Friday, September 30, 2022

01/10/2022

 இன்று பூஜை எதுவும் இதுவரை செய்யவில்லை , நேற்று பூஜை முடித்த சிறிது நேரத்தில் அகத்தியருக்கு வைத்த நீர் கீழே உபயோகப்படுத்தப்பட்டு சிதறி இருந்தது . இன்று காலை பார்க்கும் போது , நீர் சிறிது அளவு குறைந்து இருந்தது . கீழே எதுவும் சிந்தி இருக்கவில்லை . இன்றும் தொடர்ந்து நீர் சுவீகாரம் செய்யப்படுகிறது. அதே பூஜை மேடையில் மற்றொரு இடத்தில் வைத்த நீர் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . நேற்று எடுத்த படம் , படத்திலேயே தேதி நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது , மற்றும் இன்று எடுத்த படம் உங்கள் பார்வைக்கு , சொம்பில் , நேற்று ஒரு வட்டம் அளவு நீர் குறைந்தது . இன்று இரண்டு மூன்று வட்டம் வெளியே தெரியும் அளவு நீர் குறைந்துள்ளது . அகத்தியர் அருள் .




இன்று 01/10/2022, சனிக்கிழமை , எனது முதல் நிலை வாசி யோக பயிற்சியின் 9 ஆவது நாள் அனுபவம்

 

இன்று 01/10/2022, சனிக்கிழமை , எனது முதல் நிலை வாசி யோக பயிற்சியின் 9 ஆவது நாள் அனுபவம்

 

இன்று சனிக்கிழமை வழக்கமாக ஆரம்பிக்கும் 5 மணியை விட முன்னதாக எழுந்து 4/30 மணிக்கே தயார் செய்ய துவங்கினேன்

இன்று மூச்சு வலது புறம் ஓட வேண்டும் , ஆனால் இடதுபுறம் ஓடியது , அப்படி மாற்றி ஓடினால் வியாதிகள் வரும் , சரி என்ன செய்வது , என்ன ஆகுமோ , பரவாயில்லை , நமது

பயிற்சியை தொடர்ந்து செய்வோம் , 2 மாதத்துக்குள் இவை எல்லாம் சரி ஆகிறதா என்று பார்ப்போம் , இல்லை அகத்தியரை கேட்போம் என்று எண்ணி கொண்டேன் .

 

இன்று வலது நாசி நன்றாக அடைத்து இருந்தது , இடது நாசியில் காற்று வெகு சுலபமாக சென்று வந்தது , வலது நாசியில் காற்று சிரமத்துடன் உள் வாங்கி பின்னர் அதனை வெளியே செலுத்த இடது நாசியை விட நீண்ட நேரம் எடுத்து கொண்டது.

 

ஒவ்வொரு சுற்று இடையிலும் அகத்தியரையும் கொடுக்கப்பட்ட பயிற்சிக்கு கொடுக்கப்பட்ட மந்திரத்தையும் உச்சரித்து வேண்டி அடுத்த சுற்றுக்கு சென்றேன்

 

4 சுற்று முடிந்தது , கண்ணை மூடினால் ஏதாவது காட்சிகள் தெரிந்து அதில் சிக்கி போய் விடுவோம் , அப்படி ஏதாவது காட்சிகள் வருவதென்றால் கண் முன்னாலே வரட்டும் என்று , கண்ணை திறந்து பயிற்சி செய்தேன் .

 

அப்போது திடீரென்று , என்னவோ அனுபவம் பதிவு செய்ய சொல்லி கேட்கிறார்கள் , நமக்கு இன்று என்ன அனுபவம் , ஏதாவது இருந்தால் தானே பதிவு செய்ய முடியும் , அது நல்ல அனுபவ பதிவாக இருக்க வேண்டும் , சும்மா பாயாசம் குடித்தேன் , உடல் சூடு ஆனது , குறைந்தது என்பது போல் இல்லாமல் இருக்க வேண்டும் , சரி அவர்கள் பதிவு கேட்கிறார்கள் , நான் எனக்கு தெரிந்தது போடுகிறேன் , சரி இப்போது , மழை அறிகுறி இல்லை , ஒரு மாதமாக கோவையில் மழை இல்லை , இப்போது மழைக்காலம் இல்லை , ஆனால் இப்போது மழை பெய்ய வேண்டும் , சம்மந்தமே இல்லாமல் மழை பெய்தால் நான் பெய்தால் நான் ஒப்பு கொள்கிறேன் , எனக்கு வேண்டாம் , ஆனால் அன்பவ பதிவிர்க்காக தேவை படுகிறது .

 

