Wednesday, March 31, 2021

இன்று மீண்டும் தற்செயல் 31/03/2021

இன்று மீண்டும் தற்செயல் 31/03/2021

ஜெய்பூரில் இருக்கும் சக அதிகாரி ஒருவர் நாடு முழுதும் இருக்கும் என் இலாகா வை சேர்ந்த பிராந்திய அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பி, சில தகவல்கள் கேட்கிறார் . செய்து வந்து 8 நிமிடம் ஆகிறது , 9 ஆவது நிமிடத்தில் நான் அவரை தொடர்பு கொண்டு அதில் ஒரு சந்தேகத்தை கேட்க நினைத்து அவரது பெயரை கணிணினியில் தேடி செய்தி அனுப்ப முனைகிறேன் , அடுத்த நொடியே அவர் என்னை தொலை பேசியில் அழைக்கிறார் , அவர் அழைத்த காரணம் , நான் கேட்ட அதே சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டி தான் அழைத்துள்ளார் .

அது எப்படி இந்த மாதிரி தற்செயல் நடக்கும் . எனக்கு இது வாடிக்கையாகி விட்டது . யாரை நினைக்கிறோமோ அவர் தொடர்பு கொள்வார் , அல்லது யாரவது நம்மை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில் நமக்கு தெரிந்து விடுகிறது . இதில் ஏதோ ஒன்று தான் இந்த தற்செயல்கள் நடப்பதற்கு காரணம்.

அகத்தியத்துள் எனது அனுபவங்கள் வரிசையில் - 1 வருடம் முன்பு ஜனவரி to மார்ச்சு 2020 வாக்கில் நடை பெற்ற ஒரு நிகழ்வு பதிவு

அகத்தியத்துள் எனது அனுபவங்கள் வரிசையில் - 1 வருடம் முன்பு ஜனவரி to மார்ச்சு 2020 வாக்கில் நடை பெற்ற ஒரு நிகழ்வு பதிவு

ஒரே முதுகு வலி , நம்மக்கு தான் முதுகு  வலி செரி ஆயிருச்சே , சும்மா எதுக்கு இப்போ வலிக்குது

சரி, குருஜி கிட்ட போய் , முது வலி மருந்து குடுங்க ன்னு கேப்போம்

அய்யா குருஜி , போன தடவ நீங்க முதுகு வலி நிரந்தரமா காணாம போகும் னு சொல்லி மருந்து குடுத்தீங்க , ஆனா இப்போ திருப்பியும் முதுகு வலி வந்திருச்சு , நான் என்ன பாவம் பண்ணுனேனோ தெரியல , என்ன விட்டு போக மாட்டேன் ங்குது

அப்பிடியா அய்யா, ஏன் வந்துச்சு னு தெரியலையே , சரி பாத்துக்கலாம் , இந்த அதே மருந்து திருப்பியும் தர்ர்ரேன் சாப்புடு

அப்பறம் , நானும் சின்சியரா சுமார் ஒரு 17 நாள் அந்த மருந்தை ஒரு யோகம் செய்யறது போல நெனைச்சு சாப்பிட்டு முடிச்சேன் . ஆனா முதுகுவலி கொஞ்சம் கூட கொறயல

அப்போ தான் , ஆபீசுல வேலை செஞ்ச ஸ்ரீதர் சொன்னாரு , தம்பி , கிட்னி ல ஸ்டோன் இருந்தா  கூட அப்பிடி தான் வலிக்கும் , எனக்கு ஸ்டோன் வந்தப்ப அப்பிடி தான் இருந்துச்சு , உனக்கு எங்க வலிக்குது ..  ஸ்ரீதர் .....எனக்கு கீழ் பகுதியிலே இடது பக்கம் மட்டும் தான் வலிக்குது . அதான் சந்தானம் நான் சொன்னேன் , அது கரெக்ட்டா கிட்னி க்கு பின்புறம் இருக்கு .அதனால தான் அங்க வலிக்குது

திருப்பியும் குருஜி கிட்ட போனேன் , அய்யா மன்னிச்சுக்கோங்க , உங்க கிட்ட நாடி புடிச்சு பாத்து கேட்ருக்கணம் , நானே அது முது தண்டு வட பிரச்சனை ன்னு முடிவு செஞ்சு , நானே
முதுகு வலி மருந்து குடுங்க ன்னு கேட்டு வாங்கீட்டு போயிட்டேன் .

குருஜி - ஏன் அய்யா , என்ன ஆச்சு . முதுகு வலி னு தான சொன்னீங்க .

நான் - ஆமா அய்யா , மருந்து பூராவும் சாப்பிட்டு முடிச்சு கூட முதுகு வலி கொஞ்சம் கூட கொறயவே இல்லை . கூட வேலை செய்யறவங்க , கிட்னி ஸ்டோன் ஆக இருக்கும் ன்னு சொல்றாங்க

குருஜி - ஓ , அப்பிடியா , ஒரு நிமிஷம் இரு , கையை காட்டு நான் புடிச்சு பாக்குறேன் ..... நாடி பிடித்து பார்க்கிறார்' ....... ஆமா அய்யா , கிட்டினி ஸ்டோன் இருக்குது , சுமார் xxx mm அளவில் இருக்கும் , நம்மகிட்ட சூப்பர் மருந்து இருக்கு கவலையே படாதீங்க , இங்கிலீஷ் டாக்டர் கிட்ட போக வேண்டாம் . ஒரு நிமிஷம் இருங்க .....என்று கூறியவர் , அருகே சென்று ஆஸ்ரம வளாகத்தின் உள்ளே உள்ள சில இலைகளை பறித்து வந்தார் .... எதனை பேருக்கு இந்த பசும் தழைகளை கொடுத்து இருப்போம் , 100 சதவீதம் சக்ஸஸ் அய்யா . ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க , நான் இதுல கொஞ்சம் மருந்து எல்லாம் சேக்க வேண்டி இருக்கு , சேத்து அப்புறமா பொட்டலம் கட்டி கொடுக்கறேன் .இத்தனை நாளைக்கு நான் சொல்ற மாறி சாப்பிடுங்க ஸ்டோன் எல்லாம் கரைஞ்சு நீங்க மூத்திரம் போகும் போது வெளீயே போயிரும் . கவலையே படாதீங்க .... ன்னு சொன்னவர் ..... அரை மணி நேரம் கழித்து , பொட்டலம் கொண்டு வந்து கொடுத்து , இந்த மருந்துகளை , இந்த இலையில வெச்சு சாப்பிடுங்க , சரி ஆயிரும் .......

சுமார் 10 நாள் கழித்து முது வலியும் இல்லை , ஒன்னும் இல்லை , கிட்னி ஸ்டோன் இருக்க னு எக்ஸ்  ரே ஸ்கேன் எடுத்து பார்கவில்லை , அப்பறம் கிட்னி ஸ்டோன் சேரி போயிருச்சா னு எக்ஸ் ரே ஸ்கேன் எடுத்து பாக்கவும் இல்லை . கொஞ்சம் பசுந்தழைகளை மென்னு தின்னதோட செரி , கர்மா வ அனுபவிடா ன்னு , ஒரு 17 நாள் முதுகு வலி மருந்தை சாப்பிட விட்டு வேடிக்கை பாத்தார் , செரி , அனுபவிச்ச வலி போதும் , வா , இப்போ சேரி பண்ணி விடறேன் ன்னு சொல்லி சேரி செஞ்சார்

இந்த அனுபவத்தை ஒரு மருத்துவ அனுபவமாக பதிவு இடுகிறேன்


இன்று 31.03.2021 - ஒரு அனுபவம் தற்செயல்கள் தற்செயல்கள் தற்செயல்கள் , இறை செயல்கள் எல்லாமே ஒரு co - incidence

