள் போலவே காட்சி அளிக்கின்றன " என்று கூறினேன் . அவரும் " ஆமாம் அய்யா, அவர் அங்கே தான் அமர்ந்து கொண்டு உள்ளார் , சந்தேகம் இல்லை " என்று கூறினார் . சொல்ல சொல்ல இது வரை விழாத 50 கிலோ பூ , சரியாக அவரது இடது கண் அருகே இருந்து இரு உதிரி சில பூக்கள் பறந்து கீழே விழுந்தன . அங்கே நின்று இருந்த அனைவரும் அதனை பார்த்து ஆச்சர்யப்பட்டோம். பரம சித்தர் " டேய் நீ பேசுவது எனக்கு கேட்டுக்குதா ன்னு சோதித்து பாக்கிறியா டா " என்பது போல ஒரு மனிதர் பதில் அளிப்பது போல இருந்தது. காக்கை உக்கார பனம் பழம் விழுந்த கதை என்று நாத்திகர்கள் கூறலாம். ஆனால் இதில் கவினித்து பார்க்க வேண்டிய விஷயம் , அவ்வளவு நேரம் சுமார் 5 நிமிடம் நாங்கள் பிரார்த்தனை செய்த பொது பூ விழவில்லை, கேள்வி கேட்டவுடன் தான் விழுந்தது, அதுவும் சரியாக கண் பகுதியில் இருந்து விழுந்தது . அது அவர் கண் அசைத்தால் விழுந்த பூ ஆகும் . இல்லை என்றால் ஏன் கண் பகுதியில் இருந்து விழா வேண்டும்

. நம்புவர்களுக்கு இறைவன் , நம்பாதவர்களுக்கு காலன் . அவரவர் விதி . என் அனுபவத்தையெல்லாம் மெனக்கெட்டு பதிவு செய்து வைத்தால் , எப்போதோ யாரோ படித்து அதனை உணர்ந்து இறை உணர்வு மேலிட்டால் அதுவே எனக்கு பாக்கியம் . எனது பதிவின் நோக்கம் இதுவே . நமக்கெல்லாம் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் உலகியல் வாழ்வில். இறைவனை சிந்திக்க நேரம் இல்லை . நம்மை சுற்றி இறை நிகழ்த்தும் செயல்களை கவனிக்க கூட நேரம் இல்லை . நம்மை இறை சக்தி சூழ்ந்து உள்ளது. அதனை , சதா இறை உணர்வுடன் இருந்து அனைவரும் உணரலாம் . நான் உணர்ந்த சிறு நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி . தவறு எதுவும் இருந்தால் மன்னிக்கவும் . குருவே துணை .நன்றி. ஓம் அகஸ்திய பரம சித்தாய நமஹ



Friday, February 26, 2021

இன்று 26/02/2021, இரண்டு பதிவுகள் இட்டாயிற்று இது , ஒரே நாளில் மூன்றாவது பதிவு , நடப்பைவைகளுக்கு நான் பொறுப்பாக முடியாது , எல்லாமே தற்செயல் , இறை செயல் , இறை விளையாட்டு ....

இன்று 26/02/2021, இரண்டு பதிவுகள் இட்டாயிற்று

இது , ஒரே நாளில் மூன்றாவது பதிவு , நடப்பைவைகளுக்கு நான் பொறுப்பாக முடியாது , எல்லாமே தற்செயல் , இறை செயல் , இறை விளையாட்டு ....

தற்செயலாக சிறிது நேரம் முன்பு அலைபேசியை பார்த்து கொண்டு இருக்கும் போது , எனது நண்பர் ஒருவர் நேரிடையாக பிரதமர் நரேந்திர மோடி ஜி யை சந்தித்து உள்ளார். அவர் மோடி ஜி யுடன் எடுத்த புகைப்படம் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டு இருந்தது. அந்த குழுவில் அந்த நண்பி இல்லை ,  ஆனால் நன் அந்த நண்பி யின் பெயரை குறிப்பிட்டு "Super இந்து" என்று விமரிசனம் செய்து 3:11pm  மணிக்கு போட்ட படத்துக்கு 3;35pm  மணிக்கு விமரிசனம் செய்து குறிப்பிட்டேன். அது எனது நண்பிக்கு தெரியாது ஆனால் அவர் பெயரை இங்கே நான் சங்கல்பம் செய்த உடனே அவருக்கு மனதில் என்னை பற்றிய எண்ணமும் அந்த படமும் தோன்றி,
சுமார் 7 நிமிடத்தில் 3:42 pm மணிக்கு அவர் அந்த படத்தை எனக்கு தனி செய்தியாக அனுப்புகிறார். காலையில் இருந்து அனுப்பி இருக்கலாம் , மதியம் அனுப்பி இருக்கலாம் , ஆனால் மிக சரியாக நான் அவரது பெயரை குறிப்பிட்டு சங்கல்பம் செய்த உடனே அது அவர் மனதில் ஒரு எண்ணமாக  எழுந்து எனக்கு தொடர்பு கொண்டு உள்ளார் . நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அவர் கடைசியாக என்னிடம் தொடர்பு கொண்டது 31/12/2020, 2 மாதம் எந்த செய்தி போக்குவரத்தும் இல்லை. மோடி  ஜி வந்தது சென்றது நேற்று. இன்று நாம் செய்த சங்கல்பத்தின் விளைவு உடனடியாக 7 நிமிடங்களில் நம்மை தொடரபு கொண்டு , வேறு எந்த செய்தியையும் அனுப்பாமல் மிக சரியாக நான் ஏற்கனவே பார்த்த அதே படத்தை அனுப்பி வாழ்த்துக்களை பெற்று கொண்டார். நான் வாட்ஸ் அப் குழுவில் பதிவு போடும் போதே எண்ணினேன் , " இந்த குழுவில் அவர் இல்லை , எனது பதிவை எப்படி பார்ப்பார் , செய்தி அவரை சென்றடைய வேண்டும் என்று எண்ணினேன் " மிகச்சரியாக அதன் பலன் செயல்பட்டு செயலுக்கு வந்தது. இதற்கு பெயர் தான் எண்ணங்கள் சித்தியாகும் நிலை , ஓம் அகத்தீசாய நமஹ .குருவே போற்றி . குருவே துணை .