அதற்கு முன் கூற மறந்து விட்டேன் . நான் வேறு இடங்களில் வாசி யோக பயிர்சிகள் மேற்கொண்ட போது சில அனுபவங்கள் உள்ளன , கூட்டாக 30 பேர் சேர்ந்து வாசி யோக பயிற்சியில் ஈடுபடும் போது காற்று வேகமாக அந்த கட்டிடம் உள்ள இடம் , பயிற்சி நடக்கும் இடம் ஆகியவையில் சத்தததுடன் சுற்றும் .அது போல , இன்று பயிற்சியில் காற்றை இழுத்து எழுத்து விடும் போது , நான் அமர்ந்து இருந்த இடத்தில் காற்று சத்துடன் போவதும் வருவதுமாக இருந்தது , அதாவது மிக சிறிய புயல் போல அமரும் இடத்தில் மட்டும் வீசியது , அதற்க்கும் நாம் சுவாசத்துக்கும் தொடர்பு இருக்கும் . பயிற்சி முடித்தால் அதுவும் நின்று விடும் . இன்று அது போல காற்று நான் அமர்ந்த இடத்தில் சுற்றியதால் , வாசி ஓடுகிறது என்பதை உணர்ந்து கொண்டேன். மழை பெய்ய சொல்லி கேட்டதற்கு அதுவும் ஒரு காரணம் . அது ஒரு பழக்க தோஷம் . ஏற்கனவே பக்தி மார்கத்தில் கடவுள் பக்தி மூலம் மழை வேண்டி பெய்துள்ளது , ஆனால் அதில் பக்தியில் உருக வேண்டும் , அப்போது பெய்யும் . அது போல இன்று மழை வேண்டும் என்று கேட்டதற்கு உடனேயே , சில்லென்ற காற்று என் கழுத்து பகுதியை சுற்றி என்னிடம் இருந்து விலகி சென்றது , ஆஹா சில்லென்று இருக்கிறதே , ஒரு வேளை மழை பெய்யுமோ என்று எண்ணு ம் போது , சிறியதாக நீர் விழும் சத்தம் . நான் அமர்ந்து உள்ள இடம் கூரை இல்லாத இடம் , அதன் அருகிலேயே இரும்பு சீட் கூரை உள்ளது , அதன் மேல் நீர் விழுந்தால் சத்தம் கேட்கும் . அடடா மழை பெய்கிறது போல இருக்கிறதே என்று பார்த்தேன் , அப்போது தான் கடைசி சுற்று பயிற்சி முடித்தேன். மழை நின்றது . அதாவது , 10 நொடி மட்டும் தான் மழை விழும் சத்தம் மட்டும் கேட்டது . பிறகு அதனுடன் பேச ஆரம்பித்தேன் . மழை வந்திருந்தால் , என் மேல் நீர் விழுந்திருக்கும் , மேலும் ஒரு வேலை , மாடி வீட்டில் இருந்து தண்ணீர் கொட்டி இருந்தாலும் சத்தம் கேட்கும் , பூனை கூரை மேல் நடந்து சென்றாலும் சத்தம் கேட்கும் , 10 நொடி சத்தம் கேட்டால் என்னவென்று கொள்வது , என்று கேட்ட உடன் , மீண்டும் மழை வந்து , இம்முறை ஒரு துளி என் கை மேல் விழுந்தது . பிறகு மழை சுத்தம் 5 நொடியில் நின்றது . நான் மீண்டும் , என்ன ஒரே ஒரு துளி என் மேல் விழுந்துள்ளது , இது என் மனா வியாதி , நான் குளித்து முடித்து வந்துள்ளேன் , தலை முடியில் ஈரமாக இருந்து, அதில்  ஒரு சொட்டு நீர் துளி வர செய்து விட்டு மழை என்று கற்பனை செய்து கொள்ளாதே , மழை பெய்தால் , தரையில் நீர் திவலைகள் , நீர் துளிகள் பதிந்த அச்சு இருக்கும் , அது போல வேண்டும் . சரி , விளக்கு வெளிச்சம் போட்டு பாப்போம் என்றால் , , ஒரு அடையாளத்தையும் காணோம் . போங்கப்பா சும்மா விளையாட்டு காட்டாதீங்க , பெய்தால் , நன்றாக தெரியும்படி பெய்யுங்கள் , இல்லயென்றால் விடுங்கள் , என்று கூறினேன் , மீண்டும் வீட்டு வாயிலில் சென்று அங்கே மழை துளி விழுந்த அடையாளம் உள்ளதா என்று பார்த்தேன் , வாசலுக்கு நடந்து செல்லும் போதே , மழை சத்தம் மீண்டும் கேட்டது , வாசலில் சென்று பார்த்த போது , நீர் விழுந்து அடையாளம் இருந்தது , அது கூட நம்பாமல் நான் நினைத்தேன் , இது வாசல் தரை பூராவும் பெயிண்ட் அடிக்கும் பொது சிறு சிறு புள்ளிகள் சிந்தின , அது அழியவில்லை , அது மழை துளி போல் தெரியும் , ஒப்பு கொள்ள மாட்டேன் என்று கூறினேன் , அப்போது தான் எனக்கு தெரியும்படி நன்றாக நீர்த்துளிகள் விழுந்தன . இரு இரு , 1 நிமிடம் காணொளி பதிவு செய்கிறேன் என்று கூறி கைபேசியில் அதனை பதிவு செய்து கொண்டேன், உங்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக. ஆனால் ஒன்றை கூற விரும்புகிறேன் , நான் இடி மின்னல் மழை என்று தெளிவாக கேட்டேன் , ஆனால் மழை துளி மட்டும் தான் விழுந்தது , அடுத்த முறை இடி மின்னல் சேர்த்து வர வேண்டும் என்று கேட்டேன் , அதற்கு நீ மேலும் சிறிது நேரம் தொடர்ந்து வாசி பயிற்சி செய்ய வேண்டும் , நீ செய்த பயிற்சிக்கு இவ்வளவு தான் வரும் என்று மனது கூறியது . ஒப்பு கொண்டேன் . சோதனைக்காக எல்லாம் ஆற்றலை விரயம் செய்ய கூடாது . ஆனால் நாம் செய்யும் பயிற்சியில் நமக்கு நம்பிக்கை வருவதற்காக இவ்வாறு சோதனை செய்து கொள்ளலாம் தவறில்லை . நாம் செய்யும் பயிற்சி சக்தி வாய்ந்தது என்று நம்புகிறேன் , இயற்கையே சாட்சி

 

ஓம் அகத்தீசாய நமஹ

 


Thursday, September 29, 2022

30.09.2022பூஜை அனுபவம்

 இது இன்று நான் செய்த வெள்ளிக்கிழமை வேல் பூஜை மற்றும் இன்று பஞ்சமி ஆகையால் வராகிக்கு செய்த பூஜை பூஜை அர்ச்சனை சகஸ்ரச்சனை எல்லாம் முடிந்த பிறகு நெய்வேத்தியம் வைத்து ஒரு பாத்திரத்தில் இரண்டு மூன்று பாத்திரங்களில் உயிர் புதிதாக நீர் சுத்தமாக பிடித்து வைத்து இந்த மாதிரி வைக்கும் வழக்கம் உண்டு கடைசி இரண்டு படத்தில் பார்த்தீர்கள் என்றால் இன்று அகத்திய முனிவருக்கு பாத்திரத்தில் நீர் வைக்கப்பட்டது அந்த படத்தில் அதற்குரிய நேரம் இருக்கும் 7 47 என்ற நேரம் அதில் பதிவாகி இருக்கிறது பிறகு இப்போது தற்போது பூஜை அறையில் சென்று பார்க்கும் போது அந்த நீர்வீகாரம் செய்யப்பட்டு தரையில் விரைந்து கிடந்தது அருமையான ஒரு சிறப்பு பாத்திரம் ஓட்டை எதுவும் இல்லை அதிலிருந்து நீர் கசிய வாய்ப்பில்லை அகஸ்தியர் முனிவர் ஸ்வீடாரம் செய்து கொண்டதாக நம்புகிறேன் நன்றி வணக்கம் ஓம் அகத்தீஸ்வரய நமஹ

















Tuesday, September 27, 2022

27Sep2022

 எல்லா அவங்களே கேட்டு வாங்கிக்கறாங்க 


டேய் (அப்பிடி தான் என்னை கூப்பிடுவாங்க ), இன்னைக்கு செவ்வாக்கிழமே , வேலுக்கு  பூஜை செய்யுடா 


- சரிங்க அய்யா 


அய்யா , செவ்வா ஹோரை ஆரம்பிச்சு போயிகிட்டு இருக்கு, 


ஒரு வேளை 7  மணி தாண்டிடுச்சுனா .