31மார்ச்சு 2021 - இன்று நான் ஆபீஸ் வேலையில் ஒரு கடன் வழங்கலை ஒப்புதல் அளித்தேன் . மற்றொவர் சேர்ந்து அவரும் ஒப்புதல் அளித்தால் தான் கடன் ஒப்புதல் நிறைவு பெரும் , ஒருவர் மட்டுமே அளித்தால் நிறைவு பெறாமல் நிற்கும் . நமது அலுவலகத்தின் கடன் வழங்கும் மென்பொருளில் , நான் ஒப்புதல் அளித்து உடனே மற்றவருக்கு ஒரு செய்தி செல்லும் - அதாவது , ஒருவர் ஒப்புதல் அளித்து விட்டார் , உங்கள் ஒப்புதல் நிலுவையில் உள்ளது . உங்கள்  முதுவை பதிவு செய்யவும் என்று ஒரு தானியங்கி செய்தி செல்லும் . மதியம் 1.30 க்கு அளித்த ஒப்புதலுக்கு தானியங்கி தகவல் மற்றவருக்கு செல்லவில்லை . நான் அதை கவனித்தேன் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன் . தானியங்கி வேலை செய்யாததால் நான் அந்த செய்தியை நானாக வடிவமைத்து மற்றொருவருக்கு அனுப்பி அவரது ஒப்புதலை கேட்டு, பின்னரே அந்த கடன் ஒப்புதலை நிறைவு செய்ய வேண்டும் . ஆனால் நான் அவ்வாறு செய்யாமல் விட்டு விட்டேன் . பின்னர் மொபைலில் பல செய்திகளை படித்து கொண்டு பல படங்கள் பார்த்து கொண்டு , சுமார் அரை மணி நேரம் கடத்தினேன் . சுமார் நாற்பது நிமிடம் கழித்து , உடனே எந்திரத்தனமாக , மொபைலை மூடி வைத்து விட்டு , உடனடியாக சென்று, அந்த தானியங்கி தகவல் சென்றதா இல்லையா என்று பார்த்து , சரி நாம் செய்தியை வடிவமைத்து அனுப்பலாம் என்று பார்த்த அடுத்த நொடி , தானியங்கி வேலை செய்து செய்து அந்த அடித்த நபருக்கு சென்றது.

இதுவும் ஒரு தற்செயல் , ஆங்கிலத்தில் இதனை co - incidence என்பார்கள் .  வாழ்க்கையில் பல தற்செயல்கள் உண்டு.

இங்கே பார்க்க வேண்டியது
1. தானியங்கி வேலை செய்யாததால் , செய்தியை நானே வடிவமைக்கும் பொறுப்பு - ஏன் தள்ளி போடப்பட்டது
2. தள்ளி போட்டது - நான் மூளையில் யோசித்தவுடன் எப்படி தானாக அதே நேரத்தில் அந்த செய்தி தானியங்கி சரி ஆனது
3. ஏன் நான் மிகச்சரியாக 40 நிமிடம் கழித்து தானியங்கி செய்தி செல்லும் அதே  நேரத்தில் நானும் தானியங்கி வேலை செய்ததா ,இல்லையென்றால் நாம் செய்தியை அனுப்புவோம் , என்று எண்ணியது  , அதே நேரம்  - co - incidence
4. கடந்த 40 நிமிடங்களில் - எப்போதோ அந்த வேலையே செய்திருக்கலாம் , அப்போதெல்லாம் செய்ய நினைக்காமல் , சரியாக மதியம் 2:18 மணிக்கு அந்த வேலையை செய்ய நினைத்தது எவ்வாறு.

தற்செயல்களில் பல உண்மைகள் உள்ளது . பல வருடம் முன்னாள் அதே போல , எனது யமஹா பைக் திருடு பொய் ஒரு மாதம் கழித்து , புதிய பைக் வாங்கலாம் என்று முடிவு செய்த அடுத்த நாளே , பழைய பைக் கிடைத்தது . அதாவது , நீ புதிதாக வாங்க வேண்டாம் , இரு அவசரப்படாதே , பழைய பைக் கிடைக்கும் என்று யாரோ செய்து கொடுத்தது போல , இன்று நடந்த தற்செயலும் , நீ அவசரப்பட்டு செய்தியை நீயே வடிவமைத்து அனுப்ப வேண்டாம் , அதுவே செல்லும் , நீ உன் மற்ற வேலைகளை கவனி .. என்று கூறுவது போல அமைந்தது இந்த தற்செயல்
அதே போல , அன்று ஒரு நாள் , பைக் ரிப்பர் ஆன போது , எந்த மெக்கானிக்கும் வருகிறேன் என்று சொல்லி கூட வரவில்லை . எவ்வளவு முயற்சி செய்தும் , பலரிடம் பேசியும் யாரும் வரவில்லை . மாலை ஆனது. அப்போது மனதின் குரல் கேட்டு , இப்போது சென்று பைக் ஐ ஸ்டார்ட் செய்து பார் என்ற குரலை நம்பி பைக்  ஐ ஸ்டார்ட் செய்து பார்த்த போது 2 உதையில் ஸ்டார்ட் ஆனது . நேற்று 300 முறை உதைத்து ஸ்டார்ட் ஆகாத பைக் . மெக்கானிக்கை வர விடாமல் தடுத்தது யார் , பைக் ஐ தானாக இயங்க செய்தது யார் .

அதே பாணியில்  தான் இன்றும் தானியங்கி செய்தி வேலை செய்யவில்லை . நானாக செய்தியை வடிவமைக்க விடாமல் தடுத்தது யார் . பின்னர் தானியங்கி யை தானாக வேலை செய்ய வைத்து யார் , மிக சரியாக , நான் செய்தியை வடிவமைப்பேன் என்று முடிவு செய்த அடுத்த வினாடியே தானியங்கி வேலை செய்தது . இது சின்ன விஷயம் தான் , ஆனால் இதில் இழையோடுவது இறை அனுபவம் என்று அனுபவித்தவனுக்கு தான் புரியும். எப்போதுமே இறை செயல் மனிதனை வியப்பில் ஆழ்த்தும் .

தற்செயல்கள் தற்செயல்கள் தற்செயல்கள் , இறை செயல்கள் எல்லாமே ஒரு co - incidence












 .


Tuesday, March 30, 2021

ரோசாரியோ அய்யாவின் பதிவு, நமது பீடத்தை பற்றி.

 ரோசாரியோ அய்யாவின் பதிவு, நமது பீடத்தை பற்றி.


குறிப்பு, அய்யா ஒரு வாழும் யோகி 🙏🙏


குருவே துணை

🙏🙏🙏🙏🙏🙏


ௐௐௐௐௐௐௐௐௐௐௐ


பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி வாசிப்பு பீடம் ஒரு அற்புதமான ஷேத்திரம். மெயின் வாசல் மேற்கு நோக்கி அமர, உள் சென்று, வலது பக்கம் இருக்கும் தெற்கு வாசல் குடிலில் கிழக்கு நோக்கியவாறு அமர்ந்து இருக்கும் அகத்தியர் ஜீவ நாடி சக்தியை தரிசனம் செய்யலாம். அபூர்வமான விஷயம். அபூர்வமான, தொன்மையானதொரு சக்தி. அகத்தியரை அங்கு பிரசன்னத்திற்கு கொண்டு வருவது அந்த சக்தியே. அதன் மனம் பல யுகங்கள் பக்குவபட்ட ஒரு திராட்சை ரசத்தின் தன்மை கொண்டது. மெய் மறக்க வைக்கும் தெகட்டா சுவை. ஞானம் தரும் அமைதியை, நிர் சலனத்தை அங்கு நிறைவாக உணரலாம். அதுவே இடது பக்கம் திரும்பி, இடது பக்கம் இருக்கும் குடிலுக்கு சென்றால் ஏதோ நீர் நிலைக்கு மேல் ஒரு திடலில் அமர்ந்து இருக்கும் உணர்வு. எப்போதும் ஒரு குளிர்ச்சி. இதில் நேராக சூரியனின் கதிர் ஒளி காலை நமது முகத்தினை வருடுகின்றது. எமது ஆன்மாவிற்கு மிகவும் பிடித்தமான ஒரு அமைப்பு. குளிர்ந்த இடத்தில் சூரியன் நம்மை தட்டி எழுப்புவது. அங்கும் சில தெய்வங்கள். சில போக்கும் வரத்துமாக. அந்த குடிலின் இடது பக்கம் வெளி புறம், வடக்கு நோக்கி, எல்லை சாமியாக ஒரு பரம யோகி, யோகத்தில் வீட்டு இருக்கின்றார். கருப்புராயர் என்று அழைக்கின்றனர். அவர், அவர் தம் குருவிற்கு நந்தி என்பது தெளிவு. அவரின் குரு அவர் மூலம் அவர் வாழும் காலங்களில் பல அற்புதங்கள் செய்து அவரை நல்ல நிலையில் இருத்தி இருக்கின்றார். பல ஆண்டுகளுக்கு பின், இப்பொழுது அவர் தன்னை அவ்வப்போது அங்கு வரும் பக்தர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றார். ஆசி வழங்குகின்றார். வாக்கு உரைக்கின்றார். இந்த இரு குடிலின் முன் வாசலுக்கு நேர் எதிராக ஒரு வன்னி மரம். அம்மரத்தின் மூலத்தில், மூல வித்தாக சித்தர் ஒருவர் அடக்கம். குப்பை சித்தர் என்று அழைக்கின்றனர். நாக பூஷனங்கள், பிள்ளையார், கொண்டு அவரை வழிபடுகின்றனர். அங்கிருந்து மெயின் ரோடு திரும்பும் இடத்தில் பின்னாக்கீசர் மரப்பொந்தில் தவம் செய்த இடம் ஒன்று வடக்கு நோக்கி அமைந்து இருக்கின்றது. அதன் அருகே புதிதாய் நிறுவப்படும் கோவில் கட்டுமானப்பணியில்… இவை யெல்லாம் அருகே… காலாற நடந்து செல்லும் தூரத்தில்… அதுவே கால் வலிக்க நடந்து சென்றால் பஞ்ச பாண்டவர் அமர்ந்த ஒரு வழிபாட்டு தளம். ஒரு குமரன் கோவில் என இடமே தெய்வ கடாசம் நிறைந்த பூமியாக காட்சி அளிக்கின்றது. அன்று பிண்ணாக்கீசர் காலம் தொட்டு பல சித்தர்கள், யோகிகள், இங்கு விஜயம் செய்து யோகம் ஞான பயின்று இருக்கின்றனர் என்பது திண்ணம். அபூர்வமான் ஒரு அமைப்பு. அற்புதமான ஒரு ஷேத்திரம். நேரம் கிடைத்தால், இல்லை அவ்வழி சென்றால், போய் செத்த நேரம் அதன் இனிமையை அனுபவித்து விட்டு வாருங்கள். அன்னூரில் இருந்து பத்து நிமிடம் பேரூந்தில். அங்கிருந்து பீடத்திற்கு 40/- share ஆட்டோவில். நாடி வாசிப்புக்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை.