26.02.2021 - தொடர் பதிவு

26.02.2021 : எனது முதல் பதிவுக்கு பிறகு எனது அலுவலகத்தில் உள்ள இன்னொரு நண்பரை அழைத்து , நான் புதிதாக பிளாக் ஆரம்பித்து உள்ளேன், நான் ஏற்கனவே கூறி உள்ளது போல எனது அதிசயமான அனுபவங்களை பதிவு செய்து வைக்க இது ஒரு சிறந்த இடமாக இருக்கும். அந்த பிளாக்கில் சென்று உங்களால் அதனை படிக்க முடிகிறதா என்று பாருங்கள், இப்போது தான் முதல் பதிவு இட்டுள்ளேன் என்றேன் . சரி என்று அவர் சென்று பார்த்து படிக்க முடிகிறது , கமெண்ட் போட முடியும் , ஷேர் செய்ய முடியும் , நன்றாக உள்ளது என்று கூறினார் . பின்னர் முதல் பதிவை படித்து பார்த்து கருத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறினார் . மேலும் ஒரு 30 செகண்ட் இருக்கும் , அவர் படிக்க ஆரம்பித்து இருப்பார் , அப்போது எண்ணில் எண்ணம் தோன்றி , அவருக்கு இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது , நீ அதற்க்கு விளக்கம் கொடு என்று வந்தது . உடனே அவருக்கு செய்தி தட்டச்சு செய்து "தஸ்தாவேஜு என்றால் சொத்து பத்திரம் " என்று பொருள் என்று கூறினேன். உடனே அவர் " ஆமாம் சார் இப்போது தான் உங்களிடம் கேட்கலாம் என்று எண்ணினேன் " என்றார் . எனக்கு எப்படி உடனே தெரிந்தது - ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் , அப்போ, இதுவும் ஒரு தற்செயல் தான் , முன்னர் போட்ட அனுபவமும் ஒரு தற்செயல் தான் , இதையும் பதிவு செய்வோம் என்று அவரிடம் கூறினேன் . அவர் "நிச்சயம் பதிவு செய்யுங்கள் அய்யா " என்று உரைத்தார் . மேலும் , அலுவலகத்தில் , எனது நண்பர் வந்து என்னை விசாரிக்கவும், "அவர் இன்று வரவில்லை வீட்டில் இருந்தபடியே வேலை செய்கிறார் " என்று அவரிடம் கூறினேன் என்றும் ஏற்கனவே போட்ட பதிவை மேலும் உறுதிப்படுத்தினார் . அதாவது என் அலுவலக நண்பர் என்னை தொடர்பு செய்ய முயற்சி செய்துள்ளார் , அது யாரும் சொல்லாமலே எனக்கு தெரிந்து, அவருக்கு என்ன வேண்டும் என்று தெளிவாக தெரிந்து நான் ஏற்பாடு செய்துள்ளேன் . எனக்கு அவர் போன் நம்பர் கிடைக்கவில்லை என்ற போது அவரே போன் செய்து பேசி உள்ளார் . கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் , அவர் போன் செய்தது நான் டாகுமெண்ட் தேடும் பொது போட்டோ பிடிக்கும் போதோ , அதனை edit செய்யும் போதோ இல்லாமல் , மிகச்சரியாக நான் அவரை நினைக்கும் பொது அழைத்துள்ளார்.

நன்றி வணக்கம் . இந்த பதிவு இத்துடன் முற்றிற்று ......