டேய் - செவ்வா ஹோரை ல ஆரம்பி போதும் 


- சரிங்க 


போயீ செவப்பு கலர் பூ எடுத்துட்டு வந்து போடு 


அய்யா , கூடவே வில்வ இலையும் சேத்து போடறேன் 


டேய் - அது கடைசீல பாத்துக்கலாம் டா , சொல்றேன் , இப்போ சும்மா வாயாடாம செகப்பு பூ எடுத்து வந்து போடு 


- சரிங்க அய்யா 


பூவையெல்லாம் அப்படியே மொக்காக போடாதே , கையால் மலர வைத்து மலர்ந்த பூக்களை போடு 


வீசி வீசி போடாதே ,  அர்ச்சனை செய்வது போல் கைகளை குவித்து போடு 


நடு நடுவுல போடாதே , அர்ச்சனை மந்திரம் முடிந்த பின் போடு 


வலது கையிலே பூ வெச்சு , இடது கையை வலது கை மேல தொட்டு ரெண்டு கையாலையும் போடற மாதிரி அர்ச்சிக்கணும் 


பூவை வேல் மேலயும் முருகர் படத்து மேலயும் விழுகுற மாதிரி போடணும் , எங்கேயோ போட கூடாது 


- சரிங்க அய்யா 


பூவை கொஞ்ச கொஞ்சமா எடுத்து கூடையில் கொட்டிக்கொள் 


அதன்படியே அர்ச்சனை செய்து கொண்டு இருந்தேன் 


- இடையே ; டேய் - வாசனை வேணும் , சாம்பிராணி போடாமே என்னடா பண்ற 


- சரிங்க அய்யா, இதோ போடறேன் 


வேல் பீடத்தை தரையிலே வைக்க கூடாது , அதோ உன்னோட பூஜை மேடையிலே ஒரு உயரமான சின்ன மேடை கட்டி இருக்கியே , அது மேல வேல் வெச்சு பூஜை பண்ணு .


வேல் கூடவே முருகர் விக்ரகம் இருக்குது பாரு , அதையும் வேல் பீடத்து மேலேயே வெச்சு அதோடவே சேர்த்து பூஜை பண்ணு . வேல் வேற முருகர் வேற இல்ல - அவரும் அவருடைய வேலும் ஒன்னு தான் 


- சரிங்க அய்யா , வெச்சுஇருக்கேன் 


மேடை மேல பழைய பூ, பழைய நெய்வேத்தியம் , சாம்பிராணி சாம்பல் , எல்லாத்தயும் எடுத்து போட்டுடு , நல்லா சுத்தமா இருக்கனும்.


- சரிங்க அய்யா , செஞ்சாச்சு செஞ்சாச்சு 


மணியை பார்த்தால் 6:50am , இன்னும் ஹோரை பத்து நிமிஷம் இருக்குது , அதுக்குள்ள மொதல்ல ஆரம்பிச்சுடலாம் , ஆறு முகம் பூஜை செஞ்சு முடிக்க முக்கா மணி நேரம் ஆகும் . அப்போ 7.45 மணிக்குள்ள முடிக்கலாம் , என்று நினைத்து பூஜையை ஆரம்பித்தேன் 


முதல் முகத்துக்கு நெறய பூ காய் நெறய எடுத்து எடுத்து பூஜை பண்ணேன் 


கொஞ்ச நேரத்துக்கு பிறகு , ஞாபகம் வந்தது ரெண்டு ரெண்டு பூ, ஒவ்வொரு அர்ச்சனைக்கு எடுத்து தான் போன தடவை பூஜை பண்ணினேன் , மொத்த பூவையும் அள்ளி அள்ளி போட்டுட்டா கடைசி அர்ச்சனை வரைக்கும் பூ இருக்காது 


இப்போது இரண்டாவது முகம் அர்ச்சனை நடந்து கொண்டு இருக்கும்போது 


டேய் - மூன்றாவது முகம் வரும் போது ஒவ்வொரு அர்ச்சனைக்கு மூன்று பூ போடு , நாலாவது க்கு நாலு பூ , அஞ்சாவது முகத்துக்கு ஒவ்வொரு அர்ச்சனைக்கும் அஞ்சு அஞ்சா பூவை எண்ணி கையில் எடுத்து போடு , ஆறாவது முகத்திற்கு ஆறு பூ எண்ணி எடுத்து போடு .


- சரிங்க அய்யா , அப்படியே செய்கிறேன்  ( மனதுக்குள் - இன்னும் என்ன என்ன சொல்ல போகிறாரோ தெரியவில்லை )


மூன்றாவது அர்ச்சனை செய்யும் போது 


அய்யா - நான் காலையிலே எழுந்து வாசி யோகம் செய்யறேன் , அது மூச்சு காற்று , வாசி , உயிர் நிலை , இந்த மந்திரம் கூறி அர்ச்சனை பண்ணுவது எதுக்கு , ரெண்டுமே எதுக்கு பண்ணனும் .


டேய்  -  மந்திரம் ங்கிறது ஒலி , ஒலி க்கு மூலம் காற்று ... காத்து இல்லாமே எப்பிடி ஒலி எழுப்ப முடியும் , மந்திரத்தை வாய் விட்டு சொல்லும் போது நீ சொல்ற அதே காத்து , எழுந்து வந்து ஒரு நிலையிலே ஒரு ஓசையாக மாறி ஒலிக்கிறது , அப்படி வாசி செய்யறதுக்கு காத்தை ஆட்டுவிக்குது , இதுவும்  மந்திரமும் அதே காத்தை தான் ஆட்டுவிக்குது 


காத்து இல்லாமே எதுவுமே இல்ல டா , எல்லாமே வாசி தான் , அந்த காத்து தாண்டா எல்லாத்தயும் இயக்குது . மந்திர பூஜையும் வாசி தான் , நீ சொல்ற யோகமும் வாசி தான் , 


டேய் - உனக்கு திடீர்னு எப்பிடி வாசி யோகம் யோகம் மூச்சு பயிற்சி செய்யணும் தோணிச்சு , நெனைச்சு பாரு , 


ஏன் , இதுக்கு முன்னால நீ இவ்வளவு வருஷமா இது மாதிரி நெனைச்சு இருக்கியா , நல்லா யோசிச்சு பாரு , நீ போன வாரம் செவ்வாய்க்கிழமை வேல் பூஜை செஞ்ச , அப்பறம் வியாழக்கிழமை முருகர் உன்னை , உன்னை இயக்க ஆரம்பிச்சாரு , குரு நாள் வியாழக்கிழமை நீயே போயீ வாசி யோகா பாடத்திட்டத்தில் இணைஞ்சுகிட்டே 

எல்லாமே தானாவே நடந்தது , இப்போ தெரியுதா , ஒரு வாரம் பூஜ செஞ்சதுக்கே என்ன பலன் ன்னு , தொடர்ந்து செய்யி . கொழப்பிக்காதே 


- ரொம்ப சரிங்க அய்யா, நீங்க சொல்றது எல்லாம் உண்மை , அதுவே எனக்கு நன்மை , என் குலதெய்வம் முருகர் , அகத்தியர் வழிபடுவது முருகர் , சித்தர்கள் குரு முருகர் , எல்லாம் அவரருளின்றி வேறில்லை 


ஆமா , அதுவே மந்திரத்தை மனசுக்குள்ள சொன்னா வாசி உள்ள ஓடும் , அதுக்கு தான் மந்திரத்தை வாய் விட்டு சொல்லாதே , மனசுக்குள்ளே சொல்லு ன்னு சொல்றது . வாசி உள்ளாற ஓடும் . 