முற்றும். குருவே துணை.


ௐௐௐௐௐௐௐௐௐௐௐ






எனது பிதற்றல்கள் - 30/03/2021


இந்த உலகத்துல அகத்தியர் வழிபாடு ஜாஸ்தி ஆயிடிச்சு . ஒரு பெரிய குளம் , அது ரொம்ப பெருசு . நெறைய பெரு அதுல குளிக்கறாங்க . அவுங்க பாதி ஒடம்பு வெளியே தெரியுது , இடுப்புக்கு கீழே தண்ணீர்க்குள்ளே மறைஞ்சு இருக்கு . டேய் , நீ அங்க நிக்கறயா , நான் நிக்கறேன் , இங்க எவ்வளவு ஆழம் தெரியுமா , , டேய் இங்க வாடா ... இல்ல நா , நான் இங்கேயே குளிச்சுக்கறேன் , ஒடனே கூட இருப்பவர் , டேய் நான் எத்தனை வருஷமா இந்த கொளத்துல இருக்கேன் , நான் தான ஒன்ன கூட்டிகிட்டு வந்தேன் , இங்கேயே நின்னு குளி , எதுக்கு தேவ இல்லாம அங்க இங்க போகாதே , அப்பறம் ஏதாவது பிரச்னை நா நான் தான் உனக்கு உதவி செய்யணும் . இப்பிடி எல்லாம் பேசிகிட்டு கொளத்துக்குள்ள இருக்காங்க . நாஞ்சொல்றேன் , ஏய்யா , எல்லாரும் இப்போ கொஞ்ச நேரத்துல முங்க போறீங்க . தல வெளியே தெரியற வரைக்கும் தான் நீ, நான் , இவன் , அவன் அப்பிடீங்கற அடையாளமெல்லாம் , தண்ணிக்குள்ள எல்லாருமா முங்கியாச்சுனா , வெளியே ஒன்னும் தெரியாது , அப்பறம் எங்க நீ நான் அவன் இவன் எல்லாம் . வெளியில இருந்து ஒருத்தன் பாத்தான்னா வெறும் தண்ணிய மட்டும் தான் பாப்பான் . ஆனா அதுக்குள்ள முங்கி ஒக்காந்து இருக்கற ஒரு கோடி பேரு அவன் கண்ணுக்கு தெரியமாட்டாங்க . சும்மா ஏண்டா , இங்க வா இங்கே போ ன்னு அடிச்சிக்காதீங்கடா , எங்கேயாவது இருங்க . எல்லாரும் ஒரே கொளத்துக்குள்ள தான் இருக்கறோம் னு சொல்லுங்க , சின்ன பிள்ள மாதிரி , நான் இருக்கற இடத்துல தண்ணி சுத்தமா இருக்கு , நீ இருக்கற எடத்துல தண்ணி அழுக்கா இருக்கு, மீன் நெறய இருக்கு , மீன் கம்மியா இருக்கு ன்னு வேறுபாடு பாக்காதீங்க . இதுல வேற சில பேரு கொளத்து மேல பெரிய பிளாட்பாரம் ஒன்னு கட்டி எல்லாரும் இது மேல வந்து நின்னுக்கோங்க , உங்க மூஞ்சி, உங்க உடல் எல்லாமே வெளியே தெரியும் , இங்க வந்து நில்லுங்க ன்னு கூப்படறாங்க . ஏண்டா டேய் , அங்க நின்னுட்டா எப்பிடிடா முன்னாலே போவாங்க .கொளத்துல இறங்கணும் , இறங்கி தண்ணிக்குள்ள ஆழமா நடக்கணும் . ஒரு அடி முன்னால போனா அரை ஆடி ஒடம்பு ஆழத்துல போகும் . முன்னேற்றம் அப்பிடீங்கறது , இங்க , தண்ணிக்குள்ள இறங்கி அப்படியே ஆழத்துக்கு போயீ நம்ம அடையாளமே இல்லாம முழுமையா தண்ணிக்குள்ள போகிறது தான் அந்த முன்னேறுதல். அப்பறம் நமக்கு ஒரு வேலை வரும்போது தண்ணிக்குள்ள இருந்து வெளியே வந்து வேலைய செஞ்சிட்டு உள்ள போயீ மறுபடியும் உக்காந்துக்க போறோம் , வெளியே வரும்போது நமக்கு பேரு ஊரு அடையாளம் , உள்ள போனா ஒரு அடையாளமும் இல்ல . அப்பறம் இந்த கொளத்துக்கும் கடலுக்கும் அடி பூமி வழியா ஒரு கனெக்ஷன் இருக்கு . அதனால தான் இந்த கொளத்துல தண்ணி எப்பவுமே கொறயவே கொறையாது .  அப்போ தான் நமக்கு ஓரைக்குது , அடேய் , அந்த கடலும் இந்த குளமும் ஒன்னு தாண்டா , அதே தண்ணி தாண்டா இதுவும் , கடலுக்கு வேணும்னாலும் இது வழியா எளிமையா நாம போக முடியும். இப்படியாக வேறுபாடுகள் ஒரு பக்கம் இருக்குது . . அதுல இன்னும் வேறுபாடுகளா பாக்கும் போது , இன்னொருத்தன் , டேய் உங்க கொளத்துல இல்லாத வசதிக , இல்லாத மீனுங்க , இங்க இருக்குடா . எங்க குளம் வேற குளம் , சூப்பர் குளம் , இங்க வந்துடுங்கடா ன்னு கூவறான் ,... ஏண்டா எல்லா தண்ணியும் எங்கே இருந்துடா வருது . கடல்ல இருந்து ஆவியாகி , மழையா பெய்ஞ்சு அதே தண்ணி தாண்டா உங்க கொளத்துக்கும் எங்க கொளத்துக்கும் அதே மழை தாண்டா . அடியிலே இருக்கும் பூமிக்கு தகுந்த மாதிரி , அந்த தண்ணீரோட தண்மை மாறுதே ஒழிய , தண்ணீர் ஒன்று தாண்டா , வேறுபாடு பாக்காதீங்க , இங்க இருக்கற எல்லா கொளத்துக்கும் ரகசிய இணைப்பு இருக்குது . ஒவ்வொரு கொளத்துக்கும் கடலுக்கும் இணைப்பு இருக்குது . கடல் வத்தி போச்சுன்னா , எல்லா குளமும் தான் வறண்டு போயிடும் . சும்மா எதுக்குடா வேறுபாடு . நான் ஒத்துக்கறேன் வேற வேற குளம் தான் , ஆனா வேறுபாடு பாக்க வேண்டியதில்லை . கடைசியிலே ஆரம்பமும் முடிவும் ஒன்னு தான் எல்லார்த்துக்கும்.