26.02.2021, ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள் - நினைத்தால் அது சித்தி பெரும் என்பது , அகத்தியர் எமக்குரைத்த வாக்கு


ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள் - நினைத்தால் அது சித்தி பெரும் என்பது , அகத்தியர் எமக்குரைத்த வாக்கு

இன்று 26/02/2021, வெள்ளிக்கிழமை , மதியம் 12.45 மணி அளவில் திடீரென்று அலுவலகத்தில்  புரியும் ஒருவருக்கு சில எனது வீட்டில் உள்ள தஸ்தாவேஜுகளை படம் பிடித்து அனுப்பித்து கொடுக்க வேண்டும் என்று  நினைத்து கொண்டு இருக்கிறேன் ஆனால் இன்று 24 மணி நீரால் ஆகியும் அதற்க்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. மறந்தே போனேன் . எனக்குள்ளே எண்ணம் எழுகிறது - சரியாக 12.45 மணிக்கு , " அய்யா எப்போ வந்து அந்த தஸ்தாவேஜுகளை வந்து கொடுப்பீர்கள், இன்று வருவீர்கள் என்று பார்த்தேன் ஆனால் இன்று நீங்கள் அலுவலகம் வரவில்லையே , அந்த தஸ்தாவேஜுகள் எனக்கு தேவைப்படுகின்றன ". இது தான் எனக்குள்ளே தோன்றிய வார்த்தைகள் . உடனடியாக படுக்கயறை சென்றேன், மனைவி உறங்கி கொண்டு இருந்தாள் , அவளை எழுப்பி பீரோ சாவி எங்கே வைத்துள்ளாய் என்று கேட்டு லைட் போட்டு பீரோ சாவி எடுத்து திறந்து தஸ்தாவேஜுகளை எடுத்து பார்க்கிறேன். பின்னர் எனக்குள்ளே கேட்கிறேன் " தஸ்தாவேஜுகளை கருப்பு வெள்ளை ஜெராக்ஸ் எடுத்து கொள்ளலாமா அல்லது அலைபேசியில் படம் எடுத்து அனுப்பலாமா" - மனதில் வந்த பதில் - அலைபேசியில் அனுப்பினால் போதும் நான் அலுவலகத்தில் பிரிண்ட் போட்டு எடுத்து கொள்கிறேன்". பின்னர் கருப்பு வெள்ளை நகலை அலைபேசியில் படம் பிடித்தேன். அதில் சில பக்கங்கள் இல்லை. மனதில் மீதும் கேள்வி "கலரில் உள்ள அசல் பாத்திரத்தை அப்படியே எடுக்கட்டுமா . சரி எடு , நமக்கு தெரிந்தவரிடம் தானே கொடுக்க போகிறாய் ". கலரில் 8 பக்கங்களையும் படம் இடித்து அலுவலகத்தில் வேலை செய்யும் நபரின் பெயரை தேடுகிறேன், அவர் தொலைபேசி என் வெரி ஏதோ பெயரில் சேமித்து உள்ளதால் , எந்த பெயர் என்று தெரியவில்லை, மாறி உள்ளது. அப்போது தான் அதிசயம் நடந்தது, அந்த நபர் அழைத்தார் , அழைத்தவுடன் அந்த பெயர் எப்படி சேமிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்தது. தொலைபேசியை எடுத்தேன், அபவர் என்னை கேட்கும் முன்பே , வணக்கம் அண்ணா , உங்களுக்கு தான் அந்த தஸ்தாவேஜுகளையோ படம் பிடித்து அனுப்பி கொண்டு இருக்கிறேன் , இப்போது உடனே அனுப்பிகிறேன் என்று கூறினேன் - அவரும் அதற்கு  தான் அழைத்துள்ளார், சரி அண்ணா என்றார் . கருப்பு வெள்ளை வேண்டாம் , சரியாக ஸ்கேன் ஆகவில்லை என்கிறார்கள்  என்றார் , நான் உடனே , ஆமாம் அண்ணா கலரில் தான் எடுத்து அனுப்புகிறேன் என்று கூறுகிறேன் . போன் இணைப்பை துண்டித்து விட்டு உடனே பைல்களை அனுப்பி விட்டேன்.

அவர் அங்கே அந்த பத்திரங்கள் வேண்டு என்று நினைத்த உடனே இங்கே எனக்கு தெரிந்தது. வேறு வேலை செய்து கொண்டு இருந்த நான் , எழுந்து போய் , அவருக்கு என்ன வேண்டுமோ , எப்படி வேண்டுமோ அதன்படி தயார் செய்தவுடன் , அவர் பெயரை தொலைபேசியில் தேடியவுடன் அது அவருக்கு தெரிந்தது என்னை அழைத்து பேசினார். அங்கே 12.45 மணிக்கு நினைத்தது இங்கே தெரிந்தது , மீண்டும் இங்கே 1 மணிக்கு நினைத்தது அங்கே அவருக்கு தெரிந்தது , அவருக்கு கருப்பு வெள்ளை வேண்டாம் கலர் தான் வேண்டும் என்பது உள்பட அனைத்துமே தெளிவாக பேசிக்கொள்ளும் முன்பே தெரிந்தது.


அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...