பேசுறது பாத்து பேசணும் , காத்துல தான் பேசறோம் , காத்து தான் உயிர் , அதனால தான் நீ பேசறது எல்லாமே உயிரிலே பதிவாகுது . நல்லதை பேசி பதிவு செஞ்சா நல்லது நடக்கும் , அபசாரத்தை பேசியோ , நெனைச்சோ , பார்த்தோ பதிவு செய்தியானா , அது போல தான் நடக்கும் . அந்த பதிவு க்கு ஏற்ற மாதிரி நடந்து தன்னோட கர்மாவை தீர்த்துக்கும். இப்போ புரியுதா கர்மா வோட மூலம் என்ன ன்னு . சதாசிவ பிரம்மேந்திரர் மாதிரி பேசாத ஞானிகள் உண்டு , காரணம் இது தான் .


- சரிங்க அய்யா , நல்லா புரிஞ்சுது 


பாத்தியா , நீ பூஜை செய்ய செய்ய , இது மாதிரி ஞானயோதயம் எல்லாம் வரும் , நல்ல விளக்கங்கள் கிடைக்கும் . இப்போ நீ செஞ்சிகிட்டு இருக்கே , அதனாலே நான் உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன் , நீ ஆபீஸ் வேலைக்கு போயிட்டினா , நா இந்த மாறி உன்கிட்ட பேசிகிட்டு இருக்க மாட்டேன் 


அது சரி , நீ வேல் பூஜை பண்ணியே வருஷம் ஆகுது , இப்போ எப்பிடி வேல் பூஜை பண்ணினே தெரியுமா , நீ அன்னைக்கு பேரூர் போனியே , அப்போ முருகர் கிட்டே பேசினியா , முருகர் உன்கிட்ட பேசினாரா  - ஆமாங்க அய்யா 


அப்போ , மறு நாளே , அகத்தியர் ஜீவ நாடி கேட்டியா , இவ்வளவு வருஷம் அகத்தியர் மருதமலைக்கு போக சொல்லவே இல்ல , ஆனா நீ பேரூர்ல முருகர் ஆசீர்வாதம் வாங்குன பிறகு , மருதமலைக்கு போய் முருகரை பார்த்து வாசனை மலர் சூடி , த்யானம் பண்ணு ன்னு பரிகாரம் சொன்னாரு , சரியா , புரிஞ்சிக்கோ 


அப்பறம் அங்கே போய் உக்காந்து என்ன த்யானம் பண்ணினே , வாசி யோகம் பண்ணினே , எங்க உக்காந்தே, அது பாம்பாட்டி சித்தர் வாசி யோகம் பண்ணின குகை. எப்பவுமே வாசி யோகம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே , இந்த மாதிரி பழங்காலத்து சித்தர்கள் யோகம் பண்ணின குகைக்கு போயீ ஆரம்பிச்சா தான் சித்தி யாகும் . மோதல் தடவை அங்கே ஆரம்பிச்சுட்டு , அப்பறம் எங்கே வேணும்னாலும் உக்காந்து பண்ணலாம் , உனக்கு சொல்லி தரும் குருவும் என் மாணவன் தான் , நல்லா சொல்லி கொடுப்பான் , நான் தான் அனுப்பி வெச்சேன் 


- ஆமாங்க அய்யா , சரிங்க அய்யா 


அது தாண்டா , முருகர் உன்னை தனக்கு பூஜை பண்ண வைக்கிறார் , நீ வேல் பூஜை செய்யறதே இல்லை , இப்போ முருகர் அருள் இருக்கு , அதனாலே பூஜை செய்யுற , அவர் அருள் இல்லாம அவருக்கு பூஜை கூட செய்ய முடியாது.


- ஆமாம் அய்யா 


உன் வீட்டுலே இருக்கறவங்க , இல்ல யாரு இந்த பூஜையில் கலந்துக்கிட்டாலும் , அவங்க வேண்டுதலை நிறைவேத்தி கொடுப்பேன் 


- அய்யா என்ன வேண்டினாலும் ஒடனே நிறைவேத்துவீங்களா 


இல்லடா , அவங்க எந்த அளவு பக்தியா வேண்டுறாங்களோ அதே அளவுக்கு அருள் கொடுப்பேன் . கொடுப்பேன் ன்னு சொல்றத விட , அதுக்கு மேல் கொடுக்க முடியாதுடா ,  பாத்திரம் எவ்வளவு அளவோ அவ்ளோ தான் தண்ணி ஊற்ற முடியும் , நெறய ஊத்தினாலும் அளவுக்கு மேல இருக்கற தண்ணி வெளியே தள்ளி விட்டிடும் 


- ஆமாங்க அய்யா , சரி 


சரி, இப்போ உன் மகளுக்கு ஏதோ பயம் இருக்கு னு சொல்லிட்டு இருந்தாள் இல்ல , அவளுக்கு அந்த தெய்வ அருள் பெற்ற மாலையை கொடுத்து அணிஞ்சிக்க சொல்லு , எதிரிகள் அடிபணிவாங்க , நான் பாத்துக்கறேன் 


- உடனே , பூஜை இடையில் , அந்த மாலையை எடுத்து மகளுக்கு அறிவு கூறி அணிந்து கொள்ள சொன்னேன் 


சரி , அந்த கடைக்காரரை வியபாரம் பெறுக கேட்டிருந்தார் அல்லவா , தற்போதய நடைமுறையில் ஆன்லைன் வர்த்தகதில் அவரது பொருட்களை பதிவு செய்து விற்பனைக்கு வைக்க சொல் 


- சரிங்க அய்யா 


இந்த பூஜையை , இன்னும் விரிவு படுத்தனும் னா , கலசம் வைக்கலாம் , 6 பேர் சேர்ந்து பூஜை செய்யலாம் , முதல் முகத்துக்கு 1 ஆள், ஒரு பூ போட்டு அர்ச்சனை செய்து , இரண்டாவது முகத்துக்கு 2 ஆள் ஆளுக்கு இரண்டு பூ போட்டு அர்ச்சனை செய்து , அது போல 6 முகத்துக்கும் செய்து முடிக்க வேண்டும் , ஆனால் இப்போது நீ மட்டும் செய் , நீயே ஆறு முகத்துக்கும் செய் , நான் ஏற்று கொள்கிறேன் 


இந்த பூஜையை நான் ஆத்மார்த்தமா உனக்கு சாதகமான வழிமுறைகளை சொன்னேன் . இதை , வெளியே உள்ள குருமார்கள் ஏற்று கொள்ள வேண்டும் ன்னு அவசியம் இல்ல . உன் ஆத்மா என்ன சொல்லுது , அதை தான் நீ இப்போ கேட்டு கொண்டு இருக்கே , என் மூலமா , அது தான் உனக்கு உண்மை அனுபவம் , வேற எந்த மாதிரி பண்ணினாலும் உனக்கு சித்தி ஆகாது , சரியா , எங்கேயும் போய் பூஜை எப்பிடி பண்றது னு தேடாதே 