 


குறிப்பு :

குளம் - அகத்தியர் .

அதில் உள்ள மனிதர்கள் - அவர் வழி நடப்பவர்கள்

கடல் - ஈசன்

அருகில் உள்ள குளங்கள் - சைவம் வைணவம் சிவாசாரியார் நாயன்மார் ஆழ்வார் போன்ற பிரிவுகள்


Monday, March 29, 2021

அனுபவ பதிவு: 27.03.2021ராயர் - கருப்பராயர் - வெள்ளை கருப்பர் ஆட்டம் , அதுவே ஒரு தேரோட்டம் -

அந்த காலத்துல எல்லாம் சாமி கிட்ட நேர்ல பேசி பேசி தான் சாமி கும்பிடறாங்க . ஆனா இப்போ அப்பிடி இல்ல . சாமி யாரு கிட்டயும் பேசறது இல்ல . அந்த காலத்துல நல்லா யோகம் செஞ்சு , நல்ல உடல் வலிமையோட , நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கறவங்க கடவுளை தன்னோட உடல்ல எழுப்பறதுக்கு தகுதி உண்டாக்கிட்டு கடவுள் முன்னால போய் நின்னாலே அவர் உடல்ல கடவுள் அருளாக இறங்கி மக்களோட பேசி என்ன , ஏது ன்னு விவரங்கள் எல்லாம் சொல்லி , மக்களோட கொறைய தீத்து வெக்கற வழி முறை சொல்வாங்க . இந்த காலத்துல சில இறந்த ஆத்மாக்கள் , சாமி ஆடி உடல்ல இறங்கி , எனக்கு அத கொண்டா , எனக்கு இதை கொண்டா , அப்போ தான் நான் போவேன் ன்னு சொல்லி திரியராங்க , கடவுளோட பேசற பழக்க வழக்கம் எல்லாம் காணாம போச்சு . ஆனா இன்னமும் சில பேர் உண்மையா தனது தேகத்தை கடுவினுள் கிட்ட கொடுத்துட்டு , அவங்கள தன மூலமா மக்கள்\கிட்ட பேச விட்டு , எல்லாருக்கும் நல்லது செய்யணும் னு நெனைக்கறாங்க . நம்ம ஒடம்பு நல்ல விஷயத்துக்காக பயன் படட்டுமே . எங்கேயோ போறோம் , கண்டதை திங்கறோம் , கண்டபடி பேசறோம் , கண்டதை குடிக்கறோம் , மாலா ஜலம் கழிக்கறோம் . அந்த மல ஜலம் கூட சரியா போக முடியாம கஷ்ட படர அளவுக்கு நம்ம ஒடம்ப உலக சுகம் அப்பிடீங்கற பேருல கஷ்டப்படுத்தறோம் . எல்லா சுகங்களையும் அனுபவிக்க கூடிய பணம் வெச்சிருக்கறவன் , உப்பு காரம் , மசாலா எல்லாம் கம்மியா போட்டு , சக்கரை கம்மியா போட்டு , காலையிலே எழுந்து ஓடி உடல் உழைப்பு செஞ்சு வாழறான் . ஆனா நாமளோ இருக்கறது கொஞ்சூண்டு , அதையும் எப்படியாவது சுகம் அனுபவிக்கலாம் னு கார் , நகை உடை, தின்பண்டம் அப்பிடீன்னு ஒடம்புக்கு சேராத விஷயங்களை புகுத்தரோம் , விஷயம் தெரிஞ்சவன் , பணம் உள்ளவன் அமைதியா இருக்கான் . ஒன்னும் இல்லாதவன் தான் ஆடறான். இப்பிடி இருக்கற வாழ்க்கையிலே , நம்ம தேகத்துனால ஆண்டவன் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோஜனம் செய்ய முடியுமான அது போதும் ன்னு ஒரு சில பேரு தான் இருக்கறாங்க . அவங்க தேகத்தை ஆண்டவன் ஆள்பவன் அவனே தேர்ந்து எடுத்துக்கறான். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு வழிமுறை . ஜீவ நாடி , அருள் வாக்கு , ஜீவனை வெளியே இருத்தி சொல்லும் அருள் வாக்கு ன்னு பல வகைகள் . எல்லாமே மக்களோட நண்மைக்காக . இப்போ இருக்கற கோவில்கள்ல கடவுளை உள்ள கொண்டு வந்து அவரை பேச வைக்க ஆளு இல்ல . நாம போய் கடவுள்கிட்ட பேசிட்டு வருவோம் , அவர் கேட்டு நமக்கு நல்லது செய்வார் னு ஒரு நம்பிக்கை . ஆனா , பழங்கால முறைப்படி மனிதர்கள் , சிறப்பு வாய்ந்தவர்கள் . அவர்கள் கடவுளை தன்  உள்ளே எழுப்பி பேச வைக்கறவங்க . இன்னைக்கும் அந்த முறைப்படி அம்பாள் வாக்கு , சாய் பாபா வாக்கு , அகத்தியர் வாக்கு , போன்றவை தன உடம்புல அந்த அந்த கடவுளை ஏத்தி , அவங்கள பேச வைக்கற ஆளுங்க இன்னைக்கும் இருக்காங்க . அவங்க எல்லாம் சுத்தமானவங்க , மனசுல அழுக்கு இல்லாதவங்க , நல்ல யோக நிலையிலே இருப்பவங்க . அதே போல இந்த காலத்திலேயும் , மகாபாரத புகழ் தர்மராஜா யுதிஷ்டிரர் கூட இதே போல ஒருவரை தேர்ந்தெடுத்து மக்களோட குறைகளை ஒரு ராஜா போல கேட்டு , அதுக்கு பரிகாரம் ஆசீர்வாதம் கூறி நடத்தி கொடுக்கறாரு . தர்ம வழியிலே நடத்துறாரு . அதே போல கருப்புராயர் சாமிய நாம தொட்டோம் . பல வருஷமா தியானத்துல ஆழ்ந்து போன யோகி ஒருத்தர் , கருப்புராயராக மாறி நித்திய வாழ்வு வாழ்ந்து கொண்டு , ஊர் உலகத்தை காப்பாத்தி இருக்கற சர்வ வல்லமையை கொண்டவர் , சிவ மைந்தர் , வெள்ளை கருப்பு ரூபத்தில் நமது பீடத்தில் எல்லை ஒட்டியே பல வருடமா  எழுந்தருளி இருக்கறார் . அவரு கண்ணு முழிச்சு பாக்கும் போது , பல நாள் நிஷ்ட்டையில் சுமார் 50-60 வருடத்துக்கு மேல ஆயிருச்சு , கோவிலையும் காணோம் , பக்தர்களையும் காணோம் . எல்லாரும் எங்கடா போனீங்க , னு பாக்குறாரு . பக்கத்துலேயே அகத்தியர் , சரி முனி , உமக்கு சின்னதா ஒரு 'கூரை போட்டு சீரமைக்க சொல்றேன் ன்னு சொல்லி என் கிட்ட சொல்லி . நான் உங்க கிட்ட சொல்லி . நான் சொன்னது உங்களுக்கெல்லாம் என்ன புரிஞ்சிதோ , எனக்கே ஒண்ணுமே புரியல , அதுக்குள்ள 10-20 பேரு சேந்து பணம் போட்டு ஒரே நாள்ல பண உதவி செஞ்சு , அருமையா மேடை போட்டு , படிக்கட்டு வெச்சு , கூரை போட்டு பூஜை போட்டு எல்லாமே நடந்தது . அப்போ நைட்டு 11 மணிக்கு பூஜை செய்யும் போது , கருப்பன் நடராஜ் ஒடம்புல இறங்கி வந்து ஆட்டம் காட்ட நெனைச்சாரு . அப்போ  ஒடனே அவரை மலை ஏத்தி அனுப்பிட்டோம் . பாவம் சின்ன பய்யன் , 5 நிமிஷம் கருப்பு வந்ததுக்கே , கீழே விழுந்து மேல விழுந்து , அடிபட்டு , உடம்பெல்லாம் மண் ஆகி . பயந்து போய் , கண்ணெல்லாம் குத்திட்டு போயீ ஒரு வழி ஆயிட்டான் . ஆனா , அவன் வந்து கும்பிடும் போது நேத்து கருப்பு வந்தாரு , இந்த தடவை கூட சில அனுபவம் வாய்ந்த யோகி ஒருத்தர் இருந்தாரு . கறுப்பர் வந்து ஒடம்ப நாலு புறமும் வளச்சு மூச்சை முழுவதும் அடக்கி பல வகையான சுவாச நிலைகளை மிகப்பெரிய யோகி போல செஞ்சு காட்டுனாரு . செஞ்சுட்டு , தனக்கு சந்தனம் வேனும்னு கேட்டாரு , அப்பரும் பால் கேட்டாரு , அப்பறம் எழுமிச்சை கனி கேட்டாரு , அப்பறம் சுருட்டு கேட்டாரு . அப்பறம் அங்கே இருந்தவங்க கிட்ட , ஒரு சில ஆசீர்வாதம் கொடுத்தாரு . என்னை கூப்பிட்டு , நீ என் கோவிலுக்கு நாலா செஞ்சு இருக்கே , ரொம்ப நல்லது , இன்னும் நெறைய நெறைய செய்யு ன்னு உத்தரவு போட்டாரு . இது தான் நடந்தது . அன்னைக்கு நான் தான் அவருக்கு பூஜை செய்ய சொல்லி சந்தனாதி தைல காப்பு , பன்னீர் அபிஷேகம் , தண்ணீர் அபிஷேகம் பண்ணி மலர் மாலை போட்டு கும்பிட நடராஜனை கூப்பிட்டு செய்ய சொன்னேன் . அது பத்தல , அவருக்கு சந்தன காப்பு , பால் , எழுமிச்சை மாலை , சுருட்டு ஆகியவை தான் வேணும் னு கேட்டு வாங்கிக்கிட்டாரு . அந்த பய்யன் ஒடம்புல இறங்கி அவரு சுருட்டு குடிச்ச விதமும் , அவரு பைரவரை போல பல்ல காட்டிய விதமும் . ஒடம்ப குதிரை போல வளச்சு குதிரை சவாரி செஞ்சதும் , ஒரு சொம்பு பால ஒரே மடக்குல குடிச்சதும் , ஒரு சிரிச்சதும் , உறுமுனதும் , பேசுனதும் , ஏறியதும் எறங்கியதும் எல்லாமே பாக்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது . பல வருஷம் கழிச்சு வெளிப்பட்ட ஒரு மிகப்பெரிய யோகி அன்று 27.03.2021. நாம அவருக்கு மேல் கூரை ஏற்படுத்தும் போது , இவ்வளவு சக்தி வாய்ந்தவரா இருப்பார் ன்னு குருஜி சொன்னாரு . அன்னிக்கு தான் நேர்ல பாக்க வாய்ப்பு கெடச்சுது . என்னோட அனுபவத்தை உங்களோட பகிர்ந்துக்கிட்டேன் . இனிமே அவருக்கு புடிச்ச அந்த பொருள்களை கொண்டு பூஜை செய்வதை வழக்கமாக வெச்சுக்க போறேன் . என்னோட சேந்து எல்லாரும் நம்ம கருப்பரையும் கும்பிட்டுக்கோங்க . கருப்பராயருக்கு அரோகரா  !!!!!!!