- சரிங்க அய்யா, முற்றிலும் உண்மை , தெளிவு பெற்றேன் 


- இந்த மாதிரி மனதில் பேசிகொண்டே ஐந்து முக அர்ச்சனை பண்ணி கொண்டு இருந்தேன் .ஆறாவது முகத்துக்கு ஆறு பூ போடும் போது , ஆறு பூவையும் கையில் வைத்து வட்ட ஓம் எழுத்து போல் வேல் முன்னால் காற்றில் சுற்றி பூ வைத்த கையை அம்பை இழுப்பது போல் பின்னால் இழுத்து , அர்ச்சனை செய்யும் போது வில்லை எய்வது போல அர்ச்சனை செய்ய வேண்டும் , ஆறாவது முகத்தில் ஒவ்வொரு மந்திரத்தாலும் அஸ்திர பிரயோகம் உண்டு , அதனால் அது போல செய் என்று உத்தரவு 


- அய்யா , சாமி மேல அஸ்திரம் போடுவது போல எதுக்குயா செய்யணும் 


டேய் , உனக்கு ஏதுடா அஸ்திரம் விடும் தகுதி , நீ முருகர் மூலமா , வேல் மூலமா தான் அஸ்திரம் விட முடியும் , உன்னோட அஸ்திரத்தை வேல் கிட்டே இந்த மந்திரத்து மூலமா கொடுத்துடறே , அந்த வேல் , அந்த அஸ்திரத்தை , உன் எதிரி யார் னு பாத்து அவங்களுக்கு அனுப்பி விடும் , அது தானடா வேலோட வேலை . வேலனோட வேல் அஸ்திரம் , அந்த அஸ்திரத்துக்கு முன்னாலே எதுவுமே நிக்க முடியாதுடா 


சரி, அடுத்த முறை . கொஞ்சம் சிகப்பு தெச்சி பூவையும் சேத்துக்கோ , உனக்கு தான் தெரியுமே , அந்த பூவுக்குள்ளே அஸ்திர வடிவம் பதிவாகி இருக்கு , இந்த மந்திரத்துக்கு அந்த பூவையும் சேர்த்து  அர்ச்சனை பண்ணிடு 


- ஆமாங்க அய்யா , அப்படியே செய்கிறேன் 


சரி , இப்போ, ஆறாவது முகத்துக்கு , கண்டிப்பா நீ மக மேரு வேலுக்கு முன்னாலே வெச்சு அதுக்கும் சேர்த்து பூஜை பண்ணு , அப்போ தான் சரியாக வரும் .


- ஆமாம் அய்யா, உடனே வைக்கிறேன்


சரி , முனிக்கு மூணு வகை நெய்வேத்தியம் வெய் , சாம்பிராணி பூஜை முடியும் வரை போட்டு கொண்டே இரு , பூஜை முடிந்தவுடன் தீபாரதனைக்கு பிறகு , திருப்பியும் சாம்பிராணி போட்டு விட்டு போ , அம்போ ன்னு விட்டுட்டு போயிடாதே , அவரு உக்கிரமா இருப்பாரு , பய பக்தியா இருந்தா சக்தியா இருக்கும் திருப்தியா இருக்கும் , தீபாராதனை காட்டு விழுந்து கும்பிடு , குடுவையில் நீர் வை. தீபாராதனை காட்டும் போது மங்கள இசை ஒலிக்க செய் 


பூஜை அறையில் இருக்கும் எல்லா தெய்வங்களுக்கும் பூ போடு . இன்றைக்கு பிரதான தெய்வம் முருகன் , ஆனால் எல்லா தெய்வங்களையும் சேர்த்து ஆராதனை செய்ய வேண்டும் .


- சரிங்க அய்யா 


அடுத்த வாரம்  பார்க்கலாம் அய்யா 


டேய் - அடுத்த வாரம் இல்லடா , வாரம் ரெண்டு முறை செவ்வாய் வெள்ளி ,


சரிங்க அய்யா , அப்படியே செய்கிறேன் 


சரி , அந்த வில்வம் எல்லாம் சிவன் அகத்தியர் லட்சுமி , அவுங்குளுக்கு எல்லாம் சுத்தி போட்டு கும்பிடு 

வராகிக்கு , அந்த சிகப்பு பூவையே போட்டு கும்பிடு 


- சரிங்க அய்யா .


நீ , முருகருக்கு தமிழா சமஸ்க்ருதமா எதுல பூஜை செய்றது னு கேட்ட , இப்போ பாத்தியா , நீ சொல்ற மந்திரத்துல ரெண்டுமா கலந்து இருக்கு . தமிழ் உயிர் மெய் எழுத்துக்கள் , நமசிவய அட்சர பீஜம் , சரவணபவ அட்சர பீஜம் , சமஸ்க்ருத மந்திர அர்ச்சனை , ஒரு வரி தமிழ் பீஜம் , அடுத்த வரி சம்ஸ்க்ருத மந்திரம் , அப்பறம் ஒரு வரி விட்டு ஒரு வரி அதே போல சமஸ்க்ருதமும் தமிழும் கலந்து இருக்குது . கடைசி முகத்துல சமஸ்க்ருத பீஜம் , தமிழ் பீஜம் , மேலும் தமிழ் பீஜம் கலந்து சமஸ்க்ருத மந்திரம். எல்லாத்துலயும் சூட்சுமத்துல இருக்கு .


-  சரி 


பூஜை முடித்து கொள் , பிறகு பார்க்கலாம் . 

-   அய்யா, கொலு வெச்சிருக்கு , அதுக்கு பூஜை செய்யணும் , 


அதுக்கு லலிதா சகஸ்ரநாமம் ஒலிக்க செய்து பூஜை செய் , அது தான் சரி , சக்தி நன்றாக விளங்கும் .

ஆசிகள் .










Saturday, September 3, 2022

அனுபவம் 04.09.2022

 

நேற்று 04.09.2022, நானும் மனைவியுடன் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்று வழிபாடு செய்தோம்.
1.5 வருடத்தில் பல முறை சென்று உள்ளோம், இது வரை யானையை பார்த்ததில்லை, அந்த யானைக்கு இனிப்பு பூசணிக்காய் கொடுக்க வேண்டும் என்பது நேர்த்தி கடன். ஆனால் கொடுக்கும் வழி தெரியவில்லை. இந்த நிலையில் பூசணிக்காய் வாங்கி கொண்டு ஆலய அலுவலகத்தில் ஒப்படைத்து விடலாம் என்று எண்ணி சென்றோம்.பூசணிக்காய் எனக்கு விற்ற பூமார்க்கெட் கடைக்காரர், அங்கே பக்கத்தில் யானை கட்டி வைக்கும் இடம் இருக்கும், அங்கே சென்று, மெல்லிய குரலில் கல்யாணி கல்யாணி என்று யானை பேர் சொல்லி கூப்பிடுங்கள், அது நம்மை பார்க்கும், விடாமல் கூப்பிட்டு அதனை பார்க்க வைத்து விடுங்கள், பின்னர் அது துதிக்கையை தூக்கி ஆசீர்வதிக்கும், அதனை பெற்று வாருங்கள் என்று கூறினார்.  நுழையும் முன், யானை எங்கே என்று தெரியவில்லையே என்று தேடினோம். எங்களுக்கு அந்த இடம் புலப்படவில்லை. பிறகு அலுவகைகத்தில் அதிகாரியிடம் பூசணி காயை ஒப்படைத்து யானை பாகனுக்கு 100 ரூபாய் தட்சிணை கொடுத்து ஆலயத்தின் உள்ளே சென்றோம்.

ஆலயத்தை சுற்றி விட்டு பின்னர் தரிசனம் செய்யலாம் என்று நான் கூற, என் மனைவியோ , தரிசனம் செய்து விட்டு சுற்றலாம் என்று கூற குழப்பம். அதுவும் வேண்டாம் இதுவும் வேண்டாம், நுழைவு இடத்திலேயே நடராஜர் சிவகாமி அம்பாளை தொழுது செல்லுங்கள் என்று கூறும் விதமாக அப்போது மணி ஓசையுடன் பூஜை மங்கள வாத்தியத்துடன் ஆரம்பித்தது. சரி கடவுள் உத்தரவு என்றெண்ணி சிறப்பு பூஜை தரிசனம் செய்து, சிறப்பு ஆரத்தி பார்த்து ஆலயம் உள்ளே சென்றோம்.
அங்கேயும் ஈசனுக்கு சிறப்பு ஆரத்தி நடந்ததால் அதையும் தரிசனம் செய்தோம். அப்போது மனதில் விளைந்த எண்ணங்கள் நிச்சயமாக என்னுடையதில்லை.... கீழே முடிந்த வரை எழுதி வைத்துள்ளேன்.

மகனே என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?

அய்யா, பரிகாரம் செய்து கொண்டிருக்கிறேன். ஆலய வழிபாடு, வாழ்வில் சில சிக்கல்கள் தீர்ந்து முன்னேற்றம் அடைய வேண்டி தங்கள் ஆணைப்படி வந்துள்ளேன்.

மகனே ஒன்றை நன்றாக புரிந்து கொள். நம்பிக்கை தான் கடவுள் ஏன்றெல்லாம் கூறுவார்கள். நம்பிக்கையின் மூலம்எது தெரியுமா, நீ தான்.  நீங்கள் எல்லோரும் அது வெறும் கல், சிலை, என்றெல்லாம் மனதில் கொண்டு வழிபட கூடாது. அங்கே கற்சிலையை மனதில் கொள்ளாமல், எப்படி நீ உன் தாய் தந்தையரை காண அவர்கள் இருக்கும் இல்லம் சென்று உரையாடுவாயோ அவ்வாறே உண்மையான ஒரு ஆள் அங்கே இருந்தால் எப்படி உரையாடுவோமோ அப்படியே உரையாட வேண்டும். துளி அளவும் சந்தேகம் இல்லாமல், நேரில் இயல்பாக ஒருவரிடம் பேச வேண்டும். அந்த உணர்வு எல்லா மனிதர்களிடமும் இருப்பதில்லை. சிலர் கடவுளிடம் உரையாடுகிறார்கள்,ஆனால் அந்த உணர்வு முழுமையாக இல்லை, அழுது புலம்பி விட்டு செல்கிறார்கள். அவ்வாறு இல்லாமல், மனதில் எந்த சந்தேகமும் இல்லாமல் பேசினால் கடவுள் கேட்பார். இல்லையென்றால், உனக்கே , நான் இருக்கிறேன் என்று முழு நம்பிக்கை இல்லை, நான் எவ்வாறு உன் வாழ்வில் வந்து செயலாற்ற முடியும், உன் வாழ்வில் நானும் உள்ளே வர வேண்டும், எப்படி உன் நண்பன் உறவினருடன் உரையாடுகிறாயோ, அவ்வாறே என்னோடும் உரையாடு, இப்போது, இது என்னுடைய இருப்பிடம், இங்கே எனக்கு பெரிய தர்பார் உள்ளது. நான் இங்கே அரசன் சபையில் வீற்று இருக்கிறேன் என்பதை உணர். என்னுடன் மகாராணி, மந்திரி, துறைகள், அதனை செயல்படுத்தும் காவலர்கள், என பலர் உள்ளனர். என் அலுவலகத்தில் எங்கள் பிரதான வேலை, உலகத்தை உய்ய செய்வது. உலகம் என்பது ஒவ்வொரு மனிதனின் பார்வையிலும் இருக்கிறது. நீங்கள் ஆலயம் எழுப்பி,அனைத்து பரிவார தெய்வங்களையும் பிரதிட்டை செய்து, விக்கிரகங்கள் உயிர் பெற்று எழுகின்றன. இது நீங்கள் செய்த ஏற்பாடு. ஆலயங்கள் கட்டி அழைத்தால் தான் நாங்கள் எழுந்தருள்வோம் என்று எப்போதும் சொன்னதில்லை. ஆனால், நீங்கள் இவ்வாறு ஆலயம் எழுப்பி எங்களை அழைப்பதால் அதனையும் ஏற்றுக்கொண்டு அங்கேயும் அருள் பாலிக்கிறோம். கடவுள் இல்லை என்று கூறுபவனுக்கு நாங்கள் எங்கனம் அருள முடியும். ஆலயத்திலும், வழிப்படுபவர்களின் நம்பிக்கை அளவு மாறுபடுகிறது. இது ஒரு கட்டிடம், அங்கே ஓர் விக்ரகம், அதற்கு ஒரு பெயர், குணம் என்று எண்ணி வழிபாடு செய்து செல்கின்றனர். ஆனால் அது அப்படி இல்லை, இப்போது உணக்கு ஒரு வேலை ஆக வேண்டும், பல்கலை கழகத்திற்கு செல்கிறாய், வேந்தரை பார்த்து சொல்கிறாய், தனை வேந்தரை பார்த்து சொல்கிறாய், அவர்களே எல்ல. வேலையும் செய்து கொடுக்க மாட்டார்கள், அந்த இலகாவிற்கும் சென்று உணது வேலை சம்மந்தப்பட்ட விண்ணப்பங்களை பார்க்கும் அதிகாரி, அதனை அடுத்த மேஜைக்கு கொண்டு செல்லும் அதிகாரி, ஒப்புதல் அளிக்க ஒரு அதிகாரி, இறுதியில் தான் அது கையெழுத்திற்காக வேந்தருக்கு செல்லும். அதே போல தான் ஈசனாகிய நான் வேந்தராகவும், மீனாட்சி தயார் துணை வேந்தராகவும், மற்றும் பல துறைகள் பல பரிவாரங்களுடன் ஆலயம் உள்ளது. அங்கே வந்து, எதுவும் கேட்காமல் போனாலோ, அல்லது,  வெறுமனே விண்ணப்பம் மட்டும் வைத்து சென்றாலோ வேலை நடக்காது. ஆலயத்தில் எல்லோரிடமும் உண்மையான ஆளிடம் பேசுவது போல பேச வேண்டும். போலியாக அழுது நடிக்க கூடாது. உரிமையுடன் கேட்கலாம். கேளுங்கள் கொடுக்கப்படும்.
மதம் என்பது, நம்பிக்கையை உருவாக்குவது.கண்ணுக்கு தெரியாத கடவுளை அப்படியே ஏற்று கொள்ள உங்களுக்கு சிரமமாக இருப்பதால், ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு பெயரில், ஒவ்வொரு முறையில் இறை சக்தி உள்ளது என்று பல வகையான ஆலயங்களை மனிதர்கள் உருவாக்கி உள்ளார்கள். அணைத்துமே இறைவன் அருளும் இடம் தான். நீங்கள் இறைவனுக்கு பூசும் சாயம் தான் மதம், சாயம் கரைந்தால், அனைத்து மதங்களின் உண்மையான இறைவன் ஒருவனே. ஆனால் இறைவன் இருக்கிறான் என்று நம்பி பேசுவதற்கு உங்களுக்கு அந்த சாயம் தேவைப்படுகிறது. எனவே மதங்களில் சிக்கி போகாமல், இறைவனிடம் நேரிடையாக பேசுங்கள், உங்கள் குல தெய்வம், சிவன் கிருஷ்ணர் பிரம்மன், அம்பாள் லட்சுமி விநாயகன் முருகன் என்று எந்த நாமம் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள், ஆனால் பிரார்த்தனை உண்மையானதாக இருக்க வேண்டும்.இங்கே ஈசன் வீற்று இருக்கிறான் என்று உறுதிபடுத்தியதால் தான் அவருக்கு பல அபிஷேகங்கள் நெய்வேத்யங்கள், அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. மந்திரங்கள் என்பது மனதை ஒருநிலைப்படுத்துபவை, சிந்தனையை எங்கேயோ வைத்து கொண்டு இங்கே நின்று கைகூப்பி கும்பிட்டால் என்ன உபயம் கிடைக்கும். மந்திரங்கள் ஓதுவது மூலம், பாடல்கள் பாடுவது மூலம், மனம் ஒரு நிலை படுகிறது, அப்படி ஒரு நிலைப்பட்ட மனதை இறைவன் பால் செலுத்தி தான் இடைவனிடம் பேச வேண்டும். அந்த மந்திர ஓதுதல், முறையே, திரும்ப திரும்ப அதே அட்சரங்களை கூறுவதென்பது தான் ஜெபம், ஜெபம் ஆழமாக செல்ல செல்ல அதுவே தபம், தொடர்ந்து ஆலய வழிபாடு ஜெபம் தபம் செய்து வருபவர்கள் இறைவனை பல வகைகளில் உணர்வார்கள். இப்போது, நீ நான் இங்கே இருக்கிறேன் என்று உண்மையாக பேசி உள்ளாய். நாங்கள் உன் கண்ணுக்கு தெரிவதில்லை, நாங்கள் கூறுவதும் உன் சேவைகளுக்கு கேட்பதில்லை, ஆனால் ஜெபம் தபம் செய்தால் உன் மூன்றாவது கண் இயக்கமாகி அதனுடன் தொடர்புடைய பொறிகள் கண், காது ஆகியவை மேம்படும், இறைக்காட்சிகள், இறை கூறும் சொற்கள் ஆகியவை உணர்வாக வெளிப்படும். உண்மையாக இங்கே இறைவன் வீற்று இருக்கிறான் என்று இருப்பவர்களுக்கு மட்டும் தான் இறைவன் அருள் கிடைக்கும். நீயும் ஜெபம் தபம் செய்து பலம் பெற்று பின்னர் இதே ஆலயத்தில், அல்லது எந்த ஆலயம் சென்றாலும் உன்னால் இறைவனை காண முடியும் கேட்க முடியும். இப்போது தற்காலிகமாக இது ஒரு வழி தொடர்பாக  உள்ளது. ஜெபம் தபம் செய்து சித்தி ஆனால், இதுவே இரு வழி தொடர்பாக மாறும். இப்போது ஆலயத்திற்கு வருபவர்களுக்கு ஒரு  வழி தொடர்பு கூட இல்லை என்பது தான் உண்மை.