 

 

28.03.2021, பௌர்ணமி குரு பூஜை அனுபவங்கள் , உணர்வுகள்

நேற்று 28.03.2021,  நடந்த பௌர்ணமி குரு பூஜையில் , நமது குருஜியுடன் சேர்த்து மற்றொரு யோகி ஒருவரும் பங்கு பெற்றனர் . பொதுவாக , அகத்தியர் ஒவ்வொரு முறையும் வந்திருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து , யாகத்தில் எழுந்தருளி , விக்ரகத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார் . இது அனைவருக்கும் தெரிந்தாலும் , அனைவரும் அதனை உணர்வதில்லை , ஆர்வம் காட்டுவதில்லை . நேற்று நமது குருஜி மற்றும் நமது பீடத்துக்கு வருகை புரிந்த யோகி அவர்களும் யோகா நிலையில் அங்கே அமர்ந்து பூஜைகள் செய்து , சில சூட்சும காட்சிகளை கண்டு நமக்கு உரைத்தனர் . அவர்கள் உரைத்ததாவது , பல சித்தர்கள் அங்கே ஒளி ரூபத்தில் எழுந்தருளி அங்கும் இங்கும்  காட்சிகளையும் , ஹோம குண்டத்தில் அவர்கள் பெயரை சொல்லி அழைக்கும் போது , அந்த ஒளி நகர்ந்து , ஹோம அக்கினியில் சென்று சேர்ந்து நிற்கும் தன்மையும் கண் கூடாக சூக்கும காட்சிகளாக கண்டோம் என்று எடுத்து உரைத்தனர் . நேற்று கோரக்கர் எனது அருகில் வந்து என்னை சுற்றி வந்து ஆசீர்வதித்ததை நமது குருஜி கண்டுள்ளார் . ஆனால் நமது கண்களுக்கு அந்த காட்சிகள் தெரியாமல் , நான் அவரை வணங்காமல் இருந்தது ஏன் என்று கேட்டார் . நாமும் அது போல சில யோக பயிற்சிகளை செய்து வந்தால் இது போன்ற காட்சிகளை காணலாம் . காட்சிகளை காணா விட்டால் என்ன , சித்தர்கள் சூட்சுமமாகி எழுந்தருளி அனைவரையும் ஆசீர்வதிக்கும் நிகழ்வானது எப்போதும் நடந்து கொண்டு இருக்கிறது . மனிதர்களுக்கு தன அது புரிவதில்லை , ஏதோ யாகம் செய்தோம் , ஏதோ அபிடேகம் செய்தோம் என்று புற  செயல்கள் தாம் அவை என்று சாதாரணமாக எண்ணுகிறார்கள் . சித்தர்கள் தரிசனம் அவ்வளவு எளிதல்ல .  ஏறி கடந்து யாத்திரை செய்து , அவர்கள் நள்ளிரவில் நடமாடும் போது விழியுடன் இருந்து சில காட்சிகளை காண முற்படுவார்கள் . ஆனால் நமது பீடத்தில் அவை ஒருவருக்கு எளிமையாக கிடைக்கிறது . அதாவது , காடு மலை ஏறி திரிய வேண்டியதில்லை . அவர்களே நம் பீடம் இருக்கும் இடத்தில எழுந்து அருள்கிறார்கள். பொதிகை மலை சதுரகிரி மலை போன்ற இடங்களுக்கு சென்று தான் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை . அங்கேயே சென்றாலும் சித்தர்கள் அருளாசி செல்லும் அனைவருக்கும் கிடைக்கும் என்று உறுதி கிடையாது . இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தை தேடி ஓடி வெள்ளயங்கிரி போன்ற மலைகளெல்லாம் ஏறி இறங்கி , ப்ரயத்தனப்படுபவர்கள் , எளிமையாக சித்தர் அருள் பெரும் வழிமுறை நமது பீடத்தில் மட்டுமே உள்ளது . ஏன்
என்றால் , இங்கே அகத்தியர் ஜீவ அருள் நாடியில் எழுந்தருளி உள்ளார் .நான் கூட ஏற்கனவே 2 மாதம் முன்பு ஒரு வீடியோ எடுத்த பொது , பல ஒளி பிழம்புகள் நகர்வதையும் படம் பிடித்து போட்டேன் . பின்னர் சிறிது நேரத்தில் , அவர்கள் சென்ற பிறகு அவை தெரியவில்லை . அது ஒரு வெளிப்புற சான்று . நேற்று மேலும் ஒரு நல்ல சான்றாக வெளியூரில் இருந்து புதிதாக வந்த யோகி அவர்கள் , காட்சிகளை  ஞானக்கண் கொண்டு கண்டு நமக்கு தெரிவித்தது மிக்க மகிழ்வை கொடுத்தது . அதனால் தான் இங்கு நடக்கும் பவுர்ணமி பூஜைகள் கலந்து கொள்வது என்பது எவ்வளவு முக்கியம் என்று எல்லோருக்கும் தெரியப்படுத்தவே இந்த பதிவு . எத்தனையோ முறை , அகத்தியர் என்னிடம் , என்னை ஆலயத்தில் அழைக்கிறார்கள் , நாள் செல்கிறேன் , பிறகு அருள் உரைக்கிறேன் என்று சொல்லி செல்வது உண்டு. அதுவெல்லாம் இது போன்ற வழிபாடுகள் தான் . எனது இல்லத்திலும் அகத்தியரை எழுந்தருள செய்து விக்கிரகம் வைத்து வழிபாடு செய்து எனது அகத்திய பக்தியை நிறைவு செய்து கொள்கிறேன் . அதற்க்கு தான் அகத்தியர் படம் வைக்க சொல்வது . அகத்தியர் நாமம் ஜெபிக்க சொல்வது , எல்லாமே அவர்களை எழுந்தருள செய்து ஆசி வாங்குவதற்காக தான் . நமக்கு எங்கே அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது . நாம் கோவில் கோவிலாக அவர்களை தேடி ஓடுகிறோம் , எதற்க்காக ஓட வேண்டும் . உள்ளே அவர்களை பார்க்கும் முறை தெரிந்து நம் குருஜியிடம் கற்று கொள்ளலாம் . மேலும் அகத்தியரிடம் ஜீவா அருள் நாடியில் வாக்கு வாங்கி அவரை உள்ளே எழுந்தருளுமாறு வேண்டலாம் . எப்போதும் அவரின் ஞாபகமாக இருப்பதற்காக தான் பாக்கெட்டில் வைக்கும்
படம் , காலை மாலை அவரது விக்கிரக வழிபாடு . நாம ஜெபம் போன்றவை தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும் என்று உரைக்கப்படுகிறது . அகத்தியர் யாரையும் விக்ரக வழிபாடு , படம் போன்றவை வைத்து செய்யுங்கள் என்று சொல்வதில்லை . அவர் , நாம ஜெபம் ஒன்றே போதும் என்று தான் கூறுகிறார் . நாம், நமது பக்திக்கு ஏற்றார் போல வழிபாடுகளை அமைத்து கொள்ளலாம் . அவரை வழிபடுவதால் எனக்கு என்ன லாபம் , எனக்கு என்ன கிடைக்கும் என்று வியாபார புத்தியுடன் வழிபாடு செய்வது ஆகாது . எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும் . எது ஒன்று கிடைத்தால் . எல்லாமே நமது வசம் ஆகுமோ , அந்த ஒன்று கிடைத்தால் போதும் . அதை விடுத்து , எனக்கு அது வேண்டும் எனக்கு இது வேண்டும் என்று கேட்பது முட்டாள்தனம் . நாம் அவரது அருளை மட்டுமே கேட்டால் , அவரே  நமக்கு எது நல்லது எது  கெட்டது , எது உகந்தது என்பதையெல்லாம் அறுந்து எதை எப்போது எப்படி கொடுக்க வேண்டுமோ, அதை அப்போது. அப்படி கொடுப்பார் . உன் அவசரத்துக்கு எல்லாம் எல்லாம் நடந்து விடாது . தொடர்ந்து பௌர்ணமி யாகங்களை வர வேண்டும் ஐயனை தொழ வேண்டும் , கடமைகள் செய்ய வேண்டும் . அவரும் மனம் மகிழ்ந்து நமக்கு வேண்டியதை அருளுவார் . வாருங்கள் . வந்து அருள் பெறுங்கள் , ஐயனை கண்டு நல்ல அருளை பெறுங்கள் . என் மனதில் பட்டதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.