நன்றி ஐயனே,

பிறகு தரிசனம் முடித்து உள் பிரகாரத்தை 6முறை சுற்ற வேண்டும் என்பது நாங்கள் தீர்மானித்த வழிபாடு. அதில் ஒரு முறை சுற்றி வந்து உடனே யானை மணியோசை, யானை ஆலயத்தை வலம் வருகிறது, யானை தரிசனம், வா,வா, வந்து என்னை பார், கேட்டாயல்லவா, நான் வந்துள்ளேன், வா என்று கூறுவது போல இருத்தது, இரு,நாங்கள் சுற்றி விட்டு வந்து பார்க்கிறோம் என்று பதில் கூறினேன். அதுவும் பதிலுக்கு பிளிரியது. அது வரை யானை கண்ணில் பார்க்கவில்லை, பல நாள் வந்துள்ளோம், யானையை கண்டதில்லை, இன்று யானை பார்க்க முடியுமா என்று எண்ணினோம், பூசணி வாங்கி வந்தோம், யானை கண்டோம். ஆம், 6 சுற்று முடிந்து வரும் வரை யானை இருந்தது, நாங்கள் கண்ட வினாடியில் அது மீண்டும் அதுனுடைய ஓய்விடத்திற்கு அழைத்து செல்லப்பட்டது.
இறைவன் அருள்.
என் மனைவியிடம் கூறினேன், பார்த்தாயா இறைவன் அருளை, கேட்டோம் கிடைத்தது. இறைவுனுடன் நேரில் பேசுகிறேன், அது வேலை செய்கிறது, நீயும் , அவருடன் பேசு, சிலை என்று. வணங்கி நிற்காதே, பேசு, என்று கூறினேன். அவளும் ஆமோதித்தாள்.