 










Wednesday, March 24, 2021

நமது பொகளூர் அகத்தியர் பீடத்தில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் - பாகம் 2

நமது பொகளூர் அகத்தியர் பீடத்தில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் - பாகம் 2

 

முதுகு வலி

 

சுமார் 7 வருடம் முன்னாள் ஒரு நாள் நல்ல முதுகு வலி . அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்ய முடியாத அளவுக்கு வலி . வாகனம் ஓட்டுவதற்கு கூட சிரமம் . அப்போது நான் 2013-2014 ஆம் ஆண்டு சென்னையில் வசித்து வந்தேன் . நல்ல வேலை , சொந்த வீடு என்று சுகமாக இருந்த எனக்கு , இந்த முதுகு வலி பெரும் துன்பத்தை கொடுத்தது . அந்த வருடம் வருடாந்திர அலுவலக உயர் அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பு  புது தில்லி யில் ஏற்பாடு செய்யப்பட்டு எனக்கு கம்பெனி விமான பயண சீட்டு எடுத்து அனுப்பி இருந்தது . இரவு 9 மணிக்கு விமானம் , மாலை 6 மணிக்கு பெட்டியில் துணிகளை அடுக்கி கொண்டு இருந்தேன் . திடீரென்று ஒரு முதுகில் நாற்புறமும் கொக்கி போட்டு இறுக்கி பிடித்தால் போல சுருக்கென்ற வலி . கொக்கி மாதிரி முழு முதுகும் இறுக்கி பிடித்து கொண்டதால் , அப்படியே சுருண்டு கீழே விழுந்தேன் . என்னால் எழுந்து அமர முடியவில்லை . ஏன் , எழுந்திருக்கவே முடியவில்லை . என் மனைவி எங்கோ வீட்டின் முன் பகுதியில் இருக்கிறாள் . அப்படி வலிக்கும் போது மூச்சு மிக லேசாக தான் விட முடிந்தது . மூச்சு சற்று அடைத்து கொண்டது . அந்த அளவு வலி . சத்தம் போட்டு கூப்பிட முடியவில்லை . அப்படியே கிடந்தேன் . சில நிமிடம் பிறகு , என் மனைவி அருகில் வந்த போது , அழைத்து உதவ கூப்பிட்டேன் . அவளுக்கோ எதுவும் புரியவில்லை . எழுந்து படுக்கையில் அமர்ந்து 10 நிமிடம் ஆசுவாசப்படுத்தி கொண்டு . மெதுவாக எழுந்து நடந்து , சுமார் 100 மீட்டர் தூரத்தில் என் இல்லம் அருகே உள்ள மருத்துவரை தேடி சென்றேன் . அவர் அப்போதைக்கு , ஒரு மருந்தை ஆசன வாயில் வைத்து உள்ளே செலுத்தினார் , சுமார் அரை மணி நேரத்தில் எல்லாம் சரியானது . எப்படியோ டெல்லி கிளம்பி சென்று , மனக்குழப்பத்துடனே மீட்டிங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பினேன் . பின்னர் மாரு நாள் காலை 8 மணிக்கு அலுவலகம் கிளம்பும் போது , மீண்டும் அதே வலி . சரி , இதை உடனே சரி பார்த்து கொள்ள வேண்டும் என்று சென்னை வடபழனியில் சூர்யா ஆஸ்பத்திரியில் உள்ள சிறந்த எலும்பு சிகிச்சை நிபுணரிடம் சென்றேன் . அலுவலகம் அன்று செல்லவில்லை . எக்ஸ் ரே எடுத்து , எக்கோ டெஸ்ட் எடுத்து பார்த்து , அதிகமாக எலும்பு தேய்மானம் உள்ளது , என்று கூறி , முதுகு தண்டு வடத்தில் பல டிஸ்க் வீங்கி உள்ளது , நகர்ந்து உள்ளது , ரத்த போக்கு உள்ளது , காயம் ஆகி உள்ளது , இதற்கு எலும்பு தேய்மானம் தன காரணம் . இதற்கு நாம் எதுவும் மருத்துவம் செய்ய முடியாது , வலி நிவாரண மருந்துகள் வேண்டுமானால் தரலாம் . வலி தெரியாமல் இருக்கும் . பின்னர் வலை தலத்தில் சென்று பிசியோ தெராப்பி முறைகளை பார்த்து செய்து கொள்ளுங்கள் . வயதான காலத்தில் இது போன்று ஏற்பட்டால் , கை கால் இழுத்து கொண்டு போகும் நிலை வந்தால் , மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படும் . முதுகு தண்டை பிளந்து அதில் மாற்றங்கள் செய்ய வேண்டி வரும் . அதற்கு பிறகு உயிர் பிழைக்கலாம் ஆனால் சரிவர நடமாட முடியாது . இப்போது சின்ன வயது , நீ பொறுத்து கொள் . வயதானால் பார்த்து கொள்ளலாம் என்று கூறினார் . சரி , நம் வாழ்க்கை இப்படி தான் உள்ளது , என்ன சம்பாதித்து என்ன செய்ய , வாழ்க்கை ஒரு தோல்வியே என்றெல்லாம் வருத்தப்பட்டு விதியை நொந்து கொண்டு வலி நிவாரணி மருந்து பெற்று , பிசியோதெரபி செய்து கொண்டு எப்படியோ சமாளித்து வேலைக்கு செல்லலாம் . குழந்தைகள் 5 வயது , 6 வயது . இப்போதே நாம் சம்பாதிப்பதற்கு உடல் தகுதி இல்லையென்றால் எப்படி இவர்களை கரை ஏற்றுவது என்று கவலைப்பட்டு , என்ன ஆனாலும் நாம் வேலைக்கு சென்று உழைக்க வேண்டும் , மருத்துவர் கூறும் ஆலோசனைகளை கேட்போம் , பிறகு என்ன நடக்குமோ நடக்கட்டும் . நாம் என்ன செய்ய முடியும் என்று எண்ணி வாழ்ந்து வந்தேன்.