முருகர் கெவிலி உத்தரவு
ஆலய பின்புறத்தில் முருகர் சந்நிதி உண்டு. அங்கே சென்ற போது அர்ச்சகர் அர்ச்சனை செய்ய வேண்டுமா என்று கேட்டார். என் மனைவி சரி என்று அர்ச்சனை பெயர் நட்சத்திரம் கூறினாள். முடிவில் , அர்ச்சகர் உங்கள் குல தெய்வம் பெயரையும் கூறுங்கள் என்றார். பொதுவாக எந்த அர்ச்சகரும் அவ்வாறு கேட்பதில்லை. என் மனைவியோ, அய்யா முருகர் தான் குல தெய்வம், அதுவும், இதே பெயர் கொண்ட பால தண்டாயுதபாணி ஸ்வாமி தான் குல தெய்வம், அதே ஸ்வாமி தான் குல தெய்வம் என்று கூறினாள். பிறகு அர்ச்சகர் அர்ச்சனை செய்து ஆரத்தி காட்டி, பிரசாதம் கொடுத்தார். அப்போது நான் முருகனிடம், முருகா, 2 வருடமாக பழனி வர முடியவில்லை, நீ இங்கே இருகிறாய் அல்லவா, இங்கே நாங்கள் எங்கள் வணக்கத்தை கொடுத்து விட்டோன், இதனையே பழனியாக எங்கள் குலதெய்வமாக எண்ணி கொடுத்து விட்டோம், நீ ஏற்றுக்கொள். மேலும் 2 ஆவதாக, உன்னால் ஆகாத காரியம் எதுவும் இல்லை, தடைகளை உடைத்து என்னை நீயே பழனிக்கு அழை,  நீயே என்னை பழனிக்கு விரைவில் அழைத்து செல்,  என்று கூறிய அடுத்த வினாடியே கெவுளி எனப்படும் பல்லி ஒலித்து, ஆமாம் ஆமாம் என்றது. 2 ஆவது வேண்டுதல் பதில் கூறுவது போல, இரண்டாவது மற்றும் ஒரு முறை கெவுளி ஒளித்து ஆம், ஆம் என்றது. 2 கோரிக்கைக்கு உடனடி பதில். அதற்கு பிறகு கெவுளி ஒலிக்கவில்லை, அதற்கும் முன்னும் கெவுளி ஒலிக்கவில்லை.
நான் மனைவியிடம், பார்த்தாயா, முருகர் பேசினால் பதில் கொடுக்கிறார் பார் என்று கூறினேன்
பிறகு அடுத்த நிகழ்வு.
உள்ளே இருந்து உத்தரவு, அடுத்த பரிகாரம் தேய்பிறை அஷ்டமி பூஜை இதே ஆலயத்தில் செய்யவும். சரி அய்யா. நாங்கள் வழக்கமாக தேய்பிறை அஷ்டமி பூஜை செய்வது வேறு ஆலயத்தில். ஆனால் இப்போது அய்யா , என் உள்ளே இருந்து உரைக்கிறார், இங்கே செய், பலன் கிடைக்கும், மற்ற இடங்களில் பலன் குறைவு, உனக்கு அருள் போதவில்லை, இங்கே அருளுக்கு குறைவில்லை, இங்கேயே செய். அப்படியே ஆகட்டும் அய்யா.

அதனை பைரவர் சந்நிதியில் பூஜை செய்யும் அர்ச்சகரிடம் அனுமதி கேட்ட போது அவர் அம்பாள் சந்நிதியில் பூஜை செய்யும் அர்ச்சகரிடம் போய் சொல்லவும் என்று கூறினார். பைரவர் பூஜைக்கு பைரவர் சந்நிதியில் பூஜை செய்பவர் சம்மந்தம் இல்லாமல் அம்பாள் சந்நிதில் சொல்ல சொல்கிறார். சரி என்று அவர் கூறிய அர்ச்சகரின் பெயரை சொல்லி கேட்டால், அங்கே அவர் அப்போது இல்லை. சரி உள்ளே சென்று வழிபடுவோம் என்று சென்றால், அங்கே இருந்த அர்ச்சகர் ஏற்கனவே எங்களுக்கு அறிமுகமானவர். மிகவும் நல்லதாக அவரை நலம் விசாரித்தோம். தெறிந்தவர் என்பதால் கருவறைக்கு உய வந்து தரிசனம் செய்யுமாறு அழைத்தார். அதன் முன் நடந்த சில விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஈசன் ஆலயம் சென்ற போது , சிலரை மட்டும் கருவறைக்கு உள்ளே அனுமதித்தனர், நாங்கள் உள்ளே செல்ல முடியவில்லை, மனதில் ஆதங்கம், இறைவனிடத்தில் வைக்கப்பட்டது. அதே போல், தெரிந்தவரிடம் அறிமுகம் செய்து கொள்ளும் முன்னர், தூரத்தில் இருந்து அம்பாள் முகம் சரியாக தெரியவில்லை என்று ஆதங்கம். பின்னர் , அந்த 2 ஆதங்கமும் தீரும் விதமாக அர்ச்சகர் கருவறைக்கு உள்ளே அழைத்தார். எங்கள் கோரிக்கையை ஏற்று கொண்ட இறைவேன் உடனடியாக எல்லாவற்றையும் நிறைவேற்றினார். மேலும் எங்களுக்கு தெரிந்த அந்த அர்ச்சகரே, பைரவர் பூஜை செய்பவர் பெயர் தொலை பேசி எண் கொடுத்து, அவரை தொடர்பு கொண்டு பேசுங்கள், அவர் செய்து கொடுப்பாரென்று கூறி எங்களது அந்த வேண்டுகோளையும் பூர்த்தி செய்தார்.

இன்னும் முடியவில்லை, பிரார்த்தனை முடிவில் ஆலயத்தில் இருக்கும் பக்தர்ககளுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்பது எங்கள் வழிபாட்டு முறை. அப்போது நான் என் மனைவியிடம், பக்தர்கள்  இனிப்பிற்கான காரணம் கேட்டால், நமக்கு கல்யாண நாள் என்று கூறி விடு என்று கூறினேன். ஆனால் எங்களுக்கு இப்போது கல்யாண நாள் கிடையாது.சும்மா ஒரு பதிலுக்காக அப்படி கூறி விடு என்று கூறினேன். சுமார் 10, 15 பேர் கேள்வி கேட்டார்கள், கல்யாண நாள் என்று கூறி விட்டோம்.

கூறுவதெல்லாம் உண்மை என்று ஆகி நாங்கள் ஆலயத்தில் இருந்து எந்த ஹோட்டல் சென்று உணவு உட்கொள்ளலாம் என்று பேசி கொண்டு இருக்கும் போது, அது இருக்கட்டும், தாலி கொடி வாங்க வேண்டி உள்ளதால் புதிதாக வாங்குவோம் என்று பேசி, கடைசியில்,  நேராக நகை கடைக்கு சென்று, என் கையால் மஞ்சள் கயிறு வாங்கி அணிந்து, பின்னர் தங்க தாலி கொடியை கழற்றி, புதிதாக வேறு தாலி கொடி. வாங்கி கோர்த்து, அரை மணிநேரம் குரு ஹோரைக்காக காத்து இருந்து குரு ஓரையில் புதிய தாலி கொடி அணிந்து கொண்டாள்.
சும்மா திருமண நாள் என்று கூறினோம், அதுவே மஞ்சள் தாலி கட்டி, புதிய தங்க தாலி கொடி அணியும்படி செய்து விட்டது.

இன்னும் நிறைய இறை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசை. இறைவனிடம் பேச சொல்கிறார் அய்யா. ஆகவே பேசுங்கள்.கேளுங்கள் கொடுக்க ப்படும் தட்டுங்கள் திறக்கப்படும். நினையுங்கள் நிறைவேற்றப்படும். தயவு செய்து மறந்தும் கூட நல்லவை அல்லாதவற்றை நினைக்க வேண்டாம். நல்லதே நடக்கட்டும். அனைவரும் சுகம் பெறட்டும்.

தி.இரா. சந்தானம்
உள்ளும் புறமும் அகத்தியர் அருள் நிறைவு.

அனுபவம் 17, 18 டிசம்பர் 2023

 பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது.  எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...