 

பிறகு வருடம் 2 முறை இந்த மாதிரி வரும் . வலி நிவாரணி எடுத்து கொண்டு ஓய்வெடுப்பேன் . கடின வேலைகளை தவிர்த்தேன் . பிறகு அடிக்கடி இவ்வாறு வர ஆரம்பித்தது . வாழ்க்கை ஒரு தொல்லை , லட்ச ரூபாய் சம்பாதித்தாலும் நிம்மதி இல்லை , வாழ்க்கை ஒரு சூனியம் , வலி வலி வலி யுடன் வாழ பழகி கொண்டேன் . பின்னர் 2015 இல் கோவை வந்தேன் அகத்தியர் பீடத்தின் தொடர்பு கிடைத்தது , பின்னர் உடல் எடை குறைக்க வெளி நாட்டு பொடிகளை உணவுக்கு பதில் செயற்கை பாலில் கலந்து குடித்து உடல் எடை குறைக்கும் வெளி நாட்டு நிறுவன தயாரிப்பை உட்கொண்டு சுமார் 25 கிலோ எடை குறைத்தேன் , சுமார் 10 கிலோ எடை குறைத்த உடனே முது வலி அகன்றது . அப்போது அகத்தியர் , அது ஒரு மெல்ல கொல்லும் விஷம் , உடனே அதை நிறுத்து என்று உத்தரவிட்டார் . கையில் 50000 மதிப்பில் அந்த உணவு பொடி இருந்தது . அந்த போடி எல்லாம் விலை அதிகம் , ஒரு டம்ளர் பானகம் சுமார் 200-250 வரை வரும் . ஒரு நாள் 2 முறை குடிக்க வேண்டும் , உணவு எடுக்க கூடாது , நிறைய செலவு , ஆனால் முதுகு வலி தீர்ந்தால் போதும் என்று எதுவுமே யோசிக்காமல் அதை செய்து கொண்டு இருந்தோம் .

 

இது இப்படி இருக்கையில் , என் முதுவலிக்கு வயது சுமார் 7 வருடம் ஆகி இருந்தது . தீராத ஒரு நோய் . அப்போது குருஜி முது வலிக்கு ஒரு டானிக் , ஒரு லேகியம் கொடுத்து , இதை சாப்பிடு சரியாகி விடும் என்று கூறினார் . நானும் 15 நாள் சாப்பிட்டேன் , சரி ஆனது . மாதம் ஒரு தடவை வரும் முதுகு வலி 4 மாதத்துக்கு வரவே இல்லை . பின்னர் ஏதோ ஒரு வேலை செய்யும் பொது , மீண்டும் வந்தது .

 

இந்த முறை குருஜி கரு மருந்து என்ற வேறு வகை சக்தி வாய்ந்த மருந்தையும் , அந்த டானிக் மற்றும் கஷாயத்தோடு  சேர்த்து கொடுத்தார்

 

இந்த முறை அடுத்த 6 மாதத்துக்கு எந்த வழியும் வரவில்லை . மீண்டும் 6 மாதம் கழித்து அதே போல வலி வந்தது . மீண்டும் குருஜியிடம் சென்றேன் , இந்த முறை உனக்கு நிரந்தர தீர்வு கொடுக்கிறேன் கவலைப்படாதே , என்று கூறி அதே டானிக்கை பல பொருட்கள் கலந்து சிகப்பு நிறத்தில் சக்தி வாய்ந்த ஒரு மருந்தாக கொடுத்தார் , நானும் வாங்கி குடித்து 1 வருடம் மீள் ஆகிறது , பல கடினமான வேலைகளை மேற்கொண்டேன் , எந்த நிலையிலும் முது வலி இல்லை .

 

மருந்து மட்டுமே தீர்வு ஆகாது , அகத்தியர் ஆசி வேண்டும் , பாவங்களுக்கு பரிகார செயல்களாக அகத்தியர் உரைக்கும் நற்காரியங்கள் , ஆலயம் சென்று வழிபாடு செய்தல் போன்றவையும் செய்தால் தான் மருந்து சித்தி  பெரும் . இன்று நான் வாழ்வில் நிம்மதியுடன் இருக்கிறேன் , இரண்டு முறை கடினமான பொதிகை  மலை ஏற்றம் , ஒரு முறை கடினமான வெள்ளியங்கிரி மலை ஏற்றம் , போன்றவை செய்து , தீராத வியாதியால் 6 வருடம் கஷ்டப்பட்ட நிலையில் , நிரந்தர தீர்வாக , செலவே இல்லாமல் , எளிமையாக மருத்துவம் செய்து கொண்டு , எந்த பக்க விளைவும் இல்லாமல் , நிம்மதியாக வாழ முடிகிறது என்றால் அதற்கு குருநாதரும் குருஜியும் காட்டிய வழியில் நடந்தது தான் காரணம் . காசு சம்பாதிக்கலாம் . நிம்மதியை விலை கொடுத்து வாங்க முடியாது . வலி நிவாரணி மருந்துகள் கடினமான பக்க  விளைவுகளை ஏற்படுத்தும் . இயற்கை மருத்துவம் , அதுவும் அகத்தியரிடம் மருத்துவ ஜீவ நாடியில் மருந்து செய்யும் முறைகளை மருத்துவத்தின் தந்தையான அகத்தியரே  உரைக்கும் போது , அதனை கேட்டு மருத்துவம் செய்து கொள்ளும் நிலை இந்த பூவுலகில் வேறெங்கும் இல்லை . குருஜி முறையாக சீதா மருத்துவம் பயின்ற மருத்துவர் , அவரே தன கைப்பட மருந்துகளை தயார் செய்கிறார். லாப் நோக்கம் இல்லை . கொடுக்கும் தட்சிணையை வாங்கி கொள்கிறார் . சிலருக்கு தன கை காசை போட்டு தான் மருந்தே கொடுக்கிறார் . சிலர் 2000 ரூபாய் செலவு செய்து எடுத்த மருந்திற்கு 100-200 தட்சிணை வைத்து செல்வார்கள் . இதில் கொடுமை என்னவென்றால் , நன்றாக சம்பாதிப்பவர்கள் கூட , அதில் உள்ள உழைப்பை தெரிந்து கொள்ளாமல் . 5-6 மணி நேரம் தொடர்ந்து அமர்ந்து செய்த மருந்தின் மகிமை புரியாமல் , ஏதோ எண்ணெய் , ஏதோ கசாயம் ,  இதற்கு எதுக்கு பணம் தேவை என்று நினைக்கிறார்கள் . ஒரு கட்டிடம் கட்டும் ஒருவன் ஒரு நாள் கூலி 1000 ரூபாய்க்கு குறைவாக வாங்குவதில்லை . ஆங்கில மருத்துவம் ஆஸ்பத்திரி சென்றால் பணம் கட்ட யாரும் கேள்வி கேட்பதில்லை . ஆனால் எளிமையான மருத்துவத்தின் தந்தை எடுத்து கொடுக்கும் உண்மை மருந்துக்கு உண்மையிலேயே யாரும் விலையை நிர்ணயம் செய்ய முடியாது . என்னை போல வலியால் கஷ்ட்டப்பட்டவர்களுக்கு தான் தெரியும் , நன்றி உணர்ச்சி வரும் . என் அனுபவம் , எனது உணர்வுகள் . தவறுகள் இருப்பின் மன்னித்து பொறுத்தருள வேண்டுகிறேன் . குருவே போற்றி . குருவே துணை .





நமது பொகளூர் அகத்தியர் பீடத்தில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் - பாகம் 1


தொலைந்த
பொருள் திரும்ப கிடைத்தல்

 

ஒரு நாள் அகத்தியர் பீடத்துக்கு சென்று விட்டு அபிஷேக பூஜைகளை பார்த்து விட்டு வீடு திரும்பி காரில் வந்து கொண்டு இருந்தேன் . மிகவும் சோர்வாக இருந்ததால் ட்ரைவர் அமர்த்தி தான் காரில் சென்றேன் . அவர் தான் ஒட்டி கொண்டு வந்தார் . இன்று என் மகனின் பிறந்த நாள் , அகத்தியர் பீடத்தில் இருந்து வந்து நேராக வீட்டுக்கு வராமல் கேக் கடைக்கு சென்று , கேக் வாங்குவதற்கு சென்றேன். உள்ளே சென்று 5 ஆவது ம்=நிமிடத்தில் அலைபேசியை தேடினேன் , காணவில்லை . காரில் சென்று பார்த்தேன் அங்கே இல்லை , கடை வாசலில் விழுந்து இருக்கிறதா என்று பார்த்தேன் அங்கே இல்லை . அலைபேசி சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டு இருந்தது. காரில் வரும் போது பல போன்கால் கால்கள் பேசி கொண்டு தான் வந்தேன் . இறங்கும் போது என்னிடம் இல்லை . அப்போது நிச்சயம் காரில் தான் இருந்திருக்க வேண்டும் . அந்த அலைபேசி விலை 27000, புதியது , மேலும் பீடத்தில் எடுத்த பல புகைப்படங்கள் அதில் தான் உள்ளன . பல தொலை பேசி எண்கள் , ஆபீஸ் விஷயங்கள் , குடும்ப படங்கள் போன்றவை உள்ளன . 27000 நஷ்டம் . எங்கே சென்று தேடுவது என்று தெரியவில்லை , கடாயில் உள்ள CCTV கேமெராவில் பார்த்த பொது , உள்ளே நுழையும் போது சட்டை பாக்கெட்டில் மொபைல் இல்லை என்று தெரிந்தது . கடைக்குள் கொண்டு வந்து தொலைக்கவில்லை . அப்போ காருக்கும் கடைக்கும் இடைப்பட்ட தூரத்தில் விழுந்திருக்கலாம் , யாரவது எடுத்து சென்றிருக்கலாம் அல்லது காரில் வைத்ததை ட்ரைவர் எடுத்து வைத்து கொண்டு இருக்கலாம் . என்ன செய்வது என்று தெரியவில்லை . ட்ரைவர் , நான் மொபைலும் பார்க்கவில்லை எடுக்கவும் இல்லை என்று .  என்னிடம் இருந்து மொபைல் கீழே விழவே இல்லை என்று தெளிவாக தெரிந்தது . 27000 மொபைல் மாயமானது .

 

குருஜியிடம் அழைத்து கேட்டேன் , அவரோ த்யானத்தில் அமர்ந்து பார்த்து அது விழுந்த இடத்திலே தான் இருக்குது , வேற எங்கேயும் போகல , என்று கூறினார் . கூகிள் இல் find my device என்ற அப்பிளிக்கேஷன் மூலம் மொபைல் எங்கே இருந்தது என்று பார்த்த போது , அது மிக சரியாக கடை வாசலில் கார் நின்ற இடத்தை காட்டியது . எனவே ட்ரைவர் எடுத்து வைத்து கொண்டு பொய் சொல்கிறார் என்று போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்பளைண்ட் கொடுக்க சென்றேன் . அவர்களோ அவனவன் அடிதடி கொலை கொள்ளை கலாட்டா கேஸ்களை பார்ப்போமா ,இல்லை உன் போல பொறுப்பில்லாமல் மொபைலை தொலைத்து விட்டு தேடும் உனக்கு தேடி கொடுப்பது தான் எங்கள் வேலையா என்று சத்தம் போட்டனர் . சரி நம் மொபைல் அவ்வளவு தான் என்று நினைத்தேன் . . 100 முறை அழைத்தும் அது சுவிச் ஆப் நிலையில் இருந்தது . நடுவில் 2 முறை ஆன் செய்யப்பட்டு ஆப் செய்யப்பட்டது , sms மூலம் தெரிந்து கொண்டேன் . யாரோ மொபைலுக்கு ஆசைப்பட்டு எடுத்து விட்டார்கள் என்று தெரிந்தது . இனி எங்கே போய் தேடுவது . போலீஸ் காரர் , உடனே ட்ரைவரை அழைத்து நாளை விசாரணைக்கு வாருங்கள் என்று கூறினார் . வீட்டுக்கு திரும்பினேன் , மொபைல் இல்லை . குருஜி கூறினார் , நான் அகத்தியரிடம் சங்கல்பம் செய்துள்ளேன் 24 மணி

நேரத்துக்குள் உன் மொபைல் திரும்ப கிடைக்கும் என்று கூறினார் . அது அப்படி சாத்தியம் என்று மனதில் நினைத்து கொண்டேன் . மறுநாள் காலை போலீஸ் ஸ்டேஷன் சென்றேன் , ட்ரைவர் \வரவில்லை , எங்கோ சென்று விட்டான் . போலீஸ் ஸ்டேஷன் இல் காத்து கொண்டு இருந்தேன் . அப்போது வழக்கம் போல மனதில் குரல் , இப்போது அழைத்து பார் , போன் எடுப்பான் என்று தோன்றியது , உடனே அழைத்தேன் . மறுமுனையில் ஒருவன் எடுத்து இந்தியில் பேசினான் . உடனே அங்கே இருந்த ரைட்டர் அய்யாவிடம் கொடுத்து , போனை எடுத்தவன் பேசுகிறான் , நீங்களே கேளுங்கள் என்று போனை கொடுத்தேன் . அவர் அவனை போலீஸ் என்று கூறி மிரட்டினார் , அவன் இருக்கும் இடத்தை கேட்டார் , அவன் இந்தியில் கூறினான் . நான் போனை வாங்கி அவனிடம் இந்தியில் எங்கே இருக்கிறாய் என்று கேட்டேன் , அவன் வெள்ளக்கிணறு ஊருக்கும் GN மில்ஸ் பச ஸ்டாப் க்கும் இடையே ஹெல்மெட் விற்கும் கடையில் இருப்பதாக கூறினான் . உடனே நானும் போலீஸ் ரைட்டரும் சென்று பார்த்த போது , நேற்று மாலை கார் அருகில் நடந்து செல்லும் போது கார் டயர் பக்கத்திலேயே போன் தரையில் கிடந்தது , கார் ஏற்றி உடைந்து போகும் என்று நினைத்து எடுத்து வைத்து கொண்டேன் . வந்த விலைக்கு விற்று விடலாம் என்று எண்ணினேன். அதனை ரோட்டோரம் உள்ள ஹெல்மெட் கடாயில் துணியில் சுற்றி வைத்தேன் . ஆனால் என் நண்பர்கள் என்னிடம் வந்து என்னை மிரட்டி மொபைலை கொடுக்க வேண்டும் என்று கேட்டனர் , என்னை அடித்து விட்டனர் , ஆனால் நானோ நேற்று இரவு மனம் மாறி , உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எண்ணத்தை மாற்றி கொண்டேன் .. என் கன்னத்தை பாருங்கள் , அவர் அடித்த சுவடு கூட இருக்கும் . இன்று காலை நீங்கள் போலீஸ் என்று அழைத்ததால் உங்களிடம் நான் இருக்கும் இடத்தை கூறினேன் , இந்தாருங்கள் உங்கள் மொபைல் என்று கொடுத்து விட்டான் .

 

1. திருடன் மனம் மாறியது எவ்வாறு

2, போலீஸ் முன் நிற்கும் போது தொலைந்த எண்ணுக்கு அழைத்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது எவ்வாறு

3. போலீஸ் என்று கூறியதும் அவன் பயந்து இருக்கும் இடத்தை கூறி மொபைலை ஒப்படைத்தது எவ்வாறு

 

எல்லாம் உடனடியாக நடந்தது , குருஜி ஆக்னை , சங்கல்பம் , வாக்கு , அகத்தியர் பீடத்தின் மூலம் அய்யா நிகழ்த்திய செயல் , வாக்கு பலிதம் என்பது உண்மை . அகத்தியரிடம் உண்மையாக சங்கல்பம் செய்தால் , அது நிச்சயம் நடக்கும் என்பது உண்மை - இதுவே ஆதாரம்.

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...